Thursday, September 24, 2015



உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் அம்மாடியோவ் இம்புட்டு விலையா?

லெக்கின்ஸ் பற்றிதான் எங்கும் பேச்சு அதனால லெக்கின்ஸ் பற்றி நானும் நாலுவார்த்தை சொல்லிவிடுகிறேன் இல்லைன்னா சமுகம் என்னை ஒதுக்கி வைத்துவிடும்

முதலில் பெண்களின் உடைகளைப் பற்றிய என் கருத்துகளை சொல்லிவிட்டு அதன் பின் உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் பற்றிய விபரங்கள் உங்களுக்காக. இந்த விலைஉயர்ந்த லெக்கின்ஸை வாங்கினால் மட்டும் போதாது அதை எப்படி அணிய வேண்டும் என்பதற்கான படங்களையும் இட்டு விளக்கி இருக்கிறார்கள்

முதலில் பெண்களின் உடைகளைப் பற்றிய என் கருத்து:


பெண்கள் தங்களுக்கு வசதியானது எதுவோ அதையும் அணியும் காலகட்டம் இது..... ஆண்களின் கண்கள் பார்த்தால் எனக்கென்ன பார்க்காவிட்டால் எனக்கென்ன என்று நினைத்து திரியும் வெளிநாட்டுப் பெண்கள் போல திரியும் துணிவு நம் நாட்டு பெண்களுக்கும் வந்துவிட்டதுதான் என்று சொல்ல வேண்டும்.

நம்நாட்டில் உள்ளவர்கள்  பெண்கள் பர்தாவை அணிந்து வந்தாலும் ஐய்யோகோ இது பெண்களின் உரிமைகளை பறிக்கிறது என கூக்குரலிடுவார்கள் அதே சமயத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து வந்தாலும் கூக்குரலிடுவார்கள். இப்படி நீங்கள் கூக்குரல் இட்டு கொண்டோ அல்லது இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் அவர்கள் அணிந்து கொண்டு இருப்பார்கள் அதை நிறுத்த உங்களால் இயலாது என்பதுதான் உண்மை.

இன்றைய காலகட்டங்களில் ஆடை அணிவது நிர்வாணத்தை மறைப்பதற்காக மட்டுமல்லாமல் தங்கள் அழகை வெளிபடுத்துவதற்காகவும்தான் அணிகிறார்கள். நிர்வாணத்தை மறைப்பதற்காக என்றால் ஏதோ ஒரு துணியை கொண்டு உடம்பை மறைத்து கொண்டு செல்லாம் அல்லவா அப்படி இல்லாமல் விதவிதமாக ஆடை அணிவது தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக என்று சொல்லும் போது அதில் உள்ளடங்கி இருக்கும் ரகசியத்தை பார்த்தால்  அதில் பிறரை கவர வேண்டும். பிறரின் பாராட்டை பெற வேண்டும் என்பதுதான் உள்ளடங்கி இருக்கும்.இந்த எதிர்பார்ப்பு மனிதர்களிடையே இருப்பது இயற்கையானதே. அதை மூடி மறைத்து வேஷம் இடுவது தேவையற்றது ஒன்றே.

அதனால் சொல்லிகிறேன் ஆண்களும் அவர்களை போல காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும். அது போல பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் அணிவது சேலையாக இருக்கட்டும் அல்லது லெக்கின்ஸாக அல்லது நைட்டியாக இருக்கட்டும்.  ஆனால் வீட்டை விட்டு வெளியே வரும்போது, உங்களை மற்றவர்கள் பார்க்கும்போது அவர்களின் மனதில் மரியாதை வரவேண்டும்படியாக இருக்க வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமல்ல  ஆண்களுக்கும் சேர்த்துதான் நான் சொல்லுவது


உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் பற்றிய விபரங்கள்:

avargal unmaigal உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ்

லெக்கின்ஸ் வாங்கினால் மட்டும் போதாது அதற்கு தகுந்த டாப்ஸையும் அணிவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கான படத்தையும் வீடியோ க்ளிப்பையும் இங்கே இணைத்துள்ளேன்

இந்த படத்தில் உள்ள லெக்கின்ஸை விற்கும்   ஆன்லைன் பேஷன் ஸ்டோரில் பார்த்த போது அனைத்து ஸ்டாக்குகளும் விற்று போய் ஒன்றே ஒன்றுதான் இன்றைய ஸ்டாக்கில் உள்ளது

டிஸ்கி: பெண்கள் சேலைகட்டுறாங்களோ அல்லது லெக்கின்ஸ் போடுறாங்கலோ என்பது பற்றி கவலைப்படாமல் பெண்களின் அழகை ரசித்து சந்தோஷப்படுவதுதான் ஆண்களாகிய நமது வேலை

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நீங்க சொல்ற ஒரு பாயின்ட் ரொம்ப சரி....எந்த ஆடை அணிந்தாலும் அது பிறரது மனதில் மரியாதை தோன்றுவதாக இருக்க வேண்டும். அது லெக்கிங்க்ஸாக இருந்தாலும் சரி, சுடிதாராக இருந்தாலும், சாரியாக இருந்தாலும்..சரி....பல சமயங்களில் எந்த உடை அணிந்தாலும் நமது உடல் மொழி நன்றாக இருந்தால் மட்டுமே அந்த ஆடை எடுபடும் என்பதும் எனது கருத்து. லெக்கிங்க்ஸ் அணிவது நாகரீகத்திறாக என்றாலும், அது மரியாதை பெறுவதாகவும் அணிய முடியும் ஆனால் உடல் மொழி சரியாக இல்லை என்றால் மோசமாகிவிடும்.. மரியாதை பெறாது. பெண்கள் ஜீன்ஸ் அணிந்து டீஷர்ட் அணிந்தாலும் அதுவும் மரியாதை பெறும் அளவில் அணிய முடியும்.

    லெக்கிங்க்சிற்கு என்று டாப்ஸ்கள் உள்ளன. அதைத்தான் அணிய வேண்டும் என்று ஃபேஷன் உலகம் வரையறுத்துள்ளது. பேண்டிற்கு என்று, ...

    நவநாகரீக உடை அணிவதில் தவறே இல்லை. இப்போதைய காலகட்டத்திற்கு. ஆனால் பல பெண்கள் நவநாகரீக உடை அணிவதில் உடலை வெளிப்படுத்துவதாகத்தான் அணிகின்றார்கள். மரியாதை பெறுவதாக இல்லாமல்...

    பல பெண்களைப் பார்த்துள்ளேன். அவர்கள் அணியும் நாகரீக உடை அவர்களது மறைவான பாகத்தை வெளிப்படுத்துவதைப் போன்று ஆனால் சில அதை ஆண்கள் முன்னிலையில் இழுத்து அட்ஜஸ்ட் வேறு செய்வார்கள். அப்படி என்றால் எதற்காக அணிய வேண்டும். ஆண்கள் அட்ஜஸ்ட் செய்வதில்லை என்றாலும் பொருத்தமாக அணியாமல் ஃபேஷனிற்காக அணிந்து பலர் உடல் மொழியால் மரியாதை இழக்கிறார்கள்...ம்ம்ம் என்னத்த சொல்ல...

    நல்ல கருத்தைச் சொல்லி இருக்கின்றீர்கள் தமிழா....

    கீதா

    ReplyDelete
  2. இந்த ரேட் எல்லாம் இங்கேயும் வந்து விட்டது ....பெரிய பெரிய மால்களில் உள்ள ஷோரூம்களில்...

    ReplyDelete
  3. யப்பா, ரொம்ப முக்கியமான கட்டுரை,,, வீட்டம்மா படிச்சாங்களா?
    கொஞ்சம் அவுங்கள கூப்பிடுங்க பேசனும்,,,,
    ஆனாலும் சில யதார்த்தங்களைச் சொல்லியுள்ளீர்கள், உண்மைதான்,
    நன்றி.

    ReplyDelete
  4. உடை என்பது உடலை மறைக்கும் ஆடை என்னும் காலம் மலையேறிவிட்டதுதான். குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரையும் படித்தேன். என்னமோ பெண்களுக்கு உதவும் நோக்கில் எழுதியது போல தோற்றத்தை தந்தாலும் அவர்கள் எடுத்து வெளியிட்டிருந்த படங்கள் ஆபாசத்தின் உச்ச கட்டம். பெண்கள் எதை உடுத்தவேண்டும் என்பது அவர்களது முடிவுதான். பிறர் நோக்குகையில் அந்த ஆடை மரியாதையை தரக்கூடியதாக இருந்தால் சிறப்பு என்ற உங்கள் கருத்தும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  5. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  6. என்ன லெக்கிங்சோ என்னவோங்க என்னைக் கேட்டா பெண்கள் என்றால் தாவணி மற்றும் புடவையே அழகு சிறப்பும் என்பேன். என்னை நாட்டுப்புறம் என்று சொன்னாலும் பரவாயில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.