உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 28, 2015

இணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள் (நகைச்சுவை)


avargal unmaigal
இணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள்,


திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வீட்டில் சிபிஐ ரெய்டு பண்ணிய போது 2 கிலோ  வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு வெங்காயம் கொண்டுவருகிறார்கள் என்பதை கஸ்டம்ஸில் டிக்ளேர் பண்ண வேண்டும்..

சிங்கபூரில் இருந்து ஒரு கிலோ வெங்காயத்தை கடத்தி வந்த நபரை தமிழக கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவருக்கும் தமிழக அரசியல் கட்சியை சார்ந்த தலைவருக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆந்திராவில் இருந்து வெங்காயம் கடத்தி வர சென்ற 20 தமிழர்கள் சுட்டுக் கொலை.

மாமனார் வீட்டில் இருந்து வெங்காயம் வாங்கி வர சொல்லி மனைவியை துன்புறுத்தியவர் கைது

avargal unmaigal

திநகரில் மிகப் பெரிய கல்யாண் வெங்காய கடை  திறப்புவிழா நடிகர் பிரபு ஐஸ்வர்யா அமிதாப்பச்சன் போன்றவர்கள் கலந்து கொள்கிறார்கள்

 தேர்தலில் வெற்றி பெற  அதிமுக கட்சி  ஒரு வோட்டிற்கு ஒரு பெரிய வெங்காயமும் திமுக கட்சி சிறிய வெங்காயத்தையும் கொடுத்தது

வெங்காயத்தை உரிக்கும் போதுதான் கண்ணீர் வரும்  ஆனால் இப்போது அதன் விலையை கேட்டாலே கண்ணிர் வருகிறது

ஒரு கிலோ வெங்காயம் வாங்குபவர்கள் கண்டிப்பாக Pan கார்டை காண்பிக்க வேண்டும்

avargal unmaigal


திருப்பதி உண்டியலில் ஒரு கிலோ வெங்காயம் போட்ட  அதிசய மனிதர்


வெங்காயத்தை நறுக்கினால் மட்டுமல்ல
      விலையை கேட்டாலும் அழுகைவருகிறது. ஆனால்
                                   இதை படிச்ச பின்னால் உங்களுக்கு அழுகை வந்துச்சா அல்லது சிரிப்பு வந்துச்சா என்று சொல்லி செல்லுங்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

35 comments :

 1. வணக்கம் நண்பரே!! தங்கள் தளத்திற்கு புதியவன்! வெங்காய பதிவு வாய்விட்டு சிரித்தேன்!! அழகு அருமை!! அதே பிரபு அமிதாபச்சன் தான் வெங்காயம் வாங்க ""புரட்சி போராட்டம் ""பண்ணுகிறார்கள் என்பதையும் விட்டுவிட்டிர்களே நன்றி!!

  அன்புடன் கருர்பூபகீதன்!!!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி சொன்னதற்கு நன்றி

   Delete
 2. ஹா...ஹா....ஹா...

  வெங்காயத்தைப் பற்றிப் பதிவு எழுதும் பதிவர்களை சைபர் பிரிவு கண் காணிக்கிறதாமே!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி சொன்னதற்கு நன்றி

   Delete
 3. ஹா... ஹா...
  வெங்கயாம் விண்ணைத் தொட... உங்கள் கருத்துக்கள் ரசிக்க வைத்தன...

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி சொன்னதற்கு நன்றி

   Delete
 4. வெங்காயக்கடை திறப்பு விழா...அருமை.

  ReplyDelete
  Replies
  1. அந்த கடைக்கு போனா மறக்காம pan கார்டு எடுத்துகிட்டு போங்க

   Delete
 5. இலவச வெங்காய திட்டம் ஏதுமில்லையா ?

  ReplyDelete
  Replies

  1. வெங்காயம்தானே எவ்வளௌ வேண்டும் என்று சொல்லுங்க இமெயிலி அனுப்பி வைக்கிறேன்

   Delete
 6. வணக்கம்,
  வெங்காயத்தையும் விட்டுவைக்கலையா????

  ReplyDelete
  Replies
  1. என்னங்க வெங்காயவிலை ஏறியதும் அதுக்கு வணக்கம் எல்லாம் சொல்லுறீங்க

   Delete
  2. வணக்கம் உங்களுக்கு இல்லை என்று சரியாக புரிந்துக்கொண்டீர்களே,,,,,,,

   Delete
 7. சீதனத்தில் வெங்காயம் சேர்த்தது சிறப்பு... சிரிப்பு.

  ReplyDelete
  Replies
  1. வெயிட் பண்ணுங்க உங்க 60 ஆம் கல்யாணத்திற்கு உங்களுக்கு சீதனமாக தர ஏற்பாடு செய்கிறேண் சந்தோஷம்தானே

   Delete
 8. தங்களின் இந்த பதிவு உலகின் சிறந்த பதிவாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசாக ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படுகிறது  ReplyDelete
  Replies
  1. பரிசு வெங்காயம் பரிசு இன்னும் வந்து சேரவில்லையே யாரோ ஒரு வெங்காயம் அந்த வெங்காயத்தை அமுக்கிவிட்டதாம்

   Delete
 9. ஹஹாஹ்ஹ....இப்போது கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண்வீட்டாரிடம் வரதட்சணையாக அவர்கள் வீட்டிற்கு ஒருமாதத்திற்கான வெங்காயம் வாங்கித்தரும்படி டிமான்ட் செய்வதாகத் தகவல். மட்டுமல்ல கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுச் சாப்பாடு செலவு கூட பெண்வீட்டார்தான் ஏற்க வேண்டுமாம்...பெண் வீட்டாரோ பாதி பாதி செலவு சாப்பாட்டுச் செலவை ஏற்காவிட்டாலும் இந்த வெங்காயம் மட்டுமாவது ஏற்கவேண்டும் என்று சொல்ல சம்பந்தி சண்டையாம்...

  ReplyDelete
  Replies
  1. அதற்கு பெயர் சமப்ந்தி சண்டை இல்லை வெங்காய சண்டை

   Delete
 10. வெங்காய விலை இப்படி ஏறினால், வரப் போகும் தேர்தலில் கட்சிகளிடம் மக்கள் எந்தப் பொருளும் இலவசம் வேண்டாம்,ரூபாயும் வேண்டாம் வெங்காயம் தான் இலவசமாக வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்...கட்சிகள் எல்லாம் திணறாலாமே...அதனால் பெரிய தலைகள் எல்லாம் எப்படி வெங்காய விலையைக் குறைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அதனால் தான் எந்தத் தலைவரும் வாயைத் திறக்கவில்லையாம்...

  ReplyDelete
  Replies
  1. இனிமே வோட்டிற்கு பிரியாணியும் குவாட்டரும் கொடுப்பதற்கு பதில் ஆளுக்கு ஒரு ஆனியன் தோசை தர ஆளுங்கட்சி திட்டம் போட்டு இருக்கிறதாம்

   Delete
 11. கட்சித் தலைவர்கள் வாயைத் திறந்தால் மதுரைத் தமிழனின் வாயில் விழ வேண்டுமே என்று அவரைச் சரிக்கட்ட வெங்காயம் கொடுக்கலாமா என்று யோசிக்கின்றார்களாம். மதுரைத் தமிழன் விடுவாரா? எனக்குத் தர வேண்டாம், என் அன்பான தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுங்கள், இல்லை என்றால் என் வலை அன்பர்களுக்காவது கொடுங்கள் என்று சொல்லிவிட்டாராமே! தலைவர்கள் ஷாக் ஆகி.....வாய் பொளந்து மூடலையாம்....மீண்டும் மௌனம்....

  ReplyDelete
  Replies
  1. வாய் பொளந்தவர்கள் முடலைன்ன அதற்கு வேறு அர்த்தமாச்சே

   Delete
 12. ஹாஹாஹா! ரசித்து சிரித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி

   Delete
 13. Replies
  1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி

   Delete
 14. வெங்காயத்தை நினைச்சு கண்ணீர் வடித்த வேளையில நீங்க வெங்காயத்த வைச்சு எழுதியந்து துன்பம் வரும் வேளையில சிரிங்கனு ஆயிடுச்சு..!!!!!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு கண்ணிர் வந்தால் என் மனசு பொறுக்கல அதனாலதான் இந்த பதிவு

   Delete
 15. ஏற்கனவே இப்படி ஒருமுறை வெங்காய விலை கன்னாபின்னாவென்று ஏறியதால் தான் B.J.P ஆட்சி காணாமல் போனது இல்லையா சகா! உங்கள் வெங்காய ட்விட் எல்லாம் ஆட்சியின் மேல் வீசிய வெங்காய வெடிகள். செம!

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே அந்த கட்சிகாரர்கள் ரொம்ப காண்டாக இருக்கிறார்கள் அதுல வேற நீங்க வெடி அது இதுன்னு சொல்லுறீங்க .அப்புறம் நான் இந்தியா வந்தால் கைது செய்துவிடப் போகிறார்கள்

   Delete
 16. Replies
  1. படித்து ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி

   Delete
 17. நிறைய, முன்னாலேயே படித்த நினைவு வந்தது. இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருதடவை, வெங்காயம் வரலாறு காணாத விலை ஏற்றத்தைச் சந்திப்பதால், நகைச்சுவை எழுத்தாளர்கள் மட்டும்தான் சிரிக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies

  1. வெங்காய விலையேற்றத்தால் சிரிப்பவர்களை இப்படி நகைச்சுவை சொல்லுவதன் மூலம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறோம்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog