உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 14, 2015

வெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும்தான்


avargal unmaigal
வெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும்தான்


கலைஞரை தாத்தா என்று அழைப்பவர்கள் ஜெயலலிதாவை இன்னும் எத்தனை நாள்தான் அம்மா என்று அழைப்பீர்கள். தாத்தாவாவது வீல் சேரிலிலாவது வந்து ஏதாவது கேட்கிறார் செய்தியாளர்கள் கூட்டத்தில் தளதள வாய்சில் கூட கருத்தை இன்னும் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி ஏதும் செய்ய இயலாத ஜெயலலிதாவை இனிமேல் அவரை பாட்டி என்று அழைக்கலாமே//சட்டசபையை கூட்டுங்கள் என்று ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் கோரிக்கை///
முதலில் அந்த அம்மா செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டடும் அதன் பிறகு சட்டசபையை கூட்டுவது பற்றி யோசிக்கலாம்///நட்ராஜ் IPS நீக்க அறிவிப்பு ரத்து - ஜெயலலிதா அறிவிப்பு///
பாட்டிக்கு வயசு ஆயிடுச்சு அதனாலதான் அடிக்கடி தீர்ப்பை மாற்றி எழுதுகிறது... இந்த கூத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு?


//நடராஜ் IPS நீக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தார் ஜெ.//
நடராஜுக்கு மானம் ரோசம் இருந்தால் போம்மா நீயும் உனது கட்சியும் என தூக்கி போட்டுட்டு போகனும்

avargal unmaigal

தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் (பாரதி)
என்னை அம்மா என்று அழைக்கவிட்டால் இந்த ஜகத்தினையே அழித்துவிடுவேன். ஜெயலலிதா

தலைவர்கள் நடிகர்கள் போல நடிப்பதும் மக்கள் தொண்டர் போல செயலாற்றுவதும்தான் இந்த வெள்ளக் காலத்தில் நாம் கண்கூடாக கண்டது


ஜெயலலிதா வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு கடந்த ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இன்று மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அந்த வேலைக்காரிக்கு சம்பளம் போட உத்தரவு இட்டார் என்ற செய்தி வந்தாலும் வரலாம்

சகிப்புதன்மை யாருக்கு இருக்கோ இல்லையோ ஆனால் தமிழருக்கு மிக அதிகமாக இருக்கு அதனாலதான் மக்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசாமல் இருக்கிறார்கள்


100 வருடம் கழித்து பெய்த பேய் மழையால் தமிழகம் சிக்கி சீரழிந்து அலங்கோலமாக கிடக்கிறது. அதுபோல மக்களின் வெறுப்பு மழையால் அதிமுக அலங்கோலமாக ஆகப் போவதுதான் தேர்தல் நிலை எச்சரிக்கை

-------------------------------------------------
ஒரு வேளை ஸ்டாலின் முதலமைச்சர் ஆகி சட்டசபையில் அதிமுக கட்சிகாரன் எவனாவது பேசினால் ஸ்டாலின் வெளிநடப்பு செய்துவிடுவாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்குது

திமுக ஆட்சியை பிடித்தால் ஸ்டாலின் முதல்வராகவும் கலைஞரு சபாநாயகராகவுன் ஆகிவிடுவார்கள்

------------------------------------------------------


கிழேயுள்ளவை பேஸ்புக்கில் படித்தது ரசித்தது : நன்றியுடன்

டி.வி.எஸ். சோமு பேஸ்புக்கில் பகிர்ந்தது நன்றியுடன்

கடலூர் மக்களுக்கு உணவு கொடுத்த செலவு 40 கோடி - கடலூர் மாவட்ட ஆட்சியர்
# நல்லா சாப்டுருப்பாங்க

இள மணி பேஸ்புக்கில் பகிர்ந்தது நன்றியுடன்


ஒருத்தருக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு 50 ரூவான்னு வச்சுக்கிட்டா 100 ரூவாய்க்கு 2 பேர் சாப்பிடலாம். 1000 த்துக்கு 20 பேர். லட்சத்துக்கு 20x100=2000 பேர். கோடிக்கு 2000x100=200000 பேர். 40 கோடிக்கு 200000x40 =8000000 (அதாகப்பட்டது 80 லட்சம்) பேர் சாப்பிடலாம். 3 வேளைக்குன்னு கணக்கு வச்சுட்டா ஏறக்குறைய 27 லட்சம் பேர் சாப்பிடலாம். 5 நாள் சாப்பாடு போட்டிருந்தாலும் தினசரி 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாம்பிட்டிருப்பாங்க.
கணக்கு சரிதானாப்பா குமாரசாமிகளா?
இத்தனை பேருக்கும் எங்க வச்சு சாப்பாடு போட்டீங்க?
ரொம்பநாள் "சாப்புடாம" ரொம்பப் பசியாக்கும்?
சாப்புட ஆரம்பிச்சுட்டீங்களா?


பாரதி பாலா ·பேஸ்புக்கில் பகிர்ந்தது நன்றியுடன்


அன்று மூன்று மாணவிகள் தீயில் கருகியப்போதுக்கூட கவலைப்படாமல் வேடிக்கை பார்க்க வைத்தது தலைமை மீதுள்ள கண்மூடித்தனமான விசுவாசம்தான்.
அதற்கு நாடே கொதித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதே கண்மூடித்தமா விசுவாசம்தான் இன்று பசியால் துடிப்பவர்களிடம் உணவை சேர்க்கும்போதுக்கூட தலைமையின் புகழை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்ச்சிக்கின்றது..
மக்கள் விழிப்புணர்வு அடையாதவரை எதுவும் மாறப்போவதில்லை..


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. தமிழர்களின் தலையெழுத்து, இன்னும் முதலமைச்சரை வெள்ளித்திரையில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 2. குளிர் காலத்துக்கு ஏற்ப, நல்லா எண்ணைச் சட்டியில் போட்டு அம்மாவை வறுக்குறீங்க. வாழ்க.. வளர்க.

  ReplyDelete
 3. என்னது திமுக வா...அப்போ ஆட்சி மாற்றமே இருக்காதாப்பா தமிழகத்துக்கு? மக்கள் எப்பத்தான் திருந்தப்போறாங்க? தமிழகத்தின் விதி இப்படித்தானா...

  மக்கள் விழிப்புணர்வு அடையாத வரையில் எதுவுமே மாறப்போவதில்லை...

  ReplyDelete
 4. என் மகள், இந்த பாட்டி தான் ஜெ. ஜெயலலிதாவா என்று மழலைக் குரலில் கேட்க, அய்யையோ பாட்டின்னு சொல்லக் கூடாது, என்ற குரல் தான் இப்போ நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
 5. நல்ல தலைவர்கள்..கிடைக்கவே மாட்டார்களோ என்ற வருத்தம் வருகின்றது சார்.

  ReplyDelete
 6. ம்ம்ம்... மாற்றம் நிச்சயம் வேண்டும்... மக்கள் மனது வைத்தால் நடக்கும்.

  ReplyDelete
 7. மாற்றம் வேண்டும் என்றுதான் தமிழர்கள் ஆசைப்படுகிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை நல்ல தலைவனே அகப்படலையே! என்ன செய்ய.?

  ReplyDelete
 8. சரியாக சொன்னீர்கள்.

  ReplyDelete
 9. ஆதங்க வரிகள்...அன்பின் நண்பரே ஒரு நல்ல மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து இருக்கிறது...மக்கள் மற்றதை மறந்து கூட ஆரம்பித்து இருக்கிறார்கள்....நாம் அணிலாய் இருப்போம்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog