Monday, September 14, 2015



வீட்டில் இருந்தே இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க வழிகள்.

இந்த பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு அல்ல. உண்மையாகவே வீட்டில் இருந்தே இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க வழியை சொல்லும் பதிவு. இதற்கு நீங்கள் பண முதலீடு ஏதும் செய்ய தேவையில்லை. இதற்கு தேவை இணையவசதிமட்டுமே. உங்களிடம் கணணி இல்லையென்றால் கணணி செண்டர்களுக்கு சென்று நான் தரும் தகவல்களை கொண்டு செயல்பட்டால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். அதுமட்டுமல்ல இணையத்தில் மிக பிரபலமாகவும் ஆகலாம்.. அதற்கான முதல் படி இதுதான்.


கிழேயுள்ள தகவல்களை பின்பற்றி பணம் சம்பாதிக்க உங்களுக்கு எனது வாழ்த்துகள்


வீட்டில் இருந்தே இணையம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால்...  புதுக்கோட்டைப் பதிவர்கள், இந்த வருடம் பதிவர் திருவிழாவை நடத்தி அதற்கு நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்ததே!  ஆனால் இப்போ அவர்கள் நாம் எளிதில் பணம் சம்பாதிக்க சில எளிய வழிகளையும் சொல்லிதருகிறார்கள் அதற்கு நீங்கள்  கட்டுரை அல்லது கவிதையை எழுதி அனுப்பி உங்கள் உழைப்பிற்கான் பணத்தை சம்பாதிக்கலாம் இந்த முறை மூலம்.. மிக எளிதாக! ஐம்பதாயிரம்! சம்பாதிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

அதனால் உங்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களைக் கையில் எடுங்கள். மேசைக் கணினியோ, மடிக் கணினியோ, டேப்லட்டோ, ஐபாடோ (கண்டிப்பாப் பெரும்பாடு இல்லை ), ஐபோனோ கையில் எடுத்துத் கட்டுரை மற்றும் கவிதையை எழுதியவைகளை   உங்கள் தளத்தில் பதிவிட்டு இணைப்பை bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். வலைத்தளம் இல்லையென்று யாரும் கவலைப்பட வேண்டாம்.உடனே ஒன்றைத் திறந்துப் பதிவிடுங்கள்.

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி - கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு


மற்ற விவரங்களுக்கு இங்கே சென்று  பாருங்கள்.

இது போன்று இணையத்தில் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை நான் உங்களுக்கு அவ்வப்போது அறிவிக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. இதுவரை இந்தமாதிரி தலைப்பில் எல்லாம் ஏமாற்று விளம்பரங்கள் தான் வரும். ஆனால் உலக கணினி வரலாற்றில் முதல் முறையாக உண்மையாகவே உருப்படியான யோசனை சகா:) பதிவர் விழா தொடர்பான உங்கள் ஈடுபாடு உண்மையாகவே எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது! நன்றி சகா!

    ReplyDelete
  2. என்னப்பா இன்னொரு ஆட்சென்ஸ் விளம்பரமா என்று நினைத்தேன்...
    அசத்தல் தமிழரே..
    தம +
    நன்றிகள்

    ReplyDelete
  3. அப்படிச் சொல்லுங்க...! நன்றி...

    வலைத்தளம் இல்லையென்று யாராவது சொன்னால் அடியேனிடம் சொல்லுங்கள்...

    ReplyDelete
  4. செம... கலக்கிட்டீங்க போங்க....

    ReplyDelete
  5. அட வேலை எல்லாம் தேடி இனித் திரியத் தேவை இல்லை. நம்ம மதுரைத் தமிழர் நல்ல யோசனை சொல்லப் போகிறாரே இனிக் கவலை இல்லையென்று வந்தால் இப்படி ஏமாற்றி விட்டீர்களே ம்..ம் ஆஹா நல்ல யோசனை சகோ எப்படித் தான் இப்படி எல்லாம் மூலை வேலை செய்யுதோ . மிக்க நன்றி !

    ReplyDelete
  6. அசத்தலான விளம்பரம்.

    போட்டியில் பங்கு பெறப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்,
    தங்கள் பாணியிலே,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
  8. ச்சும்மா எப்ப பாத்தாலும் இந்த பூரிக்கட்டை வெறும் மரத்தால் செய்ததென்பதால் போரடிக்கிறது. எனவே பூரிக்கட்டைக்கு மாற்றாக வேறு எதாவது இருந்தால் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சிற(ரி)ப்பு பரிசு வழங்கப்படும்.
    இப்படிக்கு
    பூரிக்கட்டையை (பல வகையில்) பயன்படுத்துவோர் சங்கம்

    சார்பாக (ம). துரை தமிழன் வீட்டரசியார்

    ReplyDelete
  9. //மேசைக் கணினியோ, மடிக் கணினியோ, டேப்லட்டோ, ஐபாடோ (கண்டிப்பாப் பெரும்பாடு இல்லை ), ஐபோனோ கையில் ..//. என்ற என் வரிகளை யாரோ காப்பி அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு கோபத்துடன் இணையத்தில் தேடியபொழுது வந்தது உங்கள் தளம் :), நம்ம சகோ தானா என்று அமைதியடைந்தேன்.
    சம்பாதிக்க வழி என்று ஈர்த்துவிடும் தலைப்பு சகோ.

    ReplyDelete
    Replies
    1. முதல் இரண்டு பாராவை தவிர மீதி எல்லாம் உங்கள் பதிவில் இருந்து சுட்டதுதான் யாருக்கு அதே விஷயத்தை மீண்டும் டைப் பண்ண நேரம் இருக்கிறது அதனால் தான் ஈ அடிச்சான் காப்பியாக அதன் கலர் மற்றும் எழுதுத்ருவைமாற்றாமல் அப்படியே தந்து இருக்கிறேன்

      Delete
    2. தலைப்பிற்கு காரணம் விழா நடப்பதை அறியாத எவரும் இந்த தலைப்பை பார்த்து கண்டிப்பாக படிக்க வரும் போது அறிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில்தான் இது வெளியிடப்பட்டது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.