உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 1, 2015

ஜெயலலிதா Shame on you!avargal unmaigal
ஜெயலலிதா Shame on you!

கோவன் பாடிய பாடலில் வார்த்தைகள் தடித்து கொச்சையாக வந்திருக்கலாம். காரணம் டாஸ்மாக் மீதுள்ள கோபம் காரணமாக கூட இருக்கலாம். ஒரு கட்சியின் தலைவராக இருக்க கூடியவர்கள் கூட சில சமயங்களில் கோபப்படும் போது வார்த்தைகள் தடித்து அசிங்கமாக பேச நேரிடும் போது சராசரி மனிதர்கள் கோபப்படும் போது வார்த்தைகள் தடித்துவிடுவது சர்வ சாதாரணமாக ஏற்படக் கூடியதுதான்.


அதற்காக அவர்கள் மீது வேண்டுமானால் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக தேச துரோக குற்றம் சுமற்றி கைது செய்வது மிக தவறுதான்.


டவரில் ஏறி உயிரைவிட்ட காந்தியவாதியின் பொணத்தை வைத்து ஒப்பாரி கூட்டம் நடத்திய தமிழக தலைவர்கள் இதைப்பார்த்தும் சும்மா இருப்பது எதனால்? இதற்கு எதிர்கட்சிகள் சேர்ந்து போராட்டம் நடத்தாதது ஏன். எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள்? கோவன் பொணமாக ஆன பின் தான் உங்கள் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கொள்கைகள் ஏதும் உங்களிடம் இருக்கிறதா அல்லது உங்கள் மீதும் தேச துரோகம் குற்றம் சுமற்றப்படும் என்ற பயமா?

Shame on you! shame on you!

ஜெயலலிதா மட்டும் அல்ல தமிழக தலைவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்!
அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. நண்பரே ...

  இந்த பாடலை நானும் ஒரு முறை கேட்டேன். இதில் வரும் வார்த்தைகள் சில முகல்ம் சுளிக்க வைத்தது. என்னதான் இருந்தாலும்.. ஒரு முதல்வரை ஒருமையில் பேசுவது... தவறு என்பது என் கருத்து.

  இவர் சொல்லவந்த காரியம் எனக்கு படித்து இருந்தது. ஆனால் சொன்னவிதத்தில் உடன்பாடு இல்லை.

  Having said that, இது தேச துரோகம் அளவிற்கான குற்றமா ? .. கண்புயுசன் ..

  ReplyDelete
  Replies
  1. முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள்தான் அதில் எனக்கும் மாற்று கருத்தில்லை, ஆனால் அதற்கு அவதூறு வழக்குதான் பதிந்து இருக்க வேண்டும் தேச துரோகம் என்பது மிக மிக தவறு அப்படி இல்லை என்றால் ஜெயலலிதாவை தூற்றி பல சமயங்களில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கலைஞர் போன்றவர்களின் மீதும் இந்த தேச துரோக வழக்குகள் கடந்த காலங்களில் பாய்ந்து இருக்க வேண்டுமே? அப்படி நடக்கவில்லையே ஏன்

   அதனால்தான் shame on you என்று சொல்லி இருக்கிறேன்.

   Delete
 2. வார்த்தைகள் தடித்து இருந்தன! ஆனால் இது ஒன்றும் தேசத்துரோகம் என்று சொல்ல முடியாது! கானாப் பாடல்களில் இது சகஜம். தெருமுனைக்கூட்டங்களில் பேசுவோர் இதைவிடக் கேவலமாக எல்லாம் பேசுகின்றனரே! வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்!

  ReplyDelete
 3. MT: I am not a fan of JJ (you know that!) but it is politically incorrect and legally not allowed to use words like "kill" in poem or whatever!

  ReplyDelete
 4. இந்தப் பாடல் தற்போது உள்ள சூழ்நிலையைக் கருதி வாட்ஸப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிரப்பட்டு பல்லாயிரக்கணக்கான படித்த மக்களைச் சென்றடைந்துள்ளது. ஆனால், இந்த பாடல் எழுதப்பட்ட சூழ்நிலை, அது பாமர மக்கள் மத்தியில் வீதி வீதியாக கிராமப்புறங்களில் பாடுவதற்காகவே எழுதி இசையமைக்கப்பட்டது. எனவே வார்த்தைகள் சென்றடைய வேண்டிய அத்தகைய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இதில் தவறேதும் காண முடியவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. Target Audience என்பதினை கருத்தில் கொண்டு பார்த்தால் யாரும், வார்த்தைகளைக் குறை கூற முடியாது..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog