உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 2, 2015

மதுரைபதிவர் விழாவில் கலந்து கொண்ட மதுரைத்தமிழன் எடுத்த புகைப்படங்கள்.மதுரைபதிவர் விழாவில்  கலந்து கொண்ட மதுரைத்தமிழன்  எடுத்த புகைப்படங்கள்.

கடந்த வருடம் நடந்த பதிவர் திருவிழாவில் வேறு ஒரு பதிவர் பெயரில் ரகசியமாக கலந்து கொண்ட நான் அங்கு நடந்த சில நிகழ்வுகளை எனது செல்போனில் உள்ள  கேமராவால் எடுத்த புகைபடங்கள் உங்கள் பார்வைக்காக.....

செல்போனில் மெமரி இருந்த வரை படங்கள் எடுத்து இருக்கிறேன் அது போல முடிந்தவரை பெயர்களை ஞாபகம் வைச்சு சொல்லி இருக்கிறேன் 

 இவர் ஞானக் கண்ணாகிய கல்வியை போதிக்கும் கரந்தையார்
 ஸ்கூல்பையன்...இவ்வளவு பெரிய இளைஞன் ஸ்கூல்பையனா என்றால் ஆமாம் இன்னும் இவர் ஸ்கூல் பையந்தான் ஜப்பானிய மொழி கற்கும் பையன்
 அருமையான பதிவுகளை பகிரும் மகேந்திரன் இந்த விழாவிற்கு அப்புறம் மலேசியன் விமானம் போல மாயமாக மறைந்துவிட்டார். ஒரு வேளை இந்த பதிவர் விழாவில் மீண்டும் காட்சி தருவாரா என்பதை பொருத்து இருந்து பார்க்க வேண்டும். உடன் இருப்பவர் எங ஊர்காரர் கோவிந்தராஜ்

 இவர் பெயர் மறந்துவிட்டது மன்னிக்கவும் நண்பரே
       இளவரசனாக வலம் வந்து இளவரசியை தேடிக் கொண்டிருக்கும் அரசன்

 காதலி எனக்கு இல்லை எனக்கு இல்லை  இல்லை என்று சொல்லி காதல் கடிதம் இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் சீனு

 எங்க ஊரு வாத்தியார்.....

 ஹாலிவுட்டில் பாடம் கற்ற கோலிவுட் இயக்குனர் ஆவி
 நாய்நக்கீஸ் சரக்குக்கு சொந்தக்காரர்
 புன்னகையை மொத்தவிலைக்கு வாங்கி வைத்து கொண்ட சித்தர் தனபாலன்
 குறும்பட தாயாரிப்பாளர் குடந்தையார்
 வலையுலக வீரப்பன் கில்லர்ஜி

 டூமில்வாசி
முதலில் இருக்கும் பெண்மணி ஆதிவெங்கட் என நினைக்கிறேன் தவறு என்றால் மன்னிக்கவும் இரண்டாவது ஞாபகம் இல்லை....மன்னிக்கவும் முன்றாவது கணையாழியா?
 கங்காதரன்
 எனக்கு ஞாபகசக்தி சரியாக இருந்தால் இது சரியாக இருக்கும். இவங்க வலையுலக வாலு....சரிதானே

 தேனம்மைதானே இவங்க??
 புதுக்கோட்டை புலி  கீதாதானே இவங்க?
 தெரிந்த நபர் பெயர் ஞாபகம் வரவில்லை சாரி
 தெரிந்த நபர் பெயர் ஞாபகம் வரவில்லை சாரி
 அட நம்ப ரத்தினவேல் சார்
 வலைச்சரம் சீனா
 அல்வா ஊர்க்கார ஆபிஸர் சங்கரலிங்கமும் பால்கோவா ஊர்க்கார ரத்தினவேல் சாரும்

 அட நம்ம துளசி டீச்சர் சிரிச்சு சிரிச்சு  அட்வான்ஸாக புதுக்கோட்டை பதிவர் விழாவிற்கு  அழைப்புவிடுக்கும் புன்னகை அரசிகள்


 
புதுக்கோட்டை பதிவர் விழாவில் கலந்து கொள்வேனா இல்லையா என்பதும் மிகவும் சஸ்பென்ஸ்....முடிந்தால் கண்டுபிடியுங்கள்.... அல்லது விழா முடிந்ததும் நான் கலந்து கொண்டேனா இல்லையா என்பதை   அறிவிக்கிறேன்

டிஸ்கி : உலகம் ஒரு நாடக மேடை அதில் நானும் ஒரு நடிகன்

துளசி & கீதா இப்பவாவது நம்புறீங்களா இல்லையா? மதுரைத்தமிழன் உங்களை எல்லாம் பார்ப்பான் ஆனா அவனை மட்டும் யாரும் பார்க்க முடியாது. அப்படி நீங்கள் பார்ப்பவர் என்றால் அவர் மதுரைத்தமிழன் டூப்பாகத்தான் இருப்பார்.


அன்புடன்
மதுரைத்தமிழன்.

17 comments :

 1. படங்கள் அருமை. மூன்று பேர்கள் அமர்ந்திருக்கும் படங்களில் மூன்று பெயருமே தவறு. இன்னொரு படத்தில் அவங்க தேனம்மை இல்லை.

  :))))))))

  ReplyDelete
  Replies
  1. தேனம்மை இல்லை என்றால் அவர்கள் வா.மு.கோமு வா?

   Delete
  2. அவங்க நான் செல்லாமாக அம்மா என அழைக்கும் ஜெயலெட்சுமி A.E.E.O அவர்கள்.நிற்க அதற்குத்தக blog. என்னை மகள் என்றும் கஸ்தூரியை மருமகன் என்று வாஞ்சையாக அழைப்பவர்.

   Delete
  3. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் அவர்கள் திருமதி .ஆதி வெங்கட் அல்ல ,அவர் என் திருமதி .அவர் அவர் அக்காவும் & மச்சானும்!
   படம் இவ்வளவு தெளிவாய் இருப்பதால் நீங்கள் எடுத்து இருக்கவும் ,வந்திருக்கவும் வாய்ப்பில்லை :)

   Delete
 2. நம்பி விட்டோம் நண்பரே
  நம்பிவிட்டோம்

  ReplyDelete
  Replies
  1. கமெண்ட் எப்படி போடணும்னு உங்ககிட்ட தான் கத்துக்கணும் கரந்தை அண்ணா:)

   Delete
 3. கடைசி போட்டோவை இப்போதான் பார்க்கிறேன் :) நீங்க தந்த பட்டதை பறக்கவிடமா பத்திரமா வெச்சுகிறேன்:)

  ReplyDelete
 4. எனக்குக் கீழே உள்ள படம் மாலதி blog மாலதி டீச்சர், என் தோழி!
  ஜெயா அம்மாவிற்கு கீழே நீங்கள் பெயர் மறந்த நம்ம ஊரு(புதுகை) நண்பர் ஸ்டாலின் சரவணன். k, மது(கஸ்தூரி) போட்டோ எங்க பாஸ். நேத்து இந்த போட்டோ எல்லாம் உங்களுக்கு மெயில் பண்ணும்போது அந்த போட்டோவை தானே first வச்சுருந்தேன்!!!!!!!!!!!!!

  ReplyDelete
 5. sorry , that should be read as below thendral geetha instead of jayamma:)

  ReplyDelete
 6. வணக்கம் சார்...நலமா?உன்னும் உங்கள் முகத்தைக்காணமுடியவில்லை..புதுகை வரும்போது கண்டு பிடித்துவிடுவோம்னு நினைக்கின்றேன்....எங்களிடமே இல்லாத போட்டோக்கள் நானும் மைதிலியும் மகிழ்வாய் இருப்பது....மிக்கநன்றி...ஆனா எங்க இருந்து எடுத்திருப்பீங்கன்னு புலம்ப வைச்சுட்டீங்களே..

  ReplyDelete
 7. சரியான தகவல் பதிந்த அனைவருக்கும் மிகவும் நன்றி

  ReplyDelete
 8. அடடே... நம்மளையுமா......

  ReplyDelete
 9. ஆஹா நாங்க லேட்டு.......ஹஹ்ஹாஹ செம காமெடிங்க....இந்தப் புகைப்படங்களிலிருந்தே தெரியுதே...நீங்க வரலைனு....பெயர்கள் சில தவறு...சரி சரி அத நம்ம மக்கள் திருத்திட்டாங்க....வந்திருந்தீங்கனா கண்டிப்பா நீங்க பெயர் நினைவு வைச்சுருப்பீங்க.....சரி அத விடுங்க நாங்க மதுரைப் பதிவர் விழாவுக்கு போகலை ஸோ நீங்க வந்தீங்களா இல்லையானு தெரியாது அதனால அதுலருந்து ஜகா...ஆனா தமிழா வெல்லூர் விசு புத்தக வெளியீட்டு விழா??!!!! அதக் கொஞ்சம் போடுங்களேன்..நீங்க நிறைய எடுக்கறதப் பார்த்தமே!!ஹஹ்ஹாஹஹ்

  நானும் துளசியும் விழுந்து விழுந்து...ஸாரி காயம் எல்லாம் படல...ரொம்பவே சிரிச்சோம்....உங்க புதுகை விழா அறிவிப்பு பதிவு....எங்க தளத்துல உங்க பதில்...இப்படி....இதையும் ரசித்தோம்....

  ReplyDelete
 10. நீங்க மாறு வேடத்துல வந்தாலும் கண்டுபிடிச்சுருவோம்ல...அது சரி இந்தப் ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்துருக்கோமே...எல்லாம் நீங்க ப்ளாக்லருந்து சுட்டதுதானே! அஹ்ஹஹ்ஹஹஹ்
  ...

  ReplyDelete
 11. மைத்தூ நீங்க ஏம்பா ஃபோட்டோ கொடுத்தீங்க மதுரைத்தமிழனுக்கு....ஹஹஹ் சே பாருங்க...இப்ப என்ன சொல்லிருக்காருனு...

  ரொமபவே ரசித்தோம்...னீங்க எடுக்காத இந்த ஃபோட்டோஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க...

  ReplyDelete
 12. தாங்கள் மாறு வேடத்தில் வருவதற்க ஐடியா, மூக்கில் ஒரு பரு வச்சுக்கோங்க கண்டுபிடிக்க முடியாது.

  ReplyDelete
 13. நேரடி ஒலிபரப்பில் எடுக்கப்பட்ட படங்கள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog