Wednesday, July 1, 2015



avargal unmaigal
ஹெல்மேட் இல்லாமா பைக் ஓட்டி போலீஸாரிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

ஹெல்மேட் இல்லாமா பைக் ஓட்ட சில நல்ல ஐடியா என் மூளையில் உதித்தது(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதெல்லாம் உனக்கு இருக்கான்னு கேட்கப்படாது)

ஹெல்மேட் இல்லாமல் உங்க பைக்கை ஓட்டி போங்க.... போலீஸ் பிடிச்சா நோ டிரைவிங்க லைசன்ஸ் நோ ஆர்சி புக் என்று சொல்லி உங்க பைக்கை அவங்ககிட்ட கொடுத்துட்டு போங்க.. அப்புறம் பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேசனுக்கு போய் உங்க பைக்கை யாரோ திருடிட்டு போய்யிட்டானு கம்பிளையண்ட் கொடுங்க...
உங்க வண்டி உங்களுக்கு கிடைச்சிடும்...  என்ன  போலீஸ்காரங்கிட்ட போன வண்டி திரும்ப கிடைக்கவே கிடைக்காதுன்னு நினைச்சா பேசாம அடுத்தவன் பைக்கை திருடிக்கிட்டு ஓட்டுங்க பிடிச்சா நோ டிரைவிங்க லைசன்ஸ் என்று சொல்லிவிட்டு பைக்கை போலீஸ் கையிலே கொடுத்துட்டுப் போங்க  எப்படி நம்ம ஐடியா?

டிஸ்கி : ஹெல்மேட் வாங்கி போட்டுட்டு போய் ஆக்ஸிடன் ஆனா உங்க தலை பத்திரமா பஸ்ஸுக்கு அடியில இருக்கும் ஆனா உங்க உடம்புதான் பஸ் டயருக்கு அடியில நசுங்கி இருக்கும்... ஹீஹீ


ஹெல்மேட்டால் ஏற்படும் விபரீதம் :

இனிமேல் இப்படி செய்திகள் வந்தால் ஆச்சிரியப்படுவதிற்கில்லை "ஹெல்மேட்டால் கணவணை தாக்கி கொன்றுவிட்டு மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம்.
'
அன்புடன்
மதுரைத்தமிழன்'

13 comments:

  1. நீங்கள் படத்தால் சொன்ன கருத்து ’நச்’ என்று இருந்தது ; இதுதான் உண்மை.

    த.ம.1

    ReplyDelete
  2. முதல்ல உம்ம மூளையை ஹெல்மெட் போட்டு பத்திரப்படுத்துவதுடன் ஒரு பெருந்தொகைக்கும் இன்சுயூர் பண்ணிவைங்க..

    ரொம்ப நல்ல ஐடியா குடுத்திருக்கீங்க பாஸ்..!

    God Bless You

    ReplyDelete
  3. நல்ல ஐடியா...! ஹா... ஹா...

    செய்திகள் வரலாம்...!

    ReplyDelete
  4. ஹாஹாஹா! சிரிக்க வைத்து விட்டீர்கள்! சிக்கவும் வைத்துவிடுவிர்கள் போலிருக்கிறதே!

    ReplyDelete
  5. மன்னிக்கவும்...

    எத எத எல்லாம் கிண்டல் பண்றதுன்னு ஒரு வரைமுறை இல்லையா. தலை கவசம் போட்டு வண்டி ஓட்டுங்க அப்படின்னு சட்டம் போட்டா என்ன தப்பு... இங்க அமெரிக்கால மட்டும் சரியா சீட் பெல்ட் போடுறோம், குழந்தைகள் எத்தன இருந்தாலும் குழந்தைகள் சீட் வாங்குறோம்.. இங்க இருக்குறவங்க அத எல்லாம் இப்படித்தான் கிண்டல் பண்ணுறாங்களா.. நாம பண்ணது பண்ணிக்கிட்டு இருக்குறது எல்லமே வானத்த பார்த்து துப்புறது தான்..

    கிடைத்த சுதந்திரத்த ரெம்ப சரியா தப்பா உபயோகப்படுத்துறோம்...

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் சட்டம் போடுறான் அதை மதிச்சு நாம நடக்கிறோம் அப்படி நடக்காதர்கள் மீது அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் ஆனால் அப்படி மதிக்காதவர்களிடம் போலீஸ் கை நீட்டி வாங்குவதில்லை.. இந்த ஹெல்மேட் சட்டம் இந்தியாவில் புதிதாக ஒன்று போடவில்லை ஏற்கனவே இருந்த சட்டத்தைதான் மீண்டும் அமுல் படுத்துகிறார்கள். இதே சட்டத்தைதான் பல வருடங்களுக்கு முன் அமுல்படுத்தினார்கள் அப்புறம் போலீஸ்காரணும் மறந்துட்டான் மக்களும் மறந்துட்டான்.

      உண்மையிலே மக்கள் மீது அக்கறை இருந்தால் இன்னும் கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் எல்லோரும் எளிதாக வாங்கும் வகையில் எல்லா இடங்களிலும் தாராளமாக நியாமான விலையில் கிடைத்திருக்க செய்யவேண்டும் . மாதக்கடைசியில் மக்களிடம் காசு இல்லாத சமயங்களில் சட்டத்தை அமுல்படுத்துவது சரியல்லவே.நேற்று தமிழக் செய்திகளை நீங்கள் டிவியில் பார்த்து இருந்தால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும். பல பெண்கள் தங்களுக்கான ஹெல்மேட்டை வாங்க சென்ற போது எங்கும் அவர்களுக்கான ஹெல்மேட் கிடைக்கவில்லை. சட்டம் போட்டால் மட்டும் போதுமா அதை பலோ செய்வதற்கான வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டாமா?ஆண்களுக்கான 800 ரூபாயாக இருந்த ஹெல்மேட் நேற்று 2000 வரை விலை கூட்டி விற்று இருக்கிறார்கள் இப்படி அநியாயமாக விலையை கூட்டி விற்பதை தடுக்க அரசாங்கம் என்ன செய்தது இப்படி அமெரிக்காவில் தீடீரென்று விலை கூட்டி விற்க முடியுமா என்ன? அதுமட்டுமல்லாமல் அதுமட்டுமல்லாமல் சில கடைகளில் மட்டும் ஹெல்மேட் கிடைத்திருக்கின்றன அதை வாங்க வருபவர்கள் பைக்கில்தான் வர முடியும் அப்படி வந்தவர்கள் பார்க்கிங்க் செய்த வண்டிகள் மீது நோபார்க்கிங்க் ஏரியா என்று சொல்லி அபராதம் விதித்திருக்கிறது. அபராதம் விதிக்க வந்த போலீஸ் அங்கு வந்த கூட்டத்தை ஒழுங்குபடித்தி இருந்தாலே அபராதம் வசுலிக்க வேண்டி இருக்காதே. இதையெல்லாம் மனதில் வைத்துதான் நான கிண்டலாக பதிவு எழுதி இருக்கிறேன்

      Delete
    2. நீங்க சொல்லுறது எல்லாம் சரி..

      ஒரு ரெண்டு மூணு வருஷ அவகாசம் தரலாமா..

      நாம இருக்குற பிரச்சனைகளை பத்தி பேசிகிட்டே தான் இருக்கோம்.. சொல்ல போனா அத ஊதி பெருசாக்குறோம்.. சமுக வலைதளங்களில் எந்த ஒரு பிரச்சனைக்கும் நாம தீர்வு சொல்லுவதோ, அதை மக்களிடம் எப்படி எடுத்து செல்வது என்பதைப் பற்றியோ பதிவுகளோ இல்லை...

      நம்ம மக்களிடம் எதிர் மறை எண்ணங்களே அதிகம்.. யாருமே நல்ல செய்திகளுக்கு, நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை

      நம்ம நாட்டுல இருக்குற எல்லா பிரச்சனைகளுக்கு மூல காரணம்னு பார்த்தா.. அது சரியான கல்வி அறிவு இல்லாததுதான்.. நான் சொல்லுற கல்வி மனப்பாடம் பண்ணி தேர்வு அறையில் வாந்தி எடுத்துட்டு வர்ற கல்வி அறிவு அல்ல....

      அப்புறம் நம்ம நாட்டுல எல்லாமே காசு துட்டுன்னு ஆகிவிட்டது.. அதுல நானும் ஒருத்தன் தான்... இது கசப்பான உண்மை..

      என்ன பொறுத்தவரையில் மாற்றம் என்பது கீழ இருந்து வரணும், ஒவ்வொரு வீட்டுல இருந்து வரணும்... லஞ்சம் குடுக்க மாட்டோம்னு சொல்லுவோம்.. இருக்குற சட்ட திட்டங்கள முதல்ல மதிப்போம்..

      நம்ம குழந்தைகளுக்கு நல்லது கெட்டத சொல்லி குடுப்போம்... யார் வந்தாலும் இப்ப இருக்குற தலைமுறையை மாற்ற முடியாது.. ஆனா அடுத்த தலைமுறையை சரியான படி வழிகாட்டினால்... மாறும்.. மாற்றலாம்... மாற்றம் ஒன்று தான மாறாதது...

      எனக்கு உங்களுடைய பதிவுகள் மிகவும் பிடிக்கும்... ஆனா இந்த பதிவ நகைச்சுவையாக எடுத்து கொள்ள முடியவில்லை...

      Delete
    3. சரியாக சொன்னீர்கள் கார்த்திகேயன். மதுரை தமிழனின் இந்த பதிவு சறுக்கல்.

      Delete
  6. வணக்கம்
    நல்ல சிந்தனை..... ஆகா...ஆகா..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. இவ்வாரம் தலைக்கவச வாரமாகிவிட்டது. பெரும்பாலான பதிவுகள் தலைக்கவசம் பற்றியே. தாங்கள் சொன்ன உத்தி பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும் போலுள்ளது. நன்றி.

    ReplyDelete
  8. படம்சொள்ளும் கருத்து நகைச்சுவை என்று ஒதுக்கி விட முடியாது . உண்மை அதுதான். நேற்று போலீசுக்கு பயந்தே பலரும் ஹெமெட் அணிந்து சென்றனர் .
    என்னதான் பாதுகாப்பு என்று சொன்னாலும் பின்னால் அமர்பவரும் ஹெல்மட் போடவேண்டும் என்பது உரிமை மீறலாகவே பார்க்கப் படுகிறது .

    ReplyDelete
  9. ஹஹஹஹஹ் இதுதாங்க இங்க நடக்குது....சட்டத்திற்கு பயந்துதான் இங்கே எல்லாமே. ஐயோ ஃபைன் போட்டுருவாங்க அந்த ஃபைன் யாருக்குனு தெரியாதே அதனால ஹெல்மெட் ...அவ்வளவுதானே அல்லாமல், நிஜமாகவே மக்களுக்கு ஹெல்மெட் போடுவது அவசியம் என்று தோன்றியிருந்தால் இத்தனை நாள் போடாமல் ஓட்டியிருந்திருப்பார்களா.....போடாமல் தானே ஓட்டிக் கொண்டிருந்தார்கள்....

    ஹெல்மெட்டிற்கு பயப்படுபவர்கள் ஏன் சாலை விதிகளை மதிப்பதில்லை? ஏன் அதற்கு பயப்படுவதில்லை? ஏனென்றால் காவல்துறையினர் சாலை விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதில்லை....கடுமையான சட்டம் இல்லை. பிடிபட்டாலும் நோட்டு நீட்டினால் தப்பிக்கலாம் என்ற எண்ணம்....எதையுமே ரூபாய் கொடுத்து சாதித்து விடலாம் என்ற அளவிற்கு ஊழல் புரையோடி இருப்பது....சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...படித்தவர்கள் உட்பட....

    ஹெல்மெட்டிற்கு கொண்டுவரப்படும் சட்டம் ஓருபுறம் இருக்கட்டும்...அதே சட்டம் சாலை விதிகளுக்கும் வந்தால் இன்னும் உயிர் சேதங்கள் குறையுமல்லவா....விபத்திற்கு ஹெல்மட் மட்டுமே தீர்வு இல்லை..

    உங்கள் டிஸ்கி மிகவும் சரியே....எங்கள் பதிவில் குறிப்பிட்டும் இருந்தால் இங்கு வந்தால் அட உங்களது கருத்தும்...

    தமிழா நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் மனதில் இருந்த அந்த கடைசி பாரா அப்படியே நாங்கள் கொடுத்திருந்ததைப் பாராட்டி இருந்தீர்கள்....மிக்க நன்றி ...

    அப்படிப் பார்த்தால், நாங்கள் எழுத வேண்டும் என்று நினைத்திருப்பதை நீங்கள் மிகவும் அழகாக நகைச்சுவையுடன், நையாண்டியுடன் உங்கள் பாணியில் கொடுத்திருந்திருப்பீர்கள்...நாங்கள் கொடுத்திருந்தால் கொஞ்சம் சீரியசாகக் கொடுத்திருப்போம்...இப்பொது கூட இந்தப் பதிவு கூட...தங்களது பதிவு நச்...நகைச்சுவையுடன்...நன்றி!

    கீதா...



    ReplyDelete
  10. ஹெல்மெட் அவசியமானது தான். ஒவ்வொரு முறையும் இப்படி சட்டம் கொண்டு வந்து அதை மறந்து விடுவதாலோ, அல்லது ஒரு வழக்கு போட்டு அதை தள்ளிப் போடுவதாலோ பயன் இல்லை. நமது பாதுகாப்புக்காகத் தான் இந்த தலைக்கவசம் என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுப்பது ஏனோ என்று புரியவில்லை. தில்லி போன்ற நகரங்களில் பல வருடங்களாகவே தலைக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது - சீக்கியர்களுக்கு மட்டும் அவர்களது தலைப்பாகை/மதக் கொள்கை காரணமாக விலக்கு உண்டு! Pillion Rider - ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அணிந்து கொள்ளத் தான் வேண்டும் - பெரும்பாலானவர்கள் அணிந்து கொண்டு தான் பயணிக்கிறார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.