Friday, May 15, 2015



முதலமைச்சர் பதவியின் கவுரவத்தை காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்வாரா?


முதலமைச்சர் பதவி என்பது மிக கவுரவமான பதவி. இதை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அதனால் அந்த பதவியின் கவுரவத்தை காப்பாற்ற அவர் முயற்சி செய்ய வேண்டும் .

அதற்காக அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இனிமேல்  முதல்வர் பன்னீர் செல்வம் அவரை சந்திக்கும் போது குனிந்து வணங்க கூடாது, தன் காலில் விழுந்து வணங்க கூடாது என்று பன்னீர் செல்வத்திற்கு கட்டளை இட வேண்டும் அது மட்டுமல்லாமல் எதிர்காலங்களில் அவர் ஜெயலலிததா கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வந்தால் ஜெயலலிதாவிற்கு அருகில் சீட் போட்டு அமரச் செய்ய உத்தரவும் போட வேண்டும், இதை தான் வகிக்கும் முதலமைச்சர் பதவியின் கவரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக ஜெயலலிதா அவர்கள் செய்ய வேண்டும்.


பன்னீர் செல்வம் உங்களை மிக கண்ணியமாகவும் மதிப்பிற்குரியவராகவும் நடத்துகிறார் என்பது உலகம் அறிந்த உண்மை. அப்படிபட்ட அவர் காலில் விழுந்துதான் தனது செயல்பாட்டை நிருபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதானே.


ஜெயலலிதா அவர்களே இதை சற்று சிந்தித்து பாருங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. அட போங்க சார் ஒ பி இப்படி மானம் சொரணை இல்லாமல் இருந்ததால் தான் இரண்டு தடவை முதலமைச்சராக முடிந்தது இனியும் அடுத்து வாய்ப்புகள் வரும். அதை நீங்கள் கெடுத்து விடுவீர்கள் போலே தெரிகிறது ஒ பிக்கு உள்குத்தா !!! பாவம் அவர உட்டுறுங்க சார் D:-

    மகாராஜா

    ReplyDelete
  2. அம்மா விரும்பாவிட்டாலும் தொண்டர்கள் விழுந்து கொண்டேதான் இருப்பார்கள்! தமிழக அரசியல் அப்படி!

    ReplyDelete
  3. மிகச்சரியான நியாயமான கோரிக்கை நண்பரே...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. sathiyangal migavum kuraivu!!

    ReplyDelete
  5. தமிழர்களுக்கு இவரைப் போன்றவர்கள் தான் தேவை.

    ReplyDelete
  6. அந்தக் கட்சியில் அதுதான் பாரம்பர்யம். ஜெ எத்தனை முறை கூறினாலும் வேறு எதுவும் நடக்காது. அரசியல்வாதிகள் எல்லோரும் கூழைக்கும்பிடு போடுபவர்கள்தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.