உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 20, 2015

இளையராஜாவின் பல முகங்கள்இளையராஜாவின் பல முகங்கள்

இப்போது சமுகதளங்களில் பேசப்படும்  பொருள் இளையராஜா.  இந்த வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது சக்திகளுக்கு ஏற்ப உதவினர்கள் & இன்னும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எளிய மக்களில் இருந்து பல பிரபலங்களும் உதவினார்கள்  (அதில் நம்ம வலைப்பதிவர்கள் பேஸ்புக் நண்பர்களும் அடங்குவார்கள்)அப்படிபட்ட பிரபலங்களில் ஒருவரான இளையராஜாவும் அவரது சக்திக்கு ஏற்றவாறு உதவினார்.  அதை யாரும் எங்கும்  மறுத்து கூறவில்லை. அப்படி அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதற்கு அவருக்கு எனது பாராட்டுக்கள்.


அவ்வாறு உதவி செய்த அவரிடம் ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டாராம் அதற்கு  இளையராஜா மிக கோபத்துடன் உனக்கு அறிவு இருக்கா என்று நிதானம் இழந்து கேட்டு இருக்கிறார். அதுதான் இப்போது உள்ள பிரச்சனை. அதற்கு ராஜாவின் ரசிகர்கள் ஞானியிடம் இப்படி கேட்கலாமா? என்றும் ஞானி போன்ற நல்லது செய்யும் ஆட்களிடம் எப்படி கேட்கலாம் அந்த செய்தியாளர் அது மிகவும் இழிவான செயல் என்றும் ஞானியிடம் கேட்டது மாதிரி ஜெயலலிதாவிடம் அவர்களால் இப்படி கேட்க முடியுமா என்றும் கேட்டு பொங்கல் வைத்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் ரசிகர்களிடம் நான் கேட்ட இன்னும் கேட்டு கொண்டிருப்பது இவைகள்தான்.. 1. ஞானி என்பது அவரின் இசைஅறிவை பாராட்டி கொடுக்கப்பட்டதுதான். ஆனால் அவர் இசையத்தவிர மற்றவைகளில் அவர் ஞானி அல்ல அவர் ஒரு சாதரணமனுஷன் தான்

2 அவர் நல்லது செய்து வருகிறார் மிக நல்ல மனிதர் அவரிடம் போயா இப்படி கேள்வி கேட்பது என்று சொன்ன பலரிடம் நான் கேட்டது இதுதான் இந்த வெள்ள நேரத்தில் உதவியதை தவிர வேறு என்ன என்ன நல்ல செயல்களை எல்லாம் அவர் கடந்த காலங்களில் செய்து இருக்கிறார் அதை சொல்ல முடியுமா ? அப்படி அவர் செய்ததை சொன்னால் அவர் செய்த மேலும் பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் பலரிடம் பகிரலாம் என்று கேட்டும் இதுவரை யாரும் பதிலே சொல்லாமல் உடைந்த ரிக்கார்ட் போல அவரு நல்லவர் வல்லவர் அவரிடம் இப்படி இந்த செய்தியாளர் நடந்து கொள்ளலாமா என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்

3. இளையராஜாவிடம் கேட்ட கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டியதுதானே அதற்கு தைரியம் இருக்கிறதா என்றும் பல இடங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் கேட்கப்பட்ட அந்த கேள்வி இழிவானது என்று சொல்லும் அவர்கள் அதே கேள்வியை ஒரு பெண்ணிடம் அதுவும் முதலவராக இருக்கும் ஒருவரிடம் போய் கேளுங்கள் என்று சொல்லும் போது இளையராஜாவின் ரசிகர்கள் எவ்வளவு கிழ்தரமானவர்களாக இருக்கிறார்கள். ஞானி தனது சீடர்களுக்கு போதித்தது இதைதானா? வெட்கமீல்லையா உங்களுக்கு?

இப்படி பலரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாததால் நானாக இணையத்தில் தேடிய போது ராஜா பற்றி நான் படித்த செய்திகளை ராஜாவின் பல முகங்கள் என்ற தலைப்பில் இங்கு தருகிறேன்.
=================================================
முதல் முகம் இங்கே உங்களுக்காக :

சுப்பிரமணியன் ராமகிருஷ்ணனின் பேஸ்புக் பக்கத்திலிருந்து. இவர் காரல் மார்க்ஸ் / தீக்கதிரில் வந்தாக குறிப்பிட்டு இருக்கிறார். ( எனது தளம் சார்பாக எழுதியவருக்கும் அதை பகிர்ந்தவருக்கும் நன்றிகள் )

நடிகர் நாசர் அதிரடி

`இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது’. - நடிகர் நாசர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தினர்....... அவருக்கு பின் பேச வந்த இளையராஜா மறுக்கிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிய பொழுது அரங்கத்தில் ஓரிருவர் தவிர அனைவரும் அமைதியாக இருந்தனர்... .இசைஞானி தான் சுருதி தப்பி பேசுகிறோம் என்பதை கடைசி வரை உணரவில்லை....நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...

இளையராஜாவின் தப்புத் தாளங்கள்

இளையராஜா தனது உரையில் ‘உலகை இயக்குவது கடவுள்....எல்லாம் அவன் செயல்’ என்றார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ‘அப்படி யென்றால் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது கடவுள் செயலிற்கு விரோதமானது அல்லவா’ என்று கேட்ட பொழுது அருகிலிருந்தோர் ‘கொல்’ லென்று சிரித்தனர்..... ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இளையராஜா மாணவர்களைப் பார்த்து மதியம் பாடல் ஒலிப்பதிவு உள்ளது.. நன்கு பாடத்தெரிந்தவர்கள் என்னுடன் வரலாம் என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு பொருந் தாமல் பேசியதனைக் கேட்க பரிதாபமாக இருந்தது...(சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் (17.12.2015).-
காரல் மார்க்ஸ் / தீக்கதிர்

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. இந்த வெள்ளம் எதை நிரூபித்ததோ இல்லையோ, சாதி மதம் கடந்தது மனிதம் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. பெருந்தகைகள் இப்படித்தான்...பல சமயங்களில் என்ன பேச வேண்டும் என்பது அறியாமல் பேசுவார்கள்...உளறுவார்கள்..ராங்க் நம்பர் போல்...

  ReplyDelete
 2. இளையராஜாவை எதிர்த்து பேசினால் இணையத்தில் பலருக்கு கண்ணா பின்னா வென்று கோபம் கொப்பளிக்கும். ஏனென்றால் இராவாசிகள் என்னதான் தங்கள் தலைவனை பாதுகாத்தாலும் அவர் மீண்டும் மீண்டும் தன் அகம்பாவத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டேதான் செல்கிறார். இப்போது இந்த ஒனக்கு அறிவு இருக்கா? எபிசொட்.

  நானும் எழுதியிருக்கிறேன். படியுங்கள்..

  http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/

  ReplyDelete
 3. கட்டுரைகள், பதிவுகளை விட அவர்கள் உண்மைகள் முகப்பு மாற்றம் அசத்தலாக இருக்கின்றது, கிறிஸ்மஸ் வரவேற்பு படு அமர்க்களம் போலவே!அருமை. ஒவ்வொரு நாளும் விதவிதமாய் அலங்கரிப்பு அட்டகாசம் தான். அப்படியே நத்தார் பரிசினையும் பார்சல் செய்தால் மகிழ்வோம்.

  அதிருக்க... இந்த இளையராஜா போட்டி வீடியோ பார்த்தால் அவர் சட்டென பத்திரிகையாளரை உனக்கு அறிவிருக்கா என கேட்டது போல் தெரியவில்லையே.. நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் கேட்கப்பட்ட கேள்வி அசட்டை செய்யப்பட.. பத்திரிகையாளர் மீண்டும் அக்கேள்வியை கேட்கும் போது தானே அவ்வார்த்தையினை சொன்னார். அவ்வகையில் நாம் நிஜத்தினை திசை திருப்புகின்றோமோ என படுகின்றது.
  தனிப்பட்ட ரிதியில் இளையராஜ எப்படி இருந்தால் நமக்கென்ன? பொது இடத்திலும் தனி வாழ்விலும் நமக்கு முன்மாதிரியாய் இராதவர்களை குறித்து பேசி சரியா தப்பா என கேட்பதை விட அவரிடம் இருக்கும் ரெலண்ட் இசையை ரசிப்பதோடு நாம் நின்று விடலாமே!


  நிஜமாய் உங்கள் மனம் தொட்டு சொல்லுங்கள்.பீப் பாடலும்,இளையராஜா குறித்த பதிவும் முன் நிறுத்தப்பபட்டு வெள்ளப்பாதிப்பு அதனூடான நிவாரணம்,அரசின் எதிர்ப்புணர்வு திசை திருப்பப்பட்டு விட்டது தானே? இதற்கு இணைய எழுத்தாளர்களாய் அனைவரும் காரணம் ஆகி விட்டோம் தானே? வெள்ளப்பாதிப்பு குறித்த உணர்வலைகளை கொட்டி குமுறியதும் நாம் தான்.அவ்வுனர்வலைகள் சட்டென அமுங்கி போக காரணமாகியதும் நாம் தானே?

  இதே கேள்விகள் வேகத்தினை பொதுக்காரியங்களுக்காக கேட்டாலும் தகும் பா! இப்படி தனி மனிதரை உயர்த்தியும் தாழ்த்தியும் பதிவுகள் இட்டு நம் நேரத்தினை வேஸ்ட் செய்ய வேண்டுமா என யோசியுங்கள்.  ReplyDelete
 4. இங்கு நமது கவனம் திசை திருப்பபடுகிறது இந்த பாடலா முக்கியம் ஊடகங்கள் யாருக்கோ அடியாளாக இருக்கிறது

  ஒன்று மட்டும் புரிகிறது ஒரு பிரச்னையை நீர்த்து போக செய்யவும் உயிர்பிக்கவும் ஆட்சியாளர்களால் முடியும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog