Tuesday, July 21, 2015



நீங்க பண்ணுவது தப்பா தப்பு இல்லையா என்பதை அறிந்து கொள்ள இதைப்படிங்க


சாப்பிடுவது தப்பு அல்ல ஆனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது தப்பு
விளையாடுவது தப்பு இல்லை ஆனால் படிக்காமல் இருப்பதுதான் தப்பு.
ஊரு சுற்றுவதுதப்பு அல்ல ஆனால் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுவதுதான் தப்பு
காதலிப்பது தப்பு அல்ல ஆனால் காதலித்தவளை கல்யாணம் பண்ணாமல் இருப்பதுதான் தப்பு

மனைவியை நேசிப்பது தப்பு அல்ல ஆனால் மனைவியை நேசிப்பதால் பெற்றோர்களை கவனிக்காமல்  இருப்பதுதான் தப்பு
மது அருந்துவது தப்பு அல்ல ஆனால் உடலையும் குடும்பத்தையும் சிரழிப்பதுதான் தப்பு
வேலையை நேசிப்பது தப்பு அல்ல ஆனால் குடும்பத்தை மறப்பதுதான் தப்பு
தலைவர்களை நேசிப்பது தப்பு அல்ல ஆனால் அவர்களை கடவுளாக கருதுவதுதான் தப்பு
தான் நன்றாக வாழ நினைப்பது தப்பு அல்ல ஆனால் அடுத்தவனை கெடுக்க நினைப்பதுதான் தவறு
அறிவுரை சொல்வது தப்பு அல்ல ஆனால் அடுத்தவனை கெடுக்க அறிவுரை சொல்லுவதுதான் தப்பு

கணவரை செல்லமாக அடிப்பது தப்பு அல்ல ஆனால் பூரிக்கட்டையால் அடிப்பதுதான் தப்பு
இதை படித்து சிரிப்பது தப்பு அல்ல ஆனால் கருத்து சொல்லாமல் போவதுதான் தப்பு

இந்த தப்புகளில் எத்தனை தப்புகளை நீங்கள் செய்து இருக்கிறீர்கள் என்பதை சொல்ல முடியுமா?

எது தப்பு தப்பில்லை என்று எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன்.
அது போல உங்களுக்கு தெரிந்ததையும் நான் விட்டு சென்றதையும் சொல்லி செல்லுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

30 comments:

  1. எந்தப் தப்பையும் செய்வதில்லை என்பது(ம்) தப்பு... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை படித்து மிகவும் ரசித்தேன்

      Delete
    2. @சசிகலா இங்க யாரோ வழி தப்பி வந்துட்டாங்க போல இருக்கே

      Delete
  2. குடிப்பது சரியல்ல. அது தவறான செயல். நானே "குடிப்பது உடலுக்கு நல்லது" என ஆய்வறிக்கைகள் படித்து குடிக்க ஆரம்பித்தவன்தான். ஆனால் குடிப்பதால் தற்போது கான்சர் வருகிறது என கண்டறிந்துள்ளார்கள். ஏற்கனவே குடிப்பவர்கள் தினக்குடியர்கள் எனில் அளவை குறைப்பது முக்கியம். அதைவிட முக்கியம் குடிக்காதவர்கள் - குடிப்பது தவறில்லை, குடிப்பது உடலுக்கு நல்லது என எண்ணி - ஒரு போது குடிக்க ஆரம்பித்து விடாதீர்கள் - இதுவே அமெரிக்க Department of Agriculture-ன் உணவுப் பரிந்துரை. நீங்கள் அளவாக குடியுங்கள் மதுரைத்தமிழன், ஆனால் குடிப்பது தவறில்லை என ஒரு போதும் எழுதாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அளவோடு குடிப்பதைதான் நான் குடிப்பது தவறு இல்லை என்று எப்போதும் சொல்லுவது உண்டு. அதுதான் என் நிலை...இல்லை உங்கள் நிலைதவறுதான் என சொல்பவர்களிடம் இன்றைய உணவு பழக்கம் வழக்கம் நமது வாழ்க்கை முறை நன்றாகத்தான் இருக்கிறதா என்று கேட்டால் அவர்கள் சரி இல்லை என்றுதான் நியாயமானவர்கள் பதில் சொல்லுவார்கள் அப்படி சரி இல்லாத பழக்கவழக்கங்களை பின்பற்றி கொண்டும் அதனால் உடல்களை அழித்து கொண்டும் இருப்பவர்களைவிட மிக அளவோட குடித்து நல்ல உணவுப்பழக்கவழக்கங்களை கடைபிடித்து வருவது என்னை பொருத்தவரையில் தவறு இல்லைதான். ஆனால் இதை யார் மீது வலுகட்டாயமாக நான் திணிக்கவில்லை..

      சரியான உணவுபழக்கத்தை கொள்ளாமல் ஆனால் அதே நேரத்தில் குடிப்பதுமட்டும் தவறு என்று சொல்லபவர்களை கண்டு எனக்கு எரிச்சல்தான் வருகிறது எனக்கு டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்களை பற்றியோ அல்லது அவர்கள் குடும்பங்கள் அழிவது பற்றியோ கவலை இல்லை. நான் ஆதரித்து எழுவதால் மட்டும் இதைப்படித்துவிட்டு யாரும் குடிக்க ஆரம்பிக்கமாட்டார்கள்.இல்லை இதை படிப்பதால்தான் கெட்டு போகிறார்கள் சிறு வயதில் இருந்து திருக்குறளை படிப்பவர்கள் மிக நாலொழுக்காமாகத்தானே இருக்க வேண்டும் ஆனால் அப்படி யாரும் இல்லையே. அவனவனுக்கு சுய புத்தி இருக்க வேண்டும். மேலும் நான் ஆட்சியை பிடிக்க எண்ணி அல்லது பதவியை எதிர்பார்த்து அய்யகோ குடிப்பது தவறு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுவில் கூறிவிட்டு பின்பக்கமாக ஒயின் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளை ஆரம்பித்து அதை நடத்துவதில்லை....நான் நடிப்பதில்லை... அவ்வள்வுதான்..உங்கள் கருத்துக்கு எதிர்மறையாக எழுதவில்லை எனது நிலையை விளக்கிதான் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்..

      இதற்கு மேலும் யாரும் வாதம் செய்யவந்தால் என்னால் வாதம் செய்ய இயலாது

      Delete
  3. ஒருவருக்காக அல்லது ஒன்றுக்கான நம் செயல் மற்றொருவரை பாதிக்காத வரையிலும் செய்யும் எதுவும் தப்பில்லை !

    ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்....

    ( கருத்திட்டு ஒரு தப்பை திருத்திகொண்டேன் !!!!!!! )

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  4. இந்தியா வந்தது தப்பில்லை...
    எங்களைப் பார்க்காமல் திரும்ப சென்றது தப்பு.

    ReplyDelete
    Replies
    1. அழைப்பு அனுப்பியும் நொண்டிச் சாக்கு சொல்லி பார்க்க வராமல் இப்படி கருத்து போடுவதுதான் தப்பு

      Delete
  5. தப்பு செய்வது தப்பல்ல! தப்பை மறைக்க முயல்வது தப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தப்பென்று தெரிந்து செய்வது தப்பு.

      --
      Jayakumar

      Delete
    2. மிக சரியாக சொன்னீர்கள் ஐயா

      Delete
  6. இதைப் படித்து சிரிப்பது தப்பு அல்ல ஆனால் கருத்துரை போடாமல் செல்வதுதான் தப்பு...// அந்தத் தப்பாவது செய்யலாம்னு பார்த்தா அதையும் செய்ய விடாம பண்ணிட்டீங்களே தமிழா! ஹஹஹஹ்...

    சூப்பர் எல்லாமே!

    ReplyDelete
    Replies

    1. உங்களைப் போல தட்டி கொடுப்பவர்கள் மறந்தும் தட்டிக் கொடுக்காமல் சென்றுவிடக் கூடாது என்பதால் இந்த முறை பயன்படுத்தப்பட்டது

      Delete
  7. இதைப் படித்து சிரிப்பது தப்பு அல்ல ஆனால் கருத்துரை போடாமல் செல்வதுதான் தப்பு...// அந்தத் தப்பாவது செய்யலாம்னு பார்த்தா அதையும் செய்ய விடாம பண்ணிட்டீங்களே தமிழா! ஹஹஹஹ்...

    சூப்பர் எல்லாமே! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அதே அதே
      கருத்தும் இட்டுவிட்டேன் :)

      Delete
    2. எத்தனை முறைதான் தப்பித்து ஒடுவீர்கள் அட்லீஸ்ட் ஒரு நாளாவது பிடித்துவிட வேண்டும் அல்லவா அதனால்தான் இந்த முயற்சி .நன்றி கிரேஸ்

      Delete
  8. பூரிக்கட்டையால அடி வாங்கிறது தப்பில்ல
    வெளிக்காயம் வர அடிச்சா தான் தப்பு.... ஹா ஹாரொம்ப ரசித்து சிரித்தேன். சூப்பர் சகோ !

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவி மக்கா வெளிக்காயம் வரும்படி அடிக்க அறிவுருத்துகிறீர்களே இது நியாமா?அடுத்து பிறவியில் நீங்கள் ஆணாக பிறந்து இது மாதிரி பூரிக்கட்டையால் அடிவாங்க வேண்டும் என்று பிரார்த்திகிறேன்

      Delete
  9. இப்படியெல்லாம் பதிவுகள் போடுவது உங்கள் தப்பல்ல! இதையெல்லாம் படிக்காமல் விடுவது எங்கள் தப்பு! ஹிஹி! கலக்கல் பதிவு!

    ReplyDelete
    Replies
    1. இப்படி பதிவுகள் போடுவது என் தப்புஅல்ல ஆனால் இப்படிபட்ட பதிவு எழுத வைக்க இந்த வலையுலகம் கற்றுதந்ததுதான் தப்பு

      Delete
  10. உங்களது வலைக்குள் எங்களை சிக்க வைக்க முயற்சிப்பது தப்பு. அதைவிட தப்பு நாங்கள் அதிலிருந்து தப்பிக்க நினைப்பது.

    ReplyDelete
    Replies
    1. உங்களை போல அறிவில் சிறந்தவர்களை என் வலையில் மாட்டவிடுவது என் தப்புதான் சாரி சார்

      Delete
  11. கடைசியில் சொன்ன தப்பாவது செய்யாமல் இருக்க.....

    தப்பு-சரி இரண்டுக்கும் சொன்ன உதாரணங்கள் நன்று!

    ReplyDelete
    Replies

    1. கடைசி வரிகள் வரை படித்து கருத்திட்டதற்கு நன்றி வெங்க்ட்

      Delete
  12. தப்பை தப்பு தப்பாக செய்தால் தப்புதான்!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  13. பூரிக்கட்டையில் அடிக்கிறது தப்பில்லை, இப்படி போஸ்ட் போட தெம்பு இருக்கிற மாதிரி அடிக்கிறது தான் தப்பு:)))

    ReplyDelete
    Replies
    1. பாசமலர் தங்கைகள் எல்லாம் சினிமாவுலமட்டும்தான் வருவாங்க போல இருக்கு. ஹும்ம்ம்ம்ம்ம்

      Delete
  14. குழந்தையை நேசிப்பது தவறல்ல. அதனால், கட்டிய கணவனை அம்போவென்று விடுவதுதான் தவறு.
    சிகரெட் குடிப்பது தவறல்ல. குடித்துவிட்டு, அடுத்தவனைக் குடிக்காதே என்பதுதான் தவறு.
    திருவள்ளுவரைப் போற்றுவது தவறல்ல. போற்றிவிட்டு பலதாரம் வைத்திருப்பதுதான் தவறு.

    என்ன... மதுரை மாதிரி எழுதலாம் என்றால், நெல்லைக்கு எல்லாம் தப்புத் தப்பாக வருகிறது.

    Salesmenகள்ளாம் ஊர் சுற்றிகள்தான் (வேலைக்காக). அவர்களைப்போய் இப்படி எழுதுகிறீர்களே. (ஏதோ நம்மளாலான சிண்டு முடிதல்)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.