உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 26, 2015

ஜெஸிக்காவை வைத்து 'எமோஷனல்' நாடகமாடும் விஜய்டிவிஜெஸிக்காவை வைத்து எமோஷனல் நாடகமாடும் விஜய்டிவி

விஜய் டிவி நிறுவனத்தினருக்கு தமிழக தமிழர்களை விட புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களை மிக ரொம்ப பிடிக்கும் காரணம் அவர்களை போல இளிச்சவாய் தமிழர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் கனடா யுரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி அவர்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை எளிதாக ஏமாற்றி பறித்து கொள்வார்கள். இதற்காகவே இப்போது இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் யாரவது ஒரு இலங்கை தமிழர்களின் குழந்தைகளை சேர்த்து கொள்வார்கள்.


கடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜெஸிகா மிக அதிக அளவு வோட்டுக்களை பெற்று வெற்றி பெற்றாலும் இளிச்சவாயர்களுக்கு நாம் ஏன் முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து  போட்டி முடிவில் சில கோல்மால் பண்ணி இரண்டாவது பரிசு கொடுத்தனர்.

அப்படி பண்ணியவர்கள் இப்போது கனடாவில் நடக்கும்  சூப்பர் சிங்கர் இசை விழாவில் இளிச்சவாயர்களிடம் இருந்து பணம் கறக்க 2 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கின்றனர். இதற்கான விழா விளம்பரங்களில் ஜெஸிகாவை முன்னிலைப்படுத்தி விளம்பரப் படுத்துகிறார்கள்.. முதல் பரிசு பெற்ற ஸ்பூர்த்தியை இவர்கள் முன்னிலைபடுத்தவில்லை. உங்கள் வீட்டு பிள்ளை ஜெஸிக்கா அழைக்கிறார் என்று தொடர் விளம்பரங்கள் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவே வருகின்றன.

பரிசு தரும் போது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட ஜெஸிக்கா வருமானத்தை அள்ளிதரும் நிகழ்விற்கு மட்டும் முதன்மைபடுத்தப்படுகிறார். நல்ல இருக்கய்யா விஜய்டிவி நிர்வாகத்தினரின் நியாயங்கள்.

நாம் நியாயங்களை எடுத்து சொல்வோம். இளிச்சவாயர்கள் டிக்கெட் எடுத்து அந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்யட்டும். ஏனென்றால் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே டிவி விஜய் டிவி அல்லவா....

கனடா வாழ் இலங்கை நண்பர் முன்பு சொன்னது :
வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் ஜெசிக்காவை வஞ்சகமாக நடுவர்களாயிருந்த துரோகிகள் இரண்டாமிடத்துக்கு தள்ளியதையும் ஈழத்தமிழர்கள் யாரும் என்றும் மறந்துவிடமாட்டோம்!!!!!!!!!!

அந்த நண்பரிடம் இப்ப கேட்க விரும்புவது இதுதான் மறந்துவிட்டு விஜய் டிவி நிகழ்ச்சிக்கு போகப் போகிறீர்களா அல்லது புறக்கணிக்கப் போகிறீர்களா?அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

4 comments :

 1. நீங்கள்சொல்லுவது மிகவும் நியாயமானதே! ஆனால் ஜெசிக்காவையே முன்னிலைப் படுத்திஅழைக்கும் போது ஆதரவு இல்லாமல் இருக்குமா? யாரு இதை எல்லாம் கேப்பாங்கனு நினைக்கறீங்க? எல்லாரும் மறந்தே போயிருப்பாங்க தமிழா...

  ReplyDelete
 2. துரை சார்.. இது நியாயமான கருத்தாகத் தெரியவில்லை. ஸ்பூர்த்தி ஜெஸிகாவை விட நன்றாகப் பாடினார். ''நேயர்களின் வாக்கு' என்பது, அவர்களையும் Participate பண்ண வைக்கும் ஒரு தந்திரம். அதைமட்டும் வைத்து முடிவு செய்வது தவறாகவே முடியும். பெரும்பான்மையினர், நியாயமாக முடிவு எடுக்கமாட்டார்கள்.

  விஜய் தொலைக்காட்சி, நேயர்களைக் கவருவதற்காகச், சிலரை முன்னிறுத்தும். இந்த நிகழ்சியுமே அவர்களின் நேயர் baseஐ அதிகப் படுத்திக்கொள்வதற்காக இருக்கும். அங்கு வந்து, ஸ்பூர்த்தியை முன்னிலைப்படுத்துவதால் அவர்களுக்கு லாபமா அல்லது ஜெஸிகாவை முன்னிலைப்படுத்துவதால் லாபமா?

  ReplyDelete
 3. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது! எல்லாம் விளம்பர வருவாய்க்கு நம்மை ஏமாளி ஆக்குகிறார்கள்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog