உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 31, 2015

துண்டு பேப்பர் 2 : 2016 ல் தமிழக ஊடகங்களில் வரப் போகும் பரபரப்பு செய்திavargal unmaigal
துண்டு பேப்பர் 2 : 2016 ல் தமிழக ஊடகங்களில் வரப் போகும் பரபரப்பு செய்தி

காலம் மாறும் போது காட்சியும் மாறிக் கொண்டிருக்கிறது. அது போல இன்று எதிரிகளாக இருப்பவர்கள் காலப் போக்கில் நட்பு கரம் நீட்டக் கூடும். அப்படி காலப் போக்கில் நடை பெறப் போகும் நிகழ்ச்சி இப்போது உங்களுக்காக இங்கே வெளியிடப்படுகிறது. வருவதை முன் கூட்டியே சொல்வதுதான் இந்த தளத்தின் சிறப்பு.

Monday, March 30, 2015

ஜெயலலிதாவின் நலனை(தூக்கத்தை) கெடுத்த தமிழக பட்ஜெட்jayalalitha subramania samy kalaignar panner selvam avargal unmaigal
Add caption

ஜெயலலிதாவின் நலனை(தூக்கத்தை) கெடுத்த தமிழக பட்ஜெட்

சமீபத்தில் தமிழகத்தின் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், இந்த பட்ஜெட் ஜெயலலிதாவின் ஆலோசனையின் படி தயாரிக்கப்பட்டது என சட்டசபையில் தெரிவித்து உள்ளார். நான் இந்த செய்தியை படிக்கும் போது தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இதை தெரிந்துதான் செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா? பன்னீர் செல்வத்தின் உரை  மிகவும் தப்பாகபடுகிறதே என்று நினைத்தேன்.

துண்டு பேப்பர் 1: வடிவேலுக்கு போட்டியாக களம் இறங்கிய ஸ்டாலின்
நான் பதிவு எழுதுவதை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்தாலும் நம்ம தலைவர்கள் ஏதாவது சொல்லி என்னை எழுத வைத்துவிடுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்தாலும் நாம் நினைப்பதை  நக்கலாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் மேலை நாடுகளில் வசிக்கும் போது நம்மால் அப்படி செய்ய முடிவதில்லை அதற்கு வடிகாலகத்தான் இந்த வலைதளமும் பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமுக தளங்களும் இருக்கின்றன.

Monday, March 23, 2015

உங்களிடம் இருந்து விடை பெறுவது 'மதுரைத்தமிழன்'உங்களிடம் இருந்து விடை பெறுவது 'மதுரைத்தமிழன்'

எனது வலைத்தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு தந்த  சைலண்ட் ரீடர்கள். ஃப்லோவர்கள், மற்றும் வலைத்தள நண்பர்களே நான் வலைத்தளத்தில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி செல்கிறேன். இந்த சிறிது காலம் என்பது வாரமாகவோ அல்லது மாதமாகவோ அல்லது அதற்கும் மேலாக கூட இருக்கலாம். இது நிரந்தர பிரிவு அல்ல. நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன்.

இது நாள் வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றிகள்.

பேஸ்புக்கில் இனிமேல் உண்மையைத்தான் பேசியாகணுமாமே!பேஸ்புக்கில் இனிமேல் உண்மையைத்தான் பேசியாகணுமாமே!

பேஸ்புக்கில் தவறான தகவலை பரப்பினால் மூன்று ஆண்டு சிறை -செய்தி...

இனிமே தைரியமாக அரசியல் தலைவர்களை திருடர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று தைரியமாக எழுதலாம் அப்படி எழுதுவதற்கு பதிலாக நல்லவர்கள் நேர்மையானவர்கள் சூதுவாது தெரியாதவர்கள் என்று எழுதினா இனிமேல் நீங்க களி திங்கதான் போகனும்...

உதாரணமாக இனிமேல் இப்படி எல்லாம் பேஸ்புக்கில் எழுதமுடியாது போல இருக்கிறது

பீகார் மாநில மாணவர்களை மட்டும் குறிவைத்த ஊடகங்களின் நோக்கம் என்ன?avargal unmaigal
பீகார் மாநில மாணவர்களை மட்டும் குறிவைத்த ஊடகங்களின் நோக்கம் என்ன?

பீகார் மாநில எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்  மாணவர்கள் காப்பி அடிக்க ஜன்னல் மீது ஏறி ‘பிட்’ காகிதம் கொடுத்த பெற்றோர் என்று ஊடகங்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து ஊடகங்களில் பரப்பி அந்த மாநிலத்தை மட்டும் உலக அளவில் இழிவு படுத்த யாரோ சிலரால் அமுல்படுத்தபட்ட திட்டமாகவே இந்த நிகழ்வு இருக்கின்றது.

Thursday, March 19, 2015

இதை தவிர கடவுளிடம் எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் கேட்கலாம்இதை தவிர கடவுளிடம் எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் கேட்கலாம்!

அரசியல் தலைவர்களை மட்டும் எவ்வளவு நாள் கலாய்த்து கொண்டிருப்பது அதனால் ஒரு மாறுதலுக்காக கடவுளையும் கலாய்ப்பமோ என்று நினைத்ததின் விளைவே இந்த பதிவு..இளைஞர்கள் கடவுளிடம் கேட்க கூடாதது எது தெரியுமா?
கடவுளே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கனும் என்று மட்டும் கேட்க கூடாது ஏனா அதை மட்டும் கடவுளால் செய்து தரவே முடியாது

Tuesday, March 17, 2015

எப்படி இருந்த இந்தியா இப்படி ஆகிவிட்டதுஎப்படி இருந்த இந்தியா இப்படி ஆகிவிட்டது..

நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்த வந்த வரை இந்தியா மத சார்பற்ற நாடாகத்தான் இருந்து வந்ததது. ஆனால் அது இப்போது இந்துக்கள் நாடாகிவிட்டதாமே? எப்ப எப்படி அது யாரால் ஆகியதுங்க
20,25 வருடங்களுக்கு முன்பு, நான் சிறுவனாக இருந்தபொழுது, கிறிஸ்தவ இஸ்லாமிய  குடும்பங்களை யாரும் அந்நியர்களாக பார்த்தது கிடையாது, எல்லோரும் ஒரு தாயின் மக்களாகத்தான் பண்டிகைகளை கொண்டாடி வாழ்த்துகளை பறிமாறி பழகி வந்தனர்.அது மட்டும்மல்லாமல் ஹரே... பாய்  அல்லது அய்யாரே  என்று ஒருவரை ஒருவர் விளித்து நம்ம வீட்டில் விஷேம் அதில் கண்டிப்பாக கலந்து கொள்ளனும் என்று உரிமையோடு அழைப்பார்கள். அதையெல்லாம்  மாற்றி விரோதிகளாக ஒருவரை பார்த்து  ஒருவர் சந்தேகிக்கும் நிலையை மாற்றிய பெருமை யாரைச் சாரும்?  சிந்தியுங்கள் மக்களே... இந்த கால இளையவர்களின் மனதில் மதம் என்ற விஷத்தை தூவி வேற்றுமையை அதிகரித்தது யாரு?

Monday, March 16, 2015

தீர்ப்புக்கள் திருத்தபட்டு கொண்டிருக்கின்றன.. முடிவு மிக விரைவில்தீர்ப்புக்கள் திருத்தபட்டு கொண்டிருக்கின்றன.. முடிவு மிக விரைவில்

ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு மறு விசாரணை பெங்களுரில் நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்து முடிந்துள்ளது. தீர்ப்புக்கான தேதியை அறிவிக்காமல் விசாரணை முடிந்துள்ளது. மிக விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பு இப்படியும் இருக்கலாம் என்று கணித்து வெளியிடப்படுகிறது.


போட்டோடூன் & ஸ்டேடஸ் பார்க்க ரசிக்க சிந்திக்க சிரிக்க
avargal unmaigal
போட்டோடூன் & ஸ்டேடஸ் பார்க்க ரசிக்க  சிந்திக்க சிரிக்க மலேசியன் விமானமும் ராகுல் காந்தியும் ஒன்றுதான் போல இருக்கிறது. இரண்டும் எங்கே போனதென்றே தெரியவில்லை.


Friday, March 13, 2015

அரசியல் காக்டெய்ல் : பொருளார் ஸ்டாலின் கட்சி நிதிக்கு முதலில் கொடுத்தப் பணம் கட்சி பணமா அல்லது சொந்தப் பணமா?avargal unmaigal
அரசியல் காக்டெய்ல் : பொருளார் ஸ்டாலின் கட்சி நிதிக்கு முதலில் கொடுத்தப் பணம் கட்சி பணமா அல்லது சொந்தப் பணமா?

சீட் பண்ட் கம்பெனியில் பணம் போடும் தமிழனும் திமுக கட்சிக்கு நிதி அளிக்கும் தொண்டனும் ஒன்றுதான் அதுதாங்க இரண்டு பேரும் ஏமாளிங்க..

சமுதாயத்திற்கு நல்லது செய்ய நிதி திரட்டுபவர்கள் மத்தியில் தனது நலத்திற்காக சமுதாயத்திடம் இருந்து கட்சி நிதி திரட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


Wednesday, March 11, 2015

இந்த தலைவர் லூசு இல்லை ஆனா லூசாட்டம்தான் பேசுவார்avargal unmaigal
இந்த தலைவர் லூசு இல்லை ஆனா லூசாட்டம்தான் பேசுவார்

விஜயகாந்த் சரக்கு அடித்தால்தான் உளறுவார் என்று கிண்டல் பண்ணாதவர்கள் இல்லை ஆனால் இந்த பாஜக தலைவரோ சரக்கு அடிக்காமலே உளறுவார். இவரது பேச்சை கேட்டால் உண்மையிலே இவர் லூசா அல்லது லூசாட்டம் இப்படிதான் பேசுவாரா என்பதே பலருக்கும் புரியாத புதிர்.

அவர் வேறு யாருமல்ல மதிப்பிற்குரிய பாஜக தேசிய செயலார் எஸ்.ராஜா அவர்கள்தான். அவர்  பேசியதை சொல்லியதை இங்கே நான் பதிகிறேன் அதை பார்த்துவிட்ட்டு நீங்கள் ஒரு முடிவிற்கு வாருங்கள்.

Tuesday, March 10, 2015

தாலி தேவையா தேவையில்லையா ?தாலி தேவையா தேவையில்லையா ?
தாலி இந்தக் காலத்திற்குத் தேவையா,

தேவையில்லையா என்று விவாதிப்பதைவிட
தாலி கட்டிக் கொள்ளுவதும், கட்டாமல் போவதும்
அவரவர் விருப்பமென்று சொல்லிச் செல்வதுதான்
பண்பாளர்களுக்கு அழகு!

Monday, March 9, 2015

இன்றைய உலகம்.....இப்படிதான் உதவிக் கொண்டிருக்கிறது
இன்றைய உலகம்.....இப்படிதான் உதவிக் கொண்டிருக்கிறது

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

- விவேகானந்தர் -

Sunday, March 8, 2015

மகளிர் தினம் இப்படிதான் கொண்டாடப்படுகிறதோ?மகளிர் தினம் இப்படிதான் கொண்டாடப்படுகிறதோ?


ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?
என்னங்க நான் கிச்சன்லதான் இருக்கேன்.
ஹேய் செல்லம் கொஞ்சம் கண்ணை மூடேன்.
என்னங்க குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதிக்கிறது போல இந்த காலையில் என்ன ஆச்சு உங்களுக்கு?
ஹேய் கண்ணை மூடுன்னு சொன்னா கண்ணை மூடேன்.
சரிங்க நான் கண்னை மூடிட்டேன்
சில நொடிகளுக்கு பிறகு ஹேப்பி மகளிர்தினம்டி இந்தா உனக்காக நான்  வாங்கிய பூங்கொத்து ..
என்னங்க் உங்களுக்கு என்ன ஆச்சு இன்று என்று இல்லாத வழக்கமாக?
இல்லேடி நான் பேஸ்புக்கம் பக்கம் போயிருந்தேன் ஆளுக்கு ஆள் மகளிர்தினம் மகளிர்தினம் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்து பதிவுகள் போட்ட்டு இருந்தாங்க அதை படிச்ச பாதிப்புதானடி
சரி சரி வழ வழன்னு பேசாம சூப்பரா ஒரு காப்பி போடு...அது வரை இன்று என்ன நீயூஸ் என்று பார்த்துவிடுகிறேன்

Friday, March 6, 2015

கற்பழிப்புகளும் கதறல்களும் தொடரும்.......avargal unmaigal world number 1 readers choice tamil blog
கற்பழிப்புகளும் கதறல்களும் தொடரும்.......


'இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில் வெளிவந்த ஆவணப்படம்  உலக மக்களிடையே பல வித சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை இந்திய அரசாங்கம் தடைவிதித்தால் அது மேலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்த படம் வெளியிடுவதால்  நடந்த பலன் என்ன வென்று பார்த்தால் அந்த ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டு  அதனால் இறந்து  சாம்பலாகிப்  போன அந்த பெண் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் மீடியாவால் கற்பழிக்கப்படுகிறாள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

Wednesday, March 4, 2015

உங்கள் ஆதரவோடு 2 மில்லியன் ஹிட்ஸ்க்கும் மேலாக பெற்ற வலைத்தளம்avargal unmaigal world number 1 tamil blogspot
உங்கள் ஆதரவோடு 2 மில்லியன் ஹிட்ஸ்க்கும் மேலாக பெற்ற வலைத்தளம்

எனது வலைத்தளத்திற்கு 2 மில்லியன் ஹிட்ஸ்க்கும் மேல் கொடுத்து என் தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வளர்ச்சி உங்களின் ஆதரவு இல்லாமல் எனக்கு கிடைத்திருக்காது. நண்பர்களே மற்றும் சைலண்ட் ரீடர்களே நான் எனது 1 மில்லியன் ஹிட் பதிவில் http://avargal-unmaigal.blogspot.com/2013/11/1-one-million-hits-tamil-blogspot.html சொன்னதை தான் இங்கே மீண்டும் நினைவு கூறுகிறேன்

Monday, March 2, 2015

பட்ஜெட் பற்றி தலைவர்களின் கருத்து ( பட்ஜெட் கருத்து கலாட்டா )avargal unmaigal
பட்ஜெட் பற்றி தலைவர்களின் கருத்து ( பட்ஜெட் கருத்து கலாட்டா  )

விஜயகாந்த் : இந்த பட்ஜெட் மக்களுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனா எனக்கு தெரிய வேண்டியது  எல்லாம் "ஒல்டு மாங்க்' சரக்குக்கு விலை ஏறிச்சா இல்லையா என்பதுதான்

ஜெயலலிதா : சிறைக் கைதிகளுக்கும் சிறைத்துறையினருக்கும் எந்த வசதியும் செய்துதாராத, எந்த திட்டமும் இல்லாத இந்த பட்ஜெட் மக்களுக்கு எதிரான பட்ஜெட்தான்

Sunday, March 1, 2015

2015 பட்ஜெட் பற்றி எளிதாக புரிந்து கொள்ள உதவும் கேள்வி பதில்கள்avargal unmaigal
 இந்திய பட்ஜெட் பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு மதுரைத்தமிழனின் பதில்

பொதுமக்கள் :ஐயா பட்ஜெட் என்றால் என்ன?
மதுரைத்தமிழன் : அராசாங்கம்  வரிகள் விதிப்பதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல வகைகளில் பணத்த பெற்று அதை பொதுமக்களின் நலத்திற்கும் வளர்ச்ச்சிக்கும் செலவிட்டு அவர்களை வளர்ச்சி அடையச் செய்து அதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்காக போடப் படும் திட்டம்தான் பட்ஜெட் ஆகும்.இது கொள்கை அளவில் மட்டும்தான் செயல்படுகிறது ஆனால் நிஜ வாழ்க்கையில் நடப்பதென்னவோ பொதுமக்களிடம் இருந்து பல வகைகளில் வரி மூலம் பணத்தை அரசாங்கம் பெற்று அதை தங்களுக்கு வேண்டிய சாதகமான முறையில் போடப்படும் திட்டம்தான் பட்ஜெட்

இவர்களுக்கு விருது கொடுக்க விகடனும் விஜய் டிவியும் மறுப்பதேன்?

இவர்களுக்கு விருது கொடுக்க விகடனும் விஜய் டிவியும் மறுப்பதேன்?


வருடா வருடம் திரைப்பட துறையினருக்கு விகடனும் விஜய் டிவியும் பல விருதுகளை கொடுத்து பாராட்டி வருகிறது. அப்படி இருக்கையில் இந்த  வசனகர்த்தாவிற்கும் நடிகருக்கும் மட்டும் விருதுகள் கொடுக்க மறுத்து வருகிறது. ஒருவேளை இவர்கள் சூத்திரக் காரர்கள் என்பதால் இருக்க்குமோ. அது எப்படி இருந்தாலும் இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். இவர்களின் நடிப்பை நான் பகிர்ந்து இருக்கும் படம் மூலமே அறிந்து கொள்ளலாம்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog