உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 25, 2015

சிங்கப்பூரில் உள்ள கோமளவிலாஸில் உணவகத்தில் மோடி செய்த காமெடிavargal unmaigal
சிங்கப்பூரில் உள்ள  கோமளவிலாஸில் உணவகத்தில் மோடி செய்த காமெடி

சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ  .இதற்கான பில்லை சிங்கப்பூர் பிரதமர் கொடுத்தார். அதை பார்த்த மோடி கிளம்பும் முன்  அங்கு இருந்த சர்வரை கூப்பிட்டு  சொன்னார், 


“வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், கண்களுக்கு மிகவும் குளிர்ச்சி அதுமட்டுமல்ல கருவளையம் ஏற்படாது

அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்…..”

அப்புறம் யோகா செய்தால் மனநிலையில் நல்ல மாற்றம் வரும் என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், “மோடிஜி , இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

அதற்கு நம்ம மோடிஜி சொன்னார், ” மக்கு இன்னுமா புரியவில்லை, ………………??????? உங்க ஊர் பிரதமர் சாப்பிட்டதற்கான பில்லை மட்டும்தான் கொடுத்தார் அவர் டிப்ஸ் தரவில்லை அதனால்தான் நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன் என்று சொல்லி அங்கிருந்து சென்றார்


அன்புடன்
மதுரைத்தமிழன்

நகைச்சுவை,மோடி,கலாய்ப்பு
singapore komala vilas

37 comments :

 1. நீங்களும் இப்படித்தான் டிப்ஸ் தருவீங்களா?!

  ReplyDelete
  Replies
  1. நானெல்லாம் கொடுக்கிற நிலமையில் இல்லைங்க டிப்ஸ் வாங்குகிற நிலமையில்தான் இருக்கிறேன்

   Delete
 2. நல்லா தானே சொல்லியிருக்கார்,,,,

  நீங்களும் இப்படி சொல்லிடாதீங்க,

  ReplyDelete
  Replies

  1. என்னங்க என் டிப்ஸ் எல்லாம் அவ்வளவு கேவலமாவா இருக்கு?

   Delete
 3. ஹஹஹஹ்ஹ் மோதிஜி அங்கு சென்றும் "டிப்ஸ்" என்று மானத்தை வாங்கிவிட்டாரே. அங்கெல்லாம் டிப்ஸ் இல்லை என்று இவருக்குத் தெரியாதோ?!!!!

  ReplyDelete
  Replies
  1. டிப்ஸ் வழக்கம் எல்லா நாட்டிலும் உண்டுதானே?

   Delete
 4. அட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாடா? இப்படில்லாம் டிப்ஸ் கொடுக்கலாம் என இது வரை எனக்கு தெரியாமல் போனதே!

  எங்க ஹோட்டலுக்கும் சாப்பிட வந்து விட்டு இப்படி டிப்ஸ் தந்திராதிங்க!

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு தர மாட்டேன் .உங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு நல்லா எப்படி உணவு தயாரிப்பது எப்படி என்று மட்டும் டிப்ஸ் தருகிறேன் சரிதானே ஹீஹீ

   Delete
 5. டிப்ஸ் எல்லாம் இருக்கட்டும் அந்த பதினஞ்சு இலட்சத்த எப்ப தருவாருன்னு கேட்டு சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. அதானே? ஸ்விஸ் வங்கியில உள்ள என் பணம் ரூ.15லட்சம் -எரிவாயு மானியம் தர்ரேனு சொல்லி வாங்கி, அப்பறம் நிப்பாட்டின - என் அக்கவுண்டுக்கு எப்ப வரும்னு ஒரு டிப்ஸ் தருவார்னு பாக்குறேன் மனுசன் வாயத் திறந்தா வெளிநாடுல்ல தெரியுது! நல்லாச் சொன்னீங்க மதுரைத் தமிழரே! நீங்க “ஜே ஜே“னு வருவீங்க.. (அம்மா கட்சியில்லங்க.. மக்கள் கட்சி!)

   Delete
  2. என்னங்க விசு மோதிஜியின் கணக்கு வழக்கை பார்த்து கொள்ள உங்களை அப்பாயிண்மென்ட் பண்ணுவதற்காகவே மோடி கலிபோர்னியா வந்தாருன்னு ஊரெல்ல்லாம் பேச்சா இருக்கு ஆனால் நீங்க என்னவென்றால் இன்னும் தெரியாத மாதிரி இங்க வந்து கேட்குறீங்களே?

   Delete
  3. முத்து நிலவன் மக்கள் கட்சிக்கு நீங்கதான் தலைவர் என்றால் நான் ஜே ஜே என்று வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு

   Delete
 6. என்ன கருத்து....? இது தான் நீங்கள்...

  ReplyDelete
  Replies

  1. இப்படி ஏதாவது கிறுக்குவது மட்டும்தானுங்க நம்மால் முடியும்

   Delete
 7. Replies
  1. என்ன சொல்லி திட்டின்னீங்க என்னை ?

   Delete
 8. ஹா....ஹா நல்ல கற்பனை

  ReplyDelete
  Replies
  1. கற்பனையெல்லாம் இல்லீங்க முன்பு நான் படித்து ரசித்த துணுக்கை சமயத்திற்கு தகுந்து மாற்றி அமைத்து எழுதியது மட்டும்தான் நானுங்க

   Delete
 9. நம்ம P.M. எது சொன்னாலும் வெளிநாட்டில் தான் சொல்லுவார்.

  நன்றி
  M.செய்யது
  துபாய்

  ReplyDelete
 10. அத்தோடு விட்டாரேன்னு அந்த சர்வர் நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார் :)

  ReplyDelete
 11. ok....ok...

  சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

  இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

  ReplyDelete
  Replies

  1. உங்களின் பதிவு மழையை படித்து பார்த்து மகிழ்ந்தேன். அருமை

   Delete
 12. உங்க மூளைக்கு டிப்ஸ் தர சொல்லி உங்க ஹவுஸ்பாஸுக்கு சொல்லிடறேன்.. டிப்ஸை பலமா வாங்கினா இன்னும் நல்லா இப்படியெல்லாம் யோசிப்பீங்க.... ஹா.. ஹா.. ! ஆனா நிஜத்த சொல்லனும்னா ப்ளாக் எனக்கு போரடிக்காம கொஞ்சம் எட்டி பார்க்கவும் தோணுதுன்னா உங்களோட இந்த நகைச்சுவையான கலாய்ப்புகள்தான்...

  ReplyDelete
  Replies
  1. எங்க வூட்டம்மா உங்களை இப்ப அடிக்க தேடிகிட்டு இருக்காங்க காரணம் என் தலையில் இருக்கும் களிமண்ணுக்கு(மூளைக்கு) டிப்ஸ் தர சொன்னீங்களாம் அதனாலதான் .

   பல நேரங்களில் பதிவு எழுதுவதை நிறுத்திவிடலாமா என்று நான் நினைக்கும் நேரத்தில்தான் உங்களை போல உள்ளவர்கள் வந்து இன்னும் தொடர்ந்து வந்து படித்து மகிழ்கிறீர்கள் என்ரு சொல்லி கருத்து சொல்வது எனக்கு மேலும் எழுதுவதற்கு பூஸ்ட் கொடுப்பது போல இருக்கிறது. மிகவும் நன்றி

   Delete
 13. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி

   Delete
 14. சூப்பர் டிப்ஸ். மோடிக்கே டிப்ஸ் கொடுப்பவர் ஆயிற்றே மதுரை தமிழன்.

  ReplyDelete
  Replies
  1. மதுரைத்தமிழனை மிகவும் தட்டிக் கொடுப்பவர் நீங்களாயிற்றே . நன்றி

   Delete
 15. Replies
  1. ரசித்து சிரித்து மகிழ்ந்தற்கு நன்றி

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இவர் என்ன இவர் என்ன சொல்லி இருப்பாரு....

   Delete
 17. இதுதான்
  மோடிப்ஸ்!
  (மோடி + டிப்ஸ்)

  ReplyDelete
  Replies

  1. மோடி + டிப்ஸ் = மோடி டூப்ஸ்

   Delete
 18. ஹா ஹா ஹா குசும்பு தாங்கள.........Bro
  Joshva

  ReplyDelete
  Replies
  1. ரசித்து சிரித்து மகிழ்ந்தற்கு நன்றி

   Delete
 19. எல்லா நாட்டுக்கும் போறாரே கொஞ்சமாவது நல்ல விசயத்த கத்துக்கிட்டு வரலாம்ல...இந்தியாவுல பிரச்சனைன்னா எந்த நாட்டுல இவரத்தேடுறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog