உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 5, 2015

எல்லோரும் பாராட்டும் அளவிற்கு காக்கா முட்டை சிறந்த படம்தானா? விமர்சனம்avargal unmaigal

காக்க முட்டை படத்தை பாராட்டாதவர்களே இந்த இணையத்தில் இல்லை எனலாம். அப்படி எல்லோரும் பாராட்டும் படத்தையும் பார்த்துவிடலாம் என நினைத்து இருந்தேன். தியோட்டருக்கு எல்லாம் போய்படம் பார்க்கும் எண்ணம் எனக்கு அறவே போய்விட்டது அதனால்  என் வீட்டு டிவி சேனலில் ஆன் டிமாண்டில் வந்தபின் தான் படம் பார்ப்பேன் . காரணம் படம் பிடிக்கவில்லை என்றால் பார்வோர்ட் செய்து பார்க்கும் வசதி இருப்பதால்தான். இந்த படம்  போனவாரமே என் வீட்டு டிவி சேனலில் வெளி வந்துவிட்டது ஆனால் அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று இரவுதான் கிடைத்தது. அந்த படம் பார்த்து முடித்ததும் இந்த படத்திற்கா நம்ம தமிழ் மக்கள் இந்த அளவு ஆர்பாட்ட்டம் பண்ணுகிறார்கள் என்று நினைத்த போது எனக்கு ஆச்சிரியம்தான் தோன்றியது. அதனால் இந்த படம் பற்றிய என் பார்வையை இங்கு பதியலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு.


நம்ம  ஊர் ஆட்களுக்கு ஒரு நல்ல பழக்கம் எப்போதும் உண்டு அதுதானுங்க வெளிநாட்டுக்காரன் ஏதும் பாராட்டிவிட்டால் போதும் உடனே அதை கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் ஆதரித்து பாராட்டிவிடுவார்கள் ஒரு வேளை நாம் அப்படி பாராட்டவில்லை என்றால் நம்மை இந்த சமுகம் மூட்டா பய என நினைக்குமோ என்று எண்ணி கூட்டத்தோட கோவிந்தா போட்டுவிடுவார்கள் அதுதான் இந்த படத்திற்கும் ஏற்பட்டு இருக்கிறது அதனால்தான் படம் மக்களுக்கு போட்டு காண்பிக்கும் முன்பே அதை போட்டிக்கு அனுப்பி  39th Toronto International Film Festival,[ அவார்டு பெறப்பட்டது. இதற்கு பின்புலம்  Fox Star Studios,தான். அவர்கள்தான் இந்த படத்திற்கான டிஸ்டிபியூட்டர். அவர்களுக்கு தெரியும் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அதனால்தான் அவர்களின் முயற்சியால் மட்டுமே இந்த படத்திற்கு அவார்ட் கிடைத்தது என்பது  என்று சொன்னால் மிகையாகாது.


வெளிநாட்டுகாரனிடம் இருந்து அவார்ட் வாங்க ஒரு எளிமையான வழி நமது நாட்டின் சேரியை காட்டி அங்க வாழும் மக்களை காண்பித்தால் மட்டும் போதும் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தேவையில்லாத வெளிநாட்டு பொருள் ஒன்று வியாபாரம் என்கிற பெயரில் நம்மைக் கவரும்படியாக வியாபாரத்தீற்காக விரித்துவைக்கப் படுகிறதும் அதுவும் இந்த படம் அவார்ட் பெறக் காரணம் ஆகும். இது சினிமா படத்திற்கும் மட்டுமல்ல உலக அளவில் நடக்கும் புகைப்பட போட்டிகளிலும் அதிக அளவில் வெளிநாட்டு மக்களை பேசச் செய்வது நமது நாட்டில் உள்ள சேரியில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை வைத்து எடுக்கப்படும் படம்தான்.

நமக்கு தேவை வெளிநாட்டுக்காரன் பாராட்டுவதுதானே அதனால் நம்ம மக்கள் என்ன பண்ணுவான் வெளிநாட்டுக்காரன் பாராட்ட வேண்டும் என்பதால்  நம்ம நாட்டில் உள்ள சேரியை காண்பிப்பான் அல்லது ஒரு சிறுவன் குப்பை தொட்டியில் உள்ள எச்சில் இலையில் உள்ள உணவை எடுப்பதை படம் எடுப்பார்கள் அல்லது உணவிற்காக நாயும் ஒரு வயதானவனும் போராடுவது போல காண்பிப்பான் அல்லது டாஸ்மாக்க்கில் குடித்துவிட்டு சாக்கடை அருகில் விழுந்து கிடப்பதை படம் எடுப்பார்கள் அல்லது உச்சி வெயில் வயலிலோஅல்லது நடுரோட்டிலோ சட்டை மற்றும் செருப்பு போடாமல் வியர்வை சிந்துவதை அப்படி புகைப்படம் பிடித்தால் அதை மிகவும் தத்ருபமாக எடுத்து இருக்கிறார்கள் என்று வெளிநாட்டுக்காரன் பாராட்டுவன் ஏன் நாமளும் பாராட்டுவோம். காரணம் நமது ஏழ்மையை கேலிக்குரியதாக்குவதுதான் இதற்கு நாம் கொஞ்சம் கூட வெட்கப்படமாட்டோம்

ஆனால் இந்தியாவில் இருந்து வந்து வெளிநாடுகளில் இப்போது வசிக்கும் நம் இந்தியார்கள்  இங்குள்ள சுத்தம் மற்றும் ஒழுங்குமுறைகளை நம் நாட்டோடு ஒப்பிட்டு பேசி நம் நாடும் இது போல இருக்க வேண்டும் என்று சொன்னால் மேலே பாராட்டிய நம் மக்களே பார்ரா பெரிய துரை வெளிநாட்டு போயிட்டானாம் அதனால நம் நாட்டை இப்ப ஏளனமாக பேசுகிறான் என்று வரிந்து கட்டி வருவார்கள்

சரி படத்தைவிட்டு சற்று வெளியே போய்விட்டேன் என நினைக்கிறேன் அதனால் நாம் படத்தின் விமரசனத்திற்கு வருவோம்.

குப்பத்தில் வசிக்கும் சிறுவர்கள் டிவியில் வரும் பிட்சாவை பார்த்ததால் அது மீது ஆசைப்படுகிறார்களாம் அது நம்பும் படியாக எனக்கு தோன்றவில்லை அதிக வசதியில்லாத குப்பத்து பசங்கள் ஆசைப்படுவது தெருவில் இருக்கும் சிறிய ஹோட்டல்களில் இருந்து வரும் பஜ்ஜி மீதோ அல்லது பொறித்து வைத்து வாசனையால் மூக்கை சுண்டி இழுக்கும் மீன்  மற்றும் சிக்கன் மட்டன் குழம்புகள் மீதும் ஆசை வந்து அதை ஆசைதீர சாப்பிட மாட்டோமா என்றும் அல்லது கல்யாண மண்பத்தில் இருந்து வரும் பிரியாணி மீது ஆசை கொண்டு அது போல சாப்பிடமாட்டோமா என்றுதான் ஆசைப்படுவார்கள் .ஆனால்  வாசனையையே அறியாத பீட்சா மீது ஆசைக் கொண்டு அதற்காக முயற்சி செய்கிறார்கள் என்பது கொஞ்சம் அதிக கற்பனையோ என்றுதான் சொல்ல தெரிகிறது

ஆனால் இந்த குப்பத்திற்கு பதிலாக மிகவும் வசதி குறைந்த மிடில் க்ளாஸ் பேமிலிகள் வசிக்கும் குடித்தனங்களில் வசிக்கும் குழந்தைகள் இப்படி ஆசைப்பட்டது என்றால் அது நம்பும் படியாக இருக்கும்,காரணம் இப்படி மிடில் க்ளாஸ் பேமிலிகள் வசிக்கும் இடத்திற்கு அருகையே சில வசதியான குடுமப்ங்கள் வசிப்பதும் அந்த குடும்பங்களில் உள்ளவர்கள் அடிக்கடி பீட்சா வாங்கி சாப்பிடுவதும் அதை பார்த்த வசதியற்ற மீடில் க்ளாஸ் குழந்தைகள் பீட்சா வாசனையாவது அறிந்து இருப்பார்கள் பீட்சா பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கலாம். வசதியான குழந்தைகள் பீட்சா டேஸ்ட் பற்றி வர்ணிப்பதாலும் இந்த மீடில் க்ளாளஸ் குழ்ந்தைகளுக்கு ஏக்கத்தை தூண்டிவிட்டு இந்த படத்தில் வரும்படி பீட்சா சாப்பிட முயற்சி செய்யலாம்.

ஆனால் படத்தை எடுத்தவர்கள் இந்த மீடில்களாஸை வைத்து படத்தை எடுத்து இருந்தால் இப்படி அவார்ட் வாங்கி இருக்க முடியாது மக்கள் இப்படி பாராட்டி கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்துதான் செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் குப்பத்தைகாட்டி மக்களின் சிம்பதியை பெற்று வெற்றியும் பெற்று உள்ளார்கள்.

இந்த இணையத்தில் பலர் இதை ஆஹா ஒகோ என்று பாராட்டக் காரணம் பலர் இப்படி மீடில் களாஸில் இருந்து இப்படி பலவற்றிற்காக ஆசைப்பட்டு வந்தவர்களாகவே இருப்பார்கள் அவர்கள் இப்படி தாங்கள் ஆசைப்பட்டோம் என்று நேரடியாக ஒத்துகொள்வதற்கு பதிலாக குப்பத்தில் உள்ளவர்கள் இப்படிதான் ஆசைபடுகிறார்கள் என்று சொல்லி குப்பத்து நிகழ்வை தட்டி பாராட்டுவது போல தங்களையே பாராட்டிக் கொள்கிறார்கள் என்பதுதான் சரி

என்னை பொறுத்தவரையில் இந்த படத்தில்  உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் அரசியல் கட்சி சார்ந்து இருக்கும் அடியாட்களையும், இவர்களை வைத்து தாங்கள் பிழைப்பை அடத்தும் அரசியல்வாதிகளையும் மற்றும் எந்தப் பிரச்சினையானாலும் கையூட்டு பெற்றே பிழைப்பை நடத்தும் போலீஸ்காரர்களையும்  மீடியாவின் செய்தி அரிப்புகளையும் சுற்றுசூழலின் அலட்சியங்களையும் சிறு சிறு சம்பவகளையும் பெரியதாக்கி அதை அரசியலாக்கிவிடுகிற நிகழ்வுகளையும் சமூக அநியாயங்களையும் சகட்டுமேனிக்கு சொல்லி  உண்மைகளை பட்டவர்தனமாக போட்டு உடைத்து இருப்பதான் என்னைக் கவர்ந்து இருக்கிறது.

சமிபகாலமாக வந்த கமல் ரஜினி விஜய் சூர்யா படங்களை எல்லாம் என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் எல்லோரும் பாராட்டும் இந்த படத்தை பார்த்துவிடலாம் என்று நினைத்து பார்த்தேன்...படம் முழுவதும் போரடிக்காமல் சென்று இறுதியில் சப் என்று முடிந்துவிட்டது..


அன்புடன்
மதுரைத்தமிழன் ( டி.ஜே.துரை)

10 comments :

 1. காக்கா முட்டைக்குப் பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா? இருந்தாலும் மசாலா கதைகளுக்கு இடையே இப்படி ஒரு திரைக்கதை வருவதை நாம் ஏற்பதைப் பற்றி சிந்திக்கலாமே?

  ReplyDelete
 2. நீங்கள் சொன்னது சரிதான். முதலில் நானும் குப்பத்துப் பையன் பீட்சாவுக்கு ஆசைபடுவது யதார்த்தம் இல்லை என்றுதான் பட்டது. ஆனால்எங்கும் சொல்லவில்லை. காரணமும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
  யதார்த்தம் என்றாலே வறுமையைக் காண்பிப்பதுதான் என்று நினைத்து விட்டாகள். சத்யஜித்ரே ஆரம்பித்து வைத்த டிரன்ட் அது.
  இருந்தாலும் பஞ்ச் டயலாக்குகளும் , பொருத்தமில்லாத பாடல்களும் லாசிக் சிறிதும் இல்லாத சந்தைக் கட்சிகளும் நிறைந்துள்ள படங்களை விட இந்தப் படம் சற்று மாறுதலாக இருப்பதால் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. நானும் இன்னும் படம் பார்க்கவில்லை.
  படம் பார்ப்பதைவிட பலதரப்பட்ட விமர்சனங்கள் முழு திருப்தியோடு படத்தைப் பற்றியும் அதுசார்ந்த மக்கள் பற்றியும் புரிந்துகொள்ள வழி ஏற்படுத்துகிறது.

  சிறப்பான அலசல்.

  அரசியல் பேசும் சினிமாக்கள் ஏதாவதொரு அரசுத்துறையில் லஞ்சம் கொடுக்காமல் இருந்திருப்பார்களா.

  ReplyDelete
 4. வித்தியாசத்தால் வெற்றி எனவும் கொள்ளலாம்..

  ReplyDelete
 5. உங்க அலசல் அசத்தலாக உள்ளது....பல நிகழ்வுகளை அப்பட்டமாகச் சொல்வதற்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடலாம்...மற்றபடி நீங்கள் சொல்லி இருப்பது அதாவது வெளிநாடுகளில் வறுமையைக் காட்டினால் எடுபடும் என்பது....சரிதான்....என்ன ஒருஏ ஒரு ஆறுதல் என்றால், காதல், நிமிடத்துகு ஒரு பாட்டு, ஃபைட்டு, பஞ்ச்சு டயலாக் என்று வரும் வழக்கமான அரதப் பழசான கதை சொல்லும் ஹீரோயிசம் பேசும் படங்களுக்கு மத்தியில் இது வந்திருப்பதால் ஆறுதலாகவும், பாராட்டும் வகையிலும் உள்ளது....போரடிக்காத திரைக்க்தை...

  ReplyDelete
 6. நல்ல அலசல்...
  தமிழில் வந்த வித்தியாசமான படம்... அதனால்தான் இந்த வெற்றியும் கூட...

  ReplyDelete
 7. நல்ல அலசல். இன்னும் படம் பார்க்கவில்லை துரை. பார்க்க நினைத்திருக்கும் படம்.

  ReplyDelete
 8. நல்ல விமர்சனம்! நான் இன்னும் படம் பார்க்கவில்லை!

  ReplyDelete
 9. வித்தியாசமான படம்

  ReplyDelete
 10. சரியாச் சொல்லியிருக்கீங்க. இப்போ சமீபமா பாபனாசம் படத்தைப் பார்த்தேன். கதானாயகன் அறிமுக அராஜகம்/பஞ்ச் போன்று எதுவுமில்லாமல் படம். மலயாள கதாசிரியர்/இயக்குனர் அருமையாக எடுத்திருக்கிறார்கள். 'நிறையபேர் அலசித் துவைத்துவிட்டதனால் இன்னும் டவுன்லோட் பண்ணி நண்பர் கொடுத்த கா.மு பார்க்கவில்லை.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog