Sunday, November 1, 2015




சங்கம் அவசியமா அது தேவைதானா?

நாட்டுல பல சங்கங்கள் இருக்கின்றன. ஜாதிக்கு ஒரு சங்கம், ஊருக்கு ஒரு தமிழ் சங்கம், தொழில்களுக்கு ஒரு சங்கம், நடிகை நடிகர்களுக்கு சங்கம், இப்படி பல சங்கங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இது போதாது என்று பத்து இருவது பேர் கூடிட்டா உடனே ஒரு சங்கம் ஏதாவது ஒரு பெயர்ல ஆரம்பிச்சிட வேண்டியது. இதுல என்ன கூத்துன்னா மக்கள் தொகையைவிட சங்கங்களின் தொகையை மிக அதிகமாக இருப்பதுதான்.




இப்படி சங்கம் ஆரம்பிப்பவர்களிடம் எதுக்கு அய்யா சங்கம் ஆரம்பிக்கிறீங்க என்று கேட்டால் நாங்க எல்லாம் ஒற்றுமையாய்  இருந்து, எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தால் எங்கள் பலத்தை காண்பித்து போராடுவோம் என்று சொல்லுகிறார்கள். அதுவும் சரிதான் ஆனால் இப்படி ஆரம்பிச்ச சங்களுக்கு வெளியில் இருந்து பிரச்சனை வராமல் அதுக்குள்ளேயே பிரச்சனைகள் ஆரம்பித்து இரண்டு மூன்று கோஷ்டிகளாக அடித்து கொள்வதைதானே நாம் நடைமுறையில் காண்கிறோம் என்று கேட்டால் நீதான் அவனா என்று நம்மை முறைத்துவிட்டு செல்லுகின்றனர்.




சரி சங்கங்கள் ஆரம்பிப்பதில் நன்மைகள் இல்லையா என்று  கேட்டால் நிச்சயம் நிறைய நன்மைகள் இருக்காத்தான் செய்கின்றன. உதாரணத்திற்கு சங்கம் ஆரம்பித்தால் அதற்கு தலைவர் வேண்டும் அப்படி ஒருத்தரை தேர்ந்தெடுப்பதால் நாட்டில் தலைவர்கள் பெருகுகிறார்கள். அதுமட்டுமல்ல இப்படிபட்ட சங்கங்களை நம்பிதான் பல பூக்கடைகளும், பொன்னாடை தாயாரிப்பவர்களும், சவுண்ட் சர்வீஸ் நடத்துபவர்களும் மண்டபங்கள் கட்டி வாடகை விடுபவர்களும் புத்தக கடைகாரர்களும், மேடை அலங்கார நிறுவனங்களும், விழா விருதுகளை தயாரிப்பவர்களும், உணவு தாயாரிப்பவர்களும் சங்கத்தின் அருகில் டீக்கடை வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி பலரும் இப்படிபட்ட சங்கங்களை நம்பிதான் வாழ்க்கையையே நடத்தி வருகிறார்கள்.

அதனால்தான் சொல்லுகிறேன் சங்கங்கள் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் அதனால் மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவு முடியும்...

நானும் மற்றவர்களுக்கு உதவ முடிவு பண்ணிட்டேன் அதனால் நான் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் 'பூரிக்கட்டையால் அடிவாங்கினாலும் மனைவியை நேசிப்போர் சங்கம்'  அந்த சங்கத்திற்கு  சங்கம் இருக்கும் வரை நான்தான் தலைவர். இப்படி சொல்ல காரணம் சங்க தேர்தல் வைத்து அதற்கு வீணாக செலவு செய்யவேண்டாம் போட்டிகாரணமாக சங்கம் இரண்டாக பிளவுபடாது. என்ன நான் சொல்லுறது சரிதானே...  உறுப்பினர்களை ஒரு நல்ல நாள் பார்த்து சேர்க்கலாம் என்று இருக்கிறேன். ஆண்டுக்கு பத்தாயிரம் மட்டுமே உறுப்பினர் சந்தா வசூலிக்கப்படும் ஆயூள் சாந்தா ஒருலட்சம். ஆயுள் சாந்த கட்டும் முதல் நூறு பேருக்கு அழகிய பரிசும் பாராட்டுபத்திரமும் கண்ணிற்கு தெரியாதவாறு உள்ள ஒரு ஹெல்மேட்டும் கொடுக்கப்படும்

அப்ப நான் வரட்டா இல்லையென்றால் என் மனைவி என்னை வந்து குத்திவிடுவா அதுக்கு முன்னால் நான் எஸ்கேப்.....

விரைவில் "புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு விழா" பற்றிய விமர்சன பதிவு .....படித்துவிட்டு நீங்கள் பாராட்டலாம் அல்லது (மனதிற்குள்) திட்டலாம் அல்லது கழுவி கழுவி ஊற்றலாம் அது உங்களின் விருப்பம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. சீக்கிரம் ஆரம்பிங்க.... நிறைய பேர் வரிசைல காத்திருக்காங்க.....

    ReplyDelete
    Replies
    1. சரி நீங்கள் ஆயுள்கால உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன்.. முதல் உறுப்பினர் என்பதால் 10 சதவிகிதம் தள்ளுபடி உண்டு

      Delete
  2. // மனைவியை நேசிப்போர் // அங்கே நிக்குறீங்க தல...!

    ReplyDelete
    Replies
    1. அங்க நிக்கலைன்னா சோறு தண்ணி கிடைக்காதே தனபாலன்

      Delete
  3. ஒரு தமிழன் தனியாக இருந்தால் ஒழுங்கா இருப்பான். அடுத்த தமிழன் அங்கே வரும் போது, இருவரும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிப்பார்கள் . மூன்றாவது தமிழன் வரும் போது, சங்கம் இரண்டாக மாறும். ஆரம்பித்த இருவரும் ஆளுக்கொரு சங்கத்தில் தலைமையை இருப்பார்கள். மூன்றாவது ஆள் இரண்டு சங்கத்திலேயும் உறுபினராக இருப்பான்.

    ReplyDelete
  4. பூரிக்கட்டை தயாரிப்பாளர் சங்கத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ளுவீர்களா? (பூரிக்கட்டையை ஸ்பாஞ்சில் செய்ய)

    ReplyDelete
  5. ஆரம்பிங்க! ஆரம்பிங்க!

    ReplyDelete
  6. உம்ம பதிவுல ஒரு வருத்தம்
    அதனால தான் இந்த திருத்தம்

    பூரிக்கட்டையால் 'எவ்வளவு' அடி வாங்கினாலும்
    மனைவியை தங்கமாய் தாங்குவோர் சங்கம் அப்டின்னு பேர் வச்சா பஹூத் அச்சா

    இந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு சங்கத்தில் எங்க ஆளுங்களுக்கு அதிகமில்லை 90 % ஒதுக்கீடு தந்தா எங்க ஆதரவு உங்களுக்கே..

    ReplyDelete
  7. உண்மை, அன்பே சிவம் சொல்வதுபோல் 'பூரிக்கட்டையால் எவ்வளவு அடி வாங்கினாலும் மனைவியை அசராமல் நேசிப்போர் சங்கத்திற்கு தங்களை தலைவராக போடலாம். எவ்வளவு அடித்தாலும் அசராமல் இருப்பதால்..!

    ReplyDelete
    Replies
    1. ம.துரை மாப்ளே... உஷாரு நம்ம சங்கத்தில் எனக்காக பேச ஒரு பெரிய பொறுப்பாளர் தயார்...(வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அண்ணன் சூரி குரலில் படிக்கவும்..( அவருக்கும் ஒரு போஸ்ட் குடுத்துடலாம் மாப்ள.. )

      Delete
  8. விரைவில் சங்கம் ஆரம்பியுங்கள்...

    ReplyDelete
  9. ஐயா,நமக்கொரு இடம் போட்டுவையுங்கள்.....சந்தாதான் பிரச்சனை....
    வீட்ல சொன்னேன்...கொஞ்சம் குறைச்சுக்க சொன்னாங்க....

    ReplyDelete
  10. அட! மதுரைத் தமிழா செம கிராக்கி போலருக்கு...நான் லேட்டூ ..ஐயையோ சங்கத்துல இடம் இருக்கா தமிழா....சேந்தாச்சு....உங்களுக்குக் கொடி பிடிக்க (எங்க ஊர்ல எதுக்கெடுத்தாலும் கொடி பிடிச்சுத்தானே பழக்கம் அந்தப் பழக்த தோஷம் தான்...!!!)

    ReplyDelete
  11. என்னப்பா நீங்கல்லாம் ஒரு கட்சியாகிட்டீங்க...உங்க சகோதரிகளை எல்லாம் கண்டுக்காம...எங்க மைத்து வரிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கனு பார்த்தா ஆளையே காணும்...

    அது சரி ஆயுள் சந்தானு சொல்லிட்டுருக்கீங்க அந்த "ஆயுள்" க்கு நீங்க பாதுகாப்பு கொடுப்பீங்கதானே?!!!!! சகோ? கொடுக்க முடியலைனா எனக்கு அந்த போஸ்ட் கொடுங்க..சகோ...சங்கத்துக்கு நல்ல தொகை சேரும்.(கொசுறு: எங்க வீட்டுல பூரிக்கட்டை ஆப்போசிட் சைட்...என் கீழ் இல்லை சகோ....அதான் உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பா இருக்கலாம்னு!!! ஹஹ)

    கீதா

    ReplyDelete
  12. நான் வேணா கொள்கைப் பரப்புச்செயலாளரா செயல்படலாம்னு நினைக்கிறேன் சகா!!
    சங்கம் வாழ்க!

    ReplyDelete
  13. ஆஹா இந்த சங்கம் நிச்சயம் தேவை. தலைநகருக்கு இடம் உண்டா?

    ReplyDelete
  14. வேலூரில் கிளை அமைக்க தலைமைச்சங்க அனுமதி வேண்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.