Sunday, December 27, 2015



avargal unmaigal


ஊடகத்துறையினர் விஜயகாந்திடம் கேட்க வேண்டிய கேள்விகள்?

ஊடகத்துறையினர் விஜயகாந்தை ஒரு தலைவராக மதித்து கேள்வி கேட்கின்றனர். ஆனால் அவரோ தான் ஒரு காமெடி பீஸ் போலத்தான் பதில் அளிக்கிறார் இது விஜய்காந்தின் தப்பு அல்ல ஊடகத்துறையினரின் தப்புதான். அதனால் ஊடக நிருபர்கள் இனிமேல் காமெடி கேள்விகளை மட்டுமே கேட்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

விஜயகாந்திடம் என்ன மாதிரி கேள்விகள் கேட்கலாம் என்பதற்கு சில உதாரணங்கள்


1.  உங்களால் இன்னும் தொப்புளில் பம்பரம் விட முடியுமா?

2. அப்படி முடியும் என்றால் யார் தொப்புளில் பம்பரம் சுற்ற ஆசை? நயன்தாரா அமலாபால் அனுஷ்கா த்ரிஷா

3. ஜெயலலிதா இன்னும் நடிகையாக இருந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பீர்களா?

4. உங்களின் அரசியல் வாரிசாக இவர்களில் நீங்கள் யாரை கருதுவீர்கள்?வ்டிவேலு,கவுண்டமணி,செந்தில்,விவேக்,சந்தானம்

5 ஹாலிவுட் படத்தில் நடிக்கும் எண்ணம் உண்டா?

6. சரக்கில் எந்த சரக்கு மிக டேஸ்டாக இருக்கும்?

7. சரக்கிற்கு தொட்டு கொள்ள ஊறுகாய் சிறந்ததா அல்லது நான்வெஜ் சிறந்தா

8. ரஜினிமாதிரி பேத்தி வயசு உள்ள பெண்களுடன் ஜோடியாக நடிக்க விருப்பமா?

9. உங்க பையன் நடிக்கிற படத்தில் குளிக்கிற சீன் வைக்கப் பிடிக்குமா? அல்லது குடிக்கிற சீன் வைக்கப் பிடிக்குமா?

10. இந்த மதுரைத்தமிழன் மனைவியிடம் பூரிக்கட்டையால் அடிவாங்குவது போல நீங்களும் உங்கள் மனைவியிடம் அடிவாங்குவீர்களா?

டிஸ்கி: விஜயகாந்த் காறி துப்பியது ஊடகத்துறையை சார்ந்த செய்தியாளர்களை அல்ல ஊடகத்துறை முதலாளிகளைத்தான் என்பதுதான் சரி காரணம் அவர்கள்தான் இந்த செய்தியாளர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தங்களுக்கு சார்பாக செயல்படவைக்கிறார்கள்.

கேப்டன் டிவியின் சொந்தக்காரர் விஜய்காந்துதானே அந்த டிவியின் செய்தியாளர்களை அனுப்பி ஜெயலலிதாவை கேள்வி கேட்க வைப்பதுதானே அப்படி கேட்காத உங்கள் டிவியின் செய்தியாளர்களின் மூஞ்சியில் காறி துப்ப வேண்டியதுதானே


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஆஹா இளையராஜாவுக்கு பின்னர் விஜயகாந்த் சிக்கிட்டார் மதுரை தமிழன் கிட்ட..எப்படியோ எங்களுக்கு ஒருவார காமெடி கேரண்டி .

    ReplyDelete
  2. சரியான கேள்விகள் தான்......இவர்கள் காலத்தில் நாமும் சுரணைகெட்டு வாழ்ந்தோமென நாளைய நம் சமுதாயம் நம் மீது துப்புமே என்ற கவலைதான் எனக்கு.....

    ReplyDelete
  3. கடைசி வரிதான் நச்ச்ச்ச்ச்ச்.

    ReplyDelete
  4. ஹஹஹஹ்...இப்ப விகாந்த் கோந்து மாதிரி உங்ககிட்ட ஒட்டி மாட்டிக்கிட்டாரோ...பாவம்...இன்னும் அடுத்து யாரேனும் வருவது வரை...ஹஹஹ் ..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.