உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 28, 2015

டீச்சர் அடித்த கதை....... (குமுதத்தில் ஒரு பக்க கதை )டீச்சர் அடித்த கதை....... (குமுதத்தில்               ஒரு பக்க கதை )

என்னங்க அந்த டீச்சரை சும்மாவிடக் கூடாதுங்க.. அவங்க மானத்தை வாங்கணுமுங்க ஆமாம்டி அந்த டீச்சருக்கு என்ன துணிச்சல் நம்ம பையனை அடிச்சு இருக்காங்க. நானும் இதை இப்படியே விடப் போவாதில்லை. என் நண்பர்களுக்கு இப்பவே போனை போட்டு அவர்களுடன் ஸ்கூலுக்கு போய் நியாயம் கேட்கப் போறேன் என்று சொல்லி நண்பர்களுக்கு போனை போட்டு நடந்த விஷயத்தை சொல்லி நாளை ஸ்கூலுக்கு வருமாறு சொல்லிவிட்டு படுக்கச் சென்றான்


காலையில் எழுந்ததும் நண்பர்களுக்கெல்லாம் மீண்டும் நினைவூற்றி சொல்லிவிட்டு பள்ளிக்கு சென்றான்.பள்ளி வாட்சுமேனனிடம் பிரின்ஸ்பால் ரூம் எங்கே என்று கேட்டு அனைவரும் அவரை பார்க்கச் சென்றனர். பிரின்ஸ்பால் ரூம் முன் நின்று இருந்த ப்யூன் கோபத்துடன் வந்த அனைவரையும் பார்த்து பயந்து பிரின்ஸ்பாலிடம் சென்று சொன்னான்.

பிரின்ஸ்பால் வெளியே வந்ததும்.  எங்கே அந்த் டீச்சர் அவளை கூப்பிடுங்கள் என்று ஒரு டீச்சரின் பெயரை சொல்லி கத்தினர்.  பிள்ளையை அடிச்ச அந்த டீச்சரை வேலையைவிட்டு தூக்குமாறு கூச்சலிட்டனர்.

நிலமை கட்டுகடுங்காமல் போகவே பிரின்ஸ்பால் போலிஸை கூப்பிட்டார். போலீஸ் அந்த பள்ளி நோக்கி செல்வதை ஒருத்தர் மீடியாகாரர்களுக்கு தகவல் கொடுத்தது அனைவரும் பரபரப்பு செய்திகளுக்காக அந்த பள்ளி நோக்கி  விரைந்தனர்.

போலீஸாரை பார்த்ததும் இன்னும் கோபம் அதிகமாகி கத்த ஆரம்பிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களை சமாதனப்படுத்திவிட்டு பிரின்ஸ்பாலிடம் நடந்ததை கேட்க அவர் சார் இவரின் பையனை டீச்சர் அடித்துவிட்டாராம் அதனால் அவரை வேலையைவிட்டே தூக்கணும் என்று இவர்கள் அடம்பிடிக்கிறார்கள். தப்பு செய்யும் மாணவனை அடிப்பது தவறா? அப்படி என்றால் பாடம் நடத்த ஒரு டீச்சர்கள் கூட இருக்க மாட்டார்கள் என சொன்னார்.

அதை கேட்ட இன்ஸ்பெக்டர் அந்த மாணவனிண் தந்தையை பார்த்து சார் என்ன சார் இது நியாயமா சார் அடித்தற்கெல்லாம் இப்படி பெரிய பிரச்சனையை கிளப்புறீங்க என்று கேட்க...

அதை கேட்ட அந்த மாணவனின் தந்தை சார் என் பையன் ப்ள்ஸ் டூ படிக்கிறான் இந்த டீச்சருக்கு வயதோ 30. அவர் என் பையனை இழுத்து கிஸ் அடித்து இருக்கிறார் இவரை எல்லாம் இந்த பள்ளிக்கூடத்தில் வைத்திருந்தால் பரிட்சை முடிந்த பின் அவர் என் பையனை இழுத்து கொண்டு ஒட மாட்டாரா என்ன? என் பையனோ வாலிப வயதில் இருக்கும் விபரம் அறியாத சின்ன பையன் அவன் படித்து வாழ்க்கையில் சாதிக்க என்னெனவோ இருக்கு அவன் வாழ்க்கையை இளமையிலே அழித்து கொள்வதை பார்த்து எங்களால் இருக்க முடியாது அதனால் அவரை நீக்க்கும் வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் என்று சொன்ன போதுதான் ப்ரின்ஸ்பாலும் போலீஸ் அதிகாரியும் அடி என்றால் கையால் அடித்தது அல்ல உதட்டால் அடித்தது என்று புரிந்து கொண்டனர்.


இந்த செய்தி கிடைத்தால் போதாதா மீடியாவிற்கு... உடனே அனைத்து மீடியாக்களும் சமுக தளங்களும் அந்த டீச்சரின் போட்டோவை போட்டு பரபரப்பு செய்தியை பகிர தொடங்கினர்.இந்த பரபரப்பு செய்தியால் தலைவர் மீது குற்றம் சூட்டப்பட்டு ஊழல் வழக்கு செய்திகள் அமுங்கி போயின...


டிஸ்கி : ஆசிரியர்களை காயப்படுத்த எழுதியது அல்ல அதனால் நல்ல ஆசிரியர்கள் மன்னிக்க...இப்படியும் சில டீச்சர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கு சில மாதங்களுக்கு முன் 10 ஆம் வகுப்பு மாணவனை இழுத்து கொண்டு ஒடிய செய்தியே சாட்சி அதை வைத்துதான் குமுதத்தில் வருவது போல இந்த ஒரு பக்க கதை எழுதப்பட்டுள்ளது

டிஸ்கி ( (குமுதத்தில் வெளிவராத ஒரு பக்க கதை ) தலைப்பில் 'வெளிவராத'  என்ற வார்த்தை வெளிவராமல் வந்துவிட்டது ஹீஹீஹீ

அன்புடன்

12 comments :

 1. குமுதத்திற்கு ஏற்ற கதை
  குசும்பான கதையும் கூட
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஹஹஹஹஹ் என்னப்பா டீச்சர் கதை இப்படி வில்லங்கமாகவே ஓடுகின்றது....நம்பள்கி வேறு அவர் பாணியில் எழுதி உள்ளார்....

  ReplyDelete
 3. இந்த 'அடி' பெரிய பிரச்சனை தான்...

  ReplyDelete
 4. மதுரை தமிழா நீர் திருந்தவே மாட்டீரா ???? :-D

  ஆனா கதை நல்லா தான் இருந்துச்சு...

  ReplyDelete
 5. இந்த மாதிரி கதைகளுக்காகத்தான் குமுதம் படிக்கறதையே நிறுத்தியாச்சி... எங்கேயோ நட்க்கும் கெட்டதுகள் எல்லார் பார்வையிலும் பட்டுத்தான் செல்கிறது... நாம் நல்லதைச் சுட்டிக்காட்டலாமே.....

  ReplyDelete
 6. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 7. குமுதத்துக்கு ஏற்ற கதைதான்!

  ReplyDelete
 8. அதானே பார்த்தேன்! வெளிவராத கதையா?

  :))))))

  ReplyDelete
 9. ஆசிரியர் கடவுள் மாதிரி அதை புரிந்து ி ஆசிரியர் நடக்க வேண்டும்

  ReplyDelete
 10. நாங்கள்ளாம் ரெம்ப பாவம்.....வெளிவராமல்...வெளிவந்து விட்டது கதை..http://swthiumkavithaium.blogspot.com/

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog