உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 21, 2015

விஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்விஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்

இளம் வாலிபரான கார்த்திக் என்பவர் தன் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் அமெரிக்காவில் வேலை கிடைத்தால், மனைவியை அம்மாவின் துணைக்காக விட்டுவிட்டு வந்து கடந்த எட்டுமாதமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த கார்த்திக் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருக்கையில் தனது இளம் மனைவியுடன் செல் போனில் பேசி கொண்டு, அவருக்கு பிறந்த குழந்தையைப்பற்றி விசாரித்து கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தங்களால் முடிந்த சிகிச்சைகளை அளித்துவிட்டனர் என்றும் இதற்கு மேல் தங்களால் செய்ய ஏதும் இல்லை என்றும், கடவுள் மனது வைத்தால்தான் பிழைக்க முடியும் என்று சொல்லி சென்றுவிட்டனர்.


அதை கேட்ட நண்பர்கள் அனைவரும் உடனே கடவுளே கார்த்திக்கை காப்பாற்று! கார்த்தி கண்ணை திறந்து பாரடா! என்றும் கதற ஆரம்பித்துவிட்டனர். அந்த நண்பர் கூட்டத்தில் மதுரைத்தமிழனாகியா நானும் நின்று கொண்டிருந்தேன்.

அப்போது என் மனதில் ஒரு ஐடியா உதித்தது. அதனால் உடனே மருத்துவ சிகிச்சை அளித்த தலைமை டாக்டரை உடனடியாக சந்தித்து என் மனதில் தோன்றியதை சொல்லி இப்படி செய்தால் கார்த்திக் உயிர் பிழைக்க வாய்ப்புகள் உண்டு என சொன்னேன்.

முதலி கேலியாக பார்த்த அவர் என் கெஞ்சலுக்கு அப்புறம் சரி அதற்கு நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்றார். அவர் சொன்னதும் அவரிடம் இருந்து எழுத்து மூலமாக எழுதி வாங்கி கொண்டு உடனே ஊரில் அழுது கொண்டிருந்த கார்த்திக் மனைவியிடம் சொல்லி அவரை அவரின் குழந்தையுடன் ஒரு ஸ்பெஷல் விமானத்தில் வர ஏற்பாடு செய்தேன்

அவர் வந்தவுடன் அவரை கார்த்திக்கிடம் அழைத்து சென்றேன் அவரது மனைவி கார்த்திக்கை பார்த்ததும்  என்னங்க நான் உங்க மனைவி வந்திருக்கிறேன் கண்னை திறந்து பாருங்களேன் என்று கதறி கதறி அழுதுதார் மேலும் நீங்க நேரில் பார்க்காத உங்க குழந்தை உங்களை பார்க்க வந்திருக்கிறான் அவனையாவது கண்ணை திறந்து பாருங்களேன் என்று சொல்லி அவனது உடல் அருகில் அந்த குழந்தையை படுக்க வைத்து கார்த்திக் கையை அந்த குழந்தையின் மீது வைத்தார்.

என்ன ஆச்சிரியம் கார்த்திக் சிறிது சிறிதாக கண்ணை திறந்து பார்க்க முயற்சித்தான். இறுதியாக அவன் முன் நின்றிருந்த மனைவியையும் குழந்தையையும் தன் கண்ணில் நீர் வழிய முழுவதுமாக திறந்து பார்த்தான். அவன் கண் விழித்தை அறிந்த டாக்டர்கள் உடனே ஓடோடி வந்து சிகிச்சையை தொடர்ந்தனர் அவர்கள் சிகிச்சை அளித்த சில நிமிடங்களில் அவன் எழுந்து உட்கார்ந்தான் அதன் பின் மேலும் சில நிமிடங்கள் கழித்து தன் குழந்தையை தூக்கி கொஞ்சியவாறு தன் மனைவியை அழைத்து வீட்டிற்கு செல்ல தயார் ஆனான்.

இதை கண்ணால் பார்த்த அந்த அமெரிக்க டாக்டர் தமிழர்களின் மருத்துவ முறையை பாராட்டி  இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று என்னைப் பார்த்து கேட்க, அதற்கு நான் தற்செயலாக  விஜய் டிவியில் வரும் தெய்வம் தந்த வீடு என்ற சீரியலை பார்க்க நேர்ந்தது என்றும். அதில் சீதாவாக வரும் பெண்ணிண் அத்தை இப்படிதான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி டாக்டர்களும் கைவிட்ட நிலையில் அவரது கணவர் மாமியார் மகள் மகன் எல்லோரும் கதறி அழுத வேலையில் பச்சை உடம்பாக இருந்த சீதா அப்போது பிறந்த குழந்தையுடன் ஹாஸ்பிடலில் வந்து மேலே சொன்னது போல கதறி அழுதாள் உடனே அவர் மாமியாரும் உடல் நலம் பெற்றார். அதை பார்த்ததால்தான் எனக்கும் அது போல நாம் ஏன் செய்து பார்க்க கூடாது என்று தோன்றியதால் உங்களிடம் சொல்லி முயற்சித்தேன் என்றேன்.

அதை கேட்ட அந்த அமெரிக்க டாக்டர் என்னை மிகவும் பாராட்டியதோடு இப்படி சமுக விழிப்புணர்வு கொண்ட சீரியல்களை வெளியிட்டு வரும் விஜய் டிவிக்கும் பாராட்டு தெரிவித்தார் அதுமட்டுமல்ல இந்த தமிழனின் சிகிச்சை முறையை அடுத்து வரும் உலக டாக்டர்கள் மாநாட்டில் எல்லா டாக்டர்களிடமும் பகிரப் போவதாக சொன்னார்.

டிஸ்கி: இந்த பதிவு உருவாக காரணம் நான் ஒரு நாள் தெய்வம் தந்த வீடு என்ற சீரியலை விஜய் டிவியில் இரண்டு நாள் முன்பாக பார்ததுதான் . அதனால் குற்றம் சொல்வதாக இருந்தால் விஜய் டிவியை கழுவி கொட்டியும் பாராட்டுவதாக  என்னை பாராட்டியும் செல்லுங்கள்

முக்கிய டிஸ்கி : இந்த பதிவை படித்துவிட்டு திட்டமலோ அல்லது பாராட்டமலோ சைலண்டாக செல்லுபவர்கள் கண்டிப்பாக எனது முந்தைய பதிவை படித்துவிட்டுச் செல்லுங்கள்... அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கு.....

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. வணக்கம்,
  எங்க வீட்டில் என்ன கணிணி முன் அமர்ந்து சிரிக்கிறாயா?
  அதில் படம் எதுவும் இல்லையே,,,,,,,,
  என்று என்னைக் கேட்கிறார்கள்.
  நன்றி.

  ReplyDelete
 2. அடுத்து தமிழ் சினிமாவில் அருவாளைத் தூக்குகிறார்கள் என்று அதைக் காப்பி செய்து ...ம் ........பலிகடா யாரோ?

  ReplyDelete
 3. ஹாஹாஹா! செம கலாய்ப்பு! தொடருங்கள்!

  ReplyDelete
 4. அருமையான கற்பனை வளம் அமெரிக்கா இனி விளங்கிடும்)))))

  ReplyDelete
 5. அட அட அட
  உம் சிந்தனையும் செயலும்
  அப்படியே என்னப்போலவே
  இருக்கிறதே ...?!

  இதைபாராட்டி
  உடனே வரும் வலைப்பதிவர் சந்திப்பில்
  உமக்கும் எமக்கும்
  இல்லையில்லை ந 'மக்கு'

  கெளரவ டாக்டர் பட்டம்
  வழங்கி சிறப்பிக்க உள்ளதாக
  தகவல்.

  அவசியம் வாங்க
  வரும்போது பட்டம்
  வழங்குவதை கண்டு
  கைதட்ட தேவையான ஏற்பாடுகளுடன்..... !!!
  வாங்க

  ReplyDelete
 6. ஆஹா இன்னைக்கு விஜய் டிவி மதுரை தமிழன் கிட்ட சிக்கிடிச்சா? நடக்கட்டும்

  ReplyDelete
 7. Ha ha ha ha ...Fantastic..!! Nice description about the Tv serials..!!!

  ReplyDelete
 8. கருத்து போடலாமா வேண்டாமான்னு யோசித்தேன்.. அதுக்கு அப்புறம் தான் கருநாக்கு நினைவிற்கு வந்தது.. போட்டுட்டேன்.

  ReplyDelete
 9. தமிழ் சீரியல் உங்கள் கற்பனையையும் விட்டு வைக்கவில்லையா?

  ReplyDelete
 10. பிரியமானவளே படம் கடைசி சீன் சிம்ரன் விஜய் இடையே இப்படி தான் நடக்கும் போங்கப்பா யார்கிட்ட

  ReplyDelete
 11. vijay t..v D T VEEDU bore. but more emotion, drma.

  ReplyDelete
 12. Same blood here! Only channel in Comcast, watching all the crappy serials, no other option! :(

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog