Sunday, September 20, 2015

 
  
@avargal unmaigal
தமிழ் இணைய கல்விக்கழகம் செய்வது என்ன? Tamil Virtual Academy


முன்னாள் தமிழ் இணைய பல்கலைக்கழகமாக  இருந்த அமைப்புதான் இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.  இது தமிழக அரசால் நிறுவப் பெற்ற தன்னாட்சி நிறுவனம். இப்படி ஒரு அமைப்பு இருப்பதே பலருக்கும்(முக்கியமாக வெளிநாட்டில் வாழும் என்னைப் போல உள்ளவர்களுக்கு ) தெரியாது இருந்ததது. அதைப்பற்றி அறியும் வாய்ப்பு சமீபத்தில்தான் புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினரின் மூலம் கிடைத்தது. அப்படி நான் அறிந்ததை என்னைப் போல அறியாத பலருக்கும் அறியச் செய்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

இந்த தமிழ் இணையக் கல்விக்கழகம்  முதல் முறையாகப் புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் பங்கேற்று பதிவர்களுக்கிடையே பல போட்டிகள் நடத்தி பணப்பரிசுகளும் விருதுகளும் வழங்க முன்வந்திருக்கிறது. அவர்களின் அந்த முயற்சிக்கு நாம் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவோம்.


புதுக் கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினருடன்  தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் பரிசு போட்டிகள் விபரங்கள் அறிய இங்கே செல்லவும்
ttp://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_21.html
 

அந்த தமிழ் இணையக் கல்விக்கழகம் நிறுவனத்தைப் பற்றி நான் இணையத்தில் அறிந்ததை இங்குப் பகிர்கிறேன்


தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நோக்கம் :

உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.


தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் குறிக்கோள்:
1. கணினித் தமிழுக்கான தீர்வுகளை உருவாக்குதல்.
2. உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும், தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல்.
3.பார் தழுவி வாழும் தமிழர்கட்கு, அவர்கள் தேவைக்கேற்பப் பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல்: அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல்.
4.உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து, அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்
5. தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்:
6.கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்: உரிய நியமங்களை நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கு ஏற்பத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ்/பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்.
 


@avargal unmaigal



மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகம் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் http://www.tamilvu.org/index.html அல்லது கிழேயுள்ள விபரங்களை பார்க்கவும்





அன்புடன்
மதுரைத்தமிழன்



About TVA/.. பற்றி

நூலகம்/ Library

நூலகம்/ Library







14 comments:

  1. வாழ்த்துகள். முக்கியமான அவசியமான பதிவு.

    ReplyDelete
  2. அசத்திவிட்டீர்கள் ...அசத்தி
    நன்றிகள்
    தம +

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. எத்தனை விஷயங்கள் இங்கே.....

    ReplyDelete
  4. மிகச்சிறப்பான செய்திகளை திரட்டி தந்திருக்கிங்க.

    ReplyDelete
  5. அய்யா... மதுரைத் தமிழரே! இதுதான் அறிமுகமா? ஒரு பெரும் புத்தகத்தையே அல்லவா திறந்து கையில் கொடுத்துவிட்டீர்கள்... உங்கள் வாசகர் வட்டம் மிகவும் பெரிது. தமிழ்இணையக் கல்விக் கழகத்தைப் பற்றிய அறிமுகத்துடன், நமது விழாப்பற்றிய அறிமுகத்தையும் சேர்த்துத் தந்தமைக்கு மிகவும் நன்றி. தங்களின் இந்தப் பதிவு விழாவுக்குப் பேருதவியாக இருக்கும் என நன்றியுடன் தெரிவித்து மகிழ்கிறோம். நன்றி வணக்கம்.

    ReplyDelete
  6. ஆம் தமிழா இந்த வலைத்தளத்திற்குச் சென்று வாசிப்பதுண்டு. நாங்கள் வலைச்சரத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பொழுது இதைப் பற்றிச் சொல்லியதாக நினைவு...ஆனால் சுட்டி மட்டும் கொடுத்ததாக நினைவு.

    நீங்கள் மிகவும் விரிவாக கொடுத்து விட்டீர்கள்...எல்லோரும் அறிய வேண்டிய ஒன்றுதான்...

    பாராட்டுகள்...வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. விரிவான விளக்கமான பதிவு! அனைவருக்கும் உபயோகமாகும்! நன்றி!

    ReplyDelete
  8. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய, நல்ல தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இலக்கிய வரலாறு 3க்கு நான் ஆசிரியராக இருந்து எழுதித்தந்துள்ளேன். http://www.tamilvu.org/courses/degree/a041/a0413/html/a0413ind.htm மேற்கண்ட இவ்விணைப்பில் அதனைக் காணலாம்.

    ReplyDelete
  9. மதுரைக்காரர் விவரம் தான்,,,,,,,,, பூரிக்கட்டை அடி இது கூட செய்யலனா எப்படி?
    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நானே அண்ணா பல்கலைக்கழகம் சென்று திரும்பும் பொழுது இந்த போர்டைப் பார்த்திருக்கிறேன் .தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்ததுண்டு. நல்ல வேளை
    நீங்களே பதிவு செய்து விட்டீர்கள் .நன்றி

    ReplyDelete
  11. சகா!! உங்கள் ஆக்கபூர்வமான பல படைப்புக்களில் இதுவும் ஒன்று. இப்படியான சீரியஸ் போஸ்ட் இடும் போது உங்கள் விவரிப்பில் மிளிரும் நடை அலாதி!! k ... சகா!! போட்டிக்கு தாங்கள் எழுதுவதாகச்சொன்ன பெண்ணியப்பதிவு எங்கே ( நீயும் வாயை வைத்துகொண்டு,,,ஒ!! கையை வைத்துகொண்டு சும்மா இருக்கமாட்டாய் மைதிலி??)

    இந்த அருமையான பதிவுக்கு விழாக்குழுவின் சார்பில் என் நன்றிகள் சகா!

    ReplyDelete
  12. உங்களை தனியே கவனிச்சிக்கிறேன்...

    புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  13. என்னுடைய இலக்கிய ஆர்வத்துக்கும் தேடலுக்கும் தீனி போட்டது இத்தளம்தான். எவ்வளவு விவரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நாம் அறிந்துகொள்ளவேண்டியவை அநேகம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சேவை அளப்பரியது. பலரும் அறிந்திராத அதன் சேவையை இங்கு அறியத்தந்ததோடு உரிய சுட்டிகளுடனும் பகிர்ந்துள்ளமைக்கு மிகவும் நன்றி. உங்களுடைய இம்முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  14. தமிழ்இணையக்கல்விக்கழகத்தினைஅறியத்தருகிறேனென்றுகட்டுரையேஎழுதிபலசுட்டிகளை
    எங்களுக்குப்பரிசாகவும்தந்துநமதுவிழாபற்றியசெய்தியையும்பகிர்ந்தமைக்குவிழா
    குழுசார்பாகமிக்கநன்றிசகோதரரே!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.