Sunday, December 6, 2015



ராணுவதளபதி போல செயல்பட்டார் ஜெயலலிதா என்று செய்தி தெரிவிப்பதன் மூலம் இந்திய ராணுவ தளபதிகளை கேவலப்படுத்தியுள்ளது தினமலர்
என்ன பிறவியோ இந்த அம்மா? இப்படி ஒரு பிறவியை நான் பார்த்ததே இல்லை


தலைவராக அல்லது தலைவியாக  இருக்க பவர் மற்றும் அதிகாரம் இருந்தால் போதும் ஆனால் கிரேட் தலைவராக வர மனிதாபிமானட்துடன் கூடிய செயல் திறன் இருக்க வேண்டும். அந்த செயல் திறன் ஜெயலலிதாவிடம் இருக்குமா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.அப்படி ஒரு திறன் இருந்தால் சென்னை வெள்ளக்காடாக ஆகிய நேரத்தில் மக்களிடம் வந்து நான் உங்களுக்கு துணை இருக்கிறேன் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்ற ஆறுதல் அளிக்க கூடிய வார்த்தைகள் வந்து இருக்கும்.


தமிழக மக்கள் ஒன்றும் உங்களை கழுத்தளவு தண்ணிர் உள்ள பகுதிகளில் களம் இறங்கி நாலு பேருக்கு சோற்று பொட்டலங்களை வழங்க ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட இடம் அருகே வந்து, மக்களே நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். என் ஆணையின்படி அரசு எந்திரங்கள் முழுவீச்சில் பயனடுத்தப்பட்டு உங்களுக்கு உரிய பாதுகாப்பை தரும். அப்படி நடவடிக்கைகள் ஒழுங்காக தொடர்ந்து நடை பெறுகிறதா என்று நான் கண்காணிப்பேன் என்று உறுதி அளித்திருக்கலாம் அல்லது  குறைந்தபட்சம் தொலைக்காட்சியிலாவது தோன்றி மக்களுக்கு  ஆதரவை தெரிவித்து ஆறுதலும் தேறுதலும் கொடுத்து இருக்க வேண்டும்.

avargal unmaigal

தேர்தல் நேரத்தில் மட்டும் வேனிற்குள் உட்கார்ந்து ஊரெல்லாம் சுற்றி கையெடுத்து கும்பிட்டு வெட்கம் இல்லாமல் வோட்டு கேட்க மட்டும் உடல் நலம் இடம் கொடுக்கிறதே அதே உடம்பு ஆட்சியில் அமர்ந்த பின் வேனில் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல மட்டும் மனது இடம் கொடுக்க விரும்பாதது ஏன் என்று சொல்ல முடியுமா உங்களால்?

ஊர் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் உங்களை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறிர்களே? அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதுமா என்ன? அம்மாவாக இருந்து மக்களை காக்க மட்டும் மனம் இல்லையா?

பாலிமர் டிவியில் ஒளிபரப்பான காட்சி: பார்த்ததும் மனது கொதித்தது

சென்னை அண்ணா நகரில், பெங்களூரில் இருந்து வந்து நிவாரணப்பணிகள் செய்து, உணவு சமைத்துக்கொண்டிருந்த ஒரு  தன்னார்வ குழுவை 102ஆவது வட்ட செயலாளரான கோ.தமிழ்ச்செல்வன் என்ற ரவுடி தனது குண்டர்படையுடன் வந்து தாக்குகின்றான்; நான் சொல்கின்ற இடத்துக்கு சாப்பாடு அனுப்பு என அடிக்கின்றான்.


பேஸ்புக்கில் ஒரு அதிமுக கவுன்சிலரின் ஆட்கள் ஒரு தன்னார்வ குழுவை மிரட்டி கொண்டிருக்கிறார்.

மேலும் பல இடங்களில் அதிமுகவினர் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றனர் இப்படி அதிமுக செய்யும் அட்டகாசங்களை பற்றி இந்த அம்மாவிற்கு ஒன்றும் தெரியவில்லையா என்ன? ஆமாம் என்றால் இந்த அம்மா ஆட்சி செய்தால்தான் என்ன செய்யாவிட்டால்தான் என்ன?

தன் தலையில் தானே மண்னை அள்ளிப் போடும் செயலை இந்த அம்மா செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்களே வரும் தேர்தலிலும் இந்த அம்மாவை போல நீங்களும் உங்கள் தலையில் நீங்கலே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளாமல் கொஞ்சம் புத்திசாலிதனமாக செயல்பட்டு ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள்

என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். அதன் பின்  உங்கள் பாடு உங்கள் அம்மா பாடு

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : 'மாண்புமிகு' என்று  அமைச்சர்கள் சொல்லும் போதெல்லாம் என் காதில் 'மானங்கெட்ட' என்ற கூறுவது போல இருக்கிறது, இது எனக்கு மட்டும்தானா இல்லை இதைபடிக்கும் உங்களுக்கும் இப்படிதான் கேட்கிறதா?
 

15 comments:

  1. ஏனோ இன்று டிஸ்கி எனக்கு புதுமையாக தெரிகிறது.

    ReplyDelete
  2. நியாயம்தான். தொலைக்காட்சியிலாவது தோன்றியிருக்கலாம். அமைச்சர்கள் குவாலிடி, காமராஜ் அமைச்சரவைக்கு அப்புறம் தமிழ்னாட்டில் இல்லவே இல்லை. 67க்கு அப்புறம் இருந்த அமைச்சர்கள் எல்லோரும் (99%) பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர் ஆன கதைதான். எல்லோருக்கும் கல்லூரி மற்றும் பல தொழில்கள் இருக்கின்றன. அவர்கள் சுற்றத்தார்களும் பல கோடீஸ்வரர்கள். அத்தகைய நல்லவர்களை நாங்கள் தெரிவு செய்ததால்தான், 'நமக்கு நாமே' என்று இருக்கிறோம்.

    ReplyDelete
  3. வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராய் நீங்களே நில்லுங்களேன்.

    ReplyDelete
  4. எனக்கும் இஸ்கு இஸ்கென்றுதான் கேட்கிறது குருஜி.

    அவர்களை விட்டுத்தள்ளுவோம்..

    நிசப்தம் அறக்கட்டளை திரு வா. மணிகண்டன் களத்தில் இறங்கி அரும்பணி செய்து வருகிறார். அவரது தளத்தையும் பார்த்து தகவல்களை பகிருங்கள்..

    ReplyDelete
  5. இந்த உணர்வு எல்லோருக்குமே இருக்கிறது நண்பரே, அது தெரியாமல் இன்னமும் இதய தெய்வம் அம்மா என்று மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 6 மாதத்திற்கு முன்பு கூட இவர் மீது இவ்வளவு அதிருப்தி இல்லை. அதன்பின் டாஸ்மாக்கில் பெயர் கொஞ்சம் கேட்டது. இப்போது மழையில் எல்லாமே அடித்துக் கொண்டு போனது.
    த ம 1

    ReplyDelete
  6. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விதமாக கொஞ்சமேனும் நல்லது செய்கிறார் என்ற அம்மாவின் பெயர் இப்போது வெள்ளத்தோடு போய்விட்டது. மக்கள் கொந்தளிக்கின்றார்கள். ஆனால் என்ன பயம் என்றால் இப்போது கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாயை முடிக் கொண்டு விடுவார்களோ?

    ReplyDelete
    Replies
    1. தமிழா 5000 லிருந்து 10000 ரூபாயாமே இப்போது ????!!!!

      Delete
  7. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...
    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடையூறுகள்
    செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.
    Posted by அன்பே சிவம் at 20:35
    Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
    2 comments:

    KILLERGEE Devakottai7 December 2015 at 21:27

    நல்ல யோசனைகள் நண்பரே நன்று
    ReplyDelete
    Thulasidharan V Thillaiakathu7 December 2015 at 22:44

    நல்ல யோசனைகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். //

      சிவம் இப்படி எல்லா தளத்திலும் போட்டு பகிரங்கப்படுத்திவிட்டீர்களே. இதுதான் நம்ம ஊர் பாணி, திருடனை, கொள்ளையனை, வெடுகுண்டு வைத்தவனைப் பிடிக்கும் போது போலீஸ் அறிவிப்பதையும், ஊடகங்களும் தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்....அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு. சில விஷயங்கள் வெளியில் பேசப்படாமல் அமைதியாகச் செய்ய வேண்டும். தனிப்பட்ட நபருக்கு, யாருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டும். ரகசியமாகச் செய்யப்பட வேண்டியவை எல்லாம் இப்படிப் பகிரங்கமாக...சமூக வலைத்தளங்களிலும் கூட இவை எல்லாம் பகிரங்கமாக யோசனைகள் என்ற பெயரில் வருகின்றன...என்றுக் கேள்விப்பட்டேன்...ம்ம்ம்ம்

      கீதா

      Delete
  8. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...
    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடையூறுகள்
    செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.
    Posted by அன்பே சிவம் at 20:35
    Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

    ReplyDelete
  9. வயதானவர்களைத் திட்டாதீர்கள். பாவம்.

    ReplyDelete
  10. தமிழகத்திற்கு நன்மை செய்யும் தலைவர் இத்தனை வருடங்களாகியும் வரவில்லை என்பதுதான் கொடுமை.

    ReplyDelete
  11. நீங்கலெல்லாம் தப்பித்துப்போய் பேசுகின்றீர்கள்...வாய் வரை வரும் எத்தனை வார்த்தைகளைத்தெரியுமா...கழுத்தைபிடித்து கொல்கிறேன்...சில நேரங்களில் எழுதிவிட்டு என்ன வந்தாலும் பார்க்கலாம் போல் இருக்கிறது...சொல்லிய வார்த்தையிலும் சொல்லாத வார்த்தைக்கு சக்தி அதிகம் என்பதால் ..இருக்கிறோம்...கண்டிப்பாய் அதன் தாக்கம் வெகு சீக்கிரம் விடியும்...
    நீங்களும் இன்னும் எழுதுங்கள்...ஆக்கப்பூர்வமாக...பின் தொடர்கிறோம்..

    ReplyDelete
  12. ஹ்ம்ம்ம் சொல்லனும், ஆனா சொல்ல வேணாம். சுவத்துல தான் முட்டிக்கணும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.