Monday, December 28, 2015



அரசியலில் பவர் ஸ்டாராக இருக்கும் விஜயகாந்த்

கேப்டனுக்கு இருக்குற தைரியம் இந்தியால எந்த அரசியல்வாதிக்கும் கிடையாதாம். அது உண்மையாக இருந்தால் ஜெயலலிதாவீட்டிற்கு முன்னால் போய் மக்களுக்காக போராட்டம் நடத்தி தன் தைரியத்தை காண்பிக்க வேண்டியதுதானே அல்லது ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை எரித்து மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்த வேண்டியதுதானே. அப்படி செய்தால் அவரின் தைரியத்தை பாராட்டுவோம். இல்லை ஏதாவது ஒரு பிரச்சனைக்குதான் அவர் ஏதாவது எங்காவது தெளிவாக ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறாரா?



அப்படி இல்லாமல் லூசு தனமாக பொறுப்பற்று உளறும் ஒருவரைத்தான் தமிழக மக்கள்  கேப்டன் குழந்தை மாதிரி.. உள்ளே ஒண்ணு.. வெளியே ஒண்ணுன்னு பேசுறதும் இல்லை. வைச்சுக்குறதும் இல்லை.. வெள்ளாந்திரி மனிதர் என்று சொல்லுகிறார்கள். இவரைப் போல ஜெயலலிதா கலைஞர் மோடி போன்றவர்கள் இப்படி பொறுப்பற்று பேசினால் இப்படிதான் எடுத்து கொள்வார்களா? படிக்காத கிராமத்தானை கேட்டால் கூட எந்த பிரச்சனைக்கும் அவன் சிந்தித்து பதில் சொல்லுவான் உளரமாட்டான் ஆனால் இவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளை வீடியோக்கள் மூலம் பார்க்கும் போது காமெடி ஷோவை பார்ப்பது மாதிரிதான் இருக்கிறது. பலர் ஜெயலலிதா மற்றும் கலைஞருக்கு மாற்று வேண்டும் என நினைக்கிறார்கள் ஆனால் அந்த மாற்று இப்படி காமெடியாக இருக்க கூடாது.

ஒன்று நன்றாக புரிகிறது தமிழக மக்களுக்கு டிவியில், திரைப்படத்தில்  வரும் நகைச்சுவைகள் மாதிரிதான் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்களின் சிந்தனைகள் இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்களின் மூளைகள் மழுங்கடிப்பட்டு இருக்கின்றன.

விஜயகாந்தை தனிப்பட்ட மனிதராக  பார்த்தால் இரக்கமுள்ள மனிதராக தோன்றச் செய்கிறார். அவரின் இந்த குணத்தை வைத்து அறுவடை செய்வது வேண்டுமானால் அவரது மனைவியும் மைத்துனர் மட்டும்தான். ஆனால் அவரிடம் சிறிது இரக்ககுணம் இருப்பதற்காக மட்டும் இவரை தலைவராக  ஏற்றுக் கொள்ள முடியாது


விஜயகாந்தை போலவே அவரை சுற்றி அரை லூசுங்க கூட்டம் இருக்கிறது இந்த கூட்டத்தினரிடம் இருக்கும் வோட்டுகளுக்காக மட்டுமே மற்ற கட்சியின் அரசியல் தலைங்க இவரை தனது கூட்டணிக்கு அழைக்கிறார்கள்.

 இப்படிபட்டவர்களை நாம் தலைவராக நினைக்கும் வரை நம் தமிழக தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது .

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : விஜயகாந்த் காறி துப்பியதுயது ஊடகத்துறையினரை அல்ல ஜெயலலிதா அரசை என்று எடுத்து கொள்ளலாம் காரணம் ஜெயாவை காறித்துப்ப விஜயகாந்துக்கு தைரியம் இல்லாததால் இப்படி செய்து இருக்கிறார் போல பாவம் அவரை விட்டுவிடுங்கள்

5 comments:

  1. தமிழகத்துக்கு வந்த சோதனை!!! போதுமடா சாமி! தமிழகத்தின் விதி மாறப்போவதில்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மக்கள் மனது வைத்தால் எல்லாம் மாறும்

      Delete
  2. இம்புட்டு தெளிவா யோசிக்குறீங்களே!
    பேசாம நீங்களே முதல்வர் வேட்பாளரா நின்னுடுங்களேன்.

    ReplyDelete
  3. எந்த பவர், மாறும் என்று நினைக்கிறீர்களா? இந்நிலை அப்படியே,,,

    ReplyDelete
  4. விஜயகாந்த் காறித்துப்பியதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு சொல்றீங்க பாருங்க, அங்க நிக்கிராறு நம்ம மதுரைத் தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.