உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 23, 2015

பேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸுக்கள் தமிழகத்தில் நடப்பது யார் ஆட்சி?பேஸ்புக்கில் வந்த  ஸ்டேடஸுக்கள் தமிழகத்தில் நடப்பது யார் ஆட்சி?


தமிழகத்தில் நடப்பது அம்மா ஆட்சியல்ல சித்தி ஆட்சிதான் என்று நான் சொன்னதை நம்பாதவங்க சென்னையில் வெள்ளம் வந்த பின்னாவது நம்புவாங்க என நினைக்கிறேன்.

ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறந்தாச்சு...ஆனால் போயஸ்கார்டன் வாசல் மட்டும் என்றுமே திறக்காது மக்கள் சேவைகளுக்காக


அருண்ஜெட்லி ஜெயலலிதாவை சந்தித்தது அவதூறு வழக்கை எப்படி போடுவது என்று டிரெய்னிங்க எடுக்கத்தானாம் .

"துணை முதல்வர்" பதவியை விட்டுத்தர தயார் - அன்புமணி ராமதாஸ்
2016 தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவியையாவது மக்கள் எங்கள் கட்சிக்கு தரவேண்டும்

பெட்ரோலுக்கு சிறிது விலையை குறைத்து அதே நேரத்தில் வரியை அதிகப்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் மோடிதான் . இப்ப சொல்லுங்க மோடி ஸ்மார்ட்டா அல்லது பொதுமக்கள் ஸ்மார்ட்டா?

செய்தியாளர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு செய்திகளை தருகிறார்கள் என்று ஸ்டேடஸ் போடும் போராளிகளே உங்களில் எத்தனை பேர் பணம் வாங்கி கொண்டு வோட்டை போட்டு ஒரு தவறான அரசியல் தலைமையை ஆட்சியில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள் அதை பற்றியும் சொல்லுங்களேன்

தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் : நாம் தமிழர் கட்சியினர்:
இதை கேட்டா சகாயம் தூக்கு போட்டுகிட்டு சாகப் போகிறார்

சாக்கடையில் கல்லேறிந்தால் அசிங்கப்படுவது நாம்தான் என்பதுகூட தெரியதவர்கள்தான் ஞானியாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்


சென்னையில் வெள்ளம் பாதித்ததால் இந்தாண்டு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதில்லை இது செய்வதில்லை அது செய்வதில்லை என்று சமுக போராளிகளாக ஸ்டேடஸ் போட்டவர்கள் 200 அல்லது 300 ரூ கொடுத்து டிக்கெட் வாங்கி இன்று தங்கமகன் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிறார்கள். ஹும்ம் என்னத்த சொல்லுறது


கருத்து சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பேசும் ஒரு நாட்டில் ஒரு செய்தியாளர் ஒரு பிரச்சனை பற்றி கருத்து சொல்லுங்க என்று கேட்டதுதான் தப்பு என்று பொங்கல் வருவதற்கு முன்னே பொங்கல் வைக்கிறாங்கய்யா


செய்தியாளருக்கு உண்மையிலே அறிவு இல்லைதான் அவருக்கு அறிவு இருந்திருந்த இசைதுறையில் ஏற்ப்பட்ட பிரச்சனையைப் பற்றி இளையராஜாவிடம் கேட்காமல் உங்களுக்கு நயன்தாராவை பிடிக்குமா என்று கேட்டு இருந்தால் கன்னத்தில் தட்டிக் கொடுத்து நீ குறும்புக்காரப் பயபுள்ளை என்று சொல்லி சென்று இருப்பார் அல்லவா? அது தெரியாம இப்படியா ஏடா கூடமாவாகவா கேட்கிறது

இளையராஜா தன் மகனிடம் கேட்க வேண்டிய கேள்வியை செய்தியாளரிடம் கேட்டுவிட்டார் போல இருக்கு. இடம் தெரியாமல் கேள்வி கேட்டது இளையராஜாதான் செய்தியாளர் இல்லை

இளைய ராஜாவிற்கு அறிவு இருந்தால் அவர் புள்ளைக்கு கொஞ்சமாவது கொடுத்து வளர்த்து இருக்கலாமே

_பேஸ்புக்கில் சந்திரசேகர்

விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் நடந்து கொள்ளும் அனுகுமுறையை விமர்சிக்கும் அறிவுஜீவிகள் தான்,
இளையராஜா பேசியவிதம் சரியென்று வக்காலத்து வாங்குகின்றார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. சாக்கடையில் கல்லெறிந்தால் அசிங்கம் நம் மேல தான் என்பது நிஜம் தான். நம்ம மக்கள் தான் மறதி மன்னர்களாச்சே... தங்க மனனும் தங்க குவியலையும் கொட்ட முன் பீப் சாங்கும் இளையராஜாவும் வந்து வெள்ளத்தின் சோகத்தினை கோலாகலமாக அடக்கி ஆண்டு விட்டார்களே. இனி என்ன .. இதுவும் கடந்தே போனது.... அடுத்து என்ன.?

  ReplyDelete
 2. என்னா தொகுப்பு சார்....செய்திகளை விட உங்கள் கருத்து...கவருது போங்க...

  ReplyDelete
 3. வணக்கம்..வந்தது சொல்லவே இது..நன்றி

  ReplyDelete
 4. https://balhanuman.wordpress.com
  please read the article about ilayaraja, what today people expects from him.

  ReplyDelete
 5. சகாயம் சீமானுடனா????!!!!!! ஐயகோ!!! கொடுமைடா சாமி!!! சகாயம் அப்படியே இருக்கட்டும்!

  வருத்தம் என்னவென்றால் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளும் அதை மீட்டெடுக்கவேண்டிய முக்கியத்துவமும் பின் தள்ளப்பட்டு முந்திக் கொண்டு நிற்கின்றன சில செய்திகள் என்பதுதான். இதுவும் அடங்கி வேறு அடுத்து என்னவோ...ம்ம்

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog