உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 27, 2015

அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யுமா?
avargal unmaigal
அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யுமா?தமிழக  தலைவர்கள் பலர் ஊழல்களில் ஈடுபட்டு தமிழகத்திற்கு இழிவு தேடி தந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஒரே  ஒரு தலைவர் மட்டும் தமிழன் தலையை நிமிர வைத்து தமிழர்கள்கெல்லாம் மட்டுமல்ல இந்தியர்களுக்கே பெருமை தேடி தந்த அப்துல் கலாம் மறைந்துவிட்டார். உல்கெங்கிலும் உள்ள தலைவர்கள் அவருக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்திய அரசாங்கம் அவரது இழப்பை ஒட்டி ஏழு நாள்  அஞ்சலி செலுத்துகின்றது..

அப்படி இருக்கும் போது அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு  ஏழு நாட்களுக்காவது மட்டும் டாஸ்மாக் கடைகளை அடைக்குமா? ஜெயலலிதா அதற்கு உத்தரவு இடுவாரா? இதற்காவது எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாமே? இதையாவது தமிழர்கள் ஒற்றுமையாக செய்வார்களா பார்ப்போம்.

எனது கோரிக்கை நல்லது என்று உங்கள் மனதிற்குபட்டால் இந்த தகவலை எல்லோருக்கும் பகிரலாமே?

செய்வீர்களா?

அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. நியாயமான கோரிக்கை.

  ReplyDelete
 2. நியாமான கோரிக்கை அரசு செய்யுமா ? நானும் வழிமொழிக்கிறேன். இருந்தாலும் குடிகார பெருமக்கள் நல்ல மனிதரை (அப்துல் கலாமை ) அல்லவா திட்டுவார்கள் ?

  M. செய்யது
  துபாய்

  ReplyDelete
 3. வணக்கம் அய்யா,
  தங்கள் கருத்து சரியே, செயல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.
  நன்றி.

  ReplyDelete
 4. மிக சிறந்த கோரிக்கை மற்றும் இப்படிச் செய்வது நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும்

  ReplyDelete
 5. சிறப்பான கோரிக்கை! செய்யுமா ஜெ. அரசு?

  ReplyDelete
 6. niyaamaka paarthal ungalukku vantha yosanai tamilaka arasukku vanthirukkanum. avarkal munvanthu seythirukka vendum.


  intha yosanai vanthatharke ungalukku paarattukkal sir.

  ReplyDelete
 7. ஒரு நாள் முடினாலே பெருசு!!! இதுல ஒரு வாரமா! எனக்கு நம்பிக்கை இல்லை:(

  ReplyDelete
 8. வணக்கம்

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 9. இறுதி சடங்குகள் நடக்கும் நாளன்று மூடி வைத்தால் சரி

  ReplyDelete
 10. சாரி மதுரைத் தமிழன். இது சரியான கோரிக்கை அல்ல. இறப்பின்போது குடி என்பது தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்தது. மதுரைக்காரருக்கு இது தெரியவில்லையே.

  அதுவும் தவிர, ஜெ. அரசின் கொள்கை..எந்த மக்களைப் பாதிக்கும் எந்த முடிவையும் தவிர்ப்பது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog