Thursday, July 16, 2015



avargal  unmaigal
கூலித் தொழிலாளியின் மகன் முதலமைச்சர் ஆவதில் என்ன தப்பு?

தமிழக்தில் ஒரு காலத்தில் ஒரு தொழிலாளி சாலையோர மரங்களை வெட்டி வாழ்ந்து வந்தார், அவர் கஷ்டப்பட்டு தன் மகனை டாக்டருக்கு படிக்க வைத்தார். அதே நேரத்தில் அந்த கூலித் தொழிலாளி தன் தனிப்பட்ட வளர்ச்சிக்காக ஒரு சங்கம் ஆரம்பித்தார் அதுவும் நன்றாக வளர்ந்தது.

அரசியல்வாதிகளின் பிள்ளைகளோ ஒழுங்காக படிக்காமல் வளர்ந்தன. ஆனால் இந்த கூலித் தொழிலாளியின் பிள்ளையயோ அப்பாவின் பேச்சை கேட்டு சமத்தாக டாக்டருக்கு படித்தது முடித்தது. தான் சொன்ன பேச்சை கேட்டு வளர்ந்ததால் அந்த மகனுக்கு தன் சங்கத்தின் மூலம் எம் பி சீட் வாங்கி கொடுத்து அமைச்சாராக்கி அழகு பார்த்தது.


ஆரம்பத்தில் அந்த பிள்ளை எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருந்து சில நல்ல செயல்களை செய்தது. ஆனால் கூட இருந்த மற்ற அமைச்சர்கள் செய்யும் செயலை பார்த்து அதுவும் ஊழல் பண்ண ஆரம்பித்தது.பாவம் அந்த பிள்ளை இப்போ  வழக்கில் சிக்கி மாட்டிக் கொண்டிருக்கிறது.


இதனை பார்த்த அவரின் அப்பா இவனுக்கு டாக்டர் தொழிலை விட மற்ற தொழில்தான் சிறந்தது என கருதி தன் மகனுக்கு ஊழல் செய்த அனுபவம் இருப்பதால் அவனை தமிழக் முதல்வர் ஆக்கிவிட்டால் தம் நண்பர்களை போல ஊழலில் மிக சிறந்தவனாக ஆகிவிடலாம் என் நினைத்து ஊரெங்கும் வருங்கால சிஎம் என்று போஸ்டர் அடித்துவிட்டு கற்பனை சிறகில பரக்கிறது.

பாவம் முதலமைச்சர் பதவி ஒன்றும் டாக்டர் படிப்பு போல அல்லவே அதற்கு வெயிட்டிங்க் லிஸ்ட் மிக அதிகம் அது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என இந்த மரவெட்டும் தொழிலாளிக்கு தெரியாமல் இதுநாள் வரை தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

அதனால்தான் சொல்லுகிறேன் முதல் அமைச்சர் ஆவதற்கு ஆசைப்படுவதில் தப்பு இல்லை ஆனால் அந்த ஆசைக்கே நாம் சொத்து முழுவதையும் இழக்க நேரிடும் மற்றவர்களின் கேளிக்கு ஆளாக நேரிடும்.

ஆசைக்கும் ஒரு வரைமுறை உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. இதெல்லாம் செலவில்லீங்க.. மூலதனமா பார்க்குறாங்க.

    சி எம் ஆ ஆகலைன்னாலும் Bargaining capacity increase ஆகும்கறது அப்பாவோட கணக்கு.

    பார்ப்போம்.

    God Bless You

    ReplyDelete
  2. அந்த மரம் வெட்டும் தொளிளாலி மரம் வெட்டும் போது மரம் ரோட்டில் விழுந்து வாகனங்கள் போகமுடியாம 7 நாள் வாகனங்கள் மெட்ராசுக்கு போகமுடியாம் போச்சு நான் வந்த வண்டியும் மாட்டிகிடுச்சி அப்புரம் விழுப்புரம் போய் ரயில் எறி வூடு வந்து சேர்ந்தேன் மறக்கமுடியுமா அந்த மரம்வெட்டும் வெட்டும் தொளிலாளி செய்த காரியத்தை. முற்ப்பகல் செய்யின் பிற்பகல் விழையும்.

    ReplyDelete
  3. மூலதனம் அதிகம் செலவு செய்ய வேண்டிய பிசினஸ்...

    ReplyDelete
  4. மூன்று நாட் கள் மரத்தை வெட்டிய மரம் வெட்டி . பின்பு வரும் பல்லாண்டுகளுக்கு பல லடசம் மரங்களை நாட்டி பசுமை புரட்சி செய்ததை மட்டும் சொல்ல மனம் ஒப்பவில்லை.

    ReplyDelete
  5. வீண் கனவு காண்கிறார்! பார்ப்போம்!

    ReplyDelete
  6. எனவோ அவங்கள பார்த்தாலே எனக்கு டென்ஷன் ஆகும்:((

    ReplyDelete
  7. இந்தக்கதை நம் அனைவருக்கும் தெரிகிறது! புரிகிறது! சம்பந்தப்பட்டவ்ர்களுக்கு மட்டும் புரியாதா என்ன? bargaining position-வலுப்படுத்திக்கொள்ளும் அரசியல் தந்திரம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.