Tuesday, August 18, 2015



கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)
( சொல்வதை உணர்ந்து சொல் அதை துணிந்து சொல்)

மதுரைத்தமிழா இளங்கோவன் உருவ பொம்மையை எரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது  என்று கருணாநிதி சொன்னது பற்றி கருத்து சொல்லுங்களேன்?
அவரை உயிரோட எரித்து கொன்று இருக்க வேண்டும் என்று மறைமுக சொல்லுகிறாரோ என்னவோ... பொடி வைச்சு பேசுவதில் வல்லவராச்சே


சுதந்திர தினவிழாவில் கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே வந்து துணிச்சலாக பேசிய  பிரதமர் மோடி என்பது பற்றி?

இந்திய ராணுவத்தின் முப்படையும் மிக அதிக அளவில் காவல் படையையும் பங்கேற்ற கூட்டத்தில் மோடி கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே வந்து துணிச்சலாக பேசி அவரது ஆண்மையை நிலை நாட்டியதை கண்டு புல்லரித்து போய்விட்டேன்,

ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில், பாக்., ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது..இதனால். அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, பாக்., துாதரை நேற்று நேரில் அழைத்து, கண்டனம் தெரிவித்தது.  பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தற்கு பாகிஸ்தான் தூதர் என்ன விளக்கம் அளித்திருப்பார்?

இதற்கு பாக்தூதர் தந்த விளக்கம் இதுதான். எங்களின் நோக்கம் இந்தியாவைதாக்குவது அல்ல.எல்லைப் பகுதியில் நாங்கள் புதிய ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்து வருகிறோம் அதனால் இது போன்ற அசம்பாவிதம் நடை பெறுவது சகஜம் .இதை கேட்ட மோடி அரசு சமாதனாம் அடைந்தது

மோடியின் வேண்டு கோளை ஏற்று துபாயில் கோயில் கட்ட அனுமதி தந்தது பற்றி?

துபாய்ல கோயில் கட்டப் போறாங்களாம்  கோயில் கட்டட்டும் ஆனால் அந்த கோயிலிக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி உண்டா என்பதை முதலிலே சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் வெளிநாட்டிலும் வெட்டு குத்து என்று நம் மானம் கப்பல் ஏறிடும்..


avargal unmaigal

சாதிக் கலவரம் பற்றி மிகப்பெரிய கட்சியின் தலைவர்கள் வாயை திறக்காது பற்றி என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?

மத்திய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்காதற்கு காரணம் எந்த சாதி வோட்டுக்கள் அதிகம் அல்லது குறைவு என்று தெரியாததால்தான் அதனால்தான்  மக்கள் கணக்கெடுப்பில்  எந்தெந்த  சாதியினர் எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கை வெளியிட வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர்

மோடி பாராளுமன்றத்தில் பேசப் பயப்படுவது ஏன் ?
இந்திய பாராளுமன்றம்  தீவிரவாதிகளின் இருப்பிடம் என்று யாராவது அவர்களிடம் சொல்லி இருப்பார்கள்

மனுஷபுத்திரனுக்கு கலைஞர் விருது கிடைத்தது பற்றி?
மனுஷபுத்திரன் தனது அருமையான எழுத்துதிறமையை விபசாரத்திற்கு உட்படுத்தி சம்பாதித்து இருக்கிறார்


கலைஞர் விருது பற்றி?

பெருமைக்குரிய விருது கலைஞர் விருது என்று நினைத்து இருந்தேன். அதை மனுஷ புத்திரனுக்கு தரும் போதுதான் தெரிந்து கொண்டேன் அது கேலவலமானவர்களுக்கு கொடுக்கப்படும் விருது என்று...


தமிழர்கள் பற்றி 2 வரிகள் சொல்லுங்களேன்?
தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் அதனால்தான் தங்கள் உணர்வுகளையும் தங்களது அடிப்படை தேவைகளயும் சிறிதும் சட்டைப் பண்ணாத தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லாம் செய்து தருவார்கள் என்று நினைத்து கொண்டிருப்பார்கள்

இந்திய பாராளுமன்றத்தில் நடப்பது என்ன?

மக்கள் பிரச்சனைகளை பேச அல்ல கட்சிகள் செய்த ஊழல்பட்டியலை அறிவிக்கவே இந்தியாவில் பாராளும் மன்றம் செயல்படுகிறது

மோடி வெளிநாடு செல்வது எதற்க்காக?
உலக  தலைவர்களுக்கு செல்பி கற்றுக் கொடுக்கும் ஒரே தலைவர் நம்ம மோடிஜிதான் அதனால்தான் அவர் அடிக்கடி வெளிநாடு செல்லுகிறார் மோடி வெளிநாட்டு பயணம் மேற் கொள்ளுவது முதலீட்டை திரட்ட அல்ல செல்பி எடுப்பது எப்படி என்று வெளிநாட்டின் தலைவர்களுக்கு கற்றுக் கொடுக்கத்தான்

இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு காவல்துறை டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்து உள்ள ஹெச் ராசா பற்றி ?
ஹெச் ராசா செய்த உருப்படியான காரியம் இதுதான்


கல்பனா சாவ்லா விருது & கலைஞர் விருது இதில் எது உயர்ந்தது?

லாரி ஓட்டுநரான ஈரோடு ஜோதிமணிக்கு கல்பனா சாவ்லா விருது கொடுத்து கௌரவித்துள்ளார் ஜெயலலிதா
கலைஞரின் புகழ் பாடிய மனுஷபுத்திரனுக்கு கலைஞர் விருது கொடுத்து கெளரவிக்கிறார் கலைஞர். இப்ப சொல்லுங்க இதில் எது உயர்ந்தது என்று....


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. அப்பப்பா!!! சாட்டையடி!! சரவெடி!!!!

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதிகளின் பேச்சு நமக்கு பட்டாசு மாதிரி. நம்ம வேலை அதை பத்த வைப்பது மட்டுமே நாம் செய்வது ஹீஹீ

      Delete
  2. அவர்கள் பொடிவைத்துப் பேசியதை
    இப்படி வெடிவைத்தா தகர்த்தெறிவது /
    மிகவும் இரசித்தோம்
    தொடர்ந்தால் மகிழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்து தொடர்வதற்கு மிகவும் நன்றி

      Delete
  3. பட பட பட்டாசு ரகமல்ல! அனைத்தும் அணுகுண்டு! தைரியமாக எல்லோரையும் சாடுகின்றீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நடுநிலைமை என்பதால்தான் இப்படி எல்லோரையும் கலாய்க்க முடிகிறது

      Delete
  4. அருமையான பொடி! நண்பரே!

    ReplyDelete
  5. சரவெடி. இதையே நாளிதழ்களில் வெளியிட்டால், செய்திகளைப் படிப்பதனால் வரும் மன அழுத்தம் குறையும்.

    ReplyDelete
  6. நெத்தியடி...அருமை அய்யா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.