உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 28, 2015

மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும் ( அரசியல் கலாட்டா)
மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும் ( அரசியல் கலாட்டா)

எங்களது கடந்த கால ஆட்சியில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து இருந்தால் உங்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். - பொதுக்கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின்.
அதன்னப்பா ஏதேனும் தவறு .ஸ்பெக்டரம் 2 ஜி  இது போன்ற பல தவறுகள் நடந்துவிட்டன. அதற்கான காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.. மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும்.அது சரி நீங்கதான்‬ தப்பே செய்யலையே அப்புறம் ஏன் ஏன் ஏன்? ???இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் சார்தன் பாதம் நோக்கி விழுந்து மரியாதை செய்பவர்களை பாடுபடுத்துவதும். தன்னை பாடுபடுத்துபவர்களுக்கு வணங்கி மரியாதை செலுத்துவதும்தான் அம்மா செய்யும் செயல்

ஆடம்பர ஆடைகளை அணிந்து எளிமையாக மக்களை சந்திக்கும் தலைவர் ஸ்டாலின்

ஐ நா வில் ...இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்துகொள்ளும்...ஈழ இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை கோர மாட்டோம்...# இந்தியா திட்டவட்ட அறிவிப்பு  எங்களுக்கு அன்னிய முதலீடுதான் முக்கியம் இனப்படுகொலை அல்ல

கடவுள்கூட உங்களிடம் குறைகளை கேட்க வரமாட்டார் நாம்தான் அவரிடம்  குறைகளை சொல்ல செல்ல வேண்டும் அப்படி இருக்கையில் இந்த காலத்தில் உங்களை ஒருவர் தேடி வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைக்கிறேன் என்று  வந்தால் அவர் மிகப் பெரிய சந்தர்ப்பவாதியாகத்தான் இருக்க வேண்டும் # ஸ்டாலின்


இந்தியாவில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான கைமாறுதான்  இலங்கை பிரச்சனையில் மோடி அரசு நடுநிலமை வகிக்க காரணம்இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இலங்கை பிரச்சனைதான் முதலீடு, அதனால்தான் இந்தியாவில் அன்னிய முதலீடு வேண்டி இலங்கை பிரச்சனையை பலி கொடுத்தார் மோடி. அதைத்தான் இலங்கை பிரச்சனையில் மோடி அரசு நடுநிலமை என்று ஊடகங்கள் திரிக்கின்றன


செய்தி :நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழிக்கப்படும் என கூறி வருகிறார்.
ஓ.....இவர் திமுகவை ஒழிக்கப்  போறேன் என்று மறைமுகமாக சொல்லுகிறாறோ?

ஸ்டாலின் நடைபயணம் வெற்றிப்பயணமா அல்லது வெட்டிப் பயணமா? தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

  1. மன்னிப்பாம் மன்னிப்பு... மக்களெல்லாம் செம்மறி ஆடுகள் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... இவர்கள் நடக்கும் விதம் சிரிப்பாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. mmmm... அடுத்த தேர்தலுக்கான நாடகங்கள் தொடங்கி விட்டன........

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog