உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, September 11, 2015

இது எல்லாம் நடக்கலைன்னா தெரியலன்னா மோடிக்கு என்னாகிருக்கும்?இது எல்லாம் நடக்கலைன்னா தெரியலன்னா மோடிக்கு என்னாகிருக்கும்?

இந்தி மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
* நம் நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக, இந்தி திகழ்கிறது. என் தாய்மொழி குஜராத்தி; ஆனாலும், உ.பி.,யைச் சேர்ந்த ஒரு டீ வியாபாரியிடம் இந்தி பேச கற்றுக் கொண்டேன்.

* எனக்கு இந்தி தெரியாமல் இருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இந்தி மொழியை மறந்தால், நாட்டுக்கு பேரிழப்பு ஏற்படும்.

எனக்கு இந்தி மட்டும் தெரியலன்னா என்னாகிருக்கும்?-மோடி

மனைவியை விட்டுவிட்டு ஒடலைன்னா என்னாகிருக்கும்?-மோடி


குஜராத்தில் வன்முறையை கட்ட அவிழ்த்துவிடலைன்னா என்னாகிருக்கும்.

ஆர் எஸ் எஸ் சொல்படி கேட்கவில்லைன்னா என்னாகிருக்கும்.

அத்வானியை காலை வாரிவிட்டிருக்கவில்லையென்றால் என்னாகிருக்கும்.

அம்பானி அதானிகளுக்கு பல்லக்கு தூக்கவில்லையென்றால் என்னாகிருக்கும்.

குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலமாக ஆகியது என போலிவிளம்பரங்கள் கொடுக்கவில்லையென்றால் என்னாகிருக்கும்.

இந்துத்துவா பற்றி வாய்கிழிய பேசாமல் இருந்திருந்தால் என்னாகிருக்கும்

நல்லவேளை தினமும் மோடி டாய்லெட்டுக்கு போய்விடுகிறார் இல்லை என்றால் என்னாகிருக்கும்

#மோடிசாப் #இந்திமொழி கற்பதை நாங்கள் எதிர்க்கவில்லை அதை திணிப்பதைதான் நாங்கள் எதிர்க்கிறோம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. இன்று g+ல படிச்ச ரொம்ப சுவாரஸ்யமான இந்த பகிரவை இங்கே பகிர்கிறேன்.
  Sivasankaran Saravanan
  கேள்வி1: மொழியறிவு என்றால் என்ன?
  தன்னுடைய தாய்மொழியான தமிழ் பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால், அவரிடம் அவருக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு இருந்ததே மொழியறிவு.

  கேள்வி2: மொழித்திணிப்பு என்றால் என்ன?
  ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார் இல்லையா அதுதான் மொழித்திணிப்பு.

  கேள்வி3: மொழியுரிமை என்றால் என்ன..?
  எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், "என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம் பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்" என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராத தமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா அதுதான் மொழியுரிமை.

  கேள்வி4: மொழியின் சிறப்பு என்பது என்ன?
  இதே பிரதமர் மோடி தமிழ்நாட்டு மேடைகளில் பேசும்போது ஆரம்பத்தில் ஒரு சில வார்த்தைகள் மக்களுக்கு புரிகிற தமிழ் மொழியில் பேசி கைத்தட்டல் வாங்க முடிகிறதல்லவா அதுதான் மொழியின் சிறப்பு...!

  ReplyDelete
  Replies
  1. அருமை! அதுவும் முதல் கேள்வி பதிலும் இறுதிக் கேள்வி பதிலும் ...செம...

   Delete
 2. என்னாகிருக்கும்????????????

  ReplyDelete
 3. சரியான கேள்விகள் தமிழா...கடைசி வரி பஞ்ச்! கற்பதில் தவறு இல்லை அது அவரவர் விருப்பம். ஆனால் திணிக்கப்படுவது....தவறு...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog