உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 25, 2015

இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படிதானா?இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படிதானா?

1.அமெரிக்க கலாச்சாரம் மிக அசிங்கமானது என்று சொல்லிக் கொண்டே அவங்க கலாச்சராத்தை பாலோ பண்ணுபவர்கள்.

2. ஆஸ்திரேலியா நாட்டுக்கு அதிநவின ரயில் தாயாரித்து அனுப்புவார்கள் ஆனால் உள்ளுர்களுக்காக விடும் ரயிலை பிரஞ்சுகாரர்களிடம் இருந்து அதிகவிலை கொடுத்துவாங்குவார்கள்.

3. ஒன்றும் இல்லாத பாகிஸ்தான்காரர்கள் இந்திய இராணுவ ஆட்களை சுட்டுக் கொல்லுவார்கள் பதிலுக்கு நாங்கள் தாக்கினால் அந்த நாடே இருக்காது என்று உதார்விட்டுக் கொண்டிருப்பார்கள்.


4. மேலை நாட்டு உறவு முறைகளில் வயதான தாய் தந்தையை வயதான காலத்தில் கவனிக்க மாட்டார்கள் என்று அவர்களின் உறவுமுறைகளை கேலி செய்து கொண்டே தங்கள் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி கொண்டிருப்பார்கள்.

5.மேலை நாடுகளில் மக்கள் தகாத உறவுகள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டே இங்கு கள்ளக் காதலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

6. தாங்கள் பார்க்கும் வேலைகளுக்கு சம்பளம் வாங்குவதுமட்டுமல்லாமல் கையூட்டு வாங்கி கொண்டு தலைவர்கள் இப்படி ஊழல் பண்ணினால் நாடு எங்க உருப்படும் என முழக்கம் இடுவார்கள்

7. தாய்மொழி வளர்ச்சிக்காக  என்ன செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

8. இந்தியா 2020 ல் வல்லரசாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே சீனப் பொருட்களை வாங்கி குவித்து அவன் வல்லராசாக உதவிக் கொண்டிருப்பார்கள்.

9. சீனாக்காரன் எவ்வளவு அடித்தாலும் அடி வாங்கி கொண்டு எங்களுக்கு வலிக்கவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

10. உடலுக்கு நன்மைகள் தரும் இந்திய பாரம்பரிய உணவுகளை தவிர்த்துவிட்டு மேலை நாட்டு உணவு வகைகளில் மோகம் கொண்டு அலைவார்கள்

11. மேலை நாடுகளில் கொண்டாடப்படும் தினங்களை தாங்களும் கொண்டாடி மகிழ்வார்கள்

12. தாய்நாட்டில் மேலை நாட்டு மொழிகளை பேசுபவர்களைதான் மிகவும் மதிப்பார்கள்

13,  வயிற்றுப்பசிக்காக திருடுபவனை கும்பலாக சேர்ந்து அடித்து உதைப்பார்கள் அதே நேரத்தில் மக்களின் வயிற்றில் அடித்து கோடி கோடியாக சம்பாதிப்பவனை தலைவனாக தேர்ந்தெடுத்து மாலை போட்டு மண்டியிட்டு மரியாதை செலுத்துவார்கள்.

14. தன் சொந்த நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் அதை முழுமையாக உபயோகபடுத்தி வளமை காணாமல் வெளிநாட்டு உதவிக்காக ஏங்கி கொண்டிருப்பார்கள்,


அன்புடன்
மதுரைத்தமிழன்
( D.J.Durai )

38 comments :

 1. அனைத்துமே உண்மை என்பது தான் வருத்தம் தரும் விஷயம்! :(

  ReplyDelete
  Replies
  1. உங்களை போல சிலர் மட்டும் வருத்தப்படுவதால் மாறுதல்கள் ஏற்பட போவதில்லை ஒட்டு மொத்த சமுகமும் வருத்தப்பட்டு வெட்கப்பட்டு மாற நினைத்தால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அதற்கும் ஒரு காலம் வராமலா போகும்...

   Delete
 2. Replies
  1. படித்து ரசித்தற்கு நன்றி

   Delete
  2. அட! நானும் இதையே தான் சொல்லவந்தேன்!

   Delete
 3. உண்மைகள்...

  'வெள்ளை'க்கார மனசு...?

  ReplyDelete
  Replies
  1. வெளியே நின்று பார்க்கும் போதுதான் "உண்மையான' பிரச்சனை என்னவென்று புரிகின்றது

   Delete
 4. அனைத்துமே உண்மையான மதிப்புள்ள கருத்துகள்! மேலை நாட்டைக் குறை கூறிக் கொண்டு இங்கு செய்பவை என்று சொல்லி இருப்பது சூப்பர் என்றால் 11,12,13, 14 நச் அதிலும் 13 ஹைலைட்....

  ReplyDelete
  Replies
  1. மதிப்புள்ள கருத்து என்று சொல்வதைவிட உண்மையான கருத்து என்று சொல்லாம்

   Delete
 5. உண்மை. எனக்கும் மிகவும் பிடித்தது 13வது கருத்து!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்தற்கு நன்றி

   Delete
 6. நல்ல பதிவு .. ஒரு மாதிரி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன்....

  http://pazhaiyapaper.blogspot.in/2014/02/blog-post_19.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவை படித்தேன் மிக அருமை உங்கள் அனுமதி கிடைத்தால் அதை எனது தளத்தில் வெளியிடுகிறேன்

   Delete
 7. இந்தியர்கள் மட்டுமல்ல
  இலங்கையரும்
  கருத்தில் கொள்ளவேண்டிய
  நல்ல சிந்தனை!

  ReplyDelete
  Replies
  1. இந்தியா மற்றும் இலங்கைக்கு மட்டுமல்ல இதில் பாகிஸ்தான் பங்களாதேஷையும் சேர்த்து கொள்ளலாம்

   Delete
 8. (இப்படி கேள்வியா கேக்கும் மதுரைத்தமிழர் இப்பத்தான் இப்படியா ?
  இல்ல அங்க போனதும் அப்படியா ?)

  சிந்திக்க வைக்கும் கேள்விகள் .

  ReplyDelete
  Replies
  1. அங்கனப் போனதும்தான் அப்படி வெளியில் இருந்து பார்க்கும் போதுதான் குறைகள் பளிச்சென்று தெரிகின்றது. உள்நாட்டிலே இருந்தால் அதை உணர வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்

   Delete
 9. பெரியார் பாணியில் கேட்டுள்ளீர்கள், எவன் எவ்வளவு நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேட்டாலும் ஜிம்பலடிக்க ஜிம்பா என இந்தக் காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்விடுவோமே, அந்தப் பக்கம் போய் சொன்னவன் மீது சாணியை வாறி வீசிவிட்டு போய்விடுவோம், அப்போத் தானே நாம் நிஜ இந்தியர்கள். :(

  ReplyDelete
  Replies
  1. அதற்குதான் இந்தியாவைவிட்டு வெளியே போனப் பிறகு சொல்லுகிறோம் இந்தியாவில் இருந்து சொல்லி இருந்தால் என்னை சாணியில் போட்டு முக்கி அல்லவா இருப்பீர்கள்

   Delete
 10. அனைத்தும் உண்மை உண்மை. செம wow சகோ ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல

   Delete
 11. Replies
  1. படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல

   Delete
 12. அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல

   Delete
 13. எல்லாமே உண்மை...
  இதுதான் இந்தியா...

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல

   Delete
 14. இப்படி எல்லா உண்மைகளையும் உணர்ந்திருப்பார்கள்! ஆனால் உணராதது போலவே நடந்தும் கொள்வார்கள்! இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. படித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல

   Delete
 15. மறுக்க முடியாதா உண்மை.. அப்புறம் இன்னும் எத்தனை வருடங்களானாலும் வல்லரசு என்பது ஒரு பகல் கனவுதான்.. இது ஒத்துக்கொள்ள முடியாத உண்மை

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல

   Delete
 16. nice line of thought...
  really kindling the thought...
  keep it going

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து தங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி

   Delete
 17. Replies
  1. உங்களுக்கு எதுக்கு டிப்ரஸன் அது எங்களை மாதிரி வெளிநாட்டில் வசிக்கும் ஆடகளுக்கு அல்லவா வரவேண்டும்

   Delete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு தவறுதலாக உங்கள் கருத்தை டெலீட் செய்துவிட்டேன் மன்னிக்கவும். அதனால் நீங்கள் சொன்ன கருத்தை மீண்டும் நான் பதிவிடுகிறேன்

   நீங்க எதுக்கு இந்தியாவை (சொந்த நாட்டை) விட்டு போனிங்க.................?

   Delete
  2. //நீங்க எதுக்கு இந்தியாவை (சொந்த நாட்டை) விட்டு போனிங்க.................? /// சொந்த நாட்டுல வசிக்க வீடு தரமாட்டேன்னு சொல்லி விரட்டிவிட்டுட்டு இப்ப இப்படி கேள்வி கேட்டா எப்படி?

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog