உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, December 18, 2015

ஞானி கேட்ட கேள்விக்கு அறிவு உள்ள யாராவது பதில் சொல்லுங்களேன்avargal unmaigal
ஞானி கேட்ட கேள்விக்கு  அறிவு உள்ள யாராவது பதில் சொல்லுங்களேன்

தமிழகத்தில் ஒரு ஞானிகேட்ட கேள்வியால் இந்த பூலோகமே கலங்கி போய்கிட்டு இருக்கு. அதில கலங்கி போனது நானும் ஒருத்தன். இவ்வளவு நான் எனக்கு ரொம்ப அறிவு எல்லாம் இல்லை ஏதோ கொஞ்சம் அறிவு இருக்குதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப தமிழகத்து ஞானி கேட்டதற்கு அப்புறம் எனக்கு சந்தேகம் வந்திடுச்சு.  எனக்கு உண்மையிலே அறிவு கொஞ்சமாவது இருக்கா இல்லையா  என்று.. சரி அப்படி என்ன ஞானி கேட்டாரு என்கிறீர்களா?


அவர் கேட்டது உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டு பிடிச்சே? என்பதுதான் அதை ஒரு செய்தியாளரிடம் கேட்டு இருக்கிறார்.


அதற்கு ஒரு நல்ல பதிலை நீங்கள்தான் சொல்லனும் இல்லையென்றால் அந்த ஞானிதான் அறிவு இருப்பதை எந்த அறிவால கண்டுபிடிக்கனும் என்று கொஞ்சம் தெளிவாக விளக்கம் சொல்லனும் .அப்படி சொல்லவில்லை என்றால் அவரு ஒரு மகாஞானி அல்ல மகா லூசுதான்..


சரி எனக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறது  என்று சொன்னேன் அல்லவா அப்படி கொஞ்சம் கூட அறிவு இல்லை என்று இந்த பதிவை படித்த ஞானி யாரவது சொன்னால் அவங்க சரியான லூசு பசங்க.

எனக்கு கொஞ்சம் கூட அறிவு  இல்லைன்னா அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்கள்தான்  காரணமாக இருக்க முடியும் அவர்களுக்கு அறிவு இருந்திருந்தா எனக்கு அறிவு வருகிறமாதிரி சொல்லி தந்திருக்க முடியும் .சரி ஆசிரியர்களுக்கு அறிவு இல்லைன்னா அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. அறிவா இருக்கிறவங்களை ஆசிரியராக போடாதது அந்த நிர்வாகத்தின் குற்றம் .சரி நிர்வாகத்தினருக்கும் அறிவு இல்லேன்னு  அவர்களை குற்றம் சொல்லக்  முடியாது. காரணம் அந்த நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு கூட அறிவு இல்லாமல் இருக்கலாம்.  அப்படி அறிவில்லாதவர்களிடம்  நிர்வாகிக்க கொடுத்தவர்களுக்குதான் அறிவு இல்லாமல் இருக்கலாம். இப்படியே சொல்லிக் கொண்டே போனால் ஊரில் உள்ள அனைவர்களும் அறிவில்லாதவர்களாகவே இருப்பார்கள் ஆனால் யாரும் தன்னை அறிவில்லாதவர்கள் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள் அதனால் அனைவரும் புத்திசாலிகாளாகவே இருப்பார்கள் அப்படி அனைவரும் அதிபுத்திசாலிகள் ஞானிகள் என்று நினைக்கும் போது நான் மட்டும் ஏன் எனக்கு கொஞ்சம் அறிவு இருக்குன்னு சொல்லிக்க கூடாது.

என்ன ஞானிமட்டும் உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டு பிடிச்சே? என்று உளரலாமா அப்ப நான் எல்லாம் இப்படி பதிவு போட்டு உளரக கூடாதா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : செய்தியாளருக்கு உண்மையிலே அறிவு இல்லைதான் அவருக்கு அறிவு இருந்திருந்த இசைதுறையில் ஏற்ப்பட்ட பிரச்சனையைப் பற்றி இளையராஜாவிடம் கேட்காமல் உங்களுக்கு நயன்தாராவை பிடிக்குமா என்று கேட்டு இருந்தால் கன்னத்தில் தட்டிக் கொடுத்து நீ குறும்புக்காரப் பயபுள்ளை என்று சொல்லி சென்று இருப்பார் அல்லவா? அது தெரியாம இப்படியா ஏடா கூடமாவாகவா கேட்கிறது

16 comments :

 1. கலக்கிட்டீங்க
  பின் குறிப்பு அதைவிட அருமை
  தொடர்ந்து கலக்க கலாய்க்க நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இல்லை சகா.. இந்த முறை நாம் எதிர் எதிர் துருவங்களில் இருக்கிறோம். ஸ்வட்ச பாரத் என கிளப்பிவிட்டு நிலகையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றியதை போல.....சுயமாய் சிந்திக்கும் எவரையும் வெள்ளம், பேரிடர் பற்றி சிந்திக்கவிடாமல் இந்த பீப்பை எம்புட்டு நாள் தான் கட்டிக்கிட்டு அழுவனும். நேரடியா திராவிட கட்சிகளை பற்றி பேசும் துணிவு எனக்கு இல்லை. ஆனால் இளையராஜா வுக்கு இருக்கிறது. ரஜினி, கமல் எல்லாம் திரையில் மட்டுமே வீரம் காட்ட, அவர் நிஜத்தில் அக்னி தெறிக்க கருத்துக்கூறிக் கொண்டிருக்கும் போது....நீ சினிமாகாரன் நீ அதை மட்டும் பேசத் தகுதியானவன் என்பதை போல கேள்விகேட்டால் எப்படி?

  ReplyDelete
 3. ஆஹா ....ஒட்டுமொத்தமா தாக்கிவிட்டீர்களே...

  ReplyDelete
 4. வெள்ள நிவாரணப் பணியில் ஈடு பட்டவர்கள் 1000 பேருக்கு கைப்பட வாழ்த்து எழுதிக் கொடுத்ததை பற்றி கேட்காமல்.. சொந்த செலவில் ஆயிரக் கணக்கில் போர்வை வாங்கிக் கொடுத்ததைப் பற்றி கேட்காமல்.. வெளியே வரமுடியாமல் மாட்டிக் கொண்டிருந்த ஊனமுற்ற குழந்தைகள் ஆசிரமத்திற்கு படகில் சென்று உணவு வழங்கியதைப் பற்றி கேட்காமல்.. யாருக்கும், எந்த பயனும் அற்ற ஒரு பாடலைப் பற்றி கேட்டால் கோபம் வராதா?

  இவ்வளவு அழிவை பார்த்த பின்பும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரியாமல் எத்தனை நாள் இருக்கப் போகிறோம்?

  இளையராஜா நல்ல மனிதர். தன் கருத்துக்களை கோர்வையாக சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதனால் என்ன? கோர்வையாக பேசத் தெரிந்த பல அயோக்யர்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர்களால் யாருக்கு பிரயோஜனம்?

  ReplyDelete
 5. உனக்கு அறிவு இருக்கின்றதா என பொது இடத்தில் வைத்து ஒருவரை கேட்டது எந்தவித காரணமும் சொல்ல இயலாதபடி கண்டிப்புக்குரிய தனி மனித தாக்குதல் தான்.

  கேள்வி கேட்கப்பட்ட சூழல் தவறாக இருக்கலாம்,இடம் தப்பாக இருக்கலாம்,ஆனால் ஒருவரை பார்த்து உனக்கு அறிவு இருக்கின்றதா என பலர் முன் கேட்பது மிகவும் தப்பு.அறிவு இருக்கின்றதா என எதிரில் நிற்பரை கேட்க முன் தனக்கும் அது இருக்கின்றதா என யோசித்திருக்கலாம். யோசித்திருந்தால் தன்மையாக இச்சூழலில் இம்மாதிரி கேள்விகள் வேண்டாமே என இலகுவாய் தவிர்த்திருக்க முடியும். வெள்ள நிவாரணச்செய்திகளை எழுச்சிகளை புஷ்வானமாக்க
  ஊதப்பட்ட பீப்பில் இவர் செய்த நல்லவைகளும் அமுங்கி போய் நல்லதல்லாததை பேசும் படியானது தான் நம் சமூகத்தில் சாபக்கேடு!அதற்குள் நாம் அனைவரும் பலிகடாக்களானது தான் வெட்கக்கேடு.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய விமர்சகர்கள், மலிந்துகிடக்கும் தொலைக் காட்சி நிறுபர்களை எல்லாம் மதிச்சு பதில் சொல்லணும்னு எதிர்பார்த்தால் கஷ்டம்தான்.

   ஒரு நிமிடம் யோசிங்க! இளையராஜாவிடம் இப்படி ஒரு கேள்வி மதிக்கத் தக்கக் கேள்வியா? இதென்னங்க ஒரு கேள்வி??!! அசிங்கத்தை விளக்கச் சொல்லி கேக்கிற தரமற்ற கேள்வி?!

   கேள்வி கேக்கிறவன் எல்லாம் பெரிய மேதையும் இல்லை. அவனை மதித்து அர்த்தமாக பதில் சொல்லணும் என்கிற அவசியமும் இல்லை!

   இந்தக் கேள்வியை அழகான தமிழில் நாகரீகமாகக் கேட்டாலும் இது ஒரு அசிங்கமான கேள்விதான். அதை கேட்டவன் விஷமிதான். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? அப்படிப்பட்ட அசிங்கமான கேள்விக்கு பதில் சொல்லும்போது இதுபோல் வார்ர்தை தடுமாறிப் பேசுவது இயல்பே. எந்த ஒரு சாதாரண மனிதனிலிருந்து பெரிய மனிதன் வரை கேட்கக்கூடாத, அசிங்கமான கேள்விக்கு பதில்சொல்லும்போது இதுபோல் நிலைதடுமாறிப் பேசுவது பெரிய விசயம் அல்ல!

   அவரு தன்னை இசையில் ஞானினுதான் சொல்லிக்கிறாரு. எந்த அசிங்கக்கேள்விக்குனாலும் நான் பதில்சொல்ற ஞானி தான்னு சொல்லிக்கொள்ளவில்லை. இசையை விட்டுவிட்டு ஞானி என்று பொத்தாம் பொதுவாக சொல்வது குதர்க்கம் பேசுவது!

   Delete
  2. மதுரைத் தமிழரே!

   அவரு தன்னை இசையில் ஞானினுதான் சொல்லிக்கிறாரு. எந்த அசிங்கக்கேள்விக்குனாலும் நான் பதில்சொல்ற ஞானி தான்னு சொல்லிக்கொள்ளவில்லை. இசையை விட்டுவிட்டு ஞானி என்று நீங்கள் பொத்தாம் பொதுவாக சொல்வது குதர்கம் பேசுவது.

   மற்றபடி நான் இளையராஜாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வரும் விசிறி கெடையாது. இந்த அசிங்கக்கேள்விக்கு யாரு எரிச்சலடைந்தாலும் அதில் தவறு இருப்பதாகத் தோனவில்லை.

   சரி, அந்த "பீப்" போடப்பட்ட வார்த்தை "இதுவா" அப்படினு ஒரு விமர்சகர் இளையராஜாவிடம், இல்லைனா ஜெயாவிடம், இல்லைனா கலைஞரிடம் இல்லைனா உங்களிடம் கேட்டால், அதுக்கும் அந்த நிறுபரை மதித்துத்தான் பதில் சொல்லணுமா? இல்லைனா அப்போவாவது அவனுக்கு "அறிவு இருக்கா?"னு கேக்கலாமா? இல்லை அவனை மதிக்கணுமா?

   குதர்க்கம் பேசும் உங்களிடம் குதர்க்கம் பேசுவதைத்தவிர வேறு வழியில்லை!

   சரி பதில் சொல்லுங்க!

   Delete
 6. வாயைத் திறந்த பிறகுதானே
  ஒருவர் எப்படிப் பட்டவர் எனத் தெரிகிறது

  ReplyDelete
 7. அது எந்த அறிவு என்று இவருக்கு குச்சியால் பொன்னாடை போர்த்திய குருவிடம் கேட்டு சொல்வாரா?

  ReplyDelete
 8. This knowledge is what you need to have which u lack I think. http://senaithamil.blogspot.com/2015/12/blog-post_559.html

  ReplyDelete
 9. http://m.dinamalar.com/cinema_detail.php?id=41012

  ReplyDelete
 10. Read from Oneindiatamil.com
  முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர். தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா. அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். "எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்," என்று கூற... "என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?" என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார். இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் "சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க," என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம். இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல. மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள். மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் ‘சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

  ReplyDelete
 11. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை. அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில். இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல! இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்! மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

  Thanks: Oneindiatamil.com

  ReplyDelete
 12. இடம், பொருள் ஏவல் அறிந்து வினா எழுப்ப நிருபர்கள் அறிந்திருக்க வேண்டும்! இளையராஜாவை பற்றி வேறுவிதமான கருத்துக்கள் இருப்பினும் இந்த முறை அவர் கோபப்பட்டதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை! தேவையில்லாமல் பீப் சாங் பப்ளிசிட்டி பண்ணப்படுகிறது. அசிங்கத்தை துடைக்க வேண்டுமே தவிர மேலும் பூசிக்கொள்ளக் கூடாது. எனவேதான் நானும் அதைப்பற்றி பதிவிடவில்லை!

  ReplyDelete
 13. நம்ம இசை தமிழ் உலகில் இப்படியும் சில மூடர்கள்.அறிவுள்ளவன் அறிவை பற்றி பேசவே மாட்டான்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog