Saturday, August 8, 2015



மோடி ஜெயலலிதா உறவு கள்ள உறவு என்றால் சோனியா கலைஞர் உறவு?

அரசாங்க ரீதியாகவோ அல்லது அரசியல்காரணமாகவோ தலைவர்கள் சந்தித்து கொள்வது இயல்பே. அப்படிதான் மோடி ஜெயலலிதா சந்திப்பும் நடை பெற்றது. அந்த சந்திப்பு எதற்காக நடந்தது யாரை காப்பாற்ற யார் உதவுகிறார்கள் என்று அது பற்றி பேசலாமே தவிர அந்த சந்திப்பை கொச்சைப்படுத்தி கள்ள உறவு என்று அதுவும் கட்சி தலைவர்கள் பேசுவது மிகவும் கேடு. இதலிருந்தே அந்த தலைவர் என்ன கேவலமான மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.


இதே போலத்தானே சோனியாவு கலைஞரும் பல முறை சந்தித்து கொண்டனர். அந்த சந்திப்பு இது போல  கள்ளள உறவா என்ன?


ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது ரோஜா பூக்களை பரிசு அளிக்கும் போது அது வெள்ளையாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இருந்தால் அது நட்பிற்காக கொடுக்கப்படுவது அதே நேரத்தில் பிங்க் கலரிலோ அல்லது சிவப்பு கலரிலோ கொடுத்தால் அது காதலால் கொடுக்கப்படுவது.

இங்குள்ள போட்டோவை இளங்கோவன் பார்த்துவிட்டு இப்போது யார் என்ன அர்த்ததில் கொடுக்கிறார் என்பதை விளக்குவாரா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. தலைப்பைப் பார்த்து மிரண்டு போயிட்டேன்?

    ReplyDelete
  2. நல்லா கேட்டீங்க! பெருசுங்க இப்படி உளருவதே பேஷனா ஆகிப்போச்சு!

    ReplyDelete
  3. வில்லங்கமான தலைப்பு. ஆனாலும் விபரமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.

    சரியாக கொளுத்தியும் போட்டிருக்கிறீர்கள்.

    God Bless You

    ReplyDelete
  4. சம்மந்த பட்டவர்களெல்லாம் இளமையை உஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
    யாரோ பழைய நினைப்பில் சொல்லி விட்டார்கள்.
    பூங்கொத்து " கலர் கோடு " பற்றியெல்லாம் எழுதிடீங்க, என்னவாகுமோ

    ReplyDelete
  5. வணக்கம்,
    ஆஹா பூ வின் நிறத்தில் இப்படி ஒன்று இருக்கா?
    நன்றி.

    ReplyDelete
  6. சரியான கேள்வி... இவர்கள் எல்லாம் அரசியல் நாகரீகமற்றவர்கள்...
    குஷ்புவில் அன்னை இந்திராவைக் காண்கிறேன் என்று ஜொள்ளியவர்தானே அந்த புனிதர்...

    ReplyDelete
  7. பூக்களின் வண்ணத்தை எழுதி, அரசியல்வியாதிகளின் வண்ணத்தைக் காண்பித்துவிட்டீர்களே.

    நம் அரசியல்வியாதிகள் நரகல் நடையில்தான் பேசப் பயின்றவர்கள் (அண்ணா காலத்திலிருந்து). எனக்குத் தெரிந்து இதற்கு விதிவிலக்கு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.