Wednesday, September 23, 2015



கலைஞர் கொஞ்சியதும் கெஞ்சியதும் யாரை?


தம்பி ஸ்டாலின் நான் மாற்று கட்சிக்காரர்களை கொஞ்சி பார்த்துட்டேன் கெஞ்சி பார்த்துட்டேன் பாராட்டி பார்த்துட்டேன் நமது இல்ல விழாவிற்கும் கூப்பிட்டு நாம நல்லவர்கள்தான் என்று சொல்லியும் பார்த்துட்டேன் இருந்தாலும் ஒரு பயக் கூட நம்ம கூட கூட்டணி வைக்க வரமாடேங்கிறாங்க இப்ப என்னடா பண்ணுறது தேர்தல் வேற நெருங்கி வந்துகிட்டே இருக்கு.


நைனா கவலைப்படாதீங்க...முதலில் மதிமுகவை உடைச்சு அதுல  இருந்து ஆளுங்களை நம்ம கட்சிக்கு கொண்டு வந்திடுவோம் அதன் பின் மற்ற கட்சிகள் எல்லாம் பயந்து போய் கூட்டணிக்கு ஒத்துகிடுவாங்க...

ஆங் அது சரியாத்தான் இருக்கு ஆனால் அதில் சில சிக்கல் இருக்கே... மதிமுகவில் இருக்கிறவங்க உன் வளர்ச்சியை கண்டு பொறுக்காமல்தானே தனியா கட்சி ஆரம்பிச்சாங்க இப்ப அவங்களை சேர்த்துகிட்டா கட்சிக்குள் வந்து உள்குத்து வேலைகளை மீண்டும் ஆரம்பிக்க மாட்டங்க என்பதற்கு என்னடா உறுதி அதுமட்டுமல்ல நாம் காட்டுற பணத்திற்கு ஆசைப்பட்டு இங்க வருகிறவங்க தேர்தல் நேரத்தில் அந்த அம்மா மேலும் அதிக பண ஆசைகாட்டி அவங்க கட்சிக்கு இழுத்தா இவங்க அங்க போய் கடைசி நேரத்தில் காலை வாரிவிடமாட்டாங்க என்பதற்கு என்னடா உறுதி..

உம்  அதுல நான் ஜாக்கிரைதையாக இருந்துகிறேன் அப்புறம் நாம் என்ன பண்ணாலாம் நைனா?

இனிம என்ன பண்ணுறது நமக்கு நாமே உழைச்சாத்தான் கொஞ்சமாவது பலன் இருக்கும்.

நைனா இந்த நமக்கு நாமே நல்ல சொல்லாக இருக்கிறது அதை வைச்சு நான் ஒரு திட்டம் தீட்டி தமிழ்நாடு மூழுவதும் வலம் வந்த நம்ம எம்ஜியார் படத்தில் நடிச்சது போல நான் நேரில் நடிக்கிறேன் அதை பார்த்து மக்கள் நிச்சயம் ஏமாந்து போவாங்க...


ஹீஹீ இப்பதாண்டா நீ என் மகன் என்று நிருப்பிக்கிறாய் சென்றுவா மகனே வென்றுவா மகனே

அன்புடன்
மதுரைத்தமிழன்

பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வந்த சின்ன சின்ன செய்திகள்:
அமெரிக்க தலைவர் ஒபாமா எப்போதும் எளிமையானவர் ஆனால் ஸ்டாலினோ தேர்தல் வரும் போதுமட்டும் எளிமையானவர் தமிழகத்தின் ஒபாமா?.

மதிமுக தலைவர்கள் விலகி போகவில்லை விலைக்கு போய் இருக்கிறார்கள்

மதிமுகவில் இருந்து சிறு தலைவர்கள் 'விலகி'னார்கள் என்பதை விட திமுகாவினால் "விலை"க்கு வாங்கப்பட்டார்கள் என்று சொன்னால் அது உண்மையாகவும் இருக்கும் பொதுமக்கள் நம்பும்படியாகவும் இருக்கும் # என்ன நான் சொல்லுறது சரிதானே?

திமுக கட்சியை மக்கள் மறந்தது போலவே கலைஞரை அவரது குடும்பமக்கள் மறைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சொந்தகாலில் நிற்க முடியாத திமுக மற்ற கட்சியின் தலைவர்களை (ராமதாஸ்,விஜயகாந்து, வைகோ) பார்த்து சொந்தக் காலில் நிற்காமல் அடிக்கடி கட்சி மாறுகிறார்கள் என்று சொல்வதை பார்த்தால் நகைக்காமல் இருக்க முடியவில்லை

#கலைஞர் 'தி.மு.க., தொண்டன் என்றால், 'சிங்கிள் டீ'யை குடித்துவிட்டு, அல்லும் பகலும் அயராமல் பணியாற்றுவான்' .
#தொண்டன்திமுக தலைவர்கள் என்றால் அசராமல் கொள்ளை அடித்து மாட மாளிகைகளில் வாழ்வார்கள்

தமிழக அரசு பஸ் சர்வீஸ் செய்வது போல விமான சர்விஸும் செய்து இருந்தால் நினைத்து பார்த்தாலே மனசு நடுங்குது

அன்புமணி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்க ஆசைப்படுவதற்கு காரணம் அவரால் முதலமைச்சராக ஆக முடியாது என்று தெரிந்தாலும் முதலமைச்சர் வேட்பாளாராகவது நின்றுவிடுவோம் என்பதால்தானாம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடியை தாண்டியது: செய்தி
இந்தியாவில் கடவுளின் சொத்தும் தலைவர்களின் சொத்தும் தான்  அதிகரித்து வருகிறது ஆனால் அவர்களை நம்பும் பக்தர்களும் தொண்டர்களும் மட்டும் ஆண்டி ஆகிவிடுகிறார்கள்


பொன்.ராதாகிருஷ்ணன் : பாராளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தமிழ்நாட்டில் அமைத்த கூட்டணி அப்படியே உள்ளது

விஜயகாந்த்: மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி
வைகோ: பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் எப்போதோ வெளிவந்துவிட்டோம் அவர்களுடன் மதிமுக இல்லை
மருத்துவர் ராமதாஸ்: பாமக சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.
பாரிவேந்தர் : ஐஜேகே கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.

மக்களுக்கு பாதுகாப்பு தரும் போலீஸ் அதிகாரிகளுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையென நினைக்கும் போது தமிழகம் எந்த அளவிற்கு சிரழிந்து போய் கொண்டிருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது..

இந்த தடவையும் ஸ்டாலினை தோற்க்க வைச்சு பார்ப்போம் அதன் பின்னாலும் அவர் ஆட்டோவில் தொங்கி அல்லது தெருக்கடையில் டீ குடிச்சு ரோட்டுல போறவர கிழவி கிழவங்க கையை பிடிச்சு பேசினா 2021 ல் அவர நாம் கட்டாயம் முதலமைச்சாராக ஆக்கிடலாம் என்ன நான் சொல்லுறது


ஆட்டோவில் தொங்கி சாதனை படைக்கும் தலைவரை நீங்க் தேர்ந்தெடுத்து நீங்கள் சிஎம் மாக ஆக்கினால் அதன் பின் நீங்க அவரை மாதிரிதான் அடுத்த ஐந்தாண்டுகள் தொங்கி வர வேண்டி இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழ்

4 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.