உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 30, 2015

பெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்?avargal unmaigal
பெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்?

மதுரைத்தமிழனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கும் பதிவுலக பெண்களும் அதற்கு மதுரைத்தமிழனின் பதில்களும்

எத்தனை நாள்தான் பீப் ,அறிவிருக்கா, த்தூ என்று பதிவு எழுதிக் கொண்டே இருப்பது அதனால என்னை நானே கலாய்த்துக் கொள்ளவே இந்த பதிவு. இதை படித்துவிட்டு சிரிக்கலாம் அல்லது இளையராஜா கேட்ட மாதிரி உனக்கு அறிவிருக்கா என கேட்கலாம் அல்லது விஜயகாந்த் மாதிரி த்தூன்னு துப்பலாம்.avargal unmaigal
கிரேஸ் : மதுரைத்தமிழன் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சண்டை வந்து பேசாமல் இருக்கும் போது நீங்கள் முதலில் சென்று பேசுவீர்களா?
அப்படி பேசாமல் இருப்பது இறைவன் கொடுத்த வரம் அதனால் முடிந்த வரை நான் அந்த வரத்தை உடைத்து கொண்டு பேசுவதில்லை. அதிர்ஷ்டத்தை கெடுக்க நான் விரும்புவதில்லை.

மைதிலி : மதுரைத்தமிழன் உங்கள் மனைவி சமையலில் உங்களுக்கு பிடித்த உணவு எது?
சமைச்சால்தானே சாப்பிட்டுவிட்டு டேஸ்ட் எப்படி இருக்குதுன்னு சொல்ல முடியும்  எந்த உணவு பிடிச்சிருக்கும் என்று சொல்ல முடியும்

ராஜி : காதல் கல்யாணம் நல்லதா அல்லது பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் நல்லதா?
கிணத்தில் விழுந்து சாவது என்று முடிவு எடுத்தபின்  பட்டு சேலைகட்டிகிட்டு விழுந்தால் என்ன கோட்டுச்சூட்டு போட்டுகிட்டுவிழுந்தால் என்ன

தென்றல் சசி :உங்கள் மனைவியின் சேலையை துவைத்து மடித்து வைப்பது நீங்கள்தான் என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?
நாட்டில் என்னைப் பற்றி புரளியை யாரோ கிளப்பிவிட்டிருக்காங்க..உண்மையை சொல்லனும் என்றால் என் மனைவி சேலை கட்டியதை பார்த்தே பல்லாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதுங்க.

உஷா அன்பரசு : ஒரு பொண்ணுகிட்ட நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உங்கள் மனைவி பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்?
ஒரு லூசுக்கிட்ட இன்னொரு லூசு பேசிகிட்டு இருக்குதுன்னுதான் நினைப்பாங்க

கீதா : உங்கம்மாவும் உங்கள் மனைவியும் சேர்ந்து இருந்தால் சண்டை வருமா?
நான்  வரும் என்கிறேன் என் மனைவியோ இல்லை என்கிறார். சரி நீ போய் என் அம்மாகூட சிறிது நாள் இருந்து பார் என்று சொல்ல ஆசைதான் அப்படி நான் சொன்னேன் என்றால் என் அம்மாவிடம் என்னை அனுப்பி வைத்துவிடுவாள்.( அம்மா மேலே போய் பல்லாண்டுகள் ஆகிவிட்டன)

ஆச்சி ஆச்சி :தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நீங்கள் மேலை நாட்டில் செட்டில் ஆகிவிட்டீர்களே உங்களுக்கு நம் நாட்டிற்கு ஏதும் நல்லது செய்யும் ஐடியா ஏதும் இருக்கிறதா?
நான் வெளிநாட்டில் இருப்பதே நம் நாட்டிற்கு செய்யும் நல்லதுதானே

அருணாசெல்வம் :காதலிக்கும் பெண்ணை கைவிடுவது தப்புதானே?
தப்புதான் அதனால் ஆண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்ன வென்றால் காதலித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டு அதன் பின் டைவோர்ஸ் பண்ணிக் கொள்ளுங்கள் அது தப்பில்லை..

சாகம்பரி  :உங்களுக்கு பிடிக்காதது எது உங்கள் மனைவிக்கு பிடிக்காதது எது?
எனக்குப் பொறுமையா உட்கார்ந்து டீவி சீரியல் பார்க்க பிடிக்காது அதுபோல என் மனைவிக்கு
சமைக்கிறது, துவைக்கிறது, வீட்டு வேலைகள்… இதெல்லாம் பிடிக்காது, அதனால் எனக்கு பிடிக்காததை அவளும் அவளுக்கு பிடிக்காத்தை நானும் செய்து கொள்வோம்

மகேஸ்வரி பாலச்சந்திரன் :உங்களின் நெருங்கிய நண்பர்கள் உங்களின் ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்லுறாங்களே  உண்மையா?
உண்மைதாங்க...... என் மனைவி எப்பொழுதும் அடிக்க, நான்  பதில் பேசாமல் அடிவாங்குகிறேன் அதை வைச்சுதான் அவங்க சரியான பொருத்தம் என சொல்லி இருப்பாங்க


avargal unmaigal

மதுரைத்தமிழனின் நகைச்சுவைகேள்வி பதில்கள் 2013 ல் வந்தது படிக்காதவர்கள் படிக்க
பெண்பதிவர் ராஜி கேட்ட கேள்விகள்  இந்த பதிவு ஒரு தொடர் பதிவாக வந்து எல்லா பதிவர்களையும் எழுத வைத்தது

அழகா ஆரோக்கியமா பெண்பதிவர்களின் கேள்விகளுக்கு மதுரை தமிழனின் அதிரடி பதில்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்
30 comments :

 1. உங்க கல்யாணம் எப்படி?!

  ReplyDelete
  Replies
  1. கிணத்தில் இருந்து கொண்டுதான் பதிவுகள் எழுதி கொண்டிருக்கிறேன்

   Delete
 2. ஹஹஹஹ்ஹ செம தமிழா....சிரிச்சு சிரிச்சு....ஸ்பாஅ...

  கீதா: ஹஹஹ இப்படி எங்க எல்லாரையும் கூட்டி வைச்சுக் கலாய்க்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்க...ஒரு முக்கியமான ஆள விட்டுட்டீங்க போல....நிஷா!!
  சிரிச்சு முடிலப்பா.....இருங்க இப்ப உடனே மைத்துக்கு ஒரு ஃபோன் போடணும் ....அப்படியே க்ரேஸுக்குப் போயிடும்...


  ReplyDelete
  Replies
  1. ஆத்துக்காரி படிக்க மாட்டாங்கங்கற தைரியத்தில தானே இத்தனை கலாய்ப்பும்1இருந்தாலும் செம்ம்ம்ம தைரியம் தான்ல!

   Delete
  2. தேங்க்ஸ் டா கீத்து !! மெசேஜ் அனுப்பினதுக்கு.

   Delete
  3. எல்லோறையும் கூப்பிட்டு வைச்சு என்னைதான் கலாய்த்து இருக்கிறேன்.. நிஷாவை மறக்கவில்லை அவர்கள் புதுசு என்பதால் அவர்கள் பெயரை போடலாமா என்று குழப்பம் அவ்வளவுதான் அவர்கள் தப்பாக எடுத்து கொள்ளக் கூடாது அல்லவா? உங்களை எல்லாம் கலாய்த்தால் தப்பாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்

   Delete

  4. தமிழ் மணத்தில் இணைப்பதற்கு பதில் பதிவு போட்டுவிட்டு உங்களுக்கு(கீதா) ஒரு தகவல் சொல்லிட்டா போதும் போல இருக்கு நீங்களே எல்லோருக்கும் தகவல் சொல்லிடுவீங்க போலிருக்கே..... நன்றி

   Delete
  5. ஹாஹ் தமிழா நீங்க தகவல் சொல்லணும்னு கூட இல்ல..பதிவ பாத்துட்டேன்னு வையுங்க போக வேண்டிய நியூஸா இருந்தா போயிடும்..உங்க மொக்கைப் பதிவுகள், கலாய்த்துச் சிரிக்க வைக்கும் உங்கள் பதிவுகள், நல்ல பதிவுகள் அது யாருடையதாக இருந்தாலும்...ஹிஹிஹி

   கீதா

   Delete
 3. யப்பா உங்க லொள்ளு தாங்கலைப்பா. சே நீங்க ரொம்ப மோசம். இலவசம் எல்லாம் தர மாட்டீங்களா.?!! இத்தனை பேர் உங்களப் பிரபலப்படுத்தியிருக்கோம்ல பேட்டி கண்டு!!!!!

  ReplyDelete
  Replies
  1. இலவசமாக ஆளுக்கொரு கார் தருகிறேன் உங்களுக்கு பிடித்த கார் டீலரிடம் என் பெயரை சொல்லி காரை இலவசமாக எடுத்டு கொள்ளவும்

   Delete
 4. ராஜி, உஷா அன்பரசு கேள்விக்கான பதில்களைப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடியல, அப்ப பின்னால் ஒரு குரல் ஏய் லுசு என்ன சிரிப்பு என்று,
  என் கேள்விக்கான பதில் சரி தான்,

  ReplyDelete
  Replies
  1. அருகில் யாரும் இல்லாத நேரத்தில் மட்டும் என் பதிவுகளை படிக்கவும் இல்லையென்றால் லூசுவின் பதிவை படிக்கும் உங்களையும் லூசு என்றுதான் அழைப்பார்கள் ஜாக்கிரதை

   Delete
 5. ஆஹா! நல்லாத்தான் கலாய்த்திருக்கிங்க! சீரியஸ் மூட் போய் சிரிப்பு மூட் வந்து விட்டது!

  இனிய புது வருட நல் வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பு மூட் வந்திருச்சுன்னு சிரிச்சுகிட்டே இருக்காதீங்க அப்புறம் ஊரு நம்மை ஒரு மாதிரியாக பார்க்கும்

   Delete
 6. ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இன்னும் 2 நாள்ல...இந்த வருஷம் முடியறதுக்கான மொத்த பூரிக்கட்டை அடியும் கிடைக்குமோ..அதான் எல்லா சகோஸயும் உங்க பக்கம் கூட்டு சேக்கப் பாக்கறீங்களா...கேச் பண்ண!

  பரவல்ல வீரத்தழும்புகள் நிறைந்த மதுரை வீரனான??!! மதுரைத் தமிழனுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! WITH A GIFT PARCEL FULL OF NEWLY DESIGNED VERY VERY SOFT POORI KATTAIS!!!!

  ReplyDelete
 7. ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இன்னும் 2 நாள்ல...இந்த வருஷம் முடியறதுக்கான மொத்த பூரிக்கட்டை அடியும் கிடைக்குமோ..அதான் எல்லா சகோஸயும் உங்க பக்கம் கூட்டு சேக்கப் பாக்கறீங்களா...கேச் பண்ண!

  பரவல்ல வீரத்தழும்புகள் நிறைந்த மதுரை வீரனான??!! மதுரைத் தமிழனுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! WITH A GIFT PARCEL FULL OF NEWLY DESIGNED VERY VERY SOFT POORI KATTAIS!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தும் தெரிவிச்சுவிட்டு அதோட புதிய டிசைனில் பூரிக்கட்டையும் அனுப்புறீங்களே அது அநியாயமாவாக அல்லவா இருக்கிறது

   Delete
 8. இவ்வளவு ஜால்ராவாக இருந்தும் உங்களுக்கு அடி விழுகின்றது என்றால்.... நீங்கள் பாவம்தான். (யாரோ மதுரைத் தமிழன், தான் என்று போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் "அவர் மனைவி" என்றும், தன் மனைவியைப் பற்றி சொல்லும் இடமெல்லாம் "மதுரைத் தமிழன்" என்றும் திருத்தி வாசிக்கவும் என்று சொன்னார்களே.. அது உண்மையா?)

  ReplyDelete
  Replies
  1. சூரியன் கிழக்கில் உதிப்பதும் மதுரைத்தமிழன் பூரிக்கட்டையால அடிவாங்குவது மட்டும் மறவே மாறாது

   Delete
 9. பெண்கள்தான் கேளுங்க கேக்கணுமா ஆண்கள் கேக்கக் கூடாதா என்று கோபப் பட ராஜி மகேஸ்வரி உஷா நிஷா சசிகலா, உள்ளிட்ட பெண்கள் படை எல்லாம் சேர்ந்து "தைரியம் இருந்தா உங்க வீட்டம்மா கிட்ட கேளுங்க" என்று உசுப்பிவிட
  மதுரைத் தமிழன் மனைவியைப் பார்த்து : உனக்கு அறிவு இருக்கா?
  "இல்லை".
  "எந்த அறிவ வச்சு இல்லன்னு சொல்ற"
  "இல்லன்னு சொல்றதுக்கு எதுக்கு அறிவு வேணும்?"
  "அப்ப அறிவு இல்லன்னு ஒத்துக்கறயா?எப்படி உறுதியா சொல்ற"
  "உங்களை கல்யாணம் பண்ணிஇருக்கேனே அது போதாதா"

  ஒட்டுக்கேட்ட பெண்கள் படை "சகோ முகம் பிரகாசமா இருக்கே பல்பு எங்கே? என்றனர்

  ReplyDelete
  Replies
  1. இந்த கேள்வியை உண்மையிலே நான் கேட்டு இருக்கிறேன் என் ஆத்துகாரியிடம் உங்களுக்கு அறிவே இல்லை என்று திட்டும் போது எனக்கு அறிவு இல்லைதான் ஆனால் அப்படிப்பட்டவனையும் ஒருத்தி கல்யாணம் பண்னி இருக்கிறாள் என்றால் அவளின் அறிவு எந்த அளவிற்கு இருக்கும் என சொல்லி தெரிவதில்லையே என்று சொல்லி அதற்காக பூரிக்கட்டையால் பலமாக அடி வாங்கியதும் உண்டு

   Delete
 10. கீத்து மெசேஜ் பார்த்துட்டு ஏதோ தொடர்பதிவோன்னு நினைத்து வந்தேன். satisfaction guaranteed ன்னு சும்மா நாச்சுக்கும் போட்டிருகீன்களா என்ன!!! செம காமெடி. உங்க அம்மா இப்போ இல்லை என்ற செய்திக்கு நான் சிரித்துவிட்டேனே என ரொம்ப கஷ்டமா போச்சு. இப்படியா எழுதுவீங்க!!!!

  ReplyDelete
  Replies
  1. அம்மா இழப்பு என்பது கஷ்டம்தான் ஆனால் காலப் போக்கில் அந்த கஷ்டம் பழகி போய்விடும் அதற்காக எப்பொழுதும் அழுது கொண்டே வா இருக்கமுடியும்.......

   Delete
 11. Replies
  1. லூசுக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி

   Delete
 12. ஹாஹாஹா சகோ, ஒவ்வொரு கேள்வியும் பதிலும் செம!! இரவு ஒன்றரை மணிக்குப் படித்துவிட்டு நன்றாக சிரித்ததில் தூக்கம் போச்சு :-)

  தகவல் அனுப்பிய மைதிலிக்கு நன்றி :-)

  ReplyDelete
  Replies
  1. இரவில் தனியாக உட்கார்ந்து சிரிக்காதீங்க ஒரு வேளை வூட்டுக்காரர் கண் விழித்தால் பயந்து போய்விட போகிறார்

   Delete
 13. நீங்க கலக்குங்க தமிழா...என்ன நீங்க சொல்லிட்டீங்க....

  ReplyDelete
  Replies


  1. ஏதோ நம்மால் முடிந்தது....

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog