உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 18, 2015

எனக்கு பிடித்தவர் யார்?எனக்கு பிடித்தவர் யார்?

ஜெயலலிதாவை பிடிச்சவங்களுக்கு அதிமுக பிடிக்கும்.திராவிடம் பிடிச்சவங்களுக்கு திமுக பிடிக்கும்.எனக்கு ஜெயலலிதா பிடிக்கும்.அதை விட திமுக பிடிக்கும்! # இப்படி எதையாவது உளறி வைப்போம்

இப்ப சொல்லுங்க எனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று?

கொஞ்சம் யோசிங்க

இன்னும்


என்னங்க யோசிக்க சொன்னா தலைமுடியை பிச்சுகிறீங்க


தலையில் முடி இல்லாதவங்க எங்க உங்க தலையை சுவற்றில் போய் முட்டுறீங்க

யோசிப்பது என்றால் அவ்வளவு கஷ்டமா?

சரி சரிநானே பதிலை சொல்லிடுறேன்
ஆனா அதை படிச்சிட்டு காறி துப்பக் கூடாதுகாறி துப்பக் கூடாதுன்னு சொன்னது உங்கள் நலனுக்குதான்
ஆமாங்க நீங்க காறி துப்பினால் உங்க லேப்டாப்தான் அசிங்கமாகும்


அல்லது உங்க மனைவி பார்த்தால் அவளைத்தான் நீங்க காறி துப்புறேனு நினைச்சுக்கப் போறாங்க
அதனால் உங்க வீட்டுல பெரிய போரே நடக்க கூடும்அதன் பின் சமாதானத்த்ஹிற்கு சேலை அல்வா மல்லிகைப்பூ என்று வாங்கி கொடுத்து அவங்களை நல்லவங்க வல்லவங்க என்று புகழந்து பேச வேண்டும்அப்படி உங்க நேரட்தை வேஷ்டாக ஆக்குவதற்கு பதிலாக நீங்க நாலு பேரை இப்படி பொய்யாக பேஸ்புக்கில் புகழ்ந்தீர்களே ஆனால் உங்களுக்காகவது நாலு லைக்ஸ் கிடைக்கும்அதன் பின் நீங்க பேஸ்புக்கில் போராளிகளாக ஆகலாம்அதன் பின் நாளிதழ்கள் வார இதழ்களில் உங்கள் கருத்துக்கள் வெளி வரலாம்


அதனால்தான் சொல்லுகிறேன்எனது பதிலை படித்ததும் காறிதுப்பாமல் சிரித்து மகிழுங்கள்


ஒரு வேளை சிரிப்பு வரவில்லை என்றால் அழுதுவிட்டாது போங்கள்சரி எனக்கு யாரை பிடிக்கும் என்று இப்போது சொல்லுகிறேன்


எனக்கு பிடித்தது உங்களைத்தான் காரணம் நான் இப்படி மொக்கை போட்டாலும் படிச்சு ரசிக்கிறீங்களே. அதனால்தான் உங்களை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்


அப்ப வரட்டா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

15 comments :

 1. ஹா ஹா ஹா.... எனக்கும் உங்களை ரொம்பப் பிடிக்கும்.... :)

  ReplyDelete
 2. ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது...

  ஒரு மாதிரியா இருக்குற இந்த ஆளு (வேற யாரு நம்ம மதுரைத்தமிழன்'தேன்')
  நம்ம ஜாதிக்காரரா இருப்பாரோ! அப்டின்னு...

  இப்ப கன்பார்ம் ஆயிடுத்து..

  அதேதான்..

  இப்ப என்னோட ஜாதிய சொல்லிடனுமுல்ல.. அதானே நியாயமும் தர்மமும்...

  நான் வந்து .. என் பாரியாள் வார்த்தையில் சொல்வதென்றால்...

  மறை க(ழ)ண்ட ஜாதி அப்ப நீங்க..

  ReplyDelete
 3. இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே...

  கிறுக்கை (ம.. த...) பிடிச்சவங்களுக்கு

  கட்டாயம் கிறுக்கு பிடிக்கும்.. :-)

  ஸ்மைலி போட்டுட்டேன்.. சரியா?

  ReplyDelete
 4. ஹஹஹஹஹ் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப யோசிக்க வைச்சு ஐயோ ஐயோ....ஐயோ...நு புலம்ப வைச்சுட்டீங்களே! சரி அந்தக் கடைசி வரிகளை அதை அப்படியே சேம் டுயு....அதாங்க உங்க மொக்கைப் பதிவுகளை நாங்க ரசித்துப் படிக்கின்றோம்னா என்னா அர்த்தம்..அதே அதே...
  ரொம்ப தாங்க்ஸ்பா...எங்க எல்லாரையும் பிடிச்சுருக்குனு சொன்னதுக்கு ..

  ReplyDelete
 5. யாரும் எதிர்பாராதது.:)

  ReplyDelete
 6. அல்லோ... உங்கள...?

  ReplyDelete
 7. இந்த உலகத்திலே என்னை பிடிக்கும் என சொன்ன முதல் ஆளு நீங்க தான் சார்!
  என்னை எனக்கே பல நேரம் பிடிப்பதில்லையாக்கும். ஆனால் என்னை உங்களுக்கு பிடிக்கும் என சொன்னதற்காக பரிசு கிரிசு எல்லாம் தர முடியாதுங்க!

  ReplyDelete
  Replies
  1. பிறந்த நாள்? வாழ்த்துகள்!

   படத்தில் இருக்கும் வரிகள் பிரமாதம், என் கொள்கையும் அதுவே!

   Delete
 8. போஸ்ட்ல இருக்கிறது சும்மா, அந்த போட்டோ உள்ள இருக்கிறது தான் பதிவு. இப்டி நீங்க பேசுறதை எது மேலோட்டமானது, எது உண்மை என கண்டுபிடிக்கும் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறார்களே ன்னு நீங்க பெருமைப்படணும்:))))

  பிறந்தநாள் வாழ்த்துகள் சகா:) இப்போவரை அங்கே நவம்பர் 18ன்னு நினைக்கிறேன்:)

  ReplyDelete
 9. வாங்க வாங்க உங்களுக்காகத்தான் காத்திருந்தோம்....

  ReplyDelete
 10. O my God!! தமிழா உங்கள் பிறந்தநாளா !!! நேற்று! 18 முடிந்துவிட்டதே! சரி பரவாயில்லை....தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! என்றென்றும் தாங்கள் அன்புடனும், மகிழ்வுடனும் எல்லா இன்பமும் பெற்று தங்கள் குடும்பத்துடன், சுற்றத்துடன் மகிழ்வாய் வாழ்ந்து இப்படி மொக்கைப் பதிவுகள் போட்டு எங்களையும் மகிழ்விக்கு பல நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். நாங்கள் எல்லா வலைப்பதிவ நண்பர்களும். எல்லா நாளும் பிறந்த நாள்தானே நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதால்.!!!

  ReplyDelete
 11. ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல!

  ReplyDelete
 12. அது சரி.... விடுபட்ட பதிவுகளைப் படிக்க வந்தா, இப்படி ஒரு விளையாட்டா! :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog