Monday, November 30, 2015



தேசியகீதம் பாடும் போது நிற்காதது குற்றமா?

திரை அரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது ஒரு இஸ்லாமிய குடும்பம் எழுந்து நிற்கவில்லை என்று பிரச்னை. அதனால் அவர்களை தியோட்டரில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். அந்த அரங்கில் இவர்களை பல இஸ்லாமியர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஒரு குடும்பத்தினால்  மற்ற இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயர்.


அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்றாலும் தவறு என்றால் அது தவறுதான். இந்த விஷயத்திற்காக அதில் மத சாயம் பூச வேண்டாம். காரணம் எந்த மதத்திலும் தேசிய கீதம் இயக்கப்படும் போது உட்காரு என்றோ நில் என்றோ கூறப்படவில்லை.

இதை செய்தவர் மூஸ்லிம் என்பதற்காக ஒட்டு மொத்த மதத்தையும்  மற்ற மதத்தவர் தவறாக சித்தரிப்பது தவறு. அது போல செய்தவர் மூஸ்லிம் என்பதற்காக சப்பை கட்டிக் கொண்டு தியோட்டரில் தேசிய கீதம் இசைக்கலாமா என்று பதில் கேள்வி கேட்பதும் தவறு.

என்னப் பொறுத்தவரை தவறு செய்தவர் யாராக இருந்தாலும்  தவறு தவறுதான்.அதில் மாற்றுக்கு இடமே இல்லை.

அந்த குடும்பம் ஏன் எழுந்து நிற்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து உண்மை அறியவேண்டும்.ஒரு வேளை அது தேசிய கீதம் என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது அதற்கு எழுந்திருக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம் அல்லது தியோட்டரில் இசைக்கும் போது எழுந்திருக்க வேண்டியது இல்லை என்று நினைத்து இருக்கலாம். இப்படி பல லாம்கள் அதில் இருக்கின்றன.

இது கூட தெரியாமல் இருக்குமா என்று நினைக்கலாம் ஆமாம் இது போன்ற பல சட்ட திட்டங்கள் ,மரபுகள் இந்தியர் பலருக்கு தெரியாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை


நம் நாட்டில் இருக்கும் போது மட்டுமல்ல எந்த நாட்டில் இருந்தாலும் அது நம் நாட்டின் தேசியகீதமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நாட்டு தேசிய கீதமானலும் சரி அந்த அந்த நாட்டு தேசிய கீதங்கள் பாடப்படும் போது நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அதற்கு தகுந்து எழுந்து நிற்பதுதான் மரபு. மரபுக்கு மதிப்பு தருவதுதான் அறிவில் சிறந்தவர்கள் செய்வது

இந்த மூஸ்லிம் நாட்டில் உள்ள இந்த மரபை மீறியதால் ஏதோ மூஸ்லிம்கள் எல்லாம் நாட்டிற்கு எதிரிகள் என்று சில மதவாதிகள் தாம்தூம் என்று குதிக்கிறார்கள். அவர்களை பார்துது கேட்கிறேன். இந்திய நாட்டில் உள்ளவன் எவனும் இந்திய சட்டத்தை மீறியதே இல்லையா என்ன? காசு வாங்கி கொண்டு வோட்டு போடுவதும் அதற்கு காசு கொடுப்பதும் இந்திய சட்டப்படி குற்றம்தானே? அவர்களை எல்லாம் இப்படி மத சாயங்கள் பூசிதான் கேள்விகள் கேட்கிறீர்களா என்ன? அவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் தானே? அவர்களால்தானே இந்த நாடு நாசமாகிறது.


இந்த மூஸ்லிம் தேசியகீதத்தை அவமதித்ததன் மூலம் இந்திய தேசத்தையே அவமதித்துவிட்டதாக கூப்பாடும் போடும் அறிவிலிகளே இந்திய பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று  இந்தியாவை பற்றி தவறாக பேசி இந்திய நாட்டின் தரத்தை கிழே இறக்கி பேசினாரே அப்போது எங்கே போனது தேசபக்தி & இந்த மத சாயம் எங்கே சென்றது.

மோடி கூட்டத்தை சார்ந்தவர்கள் நாட்டில் எங்கெல்லாம் சிறிய தவறுகள் நடக்கிறதோ அதற்கு எல்லாம் முடிந்த வரை மதசாயம் பூசி மக்களை இரண்டாக்கி அவர்களுக்குள் வெறுப்புண்டாக்கி அதில் குளிர் காய்ந்து தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க இப்படி பல காரியங்கள் செய்து வருகிறார்கள்.

இதற்கு நீங்கள் பலியாகமல் சிந்தித்து செயல்படுங்கள். அதனால் நீங்கள் மற்றும் அல்ல உங்கள் வருங்கால சந்ததிகளும் நிம்மதியாக வாழும்.

இந்தியர்களின் தேசபக்தி வெளியிடும் சினிமா தியோட்டரில்தான் இவ்வளவு தேச பக்தி கொண்டவர்கள் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேசிய கொடி தலைகிழாக இருந்ததே அதற்காக மோடியை பதவியில் இருந்து விலக போர்க் கொடி பிடிக்க வேண்டியதுதானே அல்லது அதற்கு காரணமான இந்திய அதிகாரிகளை கண்டிக்க வேண்டியதுதானே? இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி ஏய்ப்பு செய்து மேலைநாடுகளில் கறுப்பு பணமாக பதுக்கி வைத்து இருக்கிறார்களே? அவர்களிடமும் அவர்களுக்கு ஆதரவு தரும் இந்திய தலைவர்களிமும் தேசபக்தி பற்றி பேச வேண்டியதுதானே அல்லது கேட்க வேண்டியதுதானே?

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த பதிவை எழுதி முடித்ததும் ஊடக செய்தியாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்ததை உங்களின் பார்வைக்காக வைக்கிறேன்

கிழே சிவப்பு எழுத்தில் உள்ளதை  பேஸ்புக்கில் எழுதியவர் ஏழுமலை வெங்கடேசன் (நன்றி)

தேசிய கீதம். தியேட்டர்,, உயர்நீதிமன்ற தீர்ப்பு

தேசிய கீதம் ஒலிக்கும் எழுந்து நிற்க வேண்டியது மரபு.. மேடையில் இருக்கும் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர் கள் கடைபிடிக்கலாம்.ஆனால் மற்றவர்களும் நிற்க வேண்டியது கட்டாயமில்லை. அது அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது..

உதாரணத்திற்கு அந்த நேரத்தில் பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரிகள், ஊடக ஒளிப்பதிவாளர்கள் போன்றவர்கள் அவர்கள் வேலையை விட்டு அசையாமல் நிற்கமுடியுமா?

அதிலும் பொழுதுபோக்கு இடமான திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நின்றே ஆகவேண் டியது என்கிற கட்டாயம் இல்லை. இதனால் கலைந்து செல்ல முற்படுவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் ஏற்படும்.இதனை தெளிவுபடுத்தி மத்திய உள்துறை அமைச்சகமே, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதனை மேற்கோள்காட்டி, கடந்த செப்டம்பர் 15 நதேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் கொண்ட பெஞ்ச், திரையரங்கு களில் தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்கவேண்டியது கட்டாயமில்லை என்று ஒரு தீர்ப்பையே அளித்துள்ளது.

தற்போது திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட வர்கள் நீதிமன்றத்தை நாடினால், அவர்களுக்கு நியாயம் கிடைக்கும்


10 comments:

  1. நல்ல பதிவு.....சரியான கேள்விகள்...

    ReplyDelete
  2. தமிழா.. சிங்கம் 2 பார்க்க போபட இருந்தேன் ( அந்த அசிங்கத்த பார்க்க ஏன் போனன்னேனு நீங்க கேட்பது காத்து கிழிய கேட்கின்றது). அதில் ஔர் காட்சியில் நம் இந்திய தேய கீதம் முழுதாக பாடப்படும். நாமே விரும்பினாளுலேளுந்து நிற்கா முடியாத குறை. பின்னல் இருக்கும் ஏன் இனிய தமிழ் மக்களின் ஒப்பாரி.
    சரி, கையை மட்டும் நெஞ்சில் வைத்து முணுமுணுத்து பாடிகொண்டே கண்ணை மட்டும் சுற்றியடிதேன்.
    நம் இனிய தமிழ் மக்கள்..தொப்பியை கூட கழட்டாமல்..சோடா குடித்து கொண்டு.. பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டு..
    நான் உண்மையாகவே அவமான பட்ட நாள் அது.

    atthu சரி.. அந்த படத்துக்கு நான் ஏன் போனேன்னா? அந்த அநியாயத இன்னொரு நாள் வேறொரு பதிவு மூலம் சொல்றேன்.

    ReplyDelete
  3. தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதது பிரச்சனை அல்ல, அவர்கள் ஒரு முஸ்லீம் என்பதே பிரச்சனை. இவ்வளவு ஏன் நம்ம முதலமைச்சர் தேசிய கீதத்தை 4 வரி இசைக்க செய்யவில்லையா.சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.

    ReplyDelete
  4. சரியான நேரத்தில் சரியான ப திவு - இந்த இணைப்பையும் பாருங்கள்.
    http://www.bbc.com/tamil/india/2015/11/151130_janaganamana தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதது குற்றமல்ல: என்கிறார் முன்னாள் நீதிபதி சந்துரு

    ReplyDelete
  5. திரையரங்குகளில் ஏன் தேசிய கீதம்,,,,,,,

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அவசியமான பதிவு நண்பரே. நன்றி
    உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிய தந்த ஏழுமலை வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி.

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
  7. மகேஸ்வாி பாலசந்திரனை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  8. திரையரங்கில் தேசிய கீதம் தேவையில்லைதான். தமிழகத்தில் இந்த வழக்கம் ஒளிந்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். தேவையான பதிவு.

    ReplyDelete
  9. அருமையான பதிவு சகோ. விசு சொல்வது போல் படத்தில் தேசியகீதம் வந்தால் எழுந்து நிற்பது கடினம்தான்..ஆனாலும் முடிந்த அளவு மரியாதை செய்யவேண்டும்.
    எதற்கெடுத்தாலும் மதச்சாயம் பூசுவோரின் சாயத்தை நாம் களைக்க வேண்டும்..

    ReplyDelete
  10. மதுரைத் தமிழா செம பதிவு! கேள்விகள் அனைத்தும் பளீர். ஹும் இங்க எவருக்குமே தேதியப் பற்று இல்லை..இருந்திருந்தால் தமிழகத்திலும், சென்டரிலும் ஒரு நல்ல ஆட்சியாளர் கிடைத்திருப்பார்...

    இது எந்தத் திரையரங்கில்? திரையரங்கில் தேசிய கீதமா? இப்போது எல்லாம் போடுகின்றார்களா என்ன..? !!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.