உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 21, 2015

மோடியை சொல்லி குற்றமில்லை.. Plus சின்ன சின்ன தகவல்கள்
மோடியை சொல்லி குற்றமில்லை.. Plus சின்ன சின்ன தகவல்கள்

இந்தியாவில் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவரை பிரதமராக தேர்ந்தெடுத்தது மக்கள் தப்பு, இப்ப பாருங்க அவர் நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்.


மோடி வெளிநாடு செல்வது மூதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வரவாம். இது வரை போய்வந்த நாடுகளில் இருந்து தான் திரட்டிய முதலீட்டை அவரது நண்பர்களிடமும் குஜராத்திலும் மட்டும் போடாமல் இருந்தாலே 5 ஆண்டு இறுதிக்குள் இந்தியா வளமிக்க நாடாகிவிடும் அப்படி செய்யாவிட்டால் அவர்கள் நண்பர்கள் மிக உலகிலே மிக அதிக பணக்காரர்கள் லிஸ்டில் வந்துவிடுவார்கள்ஆமாம் இது வரை மோடி சென்று வந்த நாடுகளில் இருந்து கொண்டு வந்த இன்வெஸ்ட்மெண்ட் உண்மையாக இருந்தால் மேலும் பல நாடுகளுக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் அவர் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை


--------------------------------------------------------

படிக்காதவன் என்று எவரையும் சொல்லவே முடியாது சில பேர் கல்லூரிக்கு சென்று மனப்பாடம் பண்ணி கக்கிவிட்டு தான் படித்து பட்டம் பெற்றவன் என்கிறான். அப்படி படித்து பட்டம் பெற்றவர்கள் வாழ்க்கையில் எளிதில் வழுக்கி விழுந்து விடுகிறார்கள். ஆனால் கல்லூரிக்கு போகாமலே பலர் வாழ்க்கையை தங்கள் சொந்த அனுபவத்தில் படித்து வெற்றிக் கொள்கிறார்கள் ஆனால் என்ன, இப்படி வெற்றி பெற்றவர்களுக்கு பட்டங்கள் கொடுக்கதான் ஆட்கள் இல்லை
--------------------------------------------------------
மேகி நூடூல்ஸுக்குத் தடை !!!! காரணம் அதனால் உடல் நலக் குறைவு ஏற்படுகிறதாம் ஆனால் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் சரக்கினால் மட்டும் உடல் நலம் கெடாதாம் அதனால் அதற்கு டார்கெட் நிர்ணயித்து விற்பனையை பெருக்குகிறதாம்
--------------------------------------------------------
நல்லவனாக இருப்பவனைவிட பணம் உள்ளவனையே இந்தகால மக்கள் மிகவும் மதிக்கிறார்கள்

------------------------------------------

பரிட்சையில் பெயிலாகிறவன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான் ஆனால் அதே நேரத்தில் காதலில் வெற்றி பெற்றவனும் கூட கல்யாணம் என்ற தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.. ஹும் என்னத்த சொல்ல
------------------------------------------------------------------

பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal
டிவிட்டர் முகவரி : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com
----------------------------------------------------
வணக்கம் உறவே,
அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலை தூக்கியிருந்த நீர்ப்பிரச்சைனை தொடர்பாக இளைஞருக்கு விழிப்பூணர்வு கொடுக்கும் வகையில் நீரின் பெறுமதியை விளக்கி ஒன்றரை நிமிட குறும்படம் ஒன்றை வெளியிட்டிருந்தோம் இக் குறும்படத்தை தங்களது பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் சேர்ப்பிக்க உதவ முடியுமா?
நன்றிச் செதுக்கலுடன்
மதிசுதாஅன்புடன்
மதுரைதமிழன்

2 comments :

  1. டாஸ்மாக் பத்தி காட்டாமாய் கேள்வி கேட்டு பாஸ்மார்க் வாங்கிடீங்க mr.லைட்:))

    பரீட்சை மேட்டர் சூப்பர்!!

    இந்த குறும்படம் நிலவன் அண்ணாவும் பகிர்ந்திருந்தார் சகா:) நானும் பண்றேன்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog