Monday, July 13, 2015



avargal unmaigal
அன்புமணி ஒரு படித்த முட்டாளா?

முதல்வராக வேண்டும் என்று யாரும் ஆசைப்படலாம் ஆனால் அது தப்பு இல்லை. அப்படி ஆக வீட்டில் உள்ளவர்கள் விரும்பினாலோ அல்லது ஒரு சாதியினர் விரும்பினாலோ அல்லது ஒரு கட்சியினர் விரும்பினாலோ ஆக முடியாது . மெஜாரிட்டி மக்கள் விரும்ப வேண்டும்.. அப்படி மெஜாரிட்டி மக்கள் விரும்ப வேண்டுமானால் எல்லோரையும் கவரக் கூடிய ஏதாவது ஒரு காரியமாவது செய்து இருக்க வேண்டும். அப்படி ஏதும் இந்த அன்புமணி செய்து இருக்கிறார் என்று பார்த்தால் அது ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது


பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதியக்கட்சி. அப்படிபட்ட ஒரு சாதியக்கட்சி மற்றவர்களின் ஆதரவை பெற வேண்டுமானால் அந்த சாதி மற்ற சாதியினரை அரவணைத்து மற்ற மக்களையும் சரிசமமாக மதித்து நடக்கும் ஒரு சாதியாகவாவது இருக்க வேண்டும் அப்படிபார்த்தால் அதிலும் இவர்கள் தேறவில்லை எனலாம்.


நம்மால்  டாக்டர் ராமதாஸ் அவர்களை கூட முதல்வர் பதவியில் உட்கார வைக்க முடிவது போலகூட கொஞ்சமாவது இமேஜ் பண்ணி பார்க்க முடிகிறது அது மிக குறைந்த சதவிகிதத்தில்தான். ஆனால் அன்புமணியை கொஞ்சம் கூட கற்பனை பண்ணிக்கூட நம்மால் பார்க்க முடியவில்லை அவரிடம்  தான் படித்த மருத்துவ துறையை தவிர வேறு எந்தவிதத்திலும் திறமைகளும் இல்லை கவர்ச்சிகளும் இல்லை


அவர் படித்த துறையில் அமைச்சராக இருந்து அதில் கூட அவரால் சோபிக்க முடியவில்லை அதிலும் முறைகேடுகள் செய்து தன் முகத்தில் தானே கரி பூசிக் கொண்டு அழைகிறார். தன் முகத்தில் பூசியக் கரியை அழிக்க கூட முடியாமல் அந்த முகத்தோட முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது சர்க்கஸில் கோமாளிவேடம் பூன்டவர் முதல்வராக ஆவதாக நடித்து காமெடிசெய்வது போலத்தான் இருக்கிறது

இவர் வயதை ஒத்த தலைவர்களான ஸ்டாலின் விஜயகாந்த் போன்றவர்களை ஒப்பிட்டுபார்த்தால் கூட இவரால் அவர்களின் நிலையை கூட தொடமுடியாது என்பது உண்மை, ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரியகட்சிகளில் ஒரு கட்சியான திமுக கட்சியை சார்ந்தவர். அந்த கட்சிக்கு என்று எந்தவித ஜாதிய அடையாளம் கிடையாது. அந்த கட்சியிலே அவர் தலைமை பதவியை அடைய அவர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். அதுமட்டடுமல்லாமல் இளம் வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்கு உள்ள அரசியல் அனுபவம் கூட அன்புமணிக்கு இல்லை. அது போல சினிமா மூலம் மக்களை கவர்ந்து கருப்பு எம்ஜியார் என்று அழைக்கப்படும் விஜயகாந்து கூட ஒரு கட்சியை நிறுவி தன்னம் தனியாக போராடி இப்போது தமிழக மக்கள் பேசக் கூடிய அளவில் ஒரு கட்சியின் தலைவராக வளர்ந்துள்ளார் ஆனால் அன்புமணியோ ஏதும் செய்யாமல் தன் கட்சியில் தலைவராக ஆகிவிட்டார்.

இப்படிபட்ட அன்புமணி முதல்வராக ஒரே ஒரு வழிமட்டும்தான் இருக்கிறது. அது இதுதான். இந்திய அரசியல் சட்டத்தை  தேர்தலில் எந்த கட்சி மிக குறைந்த இடத்தில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சி மைக்க முடியும் என்று மாற்ற வேண்டும் அப்படி செய்தால்தான் அன்புமணி முதல்வராக முடியும்.

கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் ஒபாமா மோடியை போல செலவு செய்து தன்னைப் பற்றி விளம்பரம் செய்து இணையதளம் மூலம் மக்களிடையே தொடர்பு கொண்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவுகள் கண்டு தன்னிடம் இருக்கும் பணத்தை அள்ளிவிடுகிறார்.

avargal unmaigal
படித்த அன்புமணிக்கு ஒன்று புரியவில்லை ஆனானப்பட்ட மோடியே தமிழகதிற்கு பல முறை ஒடோடிவந்து அதிக அளவு விளம்பரம் செய்தும் தமிழகத்தில் பெரும்பான்மை என சொல்லப்படும் இந்து மதக் காவலர் போர்படை தளபதி என்று சொல்லியும் கூட தலை குப்புற விழுந்தது பற்றி இந்த உலகமே அறியும் அப்படி இருக்க ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை சொல்லி எந்தவித திறமை இல்லாலும் கவர்ச்சி இல்லாமலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா. டாக்டர் அன்புமணி சார் தவறான வழியில் சம்பாதித்த பணம் இப்படி விளம்பரங்களுக்காக செலவாகி காலியாகி போய்விடும். அதனால் அந்த பணத்தை கொண்டு நல்ல மருத்துவமனைகள் கட்டி தாங்கள் கற்ற தொழிலை அதற்கு பயன்படுத்தி ஏழை எளியவர்களுக்கு உதவி அவர்களின் மனதில் முதலில் முதல்வராக உட்கார முயற்சி செய்யுங்கள்  அதவிட்டுவிட்டு உங்களை சுற்றி இருக்கும் ஜால்ராக்களின் பேச்சை கேட்டு அழிந்து போகாதீர்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

9 comments:

  1. வணக்கம்,
    ஏன் அவர் பாட்டுக்கு ஆசைபடட்டுமே, அதைவிட்டு அவர் மருத்துவ தொழில் பார்த்து,,,,,,,,,,,,,,
    ஏன்?????????
    நன்றி.

    ReplyDelete
  2. it seems like u know nothing about politics, before writing anything do some analysis. most of the things that u said is wrong. There is no corruption case against anbumani, its a procedural mistake. No minister has done good things as anbumani did during his role as minister. Do some search and know the facts by yourself.

    ReplyDelete
  3. நீங்கள் கூருங்கல் யார் தமிழ் நாட்டை ஜாதி இல்லாத மாநிலமாக மாற்றுவர் என்று அவர்களுக்கு எனது வாக்கு நிச்சியம்

    இதுவரைக்கும் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட திராவிடம் ஒழிக்குமா

    ஆம் என்றல் இதுவரைக்கும் அவர்கள் எடுத்த நடவடிக்கை என்னென்ன ?

    இதனால் வரைக்கும் தலித்மக்கள் தங்கள் கட்சி என நின்னைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற தலித் கட்சிகளக்கு திராவிட கட்சிகள் ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை

    என்னவெல்லாம் செய்தால் ஜாதி ஒழியும் ?

    இதற்க்கு பதில் கூர முடியுமா

    ReplyDelete
  4. who introduced 108 ambulance to india,

    who initiated Nation rural health mission

    now all news channel smoking/drinking warning comes who done it???????

    dont blame without knowing anything........

    ReplyDelete
  5. who brought the quota in All medical entrance for SC/ST???????

    national SC/SCT commission leader butta singh awarded anbumani for this do you know?????????????????????

    ReplyDelete
  6. தவறான வழியில் வந்த பணம் தவறான வழியில் தானே செலவாகும்.

    --
    Jayakumar

    ReplyDelete
  7. என்னங்க நம்மூர்ல என்னைக்கு தவறான வழில வர்ற பணம் நல்லவழிக்குப் போயிருக்கு? அப்படி நல்லது பண்ணனும்னு நினைச்சிருந்தா அந்தப் பணமே தவறான வழில வந்திருக்காதே....
    சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்களே சாதியை வளர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்...அப்படி இருக்கும் போது....

    ReplyDelete
  8. வரலாறு முக்கியம் அமைச்சரே. அன்புமணி சார் டாக்டர் தொழில் பார்க்கிறார் என்று கூசாமல் சொல்லிவிட்டீர்களே. அவர் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துத்தான் சம்பாதித்ததாகச் சொல்கிறார். 'தமிழ்', 'தமிழ்' என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தைகளை ஹிந்திப் பள்ளியில் சேர்த்துவிட்டார். ராமதாஸ் அரசியலுக்கு வந்தது மரத்தை வெட்டித்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இவருடைய கல்லூரிகளில் எத்தனைபேருக்கு இட ஒதுக்கீட்டின்படி அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தாலே இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்.

    இடுகைக்குச் சம்பந்தமில்லாத கேள்வி. எல்லோரும் அரசு மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே.. அவர்கள் ஏன் தன் கட்சிக்காரர்களை மதுப்பக்கம் போகவிடாமல் தடுப்பதில்லை? உயர்னீதிமன்றம் போட்ட ஹெல்மட் உத்தரவை மீறுவதற்கு இத்தனை ஆவலாக இருக்கும் மக்கள், அரசு, மதுவை ஒழித்தால் ஒழுங்காக இருப்பார்களா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.