உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 31, 2015

பைவ் ஸ்டார் அவார்ட் பதிவர் அறிமுகம் 2
பைவ் ஸ்டார் அவார்ட் பதிவர் அறிமுகம் 2

இந்த முறை பைவ் ஸ்டார் பதிவராக என்னால் அறிமுகப்படுத்தப்படுவர் ஜோதிஜி. இவரது வலைத்தளம் தேவியர்இல்லம் இவரது எழுத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் பைவ் ஸ்டார் என்பது நத்திங்க். இவருக்கெல்லாம் வானத்தில் இருக்கும் ஸ்டாரை எல்லாம் பறித்துதான் தரவேண்டும்.அப்படி ஒரு தெளிவான அழகான ஆழமான எழுத்தோட்டம். 

Sunday, August 30, 2015

கருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமுக கட்சியும்கருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமுக கட்சியும் 

போலியான தகவல்களை பரப்பி மோடி போல நாமும் பதவியை பிடித்துவிடலாம் என ஸ்டாலின் கனவுகள் கண்டு வருகிறார். மோடி தன் வித்தையெல்லாம் தமிழர்களிடம் காட்டியும் தமிழகத்தில் மண்ணை கவ்வியது பற்றி ஸ்டாலினுக்கு புரியவில்லை. அதனால்தான் சமீபத்தில் நடத்திய கருத்துகணிப்பு நாடகம். அந்த நாடகத்தில் தன் தந்தையைவிட தமக்கு மிக செல்வாக்கு இருக்கிறது என்று காண்பிக்க முயன்று ல் இப்போது அவர் கேலிக்குரியவராகி இருக்கிறார்.அது மட்டுமல்ல திமுகவையும் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டார்.

லயோலா கல்லூரியின் கருத்துகணிப்பும் அதன் பின் நடக்கும் திரைமறைவு நாடகமும்லயோலா கல்லூரியின் கருத்துகணிப்பும் அதன் பின் நடக்கும் திரைமறைவு நாடகமும்
 
தமிழகத்தில் மிக சிறந்த கல்லூரியான லயோலா கல்லூரி சில நாட்களுக்கு முன்பு 2016 தேர்தல் பற்றி ஒரு கருத்து கணிப்பு சர்வே நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.. ஒரு சர்வே நடத்தும் போது அதற்கான கேள்விகள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் அதன் முடிவுகளும் தவறாகவே இருக்கும் என்பதற்கு இபோது அவர்கள் வெளியிட்ட கருத்து கணிப்பே ஒரு உதாரணம் ஆகும்.


Friday, August 28, 2015

இணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள் (நகைச்சுவை)


avargal unmaigal
இணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள்,


திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வீட்டில் சிபிஐ ரெய்டு பண்ணிய போது 2 கிலோ  வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Thursday, August 27, 2015

சட்டமன்றத்தை செமையாக கலாய்த்த விஜயகாந்தும் ,வெளிநடப்பு செய்யும் ஸ்டாலினும்avargal unnaigal
சட்டமன்றத்தை செமையாக கலாய்த்த விஜயகாந்தும் வெளிநடப்பு செய்யும் ஸ்டாலினும்


இதைப் பார்த்தாவது சட்டசபையில் ஸ்டாலின் எப்படி பேச வேண்டும் என்பதை விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா?

சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா?நடிகர் சிவாஜி கணேசணுக்கு  மணிமண்டபம் கட்டப் போவதாக தமிழக அரசு அரசு  அறிவித்ததை செய்திதாளின் மூலம் அறிந்தேன். அறிந்ததும் எரிச்சல்தான் வந்தது. காரணம் நடிகன் மக்களின் பொழுபோக்கிற்காக நடித்து  அதிக அளவு சம்பாதித்ததை தவிர இந்த சமுகத்திற்காக நல்லது ஏதும் அவன் செய்துவிடவில்லை.  

ஓவர் ஆக்டிங்க் பண்ணிய சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது கொஞ்சம் ஒவராகத்தான் இருக்கிறது


Wednesday, August 26, 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்avargal unmaigal
வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்


தமிழில் வலைத்தளம் நடத்தி அதில்  தங்களது எண்ணங்களை எழுத்துகளாக்கி அதை  இணையத்தில் பதிவுகளாக பதிந்து வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படி இணையத்தில் இணைந்து செயல்படும் உங்களை இணையத்தில் இருந்து இதயங்களால் இணைக்க உங்களுக்கு மிக அறிய வாய்ப்பை இந்த வருடம் முத்துநிலவன் அவர்கள் பல பதிவர்களுடன் இணைந்து உங்களுக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.

Tuesday, August 25, 2015

இன்றைய இந்தியா பகுதி 2 (இந்தியாவின் எதிர்காலம்)avargal unmaigal
இன்றைய இந்தியா பகுதி 2

இன்றைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் மதமா? சாதியா ,மொழியா, கலாச்சாரமா  தலைவர்களா என்று சற்று கூர்ந்து பார்த்தால் இதெல்லாம் காரணமல்ல  பக்குவம் இல்லாத மக்கள்தான் காரணம் என்று நன்கு புரியும்

Sunday, August 23, 2015

இன்றைய இந்தியாவில் ..? இன்றைய இந்தியாவில் ........?????


கள்ள உறவுக்காக போராடிய தமிழக மக்கள் , கல்வி அறிவுக்காக போராடி இருந்தால் இப்படிப்பட்ட பண்பாடற்ற பேச்சுக்கள் வெளிவந்திருக்காது அல்லவா? 

இன்றைய இந்தியாவில்
நல்லா படிச்சவன் மிக நல்ல வேலையில் அமர்ந்து மிக அதிக அளவில் சம்பாதித்து பங்களா கார் பயணம் பார்ட்டி என சந்தோஷமாக வாழ்கிறான்.

நல்லா படிக்காதவன் அடிதடியில் இறங்கி லோக்கல் பஞ்சாயத்துகளில் இறங்கி ஊழல் செய்யும் தலைவர்களை சப்போர்ட் பண்ணி அவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்  அடித்து போராட்டம் நடத்தி மொட்டை அடிச்சு அழுது ஒப்பாரி வைச்சு வட்டம் மாவட்டம் கவுன்சிலர் அமைச்சர் கான்ராக்டர் ஆகி மிக அதிக அளவு பணம் சம்பாதித்து பங்களா கார் பயணம் பார்ட்டி என சந்தோஷமாக வாழ்கிறான்.


ஆனால் இரண்டுகெட்டான் தனமாக அரைகுறையாக படித்து பட்டம் பெற்றவன் கிடைச்ச ஏதோ ஒரு வேளையில் உட்கார்ந்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் இருக்கும் போது அதை எதிர்த்து போராடாமல் பேஸ்புக்கில் மட்டும் கொஞ்சம் பொங்கி எழுந்துவிட்டு தங்களின் அன்றாட குடும்ப போராட்டத்தில் ஈடுபட்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்


இன்றைய இந்தியாவில்

ரோட்டில் குப்பையை போடுபவன் அறிவாளியாம் ஆனால் அதை அள்ளி அப்புறப்படுத்துபவன் மனநோயாளியாம்

அறிவில்லாமல் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்து கொண்டிருப்பவனுக்காக  ஒரு குருப் பச்சாதப்பட்டு அவர்களுக்காக மதுவிலக்கிற்காக உண்மையாக சில பேர் போராடிவருகிறார்கள் மீத சில பேர் போராடுவதாக நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி குடிகாரர்களுக்காக போராடும் அறிவாளிகள் தங்கள் சமுகம் நல்ல கல்வி, நல்ல நீர், நல்ல சுகாதரமான உணவு வகைகள். சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்காக போராடாமல் தங்கள் வருங்கால சந்ததிகள் நாசமாக போனாலும் பரவாயில்லை  என்று குடிகாரர்கள் போல  ஆனால் குடிக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்

குடிகாரர்களால் குடிகாரனின் குடும்பம் மட்டுமே அழிகிறது ஆனால் ஊமையாக இருக்கும் இந்த அறிவாளிகளால் வருங்கால சமுகமே அழியப் போகிறது... என்பது மட்டும் நிஜம்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

Friday, August 21, 2015

விஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்விஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்

இளம் வாலிபரான கார்த்திக் என்பவர் தன் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் அமெரிக்காவில் வேலை கிடைத்தால், மனைவியை அம்மாவின் துணைக்காக விட்டுவிட்டு வந்து கடந்த எட்டுமாதமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த கார்த்திக் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருக்கையில் தனது இளம் மனைவியுடன் செல் போனில் பேசி கொண்டு, அவருக்கு பிறந்த குழந்தையைப்பற்றி விசாரித்து கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு ஒரு எச்சரிக்கை
எனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

எனது பதிவுகளை பலரும் படித்து வருகின்றனர்.அப்படி படித்து வருபவர்களை பற்றி ஒரு நிறுவனம் மூலம் புள்ளி விபரங்களை சேர்த்து அதன் ரிசல்டை பார்த்த பின் சில வியப்பான செய்திகளும் சில அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்களும் கிடைத்தன. அந்த தகவலை இந்த பதிவின் மூலம் பகிர்கின்றேன்.. அதை படித்த பின் நீங்கள் உங்கள் கருத்துகளை வெளியிடுவதோ அல்லது இடாமல் இருப்பதோ உங்கள் இஷ்டம்

Tuesday, August 18, 2015

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)
( சொல்வதை உணர்ந்து சொல் அதை துணிந்து சொல்)

மதுரைத்தமிழா இளங்கோவன் உருவ பொம்மையை எரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது  என்று கருணாநிதி சொன்னது பற்றி கருத்து சொல்லுங்களேன்?
அவரை உயிரோட எரித்து கொன்று இருக்க வேண்டும் என்று மறைமுக சொல்லுகிறாரோ என்னவோ... பொடி வைச்சு பேசுவதில் வல்லவராச்சே

Monday, August 17, 2015

மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும்


மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும்

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog