Wednesday, July 1, 2015



avargal unmaigal
சமுதாயம் சிந்திக்க விகடன் பகிர்ந்த தகவல்( இளைய சமுதாயாம் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு )

இளைய சமுதாயத்திற்கு தரமான தகவல்களை தருவது விகடன் மட்டுமே

வாட்ஸப் வீடியோவில் குளிப்பது சோனியா அகர்வாலா?  இப்படி அல்லவா மிக உபயோகமான தகவல்களை விகடன் தருகிறது

ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பு நன்மை எனினும் , மறுபக்கம் ஆண்ட்ராய்டு, மொபைல், முகநூல், வாட்ஸப் என இளைஞர்களை தவறான பாதைக்குள் இழுத்துச் செல்லும் தீமைகளும் நடக்கத்தான் செய்கின்றன. ( முகநூல், வாட்ஸப் போன்றவைகள்தான் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டு செல்லுதாம் ஆனால் விகடன் அப்படி எல்லாம் தகவல்களை தங்கள் தளத்தில் பகிரமாட்டார்களாம்)


முன்பெல்லாம் ப்ரௌசிங் சென்டர்கள், நண்பர்கள் வீடுகளில் உள்ள கணிணிகள் என கொஞ்சம் குறைவான அளவே இளைஞர்கள் இண்டெர்நெட் என்னும் மாய வலைகளில் சிக்கினர். ஆனால் இப்போது நிலையே வேறு மொபைலில் வேண்டாம் என நிராகரித்தாலும் தேடி வந்து பல ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிரப்பட்டுவிடுகின்றன. (அப்படியே மக்கள் நிராகரித்தாலும் நாங்கள் இப்படிபட்ட தலைப்பை போட்டு மக்களை அதை பார்க்க செய்துவிடுவோமே)

அதிலும் சினிமா நடிகைகளை டார்கெட் செய்யும் போக்கு இப்போது அதி தீவிரமாக நடந்துவருகிறது. முன்னர் த்ரிஷாவின் குளியல் வீடியோ என முதல் முதலில் இந்த ஆபத்து  ஆரம்பமானது. தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என இதில் ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, நிக்கிகல்ராணி, என பலரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், மற்றும அவர்களைப் போன்ற பெண்கள் குளிப்பது போன்ற வீடியோக்கள் என அதிகம் பரவத் துவங்கிவிட்டன. ( ஒரு வேளை இப்படிபட்ட வீடியோக்களை முதலில் வெளியிட்டுவிட்டு அது பரபரப்பு ஆன பின் அது பற்றி செய்திகள் விகடனார்தான் வெளியிடுகிறாறோ என்னவோ )

இப்போது சோனியா அகர்வால் குளியல் வீடியோ என அவரைப் போன்றே ஒரு பெண் குளித்து ஆடை மாற்றுவது போன்ற வீடியோ வாட்ஸப்பில் அதிகம் இளைஞர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஒரே தீர்வு இளைஞர்கள் நடிகைகளையும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் பார்த்தாலே விடிவுகாலம் பிறக்கும். ஆனால் நடக்குமா.? கேள்விக்குறியே!

பாருங்கய்யா  சமுதாயம் சிந்திக்க எப்படி அருமையாக இறுதியில் விகடனார் கேள்வி கேட்டு மக்களை சிந்திக்க வைக்கிறாங்க.... இதுக்காகவே தமிழ் தெரிஞ்ச சமுதாயம் விகடனை காசு கொடுத்து வாங்கி படிக்கணும் ஓசியில மட்டும் படிக்காதீங்கையா.....

சிவப்பு எழுத்தில் உள்ளவை மட்டும் நான் எழுதியது மீதி விகடனின் இணையதளத்தில் வந்ததது. விகடனுக்கு நன்றி




அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. சீரழிவின் உச்சக்கட்டம் இன்னும் எதுவரை தொடுமோ...?

    ReplyDelete
  2. விகடன் தரம் மாறி ரொம்ப நாளாச்சு!

    ReplyDelete
  3. அட! விகடனின் தரம் தாழ்ந்து விட்டதே எப்போதோ....

    ReplyDelete
  4. நம்ம நாட்டுல தான் பத்திரிக்கை தர்மம்ன்னு ஒன்னு இல்லம போச்சு.. தொலைகாட்சி பத்திரிககள் முகநூல் இப்படி எத எடுத்தாலும் ஆபாசம் ஆபாசம்.. இன்னிக்கு இத வச்சு தான் எல்லா தொலைகாட்சிகளும் பத்திரிக்கைகளும் அவங்க பொழப்ப ஓட்டிகிட்டு இருக்காங்க.. இவங்களுக்கு மக்கள் எப்படி போனா என்ன, சமுதாயம் சீரழிஞ்ச என்ன... நெஞ்சு பொறுக்குதிலையோ இந்த நிலை கெட்ட மாந்தர் தம்மை நினைத்து விட்டால்!!!

    ReplyDelete
  5. பத்திரிகைகள் படிப்பதை எப்போதோ விட்டாச்சு மதுரைத் தமிழன். சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது பலரையும்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.