Friday, July 3, 2015



avargal unmaigal
நட்பின் வரைமுறைகள் (படித்ததில் பிடித்தது)

 
இணையம் எழுத்துக்களின் குப்பை காடாகிவிட்டது எனலாம் அந்த குப்பைகாட்டிலும் வைரங்களும் வந்துவிடுகின்றன. ஆனால் குப்பைகள் அதிகம் இருப்பதால் பலரின் கண்களுக்கு அந்த வைரங்கள் தென்படாமல் போய்விடக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் என் கண்ணில் பட்ட அந்த வைரத்தை பலரும் பார்க்கவிரும்பியே அதை எழுதியவரின் அனுமதியுடன் அதை இங்கே பதிகிறேன்.

படித்து சிந்திக்க....... மேலே தொடருங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்





நட்பின் இலக்கணங்கள் சற்று மாறிப் போய்விட்டது இளைஞர்களிடையே..

தொலைதூர கல்வியின் செயல்முறை தேர்வு அறையொன்றில், இளைய தலைமுறை கூட்டமொன்று, பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளுமாய் வந்திருந்தார்கள்.

தொட்டு பேசுதல் இப்போதெல்லாம் மிக சாதாரணமாகிப் போனது. அதையும் மீறி ஒரு பையன், அவன்தான் ரொம்ப ஸ்மார்ட்டாக எல்லோரிடமும் சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தான், ஒரு பெண்ணின் கன்னத்தில் கன்னம் இழைத்து மேல்நாட்டவர் ஸ்டைலில் முத்தம் (எக்ஸாம்க்கு வாழ்த்து சொல்றாங்களாம்) செய்தபோது கூட தவறாக தெரியவில்லை (இதெல்லாம் தவறுன்னு நாம சொல்லவே கூடாதுங்க).

இன்னும் இரண்டு பெண்களுக்கும் இதே போலவே வாழ்த்துச் சொன்னான். அவனின் கை அப்போது அந்த பெண்களின் இடுப்பின் மீது அலைபாய்ந்ததைக் கண்ட போது, அவனின் மனதின் தன்மையும் அந்த பெண்கள் அதை சாதாரணப்படுத்துவதில் இருந்து, அதன் தேவையும் புரிந்துப் போனது.


சுதந்திரம் என்பது ஆண்களைக் கட்டிப்பிடிப்பதிலும், முத்தமிடுவதிலும், கொஞ்சுவதிலும் இல்லை என்பது இன்று பெண்களுக்கு, எல்லா வயதில் இருப்பவர்களுக்கும்தான், ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. ஆண் பெண் உறவை சகஜப்படுத்துதல் என்னும் கான்செப்ட் சரிதான். அதற்காக இப்படி செய்து நாம் நமக்கென கட்டிக் காத்து வந்திருக்கும் விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதெல்லாம் இல்லாமலேயே நாம் சுயமானத்துடன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்பதை பெண்கள் உணரவேண்டும். 

இதனால், என்ன சிக்கல் வருகிறதென்றால், நாளை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகும் சமயம், கணவனையும் மற்ற ஆண்களுடன் இந்த விசயத்தில் ஒப்பீடு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதுவரை, பொருளாதாரத்தில் மட்டுமே ஒப்பீடு செய்துக் கொண்டிருந்தார்கள். ‘அவங்க வீட்டில் ஏசி வாங்கிட்டாங்க, கார் வாங்கிட்டாங்க’ என்றெல்லாம் நடந்துவந்தது. அதுவரை சரிதான்.

இப்படி இப்போதே தொடுதல் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால், இதிலும் அதே போல் ஒப்பிடுகள் பெருகி, உறவுகளுக்குள் நம்பிக்கையற்று போய்விடும் நிலை வருகிறது. இதுவே, மனவேற்றுமைகளும் விவாகரத்துகளும் பெருகும் நிலைக்கு வித்திடுகிறது. 

இளவயதில் இருக்கும் இவர்களுக்கு இந்த புரிதல் வரவேண்டும். நம் நாட்டின் பாரம்பரியம் போற்றி, மற்ற நாடுகளிலிருந்து காப்பி அடிக்காமல், அந்த ஒரு உறவையாவது சற்று புனிதப்படுத்திப் பார்ப்போமே.

அன்பை, நட்பை, அறிவை பகிர்ந்துக் கொள்ளுங்கள். தோழமையுடன் அளவுக்கு மீறிய தொடுதல் இன்றி பழகுங்கள். யாருடனாவது நெருங்கிப் பழகத் தோன்றினால், அதன் ஆழம் கண்டறியுங்கள். அந்த உறவு நீடிக்குமா, அதை இருவராலும் கடைசிவரை காப்பாற்ற முடியுமா என்பதெல்லாம் யோசித்து அவனை/அவளை உங்களுக்குள், ஒரு பந்தத்துக்குள் நுழைத்து வாழ்ந்துக் காட்டுங்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இழிவான ஒரு கருத்து அல்ல. அது உடலும் உணர்வும் ஒன்றுபட்ட ஒரு நிலையைக் குறிக்கும் வாசகம். அது யாரிடம் கைக்கூடுகிறது என்பதை ஆராய்ந்து நட்புகளைத் தொட அனுமதியுங்கள்.

குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் Good touch, Bad touch  போலதான் இதுவும். நீங்கள் குழந்தைகள் அல்ல. நீங்களே புரிந்துக் கொண்டு நட்பை நட்பாய் மட்டும் இருக்க விடுங்கள். நட்பின் அழகிய இலக்கணமும் அதுதான்.

நட்பின் இலக்கணம் மதித்து, சுயமானமும் பெண்மையும் விட்டுக் கொடுக்காமல், நிமிர்ந்து உயர்ந்து வாழ்ந்து காட்டுவோம்.

இந்த பதிவை எழுதியவர் திருமதி.அகிலா அவர்கள். அவர்களின் இணைய தள முகவரி  http://www.ahilas.com & பேஸ்புக் முகவரி https://www.facebook.com/ahila.d

இவர் எழுதி வெளியிட்ட 2 கவிதை புத்தங்கள்... 1. சொல்லிவிட்டுச் செல்' 2. சின்ன சின்ன சிதறல்கள்' இந்த் புத்தகங்களை வாங்க அதன் புத்தக தலைப்பை க்ளீக் செய்யவும்

 'சொல்லிவிட்டுச் செல்' கவிதை தொகுப்பு கிடைக்குமிடம்   என் கவிதை புத்தகம் 'சின்ன சின்ன சிதறல்கள்'

10 comments:

  1. நட்பைக் குறித்த தங்களின் புரிதல்தான் என் பதிவின் பகிர்தலுக்கு வழிவகுத்திருக்கிறது. மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா..

    ReplyDelete
  2. வணக்கம்,அருமையான பதிவு, அவர்குளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு...
    நல்ல பகிர்வை எழுதிய சகோதரிக்கும் அதைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சற்று முன் வாசித்தேன்...தங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  5. நல்லதொரு பதிவு

    ReplyDelete
  6. நூல் அறிமுகம் தந்ததுக்கும் கருத்தினை பகிர்ந்ததுக்கும் நன்றி ஐயா! நூலை வாங்கும் ஆவலில்!

    ReplyDelete
  7. நல்லதொரு பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நூலை அறிமுகம் செய்த விதம் அருமை.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு....சகோதரிஉக்கு வாழ்த்துகள்...தாங்கள் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! தமிழா!

    ReplyDelete
  10. 'நல்ல பதிவை எங்கள் பார்வைக்குக் கொடுத்ததற்கு நன்றி. இப்போ உள்ளவங்க, இதுல என்ன தப்புன்னு கேட்கிறாங்க. பெரியவங்களுக்குத்தான், அனுபவத்தால, பக் பக்னு இருக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.