உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 15, 2015

கடவுளை கண்டேன் ஆசைகளை சொன்னேன்கடவுளை கண்டேன் ஆசைகளை சொன்னேன்

கஷ்டத்திலே பெரிய கஷ்டம் என்னவென்றால் ஒரு தலைப்பை  கொடுத்து அதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பதுதான். அப்படி பெரிய கஷ்டத்தை என் மேல் சுமற்றி விட்டு ஹாயாக ஒரு சகோ வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்..அதுவும் எதற்கும் ஆசைபடாத ஒருத்தனிடம் ஆசைகளைப் பற்றி எழுத சொல்லி கேட்டு இருக்கிறார். நல்ல இருங்கப்பே நல்லா இருங்க


ஆசைகளைப் பற்றி சொல்லும் முன் என்னைப் பற்றி சில வரிகள் சொல்ல நினைக்கிறேன். நான் சிறுவயதில் இருந்து இப்போது வரை எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எதற்கும் ஆசைப்பட்டது இல்லை இதற்கு உதாரணமாக சிறு வயதில் நடந்த ஒரு சில சம்பவத்தை சொல்லுகிறேன்

எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்பாது நான் எனது பெரியம்மாவின் வீட்டிற்கு என் அம்மாவுடன் சென்று இருந்தேன் நான் எதற்கும் ஆசைப்படுவது இல்லை என்பதால் அவர்களே உனக்கு அது வேண்டுமா இது வேண்டுமா என்று ஒன்றன்பின் ஒன்றாக கேட்டு கொண்டிருந்தார்கள் எல்லாவற்றிற்கும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன நான் கடைசியில் பொறுமை இழந்தவனாக எனக்கு ஒரு  ஆசை என்று சொல்லி அங்கிருந்த ஒரு டேபிள்தான் வேண்டும் என்று சொன்னேன். அவர்களும் சரி அதை எடுத்து கொள் என்றார்கள் .உடனே நான் எனக்கு அதை நீங்கள் தான் எடுத்து என் கையில் தர வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன்.அது அந்த கால டேபிள் நாலு பேர் சேர்ந்தாலும் அவர்களால் எளிதில் தூக்க முடியாது அன்றில் இருந்து அவர்கள் யாரும் உனக்கு அது வேண்டுமா இது வேண்டுமா என்று கேட்பதில்லை. இது பல சமயங்களில் எங்கள் குடும்பத்தில் சொல்லி சொல்லி சிரித்ததால் இன்று வரை அது என் மனதில் நிலைத்து நிற்கிறது. அது போல என் பள்ளி மற்றும் கல்லூரி காலக் கட்டங்களில் எனது வீட்டிற்கு வரும் என் நண்பர்களிடம் எனது அம்மா சொல்லுவது  தம்பி இவனை சினிமா கினிமா என்றறு எங்காவது கூட்டிடுப் போங்க என்பார்கள். இப்போது என் மனைவி எதற்கும் ஆசைபடாத ஜென்மம் என்று திட்டுகிறார்கள்....

இப்படி புத்தனைப் போல இருந்த என்னை ஆசைப்பட வைத்துவிட்டார்கள் இறுதியில் .அது மட்டுமல்ல அந்த ஆசையையும் சொல்லு என்று கில்லர்ஜீ ஆரம்பித்து வைத்து அது சகோ மைதிலி மூலம் எனக்கு வேண்டு கோள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் எனது ஆசைகளை இங்கே வைக்கிறேன் அதை படித்துவிட்டு திட்ட நினைப்பவர்கள் கில்லர்ஜி மற்றும் சகோ மைதிலியையும் திட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்


ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாள் இதுதான் கலாபக் காதலா

இது எனக்கு பிடித்த ஆசைப் பாடல். அதை பிள்ளையார் சுழியாக இட்டு பதிவை தொடர்கிறேன்

1.ராமரைப் போல ஏகபத்தினி விரதானக இருங்கள் ஏகப்பட்ட பத்தினிகளுக்கு ஆசைப்படாதீர்கள் என்று பெரியவங்க சொன்னாங்க .அப்படி இருக்க ஆசைதான். ஆனால் அப்படி நான் இருந்தால் அந்த ராமர், அவருக்கு போட்டியாக நான் வந்துவிட்டேன் என்று கருதுவார். அதுமட்டுமல்ல பிஜேபிகாரர்கள் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு பதிலாக எனக்கு கோவில் கட்டி விடுவார்கள். அதனால் சரித்திரம் மாறிவிடும் அதனால் நான் ஏகப்பட்டபத்தினிகளுக்கு விரதனாக இருக்கப் ஆசைப்படுகிறேன். என்ன என் ஆசை சரிதானே மக்களே

2. அடுத்த ஆசை ஏகப்பட்ட பத்தினிகளுக்கு ஆசைபட்ட எனக்கு அதிக மனைவிகள் தேவை இல்லை ஐந்து மனைவிகள் இருந்தால் போதும். நான் எதற்கும் அதிகம் ஆசைப்படுவதில்லை. ஐந்து மனைவிகள் எதற்கு என்று நினைக்கிறீர்களா? படுக்கை அறைக்கு ஒரு அமெரிக்க பெண் மனைவியாக இருக்க வேண்டும்( என்ன அனுபவம் பேசுகிறதா என்று கேட்க வேண்டாம் காரணம் படுக்கை அறை ரகசியங்களை வெளியே சொல்வதில்லை ஹீஹீஹீ ) மஜாஜ் பண்ண பிலிப்பைன்ஸ் பெண்ணும், பாருக்கு போய் சரக்கு அடித்துவிட்டு டான்ஸ் ஆட ஸ்பெனீஸ் பெண்ணும் ,குழந்தையை கண்டிப்புடன் வளர்க்க  சைனீஸ் பெண்ணும் ,எனக்கு நன்றாக செளத் இண்டியன் சமையலை செய்து தந்து, உடல் நிலையை கவனிக்க ஒரு தமிழ் பெண்ணும் வேண்டும் என்று கடவுளிடம் ஆசையை வைத்தேன். அதற்கு அவர் கடவுளாகிய நானே இரண்டு பொண்டாட்டிதான் வைத்து இருக்கிறேன் , உனக்கு ரொம்ப ஆசைதான் அதனால உனக்கு ஆசை தோசை அப்பாளா வடை என்று சொன்னார்

3. கடவுளே அடுத்த பிறவியில் நான் பெண்ணாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றேன். அதற்கு அவர் ஏன் குழந்தாய் இப்படி ஆசைப்படுக்கிறாய் என்றார். அப்புறம் என்னா சாமியோவ் நான் எத்தனைதான் நல்ல பதிவு பேஸ்புக்கில் போட்டாலும் லைக் போடவே மாட்டேன்கிறார்கள். அதனால் நான் பெண்ணாக பிறந்து கதற கதற மொக்கைகள் போட்டாலும் காதில ரத்தம் வடிந்தாலும் எல்லா பயபுள்ளைங்களும் லைக்ஸ் அள்ளிக் குவிப்பாங்க. கிச்சனுக்கே போகாமல் ஒரு நாள் மட்டும் கிச்சனில் இருப்பது மாதிரி போட்டோ போடலாம் அல்லது கண்றாவியாக சமைச்சு அதை நான் சமைச்சேன் என்று போட்டோ எடுத்து போட்டாலும் பார்க்கவே அழகாக இருக்கு உங்கள் கையால் அதை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று லைக்ஸை அள்ளி குவிப்பார்கள் என்றேன் அதை கேட்ட அவர் நிச்சயம் உனது இந்த ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றார்.

யோவ் மதுரைத்தமிழா ஏதாவது நல்ல ஆசைகள் இருந்தால் சொல்லுப்பா இப்படி கண்றாவியாக சொல்லுவாய் என்று எங்களுக்கு தெரிந்திருந்தால் உன்னை இந்த தொடர் பதிவக்கு எழுத கூப்பிட மாட்டிருக்க மாட்டோம் என்று நீங்க கதறுவது எனக்கு புரிகிறது அதற்கு என்ன செய்ய முடியும்


4 கடவுளே என் வாழ்வில் ஒரு முறையாவது ஜெயலலிதா,கலைஞர், ஸ்டாலின் மோடி இவர்களை சந்திக்க வைத்துவிடு அவர்களிடம் ஒரு சில கேள்வியை கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது என்றேன் அதற்கு அவர் என்ன கேள்வி கேட்கப் போகிறாய் என்றார் அதற்கு நான்

ஜெயலலிதாவை பார்த்து உங்களை மக்கள் எல்லாம் அம்மாவாகத்தான் கருதி அழைக்கிறார்கள். உங்களுக்கோ பிள்ளைகள் இல்லை. உங்களுக்கு வேண்டிய அளவிற்கு சம்பாதித்து வீட்டீர்கள்தானே? அப்படி இருக்கையில் மக்களூக்கு நன்மைகள் ஏதாவது செய்து, சரித்திரத்தில் இடம் பிடிக்க உங்களுக்கு ஆசைகள் இல்லையா?( பெண்ணாகிய நீங்கள் பெண்களுக்காக பள்ளி ,கல்லூரி மற்றும் பொதுவிடங்களில் கழிப்பறை கட்டி தரக் கூட உங்களுக்கு மனது இல்லையா? பெண்ணாகிய நீங்கள் இதை கூட பெண்களுக்கு செய்து தரக் கூடாதா என்ன? அது போல டாஸ்மாக்கை ஒழித்து பல குடும்பங்களை காப்பாற்றி வேறு வழியில் புகழ் சம்பாதிக்க உங்களுக்கு ஆசையில்லையா?)

கலைஞரைப் பார்த்து எத்தனை முறை முதல்வராக இருந்து உங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக வாழ சொத்துக்கள் சேர்த்துவிட்டு ஏசியாவிலே மிகப் பெரிய பணக்காரனாக வாழ்கின்றீர்களே! ஒரு முறையாவது மக்களுக்கு ஏதாவது நல்ல காரியம் பண்ணிவிட்டு சரித்திரத்தில் பேசும்படியாக வாழலாமே! அதற்கு உங்களுக்கு ஆசை இல்லையா?


ஸ்டாலினை பார்த்து உங்களுக்கு முதல்வர் ஆவது மட்டும்தான் ஆசையா? அல்லது மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று ஆசையா என கேட்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்வதுதான் ஆசை என்றால் முதல்வராகாமல் கூட இயக்கம் ஆரம்பித்து. பல நல்ல செயல்களை செய்ய முடியுமே என்று கேட்க ஆசை

மோடியை பார்த்து உங்களை கோடான கோடி இந்திய மக்கள் நம்பினார்களே அவர்களுக்கு கொஞ்சமாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு துளிகூட எண்ணம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிகிறது என்று கேட்க ஆசை என்றேன்

அதை கேட்ட கடவுள் உனக்கு உயிரின் மீது ஆசையே இல்லையா என்று திருப்பி கேட்கிறார்.

5. கடவுளே எனக்கும் கவிதை எழுதி வெளியிடும் ஆசை இருக்கிறது. அதனால் அதற்கான அறிவை கொடு என்றேன். அதை கேட்டுவிட்டு உன் மனதிற்குள் தீவிரவாதத்தை ஊன்றியது யார் என்று திருப்பி கேட்கிறார்

6. கில்லர்ஜியை மீசையில்லாமல் பார்க்க ஆசை

7. பதிவர் ஆரூரானும் பால கணேஷும் ஜப்பானிய ஸ்டைல் மல்யுத்தம் போடுவதை பார்க்க ஆசை

8 பெண் பதிவர் ராஜி அக்காவும் தென்றல் சசி அக்காவும் குடுமி பிடி சண்டை போடுவதை பார்க்க ஆசை( என்ன ராஜியும் சசியும் உனக்கு அக்காவா? ஆமாம் மற்ற பதிவர்கள் எல்லாம் அக்கா அக்கா என்று கூப்பிடுவதால் அவர்களை போல நானும் மரியாதையாக கூப்பிடுவதுதானே நன்றாக இருக்கும்)

9. மைதிலியும் கிரேஸும் ரோமியோ ஜுலியட் வேடத்தில் நடிப்பதை பார்க்க ஆசை( இது ஏன்? அவங்க இரண்டு பேரும் எப்ப பார்த்தாலும் ஓ டியர் மை டியர் என்று அழைப்பதை பார்த்து இப்படி ஒரு ஆசை)

10. வலைப்பதிவர் திருவிழா ஒன்று இப்படி நடக்க ஆசை. ( பதிவர்கள் அனைவரும் குடும்பத்துடன் பஸ்ஸில் குற்றாலம்  சென்று இரண்டு மூன்று நாள் தங்கி குளித்து  சாப்பிட்டு பல வித விளையாட்டுப்  (கயிறு இழுக்கும் போட்டி ஒட்டப்பந்தயம் கபடி ஸ்கிப்பிங்க் மியுசிக்கல் சேர்  சாப்பாட்டு போட்டி, இப்படி பல போட்டிகள் )நடத்தி ஒருவரை ஒருவரை கலாய்த்து பேசி சிரித்து மகிழ வேண்டும்) இப்படி ஒரு விழா நடக்க ஆசை..... இந்த போட்டிக்கு எல்லாம் நடுவர் தனபாலன்தான்

இந்த பதிவினை நான் தொடர அழைப்பது. 1; கலைஞர். 2 ஜெயலலிதா 3, ஸ்டாலின் 4 விஜயகாந்த. 5 வைகோ 6 மோடி, 7. சோனியா. 8 .குஷ்பூ 9 கனிமொழி 10 இளங்கோவன்.. நீங்கள் அனைவரும் நேரம் கிடைத்தால் இந்த பதிவை தொடர் பதிவாக எழுதவும்ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

பருவம் என்னும் காட்டிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

ஆஅ...........ஆஅ...........ஆஅ.............

அன்புடன்
மதுரைத்தமிழன்26 comments :

 1. ஆசையில்லாத மதுரைத் தமிழன்....!!!

  ஆமாம் ஜெயலலிதா அம்மாவிற்கு வாரிசு இல்லை என்று யார் சொன்னது?

  ReplyDelete
  Replies
  1. ஓ ......நீங்கள்தான் அவர் வாரிசா?

   Delete
 2. கில்லர்ஜி அவர்களின் மீசை மீது தங்களுக்கு என்ன கோபம் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. கோபம் இல்லை கொஞ்சம் பயமாக இருக்கிறது அதுதனாலதான் அவர் மீசையை அவருக்கு தெரியாமல் வெட்டிவிட்டுட்டேன்... பாவம் அவரின் இந்த மூஞ்சியை பார்த்து அவர் ஒருநாளாவது பயப்படட்டும்

   Delete
 3. தமிழா முதலில் தங்கள் ஓர வஞ்சனை பார்வைக்கு என் கடும்! கண்டனங்கள்.
  காரணம்
  1) கலைஞர், 3) ஸ்டாலின், 9) கனிமொழி என்றும்
  7) சோனியா, 8) குஷ்பு , 10) இளங்கோவன் என்றும்

  வாய்ப்பளித்த நீர் மற்ற பாவப்பட்ட (மன்னிக்க) அய்யோ பாவப்பட்டவர்களுக்கு சரி விகிதத்தில் வாய்ப்பு தராதது ஏன்?. மேலும் நாட்டில் முதல் கையெழுத்து மூலம் புரட்சி?! செய்ய பயிற்சி?! பெற்றுவரும் சின்ன அய்யா மற்றும் அவருக்கு பயிற்சி புகட்டி வரும் பெரிய அய்யாவை கண்டுகொள்ளாத்து ஏனோ?. இது தவிர நாட்டின் தலைவிதியை மாற்ற பாடுபடும் 1) திருமாவளவன்,2)சீமான்,3)தமிழிசைஅக்கா,4)இருபெரும் சிவப்பு சிந்தனைக்காரர்கள். ஆகியோரை மறந்ததுக்கு தண்டனையாக ஒரு மழைநாள் முழுவதும் சென்னை போக்கு'வரத்து' பிரிவில் பணிபுரிய உத்தரவிடப்படுகிறது. :-)

  யப்பா ஸ்மைலி போட்டுட்டேன் .அப்புறம் அதுக்கு எனக்கு ஏதாவது தண்டனை தந்துடப்போறாங்க..

  ReplyDelete
  Replies
  1. கண்டணத்தை கில்ல்ர்ஜிக்கு தெரிவியுங்கள் அவர்தான் 10 பேருக்கு மட்டும் வேண்டு கோள்விடுக்க சொன்னார்

   Delete
 4. முதல் இரண்டு ஆசையை மட்டும் அண்ணிக்கு forward செய்திருக்கிறேன் அப்ரூவல் வாங்க.
  மற்றபடி உங்கள் அரசியல் ஆர்வம் இங்கு வந்துவிட்டது. கிரேஸ் கிட்ட நேத்து போன்ல பேசும்போது கூட சொன்னேன். டியர் இந்த மதுரை தமிழனுக்கு நம்ம friendship மேல ரொம்ப ஜெலஸ் என்று. அவங்க பாவம் ப்பா அவர் நல்ல மனுஷன் சொல்றாங்க.ஹ்ம்ம்
  ஜோக்ஸ் அபார்ட். கேட்டவுடன் ஆசையை நிறைவேற்றிய சகாவுக்கு நன்றிகள் பல:)

  ReplyDelete
  Replies
  1. உங்க அண்ணி எப்போதோ தண்ணி தெளிச்சு அப்ரூவல் கொடுத்திட்டாங்க.... நீங்க டூ லேட்,,,, அட உங்களுக்கு போன்ல பேச வேற உருப்படியா விஷயம் ஏதும் கிடைக்கவில்லையா என்ன? வீணாப் போனவனை பற்றியா பேச்சு.....ஹும்ம் நாடு எங்க முன்னேற போது......ஆமாங்க உங்க நட்பு மேல எனக்கு பொறாமைதானுங்க.. காரணம் உங்களின் நட்பைபோலவை நானும் மதுவிடம் ஹலோ டியர் எப்படி இருக்கீங்க என்று நட்பு கொள்ள ஆசைதான் ஆனா ஊரில் உள்ளவங்க அவனா நீ என்று கேட்பாங்க... பொம்பளை பிள்ளைங்க அப்படி பேசினா தப்பு இல்லை ஆனா ஆண்கள் அப்படி பேசினா உலகம் சந்தேகமா பார்கிறது...

   கிரேஸ் எங்க ஊரு பொண்ணுங்க அதனாலதான் அண்ணன் நல்லவருன்னு சொல்லி இருக்காங்க...

   Delete
 5. ஆஹா.... ஆஹா.. என்ன மாதிரி ஆசைகள்.

  இந்த பதிவு வெளியிட்ட பிறகு, உங்களது சில ஆசைகளால் பத்து பூரிக்கட்டைகள் உங்கள் வீட்டில் உடைந்து விட்டதாக செவி வழிச் செய்தி வந்தது..... நலம் தானே மதுரைத்தமிழா!

  உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்.....

  ReplyDelete
  Replies

  1. பத்து பூரிக்கட்டை உடைஞ்சா கூட கவலை இல்லைங்க ஆனா அதோட கூட சேர்ந்து என் கை கால் மற்றும் மண்டையும் உடைந்துவிட்டன... ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று அந்த காலத்தில் பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அப்படி பெரியவங்க சொன்னபடி ஆசைப்படாமல் இவ்வளவு நாள் வாழ்ந்து வந்திருந்தேன். இப்ப இந்த கில்லர்ஜி மற்றும் சகோ மைதிலியால் வந்த வினையை பார்த்தீங்களா நண்பரே ஹூம்ம்ம்ம்ம்

   Delete
 6. அட...! அருமையான பாடலுடன்...

  குற்றாலம் சென்று... நான் ரெடி...!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒரு நாள் நமது சந்திப்பு ஏற்படும் ஹாய் பை சொல்லும் சந்திப்பாக அல்லாமல் நீண்ட நேரம் பேசி மகிழும் சந்திப்பாக இருக்கும்

   Delete
 7. அட! உங்க ஆசை வித்தியாசமா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. பூரிக்க்கடையால் அடிக்கடி அடி வாங்கிய மூளைசிறிது கலங்கி இருப்பதால் இப்படி மாறுப்பட்ட ஆசைகள்தான் வரும்

   Delete
 8. வணக்கம் நண்பா...
  நான்காவது ஸூப்பர்ரோ... ஸூப்பர்
  ஆறாவது இப்படியொரு ஆசையா
  பத்தாவதும் ஸூப்பர்
  தாங்கள் தொடரச்சொல்லும் பதிவர்களின் இணைப்பையும் தந்திருக்கலாம் நண்பரே...

  நண்பா நல்லாவே ஷேவ் பண்ணி இருக்கீங்க.. ஆனால் ? கத்தியை பதமாப் போட்டுட்டீங்களே... சதையெல்லாம் பெயர்த்து எடுத்து விட்டீர்களே....
  பரவாயில்லை இதுவும் நல்லாத்தான் இருக்கு நான் எப்படிப் பார்த்தாலும் அழகுதான் நண்பா.... பகிர்வுக்கு மிக்க நன்றி
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முகத்தில் இரவு நேரத்தில் உழுததால் அப்படி இருக்கிறது ஆனால் அதுவும் நல்லதுக்குதான் இல்லையென்றால் மீசை இல்லாமல் கமல்ஹாசன் மாதிரி மிக அழகாக நீங்கள் இருந்துவிட்டால் எல்லாப் பெண்களும் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள் அது உங்களுக்கு மிக தொந்தரவாகவே இருக்கும். உங்களால் அவர்களை சாமாளிக்க முடியாது அல்லவா?

   Delete
 9. ஹஹஹ செமையா சிரித்து சிரித்து......

  5 வயதில் தொடங்கிய உங்கள் லொள்ளு கலாய்ப்பு இதொ இன்று வரை தொடர்கின்றது.....பாவம் ..இப்ப உங்க வீட்டுல பூரிக்கட்டை பறந்து பறந்து அவங்க கை எல்லாம் வலிக்கப் போவுது....பின்ன எத்தனை அடி வாங்கினாலும் அசராது இப்படிப் பதிவு போட்டா..ஹஹஹ்

  நாங்கள் அடிக்கடி நினைக்கும் பதிவர் சந்திப்பு....ஜாலியாக ஒரு பிக்னிக் ஸ்பாட்டில் வைத்து என்று...நண்பர் விசுவிடம் பேசும் போது கூடச் சொல்லிக் கொண்டிருந்தோம்...பதிவாக எழுத நினைத்து பாதி எழுதி...ட்ராஃப்டில் இருக்கின்றது....

  நீங்கள் அழகாகச் சொல்லி அதற்கான பாடலும் ஸ்வீட்...நடந்தால் நல்லது...

  உங்கள் ஆசைகளை மிகவும் ரசித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. எங்க வூட்டம்மாவுக்கு கை வலிச்சா ஆளை வேலைக்கு அமர்த்தி அடிப்பாங்க...முன்னால அடிக்கு பயந்து நாள் முழுவதும் கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சு இருப்பேன்... ஆனால் இப்ப எல்லாம் அவங்க என்னை தேடி வருவதற்கு முன்னாலே அவங்க முன்னாலே போய் என்னம்மா அடிக்கனுமா எத்தனை அடி அடிக்க போறேன் என்கிறதை மட்டும் முன்னாலே சொல்லிவிட்டு அடி என்பேன்

   Delete
 10. முதல் மூன்றும் .....ஹஹ் சரி சரி..ரொம்ப அடியோ எத்தனைப் பூரிக்கட்டைகள்?

  4 வது அருமை ! ஆப்ட்...

  6,7,8,9 ரொம்பவே ரசித்தோம்...

  10 வது ஆஹா அதைச் சொல்லியாச்சு...

  ReplyDelete
 11. உங்கள் ஆசைகள் எல்லாம் ரொம்ப அருமை போங்க...
  கில்லர்ஜி அண்ணா மேல அப்படி என்னங்க ஒரு கோபம்...
  அந்த மீசையை அருகில் இருந்து பார்த்து.... அபுதாபியில இப்படி ஒரு மீசை வைத்து அதை பாதுக்காக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம் என்று வியந்திருக்கிறேன்...

  ஏன்னா எங்க ஆபீசில் எல்லாம் நாம வச்சிக்கிட்டுப் போற சின்ன மீசைக்கே 'மீசை பெருசா(!?) இருக்கு.... இந்தியக்காரங்க எல்லாம் மீசையை விரும்புவீங்கதானேன்னு ரெண்டு நாளைக்கு ஒருதடவை எவனாச்சும் கேக்க ஆரம்பிச்சிடுறான்...

  உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேறட்டும்.

  ReplyDelete
 12. ஆசைகள் எல்லாம் ரெம்ப அருமை தான். ஆசைப்படும் மனதிலும் முதலிரண்டு ஆசைகளும் நிறைவேறினாலே போதும் வாழும் ஆசையே போய் விடும். ஆனாலும் இப்படில்லாம் ஆசைப்படணும்னால் நீங்க ரெம்ப தைரிய சாலின்னு தான் நினைக்க தோன்றுகின்றது சார்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் மிக சரிதான் ஆசைகள் நிறைவேறினால் வாழும் ஆசையே போய்விடும் என்பது உண்மைதான். இப்ப எனக்கு வாழும் ஆசையே இல்லை........
   மனைவிகிட்ட பூரிக்கட்டையால் அடி வாங்க ரெடியாக இருக்கும் யாரும் வேண்டுமானாலும் இப்படி தைரியாமாக ஆசைகளை சொல்லலாம் அவ்வளவுதாங்க

   Delete
 13. உங்கள் அன்பான வரவேற்புக்கும், ஆதரவுக்கும், தொடரலுக்கும் ரெம்ப நன்றி சார். நாங்களும் கடவுளை இங்கே கண்டோம் சார். http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_15.html
  பதிவுலகிற்கு புதிது என்பதால் லிங்க் இணைத்தேன். தவறெனில் மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. புதிய வரவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். எல்லாம் சரி ஆனால் சார் மட்டும் வேண்டாம் மதுரைத்தமிழன் என்று அழைத்தாலே போதும்

   Delete
 14. மன்னிக்கவும், என்னை விட பெரியவர்களை இது வரை பெயர் சொல்லி அழைத்ததில்லை.ஏனோ மன்ம் ஒத்துழைப்பதில்லை. அப்படி அழைத்து அவர்கள் பெரியவர்களாயிருக்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. அதனால் அறிமுகம் பலப்படும் வரை இந்த சார் தொடரத்தான் செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களை விட நான் பெரியவன் என்று யார் சொன்னா? நான் மிக சிறியவன். மண்டபத்தில் யாரவது என்னை பெரியவன் என்று சொன்னால் நம்பாதீங்க

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog