உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 8, 2015

பீகார் தேர்தல் ரிசல்ட்டும் கலாய்க்கும் பேஸ்புக் போராளிகளும்

avargal unmaigal

பீகார் தேர்தல் ரிசல்ட்டும் கலாய்க்கும் பேஸ்புக் போராளிகளும் bihar elections results cartoons & facebook status

நான் பதிந்த பேஸ்புக் பதிவுகளுக்கு பின் பேஸ்புக் போராளிகள் இட்ட ஸ்டேடஸை பதிந்து உள்ளேன்.அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
avargal unmaigal
@மதுரைத்தமிழன்
திருத்தப்படும் தீபாவளி கதை
நரகாசுரனை அழித்தற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை மோடியை பீஹாரில் ஒழித்திற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று வருங்காலங்களில் சொல்லப்படும்.

@மதுரைத்தமிழன்
இனிமேல் இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மட்டும்தான் வோட்டு போட முடியும் என்று சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இனிமேல் மோடி வெற்றி பெற முடியும்

@மதுரைத்தமிழன்
மோடிக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்து சந்தோஷப்பட்ட  இந்திய மக்கள்தான் இப்போது மிகப் பெரிய தோல்வியை கொடுத்து சந்தோஷப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்

@மதுரைத்தமிழன்
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பதை  மோடிக்கு யாரும் சொல்லாததால்தான் பீகாரில்  இப்படி ஆயிடுச்சோ?

@மதுரைத்தமிழன்
கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல மூஞ்சியில சாணியை அப்பினாலும் என் மீசையில் சாணி ஒட்டவில்லை என்பது போலத்தான் பாஜக தலைவர் ஹெச்.ராஜா பீகார் தேர்தல் தோல்வியை பற்றி பேசுவதும் இருக்கிறது

@மதுரைத்தமிழன்
லல்லு-நிதீஷ் கூட்டணி அமைச்சால் வெற்றி பெறலாம் என்பதை  நாந்தான் அவர்கள் இருவருக்கும் அட்வைஸ் பண்ணிணேன். அதை செய்தார்கள் வெற்றி பெற்றார்கள் கலைஞர்

avargal unmaigal

avargal unmaigal


 டிஸ்கி: நண்பர்களே & சைலண்ட் ரீடர்களே எனது ஸ்டேடஸ் தவிர மற்றவைகள் எல்லாம் பேஸ்புக்கில் நான் படித்து ரசித்தது. மேலும் பல நல்ல ஸ்டேடஸ் என் கண்ணில் படாமல் போயிருக்கலாம். ஆனால் அது உங்கள் கண்ணில் பட்டு இருந்தால் அதை பின்னுட்டத்தில் இங்கே பதியுங்கள். மேலும் ரிசல்ட் பற்றிய உங்களின் சொந்த கருத்துகளை நீங்கள் பேஸ்புக்கில் அல்லது வலைத்தளங்களில் பதிந்து இருந்தால் அதையும் இங்கே பதியுங்கள்.அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஏதிலேயும் பதியாமல் இருந்தால் இங்கேயாவது உங்கள் கருத்துக்களை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@கஸ்தூரி ரங்கன்
இந்திய அளவில் கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலம் இன்று இந்தியாவிற்கு ஓர் பாடத்தை சொல்லியிருக்கிறது...
கற்போம்

@ரஹீம் கஸாலி
பீகார் போல தமிழகம் இல்லை- தமிழிசை#
ஆமா... இங்கே இன்னும் நாயடி பேயடி அடிச்சு அனுப்புவாங்க பா.ஜ.க.வை.@ரஹீம் கஸாலி
மாட்டை புனிதமா நினைக்கும் பீகாரிகளிடமே உங்க பருப்பு வேகலை. நீங்கள்லாம் தமிழ்நாட்டு பக்கம் வந்திடாதீங்க. அவங்களாவது சாணியைத்தான் முகத்தில் அடிச்சாங்க. இங்கே பாலே ஊத்திடுவாங்க உங்க கட்சிக்கு.

@Kasthuri Rengan
Educational Statics tells us Bihar has very little literacy ...
But elections results tells us something different

@M.m. Abdulla
இன்று திரு.அத்வானி அவர்களின் பிறந்தநாள். இதை விட மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு அவரது வாழ்நாளில் கிடைத்திருக்கவே இருக்காது

@Velumani Thuyavan
யார் ஜெயித்தார்கள் என்பதைவிட யார் தோற்றார்கள் என்பதே முக்கியம்!

@Cable Sankar
இதே இண்டெர்நெட்டுத்தான் பிஜேபிய கொண்டாடிச்சி.. இன்னைக்கு தோத்ததுக்கு கொண்டாடுது. நாக்கு மட்டுமில்லை இண்டெர்நெட்டுக்கும் நரம்பில்லை போல..

@Haja Mydeen Nks
இனிதான் ஜாக்கிரதையாகவும்,ஒற்றுமையாகவும் இருக்கனும்..ஜெயிப்பதற்காக எதை வேணும்னாலும் செய்தவங்க தோற்றதற்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க..

மாட்டுக்கறி விவகாரத்தை விட பெரிய பிரச்சினைகளை கிளப்ப ரெடியா இருப்பாங்க... !


@வறுமையின் எதிரி நான்
மோடி :-
அண்ணே நாட்ல சகிப்புத்தன்மை ரொம்ப குறைஞ்சுருச்சுண்ணே....
அமீத்ஷா :-
எதவச்சு இப்படி சொல்ற....
மோடி :-
பின்ன என்னணே நாம செஞ்ச தப்பலாம் சகிச்சுக்காம பீகார் மக்கள் நமக்கு ஆப்படிச்சுட்டாங்களே
அதவச்சு தான்ணே.

@வெங்கடேஷ் ஆறுமுகம்
மாட்டுக்கும் பீகாருக்கும் அவ்வளவு பொருத்தம் அன்று மாட்டுத்தீவன வழக்கில் லாலுவை உதைத்த மாடு... இன்று மாட்டுக்கறி பிரசாரத்தால் மோடியை முட்டித் தள்ளியிருக்கிறது.

@Ramasamy Mani
பட்டாசுக்கு செலவிட்ட காசை திரும்பத்தருமாறு கோரி,
வடஇந்திய ஆங்கில ஊடகங்களுக்கு எதிராக பா ஜ க தொண்டர்கள் தர்ணா(!)செய்தாலும்ஆச்சரியப்படுவதற்கு
ஏதுமில்லை. அப்படி போட்டு குழப்பு குழப்புன்னு குழப்பிட்டானுங்க.

@Deva Rajan
மாட்டை முன்னிறுத்தி ஓட்டு கேட்டாங்க.
சாணி தீர்ப்பா கிடைச்சிருக்கு.

#மார்க்கண்டேய கட்ஜு

@Velumani Thuyavan
நரகாசுர வதம் # பீஹார்

@Ilango Krishnan
பீகார் போன்ற ஒரு நிலத்திலேயே இவர்களின் பசு அரசியல் செல்லுபடியாகவில்லை என்பது எளிய செய்தி அல்ல. இந்துக்கள் வேறு இந்துத்துவம் வேறு என்பதை பீகார் நிரூபித்து உள்ளது. இந்தியாவின் பன்மைதன்மைக்கும் மதசார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி இது.

 அன்புடன்
மதுரைத்தமிழன்.


13 comments :

 1. ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறதே என தாம் நினைப்பதையெல்லாம் மக்களின் மீது திணிக்க கூடாது. அப்படி திணித்தால் எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டியிருக்கிறது.

  எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவு ஒன்று:

  கம்ப்யூட்டர் வேகத்தை 500 மடங்கு அதிகரிக்க

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லிய மென்பொருளை உபயோகித்தால் இருக்கிற கம்பியூட்டரும் கூடிய சீக்கிரம் காலியாகிவிடும்.


   நமது கணணி மிக வேகமாக செயல்பட அதில் உள்ள தேவையில்லாத மென்பொருளை எல்லாம் டெலீட் செய்ய வேண்டும் அதிலும் இணையத்தில் இலவசமாக தரப்படும் மென்பொருள்கள் உங்கள் கணணியில் உள்ள பெர்சனல் தகவல்களை எல்லாம் சுருட்டி கொள்ளும்.. கணணி ஒழுங்காக செயல்பட Norton Antivirus™ 2016‎ மென்பொருளையும் அதனுடன் இணைந்து வரும் utilities மென் பொருளையும் உபயோகிங்கள் அதன் பின் பிரச்சனைகள் எந்த ரூபத்திலும் உங்கள் கணணியை அணுகாது என்பது எனது அனுபவ உண்மை.... முடிந்த வரையில் தகவல்களை நீங்கள் சரி பார்த்து உங்களின் உண்மையான அனுபவங்களை தாருங்கள் நண்பரே

   Delete
 2. PM Modi Tweets Birthday Wishes to Advani, Calls Him ‘Best Teacher’:

  பரீட்சையில் தோற்றால்தான் ஆசிரியரின் மதிப்பு தெரியவரும் என்பது உண்மைதான் போல

  ReplyDelete
 3. கஸ்தூரியின் ஸ்டேடஸ் ...ஹை!!!

  மோடி முதுகுல தீவாளி போல:)))

  ReplyDelete
  Replies
  1. நான் படித்ததிலே கஸ்தூரியின் ஸ்டேடஸ்தான் மிக அருமை. மிகவும் நாகரிகமாக அதே நேரத்தில் மிகவும் பொருள் அழுத்தமுள்ள ஸ்டேடஸ்.   அதை பார்த்த பின்தான் இப்படியும் ஒரு பதிவு போடலாம் என்று என் மனதில் தோன்றியதன் விளைவே இந்த பதிவு

   Delete
 4. கொள்கை ரீதியிலான பிற்போக்குத்தனம் நிறைந்த கட்சி என்பதால் தான் என் போன்றோர் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்...
  பசு ஒரு சாராருக்கு தெய்வம் என்றால் அவர்கள் வணங்கவேண்டியதுதான் .. அடுத்த சாராரை அதற்காக துன்புறுத்துவது தவறு இவர்கள் கொலையே செய்தார்கள்..
  பின்னர் குஜராத் உலகப் புகழ் இன அழிப்பு மறக்கக் கூடியதோ மன்னிக்க கூடியதோ அல்லவே..
  சோ இந்த விசயத்தில் இப்படிதான் பேச வேண்டும்..

  ReplyDelete
  Replies

  1. மாட்டு இறைச்சி உண்பது என்பது செளத் இண்டியர்களுக்கு மிக பெரிய விஷயம் அல்ல ஆனால் நார்த் இண்டியர்களை பொருத்தவரை ஒரு மிகப் பெரிய விஷயம்தான் காரணம் அவர்களில் அதிகம் பேர் அதை உண்பதில்லை என்பதுதான் உண்மை இதை நான் இங்கு வசிக்கும் பல நார்த் இண்டியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டது. ஆனால் அதற்காக மற்றவர்கள் உண்பதை தடுப்பதில் அல்லது அதை உண்பவர்களை கொலை செய்வதில் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உடன்பாடு இல்லை

   Delete
  2. // குஜராத் உலகப் புகழ் இன அழிப்பு மறக்கக் கூடியதோ மன்னிக்க கூடியதோ அல்லவே..//
   இன அழிப்பு?
   குஜராத்தில் நடை பெற்றது ஒரு மத கலவரம். அதில் மக்கள் உயிரிழந்தது துயரம். அதிகளவில் உயிரிழந்தவர்கள் இஸ்லாமிய மதத்தவர்கள். இன அழிப்பு பற்றி தெரிந்து கொள்வதானால் ஹிட்லர், ஜெர்மனி, உலக யுத்தம் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

   Delete
  3. மாட்டுகறி விஷயத்தில் சௌத் இன்டியன் நார்த் இன்டியன் என்று ஜனநாயக முறைபடி சிந்திச்சு ஒரு பக்குவமா நடக்கும் ஒரு சௌத் இன்டியன் மதுரை தமிழன்.

   Delete
 5. மக்களின் கண்கொண்டு பாரதத்தை பாஜாக பார்க்கவேண்டும்! பழைய பஞ்சகட்ச பார்வை தவறு என்பதை பீகாரிகள் பாஜாகாவிற்கு காட்டியுள்ளார்கள். திருந்தவில்லையென்றால் திருத்தப்படுவார்கள்.

  ReplyDelete
 6. இந்தியா போன்ற பன்முக மத, கலாச்சரங்களை கொண்ட நாட்டில் ஆட்சியில் இல்லாமல் " அரைவேக்காட்டு " வாக்குறுதிகளை வீசுவது சுலபம் !...

  முதல் முறை வாஜ்பாயின் " ஜனநாயக " முதுகில் சுலபமாக பயணித்துவிட்டார்கள் ! தனிப்பெரும்பான்மையில் தடுமாறுகிறார்கள் !!

  இந்திய ஜனநாயக வரலாற்றினை முற்றும் அறிந்தவர்களுக்கு, இத்தனை அரசியல் " கோமாளிகளுக்கு " மத்தியிலும் கழுவும் மீனில் நழுவும் மீனாய் " களையெடுக்கும் " இந்திய குடிமகனின் ஜனநாயக அறிவு புரியும். அவசரகால சட்டத்தினால் இந்திராவை தூக்கி எறிந்து, அவருக்கு மற்றாய் வந்தவர்கள் அடித்துகொண்டபோது, மீன்டும் அவரை தேர்ந்தெடுத்து ஸ்திரமான ஜனநாயக நம்பிக்கையை நிருபித்தவர்கள் இந்தியமக்கள்.

  பாஜகாவை விரும்பி அல்ல; காங்கிரசை வெறுத்ததினாலேயே இவர்களுக்கு ஓட்டளித்தனர் மக்கள்...

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog