Wednesday, October 21, 2015



avargal unmaigal
டாஸ்மாக் விற்பனையை பெருக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு அட்வைஸ்

எச்சரிக்கை : ஆல்கஹால் உடலுக்கு கெடுதல் விளைவிப்பவை.. ஆனால் தமிழக அரசுக்கு நலம் விளைவிப்பவை. நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் மது அருந்துவதை தவிர்க்கவும்

தேர்தலோ நெருங்கி வருகிறது இலவச அன்பளிப்புகள் அதிகம் கொடுக்க வேண்டும் ஆனால் அதற்கு எல்லாம் வருமானம் அதிகம் இருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும். சமுக நலனில் அக்கறை உள்ளவர்கள் அதிலும் குடிகாரர்கள் மீது மிக அக்கறையுள்ளவர்கள்  ஒழுங்காக வருமான வரி செலுத்தினாலே அரசுக்கு வருமானம் எளிதில் கிடைத்துவிடும். அப்படி எல்லாம் சமுக நலனில் அக்கறை இல்லாதவர்களால்தான் ஜெயலலிதா அவர்கள் இப்படி டாஸ்மாக் கடைகளை நடத்தி வருமானம் பார்க்க வேண்டியிருக்கிறது.


அப்படிபட்ட நிலையில் அவருக்கு உதவ, டாஸ்மாக வருமானத்தை சிறிது பெருக்க, குடி மகன்களுக்கு உதவ என்னால் முடிந்த ஒரு ஐடியாவை சொல்லுகிறேன். இதை நான் எனது வீட்டில் சில சமயங்களில் கோடைகாலங்களில் கடை பிடித்து இருக்கிறேன்,

இந்த முறை தமிழக குடிகாரர்களுக்கு மிகவும் உதவும். இப்போது தமிழக  குடிகாரர்களுக்கு உள்ள முக்கிய பிரச்சனை தனக்கு பிடித்த சரக்கை வாங்கி அதில் தனக்கு வேண்டிய கோக்கை அல்லது சோடாவை அல்லது தண்ணிரை கலந்து குடிக்க வேண்டும்  அதை கலந்து குடிப்பதற்கு க்ளாஸும் வேண்டும் அப்படியே க்ளாஸ்  கிடைத்தாலும் அது சுத்தமாக கிடைக்கவேண்டும் இப்படி பல பிரச்சனைகள் உள்ளன. இதை எல்லாம் எளிதில் சாமாளிக்க அரசு நான் சொல்லும் வழிமுறையை கடை பிடிக்கலாம்.


இந்த முறைப்படி அரசே உதாரணமாக ரம்முடன் கோக் அல்லது சோடா அல்லது வாட்டார் அது போல வோட்காவுடன் க்ராம்பெரி ஜூஸ் அல்லது ஆரஞ்சு அல்லது விருப்பபட்ட ஜூஸை கலக்கி சிறிய ஐஸ் பாப் கவரில் போட்டு பீரிசரில் போட்டு வைத்து அதை விற்பனைக்கு வைத்தால் வேண்டியவர்கள் அதை குச்சி ஐஸ்சை வாங்கி சாப்பிடுவது போல  சாப்பிடலாம். அது போல ரயிலில் பஸ்ஸில் போகும் போது இது போல வாங்கி அதை ஐஸ்பேக்கில் வைத்து கொண்டால் ஐஸ் சாப்பிடுவது போல சாப்பிடலாம் யாரும் புகார் கொடுக்க முடியாது...

இதை குடிமகன்கள் வசதிக்காக தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் அரசுக்கு வருமானம் கூட வாய்ப்புக்கள் உண்டு இந்த ஐடியாவை பின்பற்றுவதன் நிச்சயம் நஷ்டம் ஏதும் ஏற்பட போவதில்லை.

டிஸ்கி : சரக்கு அடிக்காத நல்ல குடிமகன்கள்  தங்களுக்கு பிடித்த பழ ஜுஸை இந்த முறையை பின்பற்றி செய்து தாங்களும் சாப்பிடலாம் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம். இதற்கு தேவையான பிளாஸ்டிக் கவர் அமேசான் டாட் காமில் விற்பனைக்கு கிடைக்கிறது, இந்த கவர் மிகவும் தரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்காதது..

அன்புடன்
மதுரைத்தமிழன்
( தமிழக அரசின் வருமானத்தை கருத்தில் கொண்டு இந்த பதிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.பதிவின் ஆரம்பத்தில் எச்சரிக்கை அறிவிப்பும் கொடுத்து இருக்கிறது. அதனால் சமுக ஆர்வலர்கள் இந்த பதிவை படித்து போராளிகளாக மாறவேண்டாம்)

9 comments:

  1. Replies
    1. தம்பி நீ இளைஞன் இந்த மாதிரி பதிவை எல்லாம் படித்துவிட்டு படிக்காத மாதிரி சென்று விட வேண்டும் இப்படியெல்லாம் கருத்து சொன்னால் மகா பெரியவர்கள் உன்னை தூற்றக் கூடும் அல்லது உன்னை விலக்கி வைக்க கூடும். அதனால் ஜாக்கிரதை

      Delete
  2. Replies
    1. பாராட்டுறீங்களா? நக்கல் பண்ணுறீங்களா புரியவே இல்லையே ஜீ

      Delete
    2. பாராட்டுதான்! :))

      Delete
  3. What an idea sir ji! இந்த ஐடியாவிற்கு Copy right எதும் வாங்கி விட்டீர்களா? வாங்கி விடுங்கள். பிறகு பயன்படுத்தலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. இது என் சொந்த ஐடியா இல்லை இணையத்தில் படித்து நான் செய்து பார்த்தது அவ்வளவுதான் படம் இணையத்தில் சுட்டது.. இணையத்தில் பல விஷயங்கள் கற்கலாம் அதை கொண்டு நல்லதற்கும் பயன்படுத்தாலும் கெட்டவைகளுக்கும் பயன்படுத்தலாம். அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை பொருத்து இருக்கிறது அவ்வளவுதான்.

      நான் பல முறை இந்த முறையை பயன்படுத்தி இருக்கிறேன் சரக்கிற்காக அல்ல பழ ஜூஸுக்காக. இங்கு நான் பழங்களை மொத்தமாக வாங்குவதுண்டு சில நேரங்களில் அதை சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால் அதௌ கெட்டு போவதற்கு முன்பு அதை ஜுஸ் செய்து சின்ன சின்ன ஐஸ் க்யூப் டிரேயில் ஊற்றி ஃப்ரிஷரில் வைத்து விடுவேன். அதை வேண்டும் போது எடுத்து உபயோக்கலாம். இந்த பதிவை மேலோட்டமாக படிக்கும் பலர் நாசமா போறவன் இப்படியெல்லாம் பதிவு போட்டு மக்களை கெடுக்கிறான் என்று சொல்லிஸ் செல்லுவார்கள் ஆனால் பதிவின் இறுதியில் கலரில் மிக அழுத்தமாக சில வரிகளில் சொல்லுவதை மனதில் நிறுத்தி செயல்படமாட்டார்கள்

      Delete
  4. இந்த விற்பனையைப் ‘பெருக்கத்தான்’ வேண்டும்.

    ReplyDelete
  5. ஐடியா நல்லாத்தான் இருக்கு. இனிமே... ஐஸ் சாப்பிடும் மாணவனையோ மற்றவர்களையோ பார்த்தால் சந்தேகம் வந்துவிடும் போலிருக்கு. அரசு இதைச் செய்ய முடியாது. ஆவின் பாலகத்தில், பெரும்பாலும், கரண்ட் இல்லை சார்... ஐஸ்கிரீம் கிடையாது.. என்று சாக்குச் சொல்வதைப் பார்க்கிறேனே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.