Friday, September 4, 2015



புதுக்கோட்டை பதிவர் விழா மேலும் சிறக்க இப்படி செய்யலாமே?


பதிவர் விழா என்றாலே விழா அன்று காலையில் இருந்து மதிய உணவு வரை ஒவ்வொருவராக மேடை ஏறி தங்களை அறிமுகம் செய்து கொள்வதும் அதன் பின் மதிய உணவு அருந்துவதும் அதன் பின் நூல் வெளியிடு குறுந்தகடு வெளியிடு அதன் பின் பொன்னாடை போர்த்துவது ஞாபக விருதுகள் வழங்குவது என்றே போய் கொண்டிருக்கிறது. இதை சற்று மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று யோசித்தேன் அதன் விளைவாக என் மனதில் தோன்றிய விஷயங்களை இங்கு பதிகிறேன்.... இதில் உங்கள் மனதிற்கு ஏதாவது நல்லதாக பட்டால் செயல்படுத்துங்கள் இல்லை என்றால் உங்கள் விருப்பபடி செய்யுங்கள் இது எனது ஆலோசனைகள்தான்.

1. விழாவிற்கு வருகை தரும் பதிவர்கள் தங்கள் பெயர் தங்கள் தளமுகவரி போன் நம்பர் உள்ளடங்கிய தகவல்களை விஸிட்டிங்க கார்டு போல பேப்பரில் பிரிண்ட் செய்து எடுத்துவாருங்கள் இதை உங்கள் வீட்டில் உள்ள பிரிண்டரிலே எளிதாக செய்து கொள்ளலாம். இதை நீங்கள் சந்திக்கும் பேசும் பதிவர்களிடம் விருப்பபடுவர்களிடம் பறிமாறிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் விழா முடிந்த பின்ன்னும் நீங்கள் விருப்பபட்ட பதிவாளர்களை எளிதாக தொடர்பு கொள்ளலாம்

2. எல்லோருக்கும் அறிமுகமான பதிவர்கள் தங்கள் பெயரையும் தளத்தின் பெயரை சொல்லிவிட்டு அதன் பின் தன்னைப்பற்றியே  மேலும் பேசாமல் தாங்கள் சமிபத்தில் படித்த  புதுமுகப் பதிவர்களின்  அருமையான பதிவகளை பற்றி  சொல்லி அவர்களை அறிமுகப்படுத்தலாம்.

3.மிகவும் அறிமுகமான பிரபலபதிவர்கள் தங்களின் நட்பு கூட்டதினர்களிடையே மட்டும் குருப்பாக சேர்ந்து கும்மி அடிக்காமல் புதியவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி அவர்களை உற்சாகமூட்டி பதிவுகளைப் பற்றி வலைதளங்களைப் பற்றி பேசலாம்.( உதாரணமாக பாலகணேஷ் விழாவிற்கு வந்தால் சீனு அரசன் ஸ்கூல்பையன் ஆவி போன்றவர்கள் தாங்கள் ஒரேகுருப்பாக சேர்ந்து அரட்டை அடிக்காமல் புதுமுகங்களை தேடி சென்று பேசலாம்)

4. அது போல பெண்பதிவர்கள் ஒரு ஒரமாக உட்கார்ந்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் மட்டும் பேசி அமைதியாக இருக்க வேண்டாம் உரிமையாக மற்ற ஆண் பெண்பதிவர்களிடம் சங்கோஜம் இல்லாமல் பேசலாம். இங்கே வருபவர்கள் வலைபதிவர் குடும்பமாகவே இருக்க வேண்டும்.

5. முத்துநிலவன் தலைமையில் பதிவர்களை கொண்டு பட்டிமன்றம் நடத்தலாம்.

6.பதிவர்கள் தாங்கள் வெளியிட்ட புத்தகங்களின் ஒரு காப்பியை புதுக்கோட்டையில் உள்ள பொது நூலகத்திற்கோ அல்லது பள்ளியின் நூலகத்திற்கோ அன்பளிப்பாக வழங்கலாம்

7.பதிவர்கள் விழா காலையில் இருந்து 4 மணிவரையிலும் நடத்தி இறுதியில் குறைந்தது 2 மணிநேரம் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்து வலையுலகம் பற்றி மக்களுக்கு மிக அறிமுகமான நபர்களை வைத்து பேச சொல்லாம். இதன் மூலம் பொதுமக்களும் வலையுலகம் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படும். இல்லையென்றால் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவது போலத்தான் இருக்கும்( இதை இந்த விழாவில் நடைமுறைப்படுத்துவது கடினம் நேரக் குறைபாடுகள் இருப்பதால் அதனால் வருங்கால விழாவில் செயல்படுத்த முயற்சி செய்யலாம்

8. ஒரு தலைப்பை கொடுத்துவிட்டு ஒரு மணிநேரத்திற்குள் அருமையான கவிதை எழுதுபவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கலாம்.  அது போல கதை, நகைசுவை துணுக்குள் எழுத சொல்லி போட்டிகள் வைக்கலாம்.


9. விழாவிற்கு வருபவர்கள் ஆளுக்கொரு சிறு பரிசுகளை கொண்டு வந்து வைத்து விட்டு (மூடிய கிப்ட்கவரில்தான்) அதன் பின் அந்த பரிசுகுவியலில் இருந்து ஒரு பரிசை எடுத்துக் கொள்ளும்படி செய்யலாம்.

10. பதிவர்கையேடு நல்ல முயற்சி. ஆனால் அப்படி தொகுப்பதை புத்தகமாக அச்சடித்து அதை பதிவர்களிடையே வழங்குவதால் என்ன நன்மை.. அதற்கு பதில் அப்படி அச்சடிக்கும் புத்தகங்களை தமிழ்கத்தில் உள்ள அனைத்து பொது நூலகங்களுக்கு அன்பளிப்பாக தந்தாலாவது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதை மின்னூலாக  வெளியிட்டு அதற்கான லிங்கை பதிவர்களுக்கு அனுப்பலாம்.

11. நீச்சல்காரன் என்பவர் அனைத்து பதிவர்களின் விபரங்களை தொகுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்ல இணையத்தில் தமிழ் வளர பல முயற்சிகள் செய்து வருகிறார். அது போல ஞானலாயாத்தில் தனிப்பட்ட ஒருவரின் முயற்சியால் தனியார் நூலகம் ஒன்றை நடத்தி தமிழில் வரும் அனைத்து புத்தக்ங்களையும் பாதுகாத்து வருகிறார். அவரைப் போல உள்ளவர்களை கூப்பிட்டு கெளரவிக்கலாம்

12.முக்கியமாக விழா நடத்துவதற்கு பணம் முக்கியம் அதற்கு பிரபல துணிக்கடைகள் அல்லது நிறுவனங்களை அணுகி விழாபற்றி எடுத்து சொல்லி அதற்கு ஸ்பான்சர் கேட்கலாம்... அதற்கு கைமாறாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை நமது பதிவர்கள்  அனைவரும் தங்களது தளங்களில் குறைந்தது 15 நாட்கள் இருக்கும்படி செய்யலாம். இதன் மூலம் அந்த நிறுவனங்களின் விளம்பரம் உலகமெங்கும் சென்று அடையும் இதை விட ஒரு நிறுவனத்திற்கு மிகப் பெரிய வீளம்பரம் இணையத்தில் கிடைக்க  போவதில்லை. காரணம் ஒவ்வொரு வலைத்தளத்தினர் எழுதும் பதிவுகள் குறைந்த பட்சம் 500 லிருந்து 3000 வரை தினசரி பலரை சென்று அடைகிறது ஒருவரின் பதிவுகளே இவ்வளவு பேரை சென்று அடையும் போது நாம் எத்தனை பதிவர்கள் இங்கு இருக்கிறோம் யோசித்துதான் பாருங்களேன்

 மதுரைத்தமிழன் இப்படி ஒரு மாறுவேஷத்தில் உங்களை அந்த விழாவில் சந்திகலாம் வேறு பதிவர் பெயரில்

இன்னும் இது போல பலவிஷயங்களை சொல்லி செல்லாம் பதிவின் நீளம் கருதி இதை இதோடு முடித்து கொள்கிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

25 comments:

  1. அனைவரும் பிரிண்ட் செய்து வருவார்களா என்பது சந்தேகம் தான்... நம்ம பகவான் ஜியிடம் விஸிட்டிங் கார்டு உண்டு..!

    ஞானலாயா, நீச்சல்காரன், மின்னூல் என நல்ல யோசனைகள் பல... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்பதால் உங்கள் சார்பாக நான் யோசித்து வெளியிட்டேன். ப்ரிண்ட் செய்ய முடியாதவர்கள் சிறு துண்டு பேப்பரில் அழகாக எழுதி பகிரலாம்

      Delete
  2. அருமையான யோசனைகள். விழாக்குழுவினர் இது குறித்து தக்க முடிவு எடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. விழாக்குழுவினருக்கு நேரம் கண்டிப்பாக இருந்தால் அவர்கள் நிச்சயம் செய்வார்கள் .விழா நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல....நம்மால் எளிதில் ஆலோசனை சொல்லிவிடலாம் ஆனால் அதனை செயல்படுத்துபவர்களுக்குதான் அது எவ்வளவு கஷ்டமென்று தெரியும்

      Delete
  3. நான் வலைத்தளத்திற்கு புதியவன்தான்!! இன்னும் பதிவர் சந்தீப்பை பார்க்கவில்லை!! இருப்பினும் தாங்கள் சொன்னதில் 2.3வது ஐடியாக்களை அனைவரும் பயன்படுத்தினால்? என்னை போல பலருக்கு பயனாக இருக்கும்???

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் புதியவர் என்பதால் நேரம் கிடைத்தால் கண்டிப்பாக செல்லுங்கள் நல்ல அனுபவம் கிட்டும்

      Delete
  4. அனைத்துமே அருமையான யோசனைகள்தான் நண்பரே
    தம +1

    ReplyDelete
  5. நான் சென்னை பதிவர் சந்திப்பின் போது விசிட்டிங் கார்டுடன் பதிவர்களை சந்தித்தேன் ,அதை பல பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் நம்ம DDயை போலவே:)

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஸ்மார்டான ஆளுதான் அதனால்தான் விசிட்டிங்க் கார்டுடன் சந்தித்தீர்கள் குட்

      Delete
  6. Replies
    1. மாப்பிள்ளை நன்றி உங்களுக்கும் உங்கள் ஊர்காரர்களுக்கும்தான் சொல்லவேண்டும்

      Delete
  7. உண்மையாவே யோசனைகளை ஒவ்வொன்னு சூப்பர் சகா!! இவ்ளோ ஆர்வமான கருத்துச்சொல்லி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் சகா:)

    ReplyDelete
    Replies
    1. சகோ இந்த ஆலோசனைகள் எல்லாம் பிறந்த வீட்டு சீர் ஹீஹீ

      Delete
  8. அடடா ஐடியா என்னமா சொல்றீங்க பா ஒருசிலவற்றை என்றாலும் நடைமுறைப் படுத்தினால் நல்லதே

    நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. புதுக்கோட்டை பதிவர்கள் எள் என்றால் எண்ணெய்யாக இருப்பவர்கள் நம்ம ஆலோசனை சொல்லாமலே கலக்குகிறார்கள்

      Delete
  9. அட! இப்பதான் முத்துநிலவன் ஐயா தளத்தில் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருக்கும் வலைப்பதிவர் போட்டியை விட அங்கு இன்ஸ்டண்டாக தலைப்புக் கொடுத்து மரபுக்கவிதைகள், ஹைக்கூக்கள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் அதுவும் சிறிய கட்டுரைகள் போட்டி வைத்து, இந்த நேரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பரிசு கொடுக்கலாம் என்று பதிவிட்டு வந்தால் நீங்களும் சொல்லி இருக்கின்றீர்கள்..சூப்பர் .....அதுவும் ஹைக்கூக்கள்ம் சென்ரியூ எல்லாம் இன்ஸ்டன்ட் அப்படியே மைக்கில் கூட சொல்லச் சொல்லி வெல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம்...

    உங்கள் முதல் யோசனையை நாங்கள் செய்யத் தொடங்கிவிட்டோம் தமிழா...கார்ட் என்றுஇல்லை பேப்பரில் தான்...அது போன்று நீங்கள் சொல்லியிருக்கும், இது வரை அறிந்திராத, புதிய பதிவர்களிடம் பேசி ஊக்குவிப்பது பற்றியும், பதிவர்களிடம் அவர்களது பதிவுகளைப் பற்றிச் சொல்லியும் பேச வேண்டும் என்று நாங்கள் இருவருமே சொல்லிக் கொண்டோம்....எங்களைப் பொருத்தவரை இது நிறைய பேரை, திறமையானவர்களை, நட்புகளைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு மாபெரும் சந்திப்பு...

    ஞானலயா, நீச்சல்காரன் அருமை...சென்று பார்க்கின்றோம் தமிழா....

    எங்களுக்கு மற்றொன்றும் தோன்றியது....எல்லோருமே பள்ளி, கல்லூரி காலங்களில்தான் தங்கள் திறமையை மேடையில் அரங்கேற்றி இருப்பார்கள். அதன் பின் "நில்" ஆகியிருக்கலாம் இல்லை குறைந்திருக்கலாம். அதனால் பதிவர்களில் தனித்திறமை வாய்ந்தவர்கள் இருந்தால்..உதாரணமாக பாட்டு, மோனோ ஆக்டிங்க் போன்ற இன்னும் சில... அவர்கள் மேடையில் தங்கள் திறமைகளையும் காட்டலாம். அது மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்...ஆனால் நேரப்பிரச்சனைகள் உண்டு ...அடுத்த நிகழ்விலாவது யோசிக்கலாம்....

    தங்கள் யோசனைகள் அனைத்துமே அக்மார்க்! மிக்க நன்றி !!!

    ReplyDelete
  10. தமிழ் மென்பொருள் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நீச்சல்காரனை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் அவர் ப்ளாக்கிங்கில் அபார ஞானம் உடையவர் என தெரிகிறது.

    ReplyDelete
  11. நல்ல பல ஆலோசனைகளுக்கு நன்றி. (இதில் பட்டிமன்றம் மட்டும் வேண்டாம் என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன்) மற்றவை பற்றி விழா வலைப்பக்கத்திலேயே பதிலிட்டு மற்றவர் கருத்துகளையும் கேட்டுச் செயல் படுவோம் (ஜனநாயகம் முக்கியம் தலைவா!) முக்கியமாக தங்களின் ஈடுபாடுமிக்க தனிப்பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழரே! வருக வருக.. என் தளத்திலும் விழா வலைத்தளத்திலும் தங்கள் கருத்துகளின் மீதான எங்கள் கருத்தை எழுதியிருக்கிறேன். பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2015/09/blog-post_8.html

      Delete
  12. ஒவ்வொரு யோசனையும் சிறப்பாக இருக்கிறது! விசிட்டிங் கார்டு யோசனை, இன்ஸ்டண்ட் போட்டி, நீச்சல்காரன் பதிவருக்கு பாராட்டு, கையேடு பற்றியது போன்றவை டாப் கிளாஸ் யோசனைகள்! சில யோசனைகளை பின்பற்றுவதில் சிரமம் இருக்கும். சிலவற்றை பின்பற்றலாம். விழாக்குழுவினர்கள் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்! நன்றி!

    ReplyDelete
  13. அருமையான யோசனைகள்... இதில் சிலவற்றையாவது இந்த விழாவில் செய்யலாம்... முத்துநிலவன் ஐயா மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கட்டும்....

    ReplyDelete
  14. நல்ல ஆலோசனைகள்
    பதிவு செய்துவிட்டேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  15. மூன்றாவதும் பன்னிரெண்டாவதும் அருமையான யோசனைகளை....

    பை த பை நாங்கள் பிரபல பதிவர்கள் அல்லர்... :)

    ReplyDelete
  16. அனைத்தும் அருமையான யோசனைகள் இருந்தாலும் 12 வது பின்பற்றத்தக்கது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.