Sunday, November 29, 2015



avargal unmaigal
அமெரிக்காவின் இன்னொரு முகம்

அமெரிக்கா என்றாலே சில பேருக்கு வசதிகள் நிறைந்த நாடு அனைவரும் மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக் கடையில்  வேலை செய்பவன் முதல் வீட்டை சுத்தம் செய்ய வருபவன் முதற் கொண்டு எல்லோரும் காரில் செல்கிறார்கள். நம்மால் இங்கு ஒரு நல்ல கெளரவமான வேலையில் இருந்தும் ஒரு காரை கூட வாங்க முடியவில்லை என்றுதான் பலரும் நினைத்து கொண்டிருப்போம்.


இங்குள்ள நீயூயார்க் போன்ற சில நகரங்களை தவிர மற்ற பகுதிகளில் கார் இல்லாவிட்டால் நாம் எங்கும் செல்ல முடியாது என்பதுதான் உண்மை. அதனால் அவனவன் தகுதிக்கு ஏற்ப உடைந்த காரிலிருந்து உயர்ரக கார் வரை வைத்திருப்பார்கள். இதை சொல்ல காரணம் கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் மிக வசதியானவர்கள் இல்லை என்பதற்காகத்தான்.

நீங்கள் கற்பனை பண்ணி வைத்திருக்கும் அமெரிக்கர்களின் முகங்களுக்கும் உண்மையான முகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள் இது ஒரு சிறு உதாரணமே

அமெரிக்காவில் வசிக்கும் கஷ்டப்படுபவர்களின் முகங்களை நீங்கள் பார்க்கவே இந்த பதிவு.

avargal unmaigal

நமது இந்தியாவில் மழை வெள்ளம் வந்து வீடு வாசல் மற்றும் தங்கள் பொருட்களை இழந்து தவிப்பவர்களுக்கு நாம் இலவசங்கள் தரும் போது கூட அவர்கள் இப்படி அடித்து கொள்வதில்லை. ஆனால் அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவ்வீங் டே(Thanks Giving ) & ப்ளாக் ஃப்ரைடே (Black Friday) அன்று கடைகளில் சிறிது விலை குறைத்து கொடுக்கப்படும் பொருட்களுக்காக இங்குள்ள மக்கள் அடித்து கொள்வதை பார்க்கும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. இப்படி வாங்கும் போது செத்தவர்கள் அநேகம்






மேலை நாட்டில் எல்லாம் மிக ஒழுங்காக நடக்கும் எல்லோரும் ஒழுக்கவிதிகளை பின்பற்றுகிறார்கள் என்று இங்கு வசிக்கும் அல்ல இங்கு வந்து சென்ற இந்தியர்கள் அனைவரும் மிகவும் வியந்து புகழ்வார்கள். அப்படி வியந்து இந்தியாவை மட்டம்தட்டும் ஆட்களிடம் கேளுங்கள் என்னப்பா எல்லோரும் ஒழுக்க விதிகளை பின்பற்றும் அமெரிக்காவில்  Black Friday அன்று மட்டும் ஏன் ஒழுக்கவிதிகளை பின்பற்றுவதில்லை என்று கேட்டு பாருங்கள்...?

டிஸ்கி :மேலை நாட்டினரிடம் இருந்து மதர்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே, ஃபாதர்ஸ் டே,நீயூர்ஸ் டே என்று பல டேக்களை கொண்டாடும் நம் இந்திய மக்கள் இன்னும் ஏன் தேங்க்ஸ் கிவ்விங் டேயை மட்டும் கொண்டாடமல் இருக்கிறார்கள்? காரணம் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்ளேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்


23 comments:

  1. எந்த நாட்டில் இருந்தாலும் மக்களின் இயல்பு இதுதான்!
    (டிஸ்கி இரு முறை வந்துள்ளது, ஒன்றை நீக்கி விடுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் & சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

      Delete
  2. மாப்ளே வரவர அதிகம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகமாவுது
    என்ன பூரிக்கட்டை பயம் தெளிஞ்சுடுச்சா..!
    அதென்ன ஒன்னுக்கு ரெண்டு டிஸ்கி..?!
    இருட்டுல குருட்டுத்தனமா போட்டீரா?
    இல்லை மண்டையில் அடிபட்ட மயக்கமா?! .. :-)

    ReplyDelete
    Replies
    1. என்னது எனது பதிவில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா யார் சொன்னது.?
      அந்த சிவம்தான் சொல்லுறான்னய்யா?
      என்ன என் பதிவை அந்த சிவனும் வந்து படிக்கிறானா?
      ஆமாம் அய்யா பார்வதிகிட்ட அடிவாங்கிகிட்டு காயம்பட்டு ஹாஸ்பிடலில் படுத்துகிட்டு உன் பதிவை எல்லாம் அந்த சிவம் படிக்கிறானாய்யா..

      Delete
  3. இன்னும் இங்கே நன்றித்திருநாளும் வேண்டுமா? அமெரிக்கா என்பது பாவத்தின் தேசம்...ஆப்பிரிக்க மனிதர்களை அவர்கள் வேலிக்குள் அடைத்து நடத்திய கொடுமைகளுக்கு.. எந்த காலத்திலும் விமோசனம் கிடைக்காது.....புரிகிறது உங்கள் கோபம்....அமெரிக்க மாயையில் தூதரக வாசலில் தூக்கம் தொலைத்து கடவுச்சீட்டுக்காய் காத்திருக்கும் எம் இளைஞர்களுக்குத்தெரிய வேண்டும் இது....
    உலகில் நீ என்கிருக்கிறாய் என்பது முக்கியமல்ல...என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பதே முக்கியம் என்பதை அறிய வேண்டும் அவர்கள்...உண்மைகளை...

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கா பலரின் பார்வையில் வேண்டுமானால் பாவத்தின் தேசமாக இருக்கலாம் ஆனால் எங்களை போல உள்ளவர்களுக்கு சாதி மதம் பாராமல் வாழ்வளிக்கும் புண்ணிய தேசமாகவே இருக்கிறது நண்பரே

      Delete
    2. இந்த பதிவின் முதலில் கரகாட்டக்காரன் சொன்ன கருத்துதான் மக்களின் இயல்பு எந்த நாட்டில் இருந்தாலும் ஒன்றுதான் என்பதை சொல்லவே இந்த பதிவு

      Delete
    3. பாவத்தின் தேசம் என்று சொல்லமுடியாது சகோ. அடிமைத்தனத்தை அங்கீகரிக்காத மக்கள் இருந்ததால்தானே மாற்றம் வந்தது? அனைவரையும் வரவேற்று சுதந்திரம் கொடுக்கும் தன்மை வேறு எங்கும் இருக்காது என்பதே உண்மை. அந்த வகையில் இவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்

      Delete
  4. தள்ளுபடி என்றால் எங்கும் ஒன்றுதானோ? இங்கு இன்னும் அதிகமாகத் தோன்றுகிறது .
    வியாபார நோக்கம்தானே சகோ?

    ReplyDelete
  5. ஆம் உண்மைதான் எந்த நாட்டில் இருந்தாலும் எல்லா நிலைகளும் உண்டு, எது எப்படியோ அனைவரும் நலமுடன் வளமுடன் இருக்க வேண்டுவோம்.

    அது என்னங்க நன்றியா? அப்படின்னா,,

    ReplyDelete
  6. நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். இல்லையா?!!

    ReplyDelete
  7. நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. நிஜம் தான். இதை உண்ர்வோராய் தான் யாரும் இல்லை.

    எந்த இடத்தையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். அமெரிக்காவில் நிறைகள், குறைகளுண்டென்பது போல் இந்தியாவிலும் உண்டு. நான் குறைகளை மட்டும் முன்னிறுத்தும் குணமுடையோராய் இருப்பதாலும் நம்மிடம் இருப்பதை விட அடுத்தவரிடம் இருப்பதை கண்டே ஆசைப்படுபவராயும் இருப்பதால் நம்மிடம் இருப்பதன் அருமை தெரிவதில்லை.

    வெளி நாடும் அக்கரைக்கு இக்கரை பச்சை நிலை தான். அமெரிக்காவும் சொர்க்கம் இல்லை. இந்தியாவும் நரகம் இல்லை. சொர்க்கமும் நரகமும் எங்கேயும் உண்டு தானே?

    வாழ்வின் முக்கால் பகுதியை சுவிஸில் செலவு செய்ததாலோ என்னமோ எனக்குள் வெளி நாடு தான் உசத்தி எனும் எண்ணமும் இல்லை.

    ReplyDelete
  9. ஐரோப்பிய அமெரிக்காவில் வைத்திருக்கும் வாகனத்தினை வைத்து அவர்களின் வசதிவாய்ப்பை எடை போட முடியாது என்பது நிஜமே! இங்கே வேலையில்லாமல் வாடகை வீட்டிலும் அரசு உதவி பணத்திலும் வாழ்பவர்கள் ஔடி, பென்ஸ் போன்ற விலை மதிப்பான வண்டி வைத்திருப்பதும், உடுத்தும் உடைகளில் பகட்டாக பளபளப்பாக இருப்பதும் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணமும் சொந்த வீடு காணி என வாழ்வோர் ஓட்டை சைக்கிள் வைத்திருப்பதும் ஆடைகளில் கூட எளிமையாய் இருப்பதும் தான் நிஜம்.

    ReplyDelete
  10. குறைகளும் நிறைகளும் எல்லா நாட்டிலும் உண்டு. குறைகள் அங்கு சற்று குறைவாக உள்ளது போல் தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. அங்கு குறைகள் சறறு குறைவாக உங்களுக்கு தோன்ற காரணம், இந்தியா, அமெரிக்காவை விட மூன்றில் ஒரு பங்கு சிறிய நாடு, ஆனால் அதன் ஜன தொகை பெருக்கமோ பெருகிவந்து அமெரிக்காவை விட பல மடங்கு கொண்டது.

      Delete
  11. தெரிய வேண்டிய தகவல் .நன்றி.

    ReplyDelete
  12. அடிக்கடி இதுபோன்ற நிஜங்களை சொல்லுங்க ..சொல்லிக்கிட்டே இருங்க...

    ReplyDelete
  13. மனிதன், மனிதனாக நடப்பது இதுபோல் சூழல்களில்தான். ஐ பாட் மினி 200 டாலர் உள்ளது 100 டாலர். ஆனால் முதலில் வரும் 200 கஸ்டமருக்குத்தான் அந்த டீல். வால்மார்ட் ல எல்லாம் வியாளக்கிழமையே ஆறு மணி போல திறந்துடுறாணுக. இந்த முதல் 200 கஸ்டம்ராக இருக்க வந்து லைன்ல நிக்கிறவங்க எல்லாம் பொதுவாக "ஏழைகள்" இல்லைனா நம்மள மாதிரி "இந்தியர்கள்" அல்லது "சைனீஸ்"தான்.. உள்ளே போகும்போது எதை எங்க வச்சு இருக்கான்னு தெரியாமல் இங்கேயும் அங்கேயும் ஓடி, போய் சேரும்போது ஒரே ஒரு "பீஸ்"தான் இருக்கும். இதை எவன் எடுக்கிறதுனு இழு பறி. 100 டாலர் சேவ் பண்னுறதுக்காக. :)

    எனக்கு ப்ளாக் ஃப்ரைடே சேல் ரொம்பப் பிடிக்கும். :))) இந்த சமயத்தில் கிஃப்ட் எல்லாம் வாங்காமல் விட்டு விட்டால், அப்புறம் சரியாக நேரமே அமையாது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது வேலை இருக்கும், திடீர்னு ஸ்னோ தொடர்ந்து விழும், ஷாப்பிங் செய்ய "மூட்' வராது. மேலும் கிருஸ்த்துமஸ் நெருங்கும்போது கடைசி நேரத்தில் போயி எதையாவது "ரெகுலர் ப்ரைஸ்"ல வாங்கணும். :)

    நம்ம ஊரில் இதுபோல் கோயில் கூட்டதில் நம்மாளு, பிக் பாக்கட் அடிப்பார்கள் இல்லைனா பொம்பளைகளிடம் கேவலமாக (கோயில் திருவிழாவில்தான்!!) நடந்துக்குவாணுக.

    கேட்டால் நம்ம பூமி புண்ணியபூமினு வெக்கமே இல்லாமல் சொல்லுவார்கள்!!

    மேலே அமெரிக்காவை விமர்சிக்கும் "மேதை"க்கு இந்தியா பத்தி நான் எடுத்துச் சொல்ல ஆயிரம் விசயம் இருக்கு..

    எங்க பூமி புண்ணிய பூமி, நாங்க எப்போவும் பஸல பொம்பளைகள் உடலில் கை வ்வைப்போம், எப்போவாவது பகல்ல பஸ்ல ஒரு பொண்ணைப்போட்டு கதற கதற நாலு பேரு சேர்ந்து கற்பழிச்சு கொல்லுவோம். அதெல்லாம் புண்ணிய பூமியில் நடந்தா தப்பு இல்லை! னு நம்ம மேதை சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை! :)

    ReplyDelete
  14. boss ...i feel its wrong assumption,these kind of incidents happen very rarely in developed counntries,so dont generalise it. but in our contry its happening every day...

    ReplyDelete
  15. பார்க்கச் சகிக்கலை
    பகிர்ந்து அமெரிக்காவின் கோர முகத்தின் பக்கத்தை
    அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி
    அமெரிக்கா குறித்த புத்தகம் மற்றும்
    தகவல்களை அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
    ( மே மாதம் என் பெண்ணைப் பார்க்க
    நியூயார்க் வரும் உத்தேசம் இருப்பதால் )
    இந்தக் காணொளி கொஞ்சம் அதிர்ச்சிதருவதாகத்தான்
    உள்ளது.

    ReplyDelete
  16. சிலருக்கு அமெரிக்காவை குற்றம் சொல்லாமல் இருக்க முடியாது. பாவத்தின் தேசம் என்பதெல்லாம் அரசியல் சாயம் பூசப்பட்ட காம்யூனிஸ்ட் சிந்தனை. சைனா, கொரியா போன்ற நாடுகளில் மக்கள் எத்தனை சிரமப் படுகிறார்கள் என்று யாரும் பேசுவதில்லை. அமெரிக்கா மட்டுமே இவர்களின் எதிரி. நரியும் திராட்சை தோட்டமும் என்ற சிறு பிராயத்து கதைதான் நினைவுக்கு வருகிறது. கருப்பு வெள்ளிக் கிழமை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நம்ம ஊர் ஆடித் தள்ளுபடி போலத்தான் அதுவும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. நல்ல தகவல்..நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.