Monday, May 11, 2015



 ஜெயலலிதா விடுதலையும் : நீதி துறையை நோக்கி கலைஞர் விடுவித்த வேண்டு கோளும்



இந்திய நீதி துறையே எங்கள் ஆட்கள் (ராசா,கனிமொழி,தாயாளு அம்மா மற்றும் மாறன் சகோதர்களின் மீது டில்லியில் நடக்கும் வழக்குகளை கர்நாடாக  மாநிலத்திற்கு மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன். காரணம் கர்நாடக நீதிபதிகள்தான்  அதிலும் குமாராசாமிதான் மிகவும் சரியான நீதியை அளித்து நீதியை நிலை நாட்டிவருகிறார்.

இதைப் போலவே இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும் ஆனால் தீர்ப்பு மட்டும் குமாரசாமி அவர்கள்தான் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுவித்துள்ளனர்


 ஜெயலலிதா விடுதலை  பற்றிய ஸ்டேடஸ் :

குமாரசாமியின் தீர்ப்பால் ஜெயலலிதாவிற்கு விடுதலையும் ஸ்டாலினுக்கு தண்டனையும் கிடைச்சிருக்கு

ஜெயலலிதா விடுதலை : அழகிரி சந்தோஷம் ஏன்னா தம்பி அடுத்த 5 வருடத்திற்கு கண்டிப்பாக முதலமைச்சர் ஆக முடியாது அல்லவா

அன்பழகன் தொடுத்த வழக்கில் தோல்வி அடைந்ததால் அதற்கு அவர் தார்மிக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு அந்த இடத்தை ஸ்டாலினுக்கு கொடுப்பாரா?

தவறு செய்யாத ஜெயலலிதா அவர்களை தவறு செய்தார் என்று தப்பான தீர்ப்பு வழங்கிய குன்ஹா மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க முடியுமா? ஹீஹீ நாமவும் ஏதாவது சொல்லி வைப்போம்..

நேற்று அன்னையர் தினம்  இன்று அம்மா தினம் போல..... வாழ்த்துறவங்க வாழ்த்துங்கப்பா

தமிழகத்தில் மே 11ல் மட்டுமே சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

சினிமாவாக இருந்தால் இந்நேரம் நீதிபதி குமாரசாமியின் மனைவி நீ எல்லாம் ஒரு மனுசனா என்று காரி உமிழ்ந்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி இருப்பார் ஆனால் அப்படி இல்லாததால் நீ பிழைக்க தெரிந்த மனுஷன்யா குன் ஹா மாதிரி பிழைக்க தெரியாதவர் இல்லை என்று பாராட்டிக் கொண்டிருப்பார்

இனிமே இந்தியாவில் எந்த ஆசிரியரும் நீதி நேர்மை என்று பாடம் எடுத்தீங்க உங்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைக்கும். அதனால பார்த்து சூதனமாக நடந்து கொள்ளுங்க

இந்தியாவில் நீதி செத்துவிட்டது என்று நினைப்பவர்கள் அமெரிக்க வர முயற்சிக்கலாம் காரணம் இங்கே இன்னும் முழுமையாக சாகவில்லை

ஜெயலலிதா விடுதலை தொண்டர்கள் கொண்டாட்டம் அமைச்சர்கள் திண்டாட்டம்


 அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. கொஞ்சம் அம்மா ஆதரவாளர்கள் சந்தோஷப் பட்டுக்கொள்ளட்டுமே. அதுக்குள்ள ஏன் வென்னீர் ஊத்தரீங்க. குன்'ஹா தீர்ப்பு அனியாயம்னு உங்களுக்குத் தோணலையா? ஒருத்தர் 5 கொலை செய்தார்னு வழக்கு வந்தால், இவரைப் பார்த்தால் 5 கொலை செய்ய சக்தி உள்ளவர்போல் தெரியலை, 4 கொலைன்னு வச்சுக்கலாம்னு சொல்பவர் சரியான நீதிபதியா?

    ReplyDelete
  2. அட்டகாசம்... குறிப்பிட்ட அரசு வழக்கறிஞரும், நீதிபதியும் மட்டுமே வேண்டும் என்று பலரும் கேட்கலாம்.
    கோர்ட் அதனை ஆழ்ந்த அக்கறையுடன் கவனித்து மேற்படி கீழ் மற்றும் ஹை கோர்ட் தீர்ப்பின் முன்னுதாரண படி அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.