உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, August 2, 2015

பெண்களின் சந்தேகங்களுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்மதுரைத்தமிழா என் கணவரின் கன்னம் ஒடுங்கி போய் இருக்கிறது அதை அமுல் பேபி கன்னம் போல மாற்றுவது எப்படி?

பெண்ணே இதற்கு  மூன்று வழிகள் உள்ளன.
1. அவருக்கு நீ ஆரோக்கியமான உணவை சமைத்து கொடுக்க வேண்டும் அல்லது அவருக்கு சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும்
2. தினமும் பீர் வாங்கி தந்து அவரை குடிக்க செய்யவேண்டும்.
3. அவரின் இரண்டு கன்னத்திலும் நாலு அரைவிட வேண்டும். இதில் எது செளரியமாக இருக்கிறதோ அதை செய்யுங்கள்.மதுரைத்தமிழா எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது எங்களுக்கு இது வரை குழந்தைகள் இல்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

பெண்ணே கல்யாணம் ஆனால் குழந்தை பிறக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னது படித்த நீங்களே இப்படி இருக்கலாமா? குழந்தை பிறக்க வேண்டுமானால் உறவு கொள்ள வேண்டும் அது எப்படி என்று தெரியவில்லை என்றால் பேஸ்புக்கில் உங்களுக்கு ஒரு அக்கவுண்டட் ஒப்பன் பண்ணினால் பலர் உங்களின் இன்பாக்ஸில் வந்து விளக்கம் தருவார்கள்.


மதுரைத்தமிழா உங்களிடம் குழந்தை பிறப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டேன் அதற்கு நீங்கள் ஆணுறையை மாட்டி உறவு கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் அதை எப்படி மாட்டுவது என்பது தெரியாததால் அதற்கு விளக்கம் கேட்டோம் நீங்கள் உங்கள் விரலில்  காண்டம் எப்படி மாட்டுவது என்று சொல்லிக் கொடுத்தீர்கள் நீங்கள் சொல்லியபடியே உறவு கொள்ளும் போது என் கணவர் விரலில் மாட்டிஉறவு கொண்டும் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் . இது எப்படி நேர்ந்தது?

பெண்ணே  நீயும் உன் கணவரும் இவ்வளவு அப்பாவியாக இருப்பதால்தான் இது நிகழ்ந்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இது என் தப்புதான். மன்னித்து கொள்ளவும். உங்களுக்கு உபயோகப்படும் வீடியோ க்ளிப் அனுப்புகிறேன் அதை பார்த்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும்

மதுரைத்தமிழா என் குழந்தைகள் என் கணவர் சொல்லுவதை ஒரு போதும் கேட்கமாட்டேங்கிறார்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

முதலில் நீங்கள் கணவர் சொல்லுவதை காது கொடுத்து கேட்க பழகுங்கள் அதைப் பார்க்கும் உங்கள் குழந்தைகளும் மாறிவிடுவார்கள்

மதுரைத்தமிழா என் கணவர் என்னை ஏறெடுத்து பார்க்காமல் பக்கத்துவீட்டுகாரரின் மனைவியையே எப்போதும் ஏறெடுத்து பார்க்கிறார். அப்படிபட்ட அவரை என்னை மட்டும் பார்க்க செய்வது எப்படி?

பெண்ணே அது ரொம்ப எளிது நீ செய்ய வேண்டியதெல்லாம் பக்கத்துவிட்டுகாரரை திருமணம் செய்து கொள் அதன் பின் அவர் உன்னையே வைச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பார்.

மதுரைத்தமிழா எனது கணவர் எப்போதும் அவர் அம்மாவின் சமையலையே புகழ்ந்து கொண்டிருக்கிறார். எனது சமையலைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேங்கிறார் இது எனக்கு எரிச்சலை தருகிறது? நான் என்ன செய்யட்டும்?

பெண்ணே உனக்கு நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது அதிர்ஷட தேவதை உன்னை நோக்கி வருகுதுன்னு ஜக்கமா சொல்லுறா...புரியலையா உனக்கு சமைச்சு போட ஒரு சமையக்காரி இலவசமா கிடைச்சுருக்கா. அம்மா சமையலை புகழும் அவரிடம் என்னங்க உங்க அம்மாவை வீட்டோட கூட்டி வைச்சுக்கலாம் என்று சொல்லி கூப்பிட்டு வந்து சமையல்காரியாக வைச்சுக்குங்க் உங்க வேலை மிச்சம்.. உங்க வீட்டுகாரர் பாராட்டு யாருக்கு வேனும்....

மதுரைத்தமிழா சமைக்க தெரியாத எனக்கு சமைக்க கற்றுக் கொள்ள ஆசை அதற்கு நான் என்ன செய்யவேண்டும்/

சமைக்க தெரிந்த ஆணாக பார்த்து சிக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்


இதைபடித்துவிட்டு உங்களுக்கும் ஏதும் கேள்விகளோ சந்தேகமோ இருந்தால் எனக்கு மெயில் அனுப்புங்கள் உங்கள் கேள்விகளுக்கு மதுரைத்தமிழன் பதிலளிப்பார்.

மதுரைத்தமிழா உனக்கு குசும்பு அதிகமாகிவிட்டது அதனால் பூரிக்கட்டைக்கு பதிலாக உலக்கையால்தான் உன்னை அடிக்கனும் என்று சொல்லி நீங்கள் உலக்கையை வாங்கி அனுப்பித்தால் நீங்கள் செம்மரக்கட்டையை உலக்கை வடிவத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக சொல்லி உங்கள் மீது வழக்கு தொடரப்படும் ஆமாம் சொல்லிப்புட்டேன்

 
என் தளத்திற்கு நீங்கள் புதியவரானால் அல்லது ஞாபகமறதி உள்ளவர்களனால் இந்த பதிவை கண்டிப்பாக படியுங்கள்.. 
அன்புடன்
மதுரைத்தமிழன்( டி.ஜே.துரை)

11 comments :

 1. ஹஹஹ அப்ப... தமிழா... சந்தனக் கட்டையில உலக்கை செஞ்சு அனுப்பினா கேஸ் ஆகாதுல்ல..?!!!!

  ReplyDelete
  Replies
  1. சந்தன கட்டை வீரப்பன் சாகவில்லை அவர் துளசிசார் வேடத்தில் மீண்டும் வந்து இருக்கிறார் என புரளிய கிளப்பி விட்டுருவோம்ல

   Delete
 2. உலக்கை பார்சலை ஸ்டாப் பண்ணுங்கப்பா.
  இனி இந்த முறையை பின்பற்றும்படி மதுரைத்தமிழன் மனைவிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
  https://www.youtube.com/watch?v=88JA4tSCwrg

  ReplyDelete
  Replies

  1. ஆமாம் நீங்க சொன்ன முறைய நான் பார்க்கலாமா அல்லது மனைவி மட்டும்தானா?

   Delete
  2. நீங்க பார்க்கத் தடா....

   Delete
 3. முதல் கேள்விக்கு மூணாவது சாய்ஸ்......

  ReplyDelete
  Replies
  1. நீங்க முன்றாவது சாய்ஸ செலக்ட் பண்ணியதை பார்ததும் உங்க வீட்டுக்காரரை நினைச்சு என் மனசு கஷ்டப்படுது ஹும்ம்ம்ம்ம்

   Delete
 4. நீங்க ஏன் இப்படி ஒரு செக்ஸிஸ்டா இருக்கீங்க? :))) பெண்கள் மட்டும்தான் சந்தேகம் கேக்கணுமா? புரியாத/புதிரான பெண்கள் பத்தி ஆண்கள் கேள்வி கேட்டால் பதில் கிடைச்க்குமா?

  ஒரு பெண் ஒருத்தனை காதலிக்கிறாள். வழக்கம்போல காதல் கல்யாணம் நடக்காமல் யாரோ ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடுறா பெரியவா.. அதுக்கப்புறம் அந்தப் பெண் கற்பு வாழ்க்கையில் நுழைந்து கணவனே கண் கண்ட தெய்வம்னு வாழ்கிறாள். நம்ம கலாச்சாரத்தில் அதாவது காதலித்து, காதல் தோல்வி அடைந்து அரேஞிட் மேரேஜில் முடிவது காலங்காலமா நடக்குது. பெண்களுக்கு மட்டும் எப்படி பழசை எளிதாக மறந்து புது வாழக்கையைத் தொடர முடியுது.

  அதுக்கப்புறம் காதலித்த ஆண்கள் எல்லாம்

  கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள்!
  பெண்களே பெண்களே வாலிபரைக் கொஞ்சம் வாழ விடுங்கள்..

  பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே..

  னு நம்மாளு புலம்பிக்கிட்டே திரிகிறான்..

  என் சந்தேகத்தை சீரியஸாகவோ, காமெடி கலந்தோ நிவர்த்தி செய்தால், நீங்க நல்லாயிருப்பீக சாமீ!

  ReplyDelete
  Replies
  1. ஏண்ணா நீங்க இப்படி எல்லாம் என்னை கேள்வி கேட்டு வம்புல மாட்டிவிடுறேள்... இது உங்களுக்கே நன்னா இருக்காண்ணா?

   உங்க கேள்வியில் கற்புன்னு ஒரு வார்த்தை கண்ணில பட்டது முதலில் அதற்கு இந்த காலத்துல நம்ம ஊர் பெரியவா ஒரு புதிய இலக்கணம் வைச்சுருக்கான்னா அதாகப்பட்டது கல்யாணதிற்கு முன்னா நீ யாரை வேணும்னா காதலிச்சுக்கோ உறவுவைச்சுக்கோ ஆனா கல்யாணம் என்று வரும் போது நம்ம சாதிக்காரப் பையனா வசதி உள்ளவனா பார்த்து பெரியவா சொல்லுற ஆளை கட்டிக்கிட்ட நீ கற்பு உள்ளவ இல்லைன்னா நீ ஒரு ஓடுகாலி....

   புதுசு வந்தா பழசை மறந்துடுறாங்களா அப்படி எல்லாம் இல்லைங்க. புதுசு வந்தா பழச யார் உபயோகிப்பாங்க அதுனால அதை ஒரு ஒரமா வைச்சுருவாங்க

   அப்புறமா ஆண்களின் கண்கள் அவர்களையே ஏமாற்றி இருக்கணும் அதனாலதான் அவங்க அப்படி பாடி இருப்பாங்க அந்த காலத்து பெரியவா வேற கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று சொல்லி இருக்கா அதனாலதான் காதலித்த ஆண்கள் அப்படி பாடிகிட்டு இருக்கா

   Delete
 5. ம்..ம் வயிறு வலிக்கத் தான் செய்யுது .....

  ReplyDelete
  Replies
  1. ஏன் வயிறு வலிக்குது நீங்க சமைச்சதை நீங்களே சாப்பிட்டீங்களா? அதுக்குதான் சொல்லுறது இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க கூடாதுன்னு நான் சொன்னா கேட்கவா போறீங்க...

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog