Thursday, November 19, 2015



avargal unmaigal
சூடு சுரணை உள்ள தமிழக மக்களா நீங்கள்?


தீவிரவாதிகளால் பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் நூற்றுகணக்கான பேர் இறந்தனர் இதற்கு உலகமெங்கும் கண்டணம் எழுந்தது. அதற்கான காரணமானவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மேலும் அது தொடர்பான பலரை தேடி வருகின்றனர்.
 

அது போலத்தான் கடந்த சில தினங்களால் தமிழகத்தில் நூற்றுக்கும் அதிமானோர் இறந்து போனார்கள் .அதற்கு காரணம் இயற்கை அல்லது மழையை காரணம் சொல்லுகின்றனர். அது  உண்மையை திரித்து சொல்லப்படும் தகவல்.

 அந்த சாவிற்கு காரணம் தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வரும்தான். அவர்கள் தான் இந்த சாவிற்கு காரணம். அவர்கள் நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருந்தால் இந்த மழையெல்லாம் ஒன்றுமே இல்லை. அதாவது வருமுன் காப்பதுதான் புத்திசாலிதனம். அதற்குதான் நமக்கு தலைவர்கள் தேவை. பிரச்சனை வந்த பின் 500 கோடி செலவழிக்க தயாராக இருக்கும் அரசாங்கம் பிரச்சனைகள் வருவதற்கு முன்பு திட்டம் தீட்டி 100 கோடி செலவழித்து இருந்தால் இத்தனை சாவுகள் ஏற்பட்டு இருக்காது அல்லவா? இந்த மாதிரி வரும் முன் காப்பதற்கான திட்டங்களை தீட்டி செயல்படத்தான் நமக்கு தலைவர்களும் அரசாங்கமும் தேவை. அப்படி இல்லாமல் தங்களது ஆட்சியை தற்க வைத்து கொள்வதற்காக இலவச திட்டங்களை அறிவித்துவிட்டு முடிந்த வரை கொள்ளை அடிப்போம் என்பது மிக தவறு.

அப்படி செய்பவர்கள் தீவிரவாதிகளை விட மிக மோசமானவர்கள்தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்துகளும் இல்லை.

avargal unmaigal

இப்படிபட்டவர்களுக்கு நாட்டையோ அல்லது மக்களையோ அழிக்க ஆயுதங்கள் தேவை இல்லை. இவர்கள் செய்வது நம்ப வைத்து கழுத்தை அறுப்பதுதான். மக்களே இப்படி செய்பவர்களை நீங்கள் என்ன சொல்லி அழைக்கப் போகிறீர்கள்? தலைவர்கள் என்றா அல்லது தீவிரவாதிகள் என்றா?

தமிழக மக்களே மாறி மாறி நீங்கள் இவர்களை ஆட்சியில் அமர்த்தியது போதும். இன்னும் உங்களுக்கு நேரம் அதிகம் இருக்கிறது அதனால் இவர்களுக்கு மாற்று ஆட்களை கண்டுபிடித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்.


இல்லையென்றால் வருங்காலத்தில் உங்களது சந்ததிகளை இவர்களுக்காக பலி கொடுக்க பலி ஆடுகாளாக உங்கள் சந்ததிகளை வளர்த்து விடுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்
Heavy rainfall lashes Tamil Nadu, more than 100 people killed so far

14 comments:

  1. அருமை....ஆதங்கம் நிறைந்த சொல்லடிகள்....உணர்கிறேன்...

    ReplyDelete
  2. அப்படிப் போடுங்க அறுவாளை!!!! இப்போது நாங்கள் பீதியில்தான் இருக்கின்றோம்....என்ன விஷக்காய்ச்சல் வந்து கொலைக்கப்...சாரி தொலைக்கப் போவுதோன்னு....உங்களுக்குத் தெரிந்திருக்கும் டெங்குவினால் இறந்த உயிர்கள் பல..டெங்கு இல்லை என்று மறைக்க, மறுக்கப்பட்டது ....விஷக்காய்ச்சல் என்று ஏதோ ஒன்றுமே தெரியாதது போல் சொல்லப்பட்டது. அதற்கான டெஸ்டுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் உண்மை....இதற்குப் பலியாடுகள் பாமர மக்கள்....

    அவுட் சோர்சிங்க் ஐடியா சூப்பர் சகோ....சத்தியமாகச் சொல்லுகின்றோம்...நல்ல ஆட்சியாளர் வரவில்லை என்றால் இதோ நீங்கள் சொல்லியிருப்பதுதான்...100% சரியே உங்கள் கருத்திற்கு ஆதரவு....மிகுந்த ஆதங்கத்துடன் தான் .

    ReplyDelete
  3. உண்மைதான் சகோ...நாங்கள் அறிவிலிகள்தான்...ம்ம்ம் பின்ன இப்படி ஓட்டுவங்கி இருந்தால்...

    ReplyDelete
  4. ஒவ்வொரு வார்த்தையும் வரியும் மிக மிகச் சரியே....பலரும் இதை இயற்கைச் சீற்றம் என்று சொல்லிச் செல்கின்றனர். நிச்சயமாக இல்லை. இயற்கைச் சீற்றம் என்பது யாராலும் எதிர்கொள்ள முடியாதுதான். ஆனால் ப்ளானிங்க் என்பது மிக மிக முக்கியம் ஒரு அரசாங்கத்திற்கு. இப்போது இரண்டு நாட்கள் முன்பி வந்த அறிக்கை மிகப் பெரிய ஜோக்காக இருந்தது. இத்தனைக் கோடி மக்களை ஆளும் ஒரு ஆட்சியாளரின் பொறுப்பற்ற வாக்கு...அது...

    சிட்டி ப்ளானிங்க் என்பது பல வருடங்களாக புறம்தள்ளப்படுவதால் வந்த விளைவே இது என்பேன். பொதுச் சுகாதாரம் 0....இல்லை கீழ்மட்டம் என்றும் கூடச் சொல்லலாம்....
    எனக்கு உங்களைப் போன்ற தைரியம் இல்லை சகோ. இதைப் பார்த்ததும் என் மனதில் இருந்த கோபம் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே நினைத்தேன்....

    கீதா

    ReplyDelete
  5. வணக்கம் சகோ,
    ஒட்டுப் போட நாம் பணம் வாங்குகிறோம் இல்லையா, அதன் பாவம் நம் தலையிலே,,,,,, ஒரு பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.........
    நல்ல பகிர்வு,,,,
    நன்றி.

    ReplyDelete
  6. இப்டியெல்லாம் உசுப்பேத்தினாலும்
    உங் க(வ) லையில நாங்க சிக்க மாட்டமே!!!

    இப்படிக்கு...

    அடுத்து வ(த)ரும் சலுகைகளை
    ஆவலுடன் எதிர்பார்க்கும்...

    அகில உலக தமிழ் (அரசியல்) நடிகர்களின்
    ஆயுள்(தேயும்வரை)கால உறுப்புகள்...

    ReplyDelete
  7. சவுக்கடி போன்ற வார்த்தைகள். மனதில் உறைத்து வினையாற்றுவார்களா? அவுட்சோர்சிங் ஐடியா அபாரம்.

    ReplyDelete
  8. இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை குத்தகை எடுத்துக்கொண்டு கூசாமல் பிச்சை போடுகிறார்கள்! அதை மக்களும் வாங்கிக்கொண்டு தலையெழுத்தை புலம்பிச்செல்கின்றனர்!

    ReplyDelete
  9. கொப்பளிக்கும் உணர்வுகளால் கொட்டப்பட்ட உண்மை
    தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  10. சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்!

    //கடந்த, 2005ம் ஆண்டு வெள்ள பாதிப்பிற்கு பிறகே, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னை நகரில், 1,400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.

    இந்த பணிகள் எட்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை முழுமையாக முடிக்கப்படாததாலும், புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் தாமதம் செய்ததாலும் தான், இந்த ஆண்டு இந்த அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.//

    இது பேப்பர் செய்தி. இன்னமும், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாற்றில் வெள்ளம் வந்திருக்கிறது. இத்தனை வருடங்களில் என்ன செய்தார்கள் அங்கே? வந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்க எந்த முயற்சியும் இல்லை. வீராணம் ஏரியில் தூர் வாரியிருந்தால் சில டி எம் சி தண்ணீரை அங்கு தேக்கியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ.. கர்நாடகா ஆந்திராவை விட தமிழகத்தில் பொழியும் மழையின் அளவு அதிகம்.


    என்னவோ போங்க!

    ReplyDelete
  11. தங்கள் கோபம் மிக மிக நியாமானதே
    கோபம் வரவேண்டியவர்களுக்கு வந்தால்
    ஒரு விடிவு காலம் பிறக்கும்

    ReplyDelete
  12. மதுரைத்தமிழரே, வெள்ளக் கட்டுப்பாட்டுக்கும் ஏனைய நீர் மேலாண்மைக்கும் தீர்வாக அமையக்கூடிய தேசீய நீர் வழிச்சாலை திட்டம் மதுரையில் உள்ள ஒரு பொறியாளர் குழு மூத்த பொறியாளர் திரு ஏ.சி.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதலினால் முழு உருப்பெற்று அரசாங்கங்களின் காதுகளுக்கும் மக்களின் செவிகளுக்கும் சென்றடைய படாத பாடு பட்டுக்கொண்டுள்ளது. மறைந்த குடியரசுத்தலைவர் திரு கலாம் அவர்களின் ஆசி பெற்ற இத்திட்டத்தினை பல்வேறு உத்திகளைக் கையாண்டு பரப்புரை செய்து ஒரு மக்கள் இயக்கமாக உருப்பெற பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது மதுரைக்காரர்களாகிய நமக்கு ஒரு பெருமையே. இந்தச் செய்தி பரவலான மக்களுக்குச் சென்றடைய நம் பதிவர் பெருமக்கள் முயற்சி செய்தால் அது அரசாங்கங்களின் காதுகளுக்கும் எட்டும் என்பது உறுதி. இது குறித்த யூடியூப் லிங்குகள் பின் வருமாறு:

    https://www.youtube.com/watch?v=1tBycYx7pqY

    https://www.youtube.com/watch?v=nlOJ-YrsyhE&spfreload=10

    https://www.youtube.com/watch?v=wQf2Gp1VZo4&spfreload=10

    படித்த மக்கள் இது குறித்து தெளிவு பெற்று இத்திட்டம் நடைமுறைக்குவர பரப்புரை செய்து அனைத்து மக்களுக்கும் சென்றடைய ஒத்துழைக்குமாறு தங்கள் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    “Better to light a candle than to curse the Darkness”

    ReplyDelete
  13. சுரணை என்பது எப்போதும் இருந்ததில்லை. சூடு கொஞ்சம் இருந்தது, அதுவும் பெய்த மழையில் ஒரே அடியாக நமத்துபோனது.

    Outsource idea super.

    கோ

    ReplyDelete
  14. செம அடி.... மாற்றி மாற்றி இவர்களுக்கு வாக்களித்து ஒரு பயனும் இல்லை. மக்களுக்காக உழைக்கும் நபர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தப்பு நடக்கும் போது தட்டிக் கேட்கவும், கேட்பவர்களுக்கு ஆதரவும் வேண்டும்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.