உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 17, 2015

புதிய மனிதாபிமான கொள்கையும் அதன் ஆதரவு நோக்கி எதிர்பார்த்து இருக்கும் தலைவர்களும்



புதிய மனிதாபிமான கொள்கையும் அதன் ஆதரவு நோக்கி எதிர்பார்த்து இருக்கும் தலைவர்களும்

தற்போது இந்தியாவை ஆளும் பாஜக கட்சி ஒரு  புதிய மனிதாபிமான கொள்கையை மத்திய அமைச்சர் சுஷ்மா மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது அதன்படி இந்தியாவில் கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்தவர்கள் அல்லது மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடியவர்கள். இவர்களில் எவருக்கேனும் ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால்  அவர்கள் மத்திய அமைச்சர்களை அணுகலாம். உடனே மத்திய அமைச்சர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவார்கள்... இந்த திட்டம் கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்தவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடியாகும் மற்ற பஞ்ச பரதேசி இந்தியர்களுக்கு அல்ல


மனிதாபிமான ஆதரவை எதிர் நோக்கி காத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்கள் இவர்கள்தான் தாவூத் இப்ராகிம், சுரேஷ் கல்மாடி, ஜெயேந்திரர், ஜெயலலிதா, சோட்டாராஜன், கனிமொழி, தாயாளு அம்மா,சஞ்சய் தத், மாறன் சகோதரர்கள் மற்றும் பலர்.....


அன்புடன்
மதுரைத்தமிழன்( டி.ஜே.தமிழன்)

3 comments :

 1. கிறுக்கு பசங்க ஊரில் கேனை பையன் நாட்டாமை. ஆடு நனைந்ததுன்னு ஒணான் அழுததாம்.
  இதுல ஒரு விஷயம் பாருங்க... நம்ம ஊர் பெரும்பாலான அரசியல்வாதிகளுடைய கணவன் -மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த மாதிரி ஆட்களுடைய வக்கீல்கள்.
  நீ அடிக்கிற மாதிரி அடி .. நான் அழுவுற மாதிரி நடிக்கின்றேன். ஒட்டு மொத்தமா 100 கோடிக்கும் மேலான பொது மக்களை ...
  டே.. அப்பரன்டிஸ் ...உங்க தலை எழுத்து நாங்க தான் உங்கள ஆளவேண்டும் என்று எழுதி இருக்கு.. YOU CANT CURE US... SO ENDURE US... என்று சொல்வது போல் இருக்கு.

  ReplyDelete
 2. லலித் மோடிங்கிறது
  அவங்க காதுல நரேந்திரமோடின்னு
  விழுந்திருக்கும்
  பாவம் அதைச் சொல்லமுடியாம
  பேசத் தெரியாம பேசிட்டாங்க

  ReplyDelete
 3. "இந்த திட்டம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களுக்கு மட்டும்தான் செல்லும் , மற்ற பஞ்ச பரதேசி இந்தியர்களுக்கு இல்லை" , அப்ப எனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லுங்க .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog