Friday, November 20, 2015



avargal unmaigal
கூத்தாடிகளின் சங்கத்துடன் சேர்ந்து கூத்தடிக்க நேரமிருக்கிறதா தமிழக அரசுக்கு?


இணையத்தில் படித்த செய்தி :மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும் செய்ய முடியாது நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரட்சனையை மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும் முதல்வரை சந்தித்த பின் நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு!!!


கூத்தாடிகளை ஆதரிக்கும் பொது மக்களே! இந்த கூத்தாடிகளின் படங்கள் ரீலீஸ் ஆகும் போது உங்களின் பொண்டாடி அல்லது அம்மாவின் தாலியை அடகு வைத்து நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு நீங்கள் பால் அபிஷேகம் பண்ணுகீறீர்கள். ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீங்கள் இறந்தால் கூட உங்கள் வாயில் பால் ஊற்றகூட இந்த கூத்தாடிகள் தயார் இல்லை என்பதை இப்போதாவது புரிஞ்சு கொள்ளுங்கடா

அட அறிவு கெட்ட பொது மக்களே உங்களுக்கு ஒரு பிரச்சனைகள் என்றால் தமிழகத்தை ஆளும் முதலமைச்சரை பார்க்க நினைத்தால் கூட முடியாது ஆனால் இந்த மானங்கெட்ட நடிகர்கள் ஒன்று சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் சங்கம் உதவாது என்று சொல்ல மட்டும் எளிதாக அனுமதி கிடைக்கிறது. இதைவிட கேவலம் வேற ஏதுமில்லை.


ஒரு குழுவினர் சங்கம் அமைப்பது அந்த குழுவினரின் பிரச்சனைகளை தீர்க்கவும் மேலும் வளர்ச்சிக்கு வித்திடவும்தான் அமைக்கப்படுகிறது அதே நேரத்தில் பொதுமக்களின் பிரச்சனைகளில் நியாம் இருந்தால் அதற்காகவும் அந்த குழுமத்தினர் ஆதரவு  தெரிவித்து ஒட்டுமொத்தமாக குரலாகத்தான் ஒலிக்கும். ஆனால் இப்போது அவர்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் கர்நாடக காவிரி பிரச்சனைகளில் இருந்து எந்த பிரச்சனைகளுக்கும் ஆதரவு தர மாட்டோம் ஆனால் எங்களுக்கு பிரச்சனைகள் என்றால் எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

பொதுமக்களே  நமக்கு பிரச்சனை என்றால் உதவா முன்வாராத நடிகர்களுக்கு நமது வரிப் பணத்தில் மணிமண்டபம் தேவையா? யோசிங்க மக்களே


****அரசாங்க செலவில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும் இது பொதுமக்களின் வரிப்பணத்தில்தான் கட்டப்படுகிறது அதற்கு கடும் கண்டணத்தை தெரிவிக்க வேண்டும் வேண்டுமானால் கூத்தாடிகள் ஒன்று கூடி சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டட்டும்*******

சிவாஜி மிக சிறந்த நடிகர்தான் அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை அதற்காக மக்கள் வரிப்பணத்தில் மண்டபம் கட்டிதான் அவரது நடிப்பை போற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதைவிட அவசியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களே..


இதை உணரும் அறிவு உங்களிடம் உண்டா? இருந்தால் உங்கள் எதிர்ப்பை அவர்களுக்கு காட்டுங்கள் இல்லை என்றால் உங்களை மிருகங்களை விட கேவலமாகத்தான் நடத்த வேண்டும்.

நடிகர்களே கூத்தாடிகள் என்று அழைக்கும் போது உங்கள் மனது காயப்படுகிறதுதானே..... அதுபோலத்தான் உங்களது செயல்களும் எங்களை காயப்படுத்துகின்றன... உங்கள் சங்கம் உதவவில்லையென்றால் பரவாயில்லை ஆனால்  முதலமைச்சரை சந்தித்துதான் அதை அறிவிக்க வேண்டுமா என்ன?


டிஸ்கி: நடிகர் சங்கம்தான் உதவ மறுத்திருக்கிறது. ஆனால் நடிகர்கள் நடிகைகள் தனிப்பட்ட முறையில் தங்களால் முடிந்த அளவு லட்சத்தில் இருந்து கோடிகணக்கில் தரலாமே? அதை செய்ய உங்களுக்கு மனது இருக்கிறதா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும் செய்ய முடியாது நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரட்சனையை மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும் முதல்வரை சந்தித்த பின் நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு!!
இணையத்தில் படித்த செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது. :

9 comments:

  1. கூத்தடிக்கவரங்களுக்கு கோடிக்கணக்கா சம்பளம்! ஆனா பாதிக்கப் பட்ட மக்களுக்கு கொஞ்சமும் தர மாட்டாங்களாம்! அட இனியாவது தமிழக மக்கள் திருந்துவார்களா? நடிகனை தூக்கி வைச்சு கொண்டாடுவதை நிறுத்துவாங்களா?

    ReplyDelete
  2. தமிழா நீங்கள் என்னதான் இப்படி கூவிச் சொன்னாலும் தமிழக மக்கள் திருந்தப் போவதில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பிறது, அரசியலும் திரை உலகமும் இணைந்து அல்லவா நம்மூரில் இருக்கின்றது. இதைவிடக் கேவலம் என்ன உண்டு சொல்லுங்கள்? எல்லாவற்றிலுமே அரசியல் இரண்டறக் கலந்திருக்கும் போது தமிழகத்தில் எந்தமாற்றமும் நிகழப் போவதில்லை தமிழா. இது தமிழகத்திற்கு வ்ந்த வேதனை மட்டுமல்ல சோதனை. டீவிக்களும் அப்படித்தானே இருக்கின்றன. இதிலிருந்து மீளாதவரை தமிழகமும் சரி, மக்களும் சரி உருப்படப்போவதில்லை...மக்களின் இந்தக் கொண்டாட்டத்தில்தான் இந்த நடிகர் நடிகைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்கள் உணராதவரை மாற்றம் நிகழப் போவதில்லை. உலகசினிமா அரங்கில் நம் பாமர மக்களின் வாழ்வியலைப் படமாக்கி, நடித்தும் விருதுகள் வாங்கி, கைதட்டிப் பெருமைப்பட்டு மகிழ்வார்கள். ஆனால் அதே பாமரமக்கள் அவதியுறும் போது அவர்கள் ச்சுக் கொட்டுவார்க்ள், அறிக்கை விடுவார்கள் ஆனால் எந்தவித உதவியும் அவர்களிடமிருந்து கிடைக்காது. இந்த மக்களுக்குத் தங்களால்தான் அவர்கள் பணம் கொழிக்கின்றார்கள் என்று மண்டையில் உரைப்பதில்லையே. விசிலடித்து, முதல் காட்சியைப் பார்க்க கூட்டம் முண்டியடிக்கின்றதே! அவர்கள் நன்றாகக் குளிர்காய்கின்றார்கள்.

    நல்லா கேட்டிருக்கீங்க தமிழா...

    கீதா

    ReplyDelete
  3. கூத்தாடிகளை கூத்தாடிகளாய் மட்டுமே பார்ப்போம்...

    ReplyDelete
  4. நானும் பார்த்தேன்...அவர்கள் அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள்...நாம் தான் மாறவேண்டியிருக்கிறது....தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு திரையரங்கிற்கு யாரும் போகாமல் இருப்போம்...எல்லாம் நடக்கும்....
    எங்கள் நாடகக் கலைஞர்கள் வாக்குகளுக்காக கடந்த மாதங்களில் அலைந்த மாயமென்ன?
    நடிப்பது மட்டுமே வேலை என்கிறார்கள்....
    சரிதான் ...திரைக்கு உள்ளேயும்.. வெளியேயும்...

    ReplyDelete
  5. அவர்கள் சரியாகத்தன் இருக்கிறார்கள்
    அவர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்வதும்
    தாயைக் கவனிக்காதவுன் கூட நடிகரின் பிறந்த நாளுக்குஇரத்தானம்
    செய்வதும் நாம்தானே
    நாம்தான் சரியில்லை
    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ReplyDelete
  6. நச் நச் என்று சொல்லியிருக்கிறீர்கள் சகோ..ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப் புரியுமா?
    இதைத்தான் நான் பாலாபிசேகம் செய்யப்பட்டப் பதாகைகள் பால் கொடுக்காது என்று எழுதினேன்.
    ( http://thaenmaduratamil.blogspot.com/2015/11/letter-to-the-sea.html ).

    பொதுமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் சங்க அடிப்படையிலா உதவிகள் செய்யவேண்டும்? மனிதாபிமானம் தானே முக்கியம்...சரிதான்..தொலைந்து போன ஒன்றைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
    மக்கள் உணர்ந்து திருந்த வேண்டும் சகோ..

    ReplyDelete
  7. எத்தனை கோடி பேர் சொன்னாலும் புரியாது அய்யா... நானே கூட இப்படிதான் இருந்திருக்கிறேன்... மாற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்... ரசனை வித்யாசபடுகிறது...

    ReplyDelete
  8. நச்.... ரசிகமணிகளுக்கு புரியவேண்டுமே.... இன்றைக்கும் புதுப்படம் வந்தால் முதல் ஆளாய் படம் பார்க்க காத்திருக்கும் ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.