Monday, May 25, 2015



சின்ன சின்ன ஸ்டேடஸ் : மணமகன் மணமகள் தேவை

மாணவர்கள் செய்யும் தவறுக்கு  ஆசிரியர்களை  எதற்கெடுத்தாலும் குறை கூறும் உலகம்(ஊடகங்கள்) அந்த மாணவர்கள் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்யும் போது மட்டும் அதற்கான முயற்சி செய்த ஆசிரியர்களை பெருமை படுத்த தவறியது ஏன்?


முதலமைச்சாரக பதவி ஏற்க்கும் எவருக்கும் ரஜினியின் ஆதரவு உண்டாம்......



மணமகன்/மணமகள் தேவை தகுதியானவர்கள் அணுக வேண்டிய முகவரி; ஸ்டாலின் திமுக தலமை செயலகம், சென்னை கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடியும் வரை  தேவைப்படுகிறது


ஜெயலலிதா அவர்களின் பதவி ஏற்புவிழாவில் நடக்கும் சம்பவங்களை ரகசியமாக திரட்ட திமுகவால் அனுப்பட்டவர்தான் ரஜினியாம் # ஏதாவது சொல்லிவைப்போம்


திமுகவுடன் கூட்டணி வைக்க தயார் பாமக மற்றும் தேமுதிக அறிவிப்பு ஆனால் ஒரு கண்டிஷன் முதல்வர் வேட்பாளராக் அன்புமணியை அறிவிக்க வேண்டும் என்று பாமகவும் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தேமுதிகவும் கண்டிஷன் போட்டு இருக்கிறார்கள்

ஸ்டாலின் அவர்கள் நாகரீகத்தை கட்டிகாப்பவர் என்றால் ஏன் ஜெயலலிதா மற்றும் அழகிரியை நேரில் சென்று கூப்பிடவில்லை . இதிலிருந்து தெரிகிறது இவர் செய்வது ஒரு அரசியல் தான் என்று.

தமிழக முதல்வர் பதவி என்பது மக்களால் அல்ல தன்னால் மட்டும் நிர்ணயிக்கப்படுவது என்பதை 2 முறை நிருபித்து காட்டி சாதனை புரிந்தவர் ஜெயலலிதா அவர்கள்

காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதால், தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும்
இப்படி சொல்லியாவது தம் வாழ்வில் ஜெயலலிதா அவர்களின் கண்பட்டு  வளர்ச்சி ஏற்படாதா என்று நினைத்து சொன்ன மாதிரி அல்லவா இருக்கிறது

பன்னீர் செல்வத்தின் ஆட்சியில் தமிழகத்தில் ஒன்றுமே நடக்கவில்லை என்று குறை கூறுபவர்கள் பன்னிர் செல்வத்தின் ஆட்சியில்தான் டாஸ்மாக்க்கின் வருமானம் குறையத் தொடங்கியது இது அவரின் மறைமுக சாதனை அல்லவா?

மோடி வெளிநாடுகளுக்கு சென்று மிக அதிக அளவில் அந்நிய முதலீடுகளை அள்ளிக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவை அளவிற்கு அதிகமாக போனதால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாததால் மீண்டும் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வாங்கிய அந்நிய முதலீடுகளை திருப்பி கொடுப்பதற்காக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனால் மோடியின் வெளிநாட்ட்டு பயணத்தை பற்றி யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என்று பாஜக சார்பில் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டு இருக்கிறதாம்


தெளிவில்லாதா ஒரு பயணம்..!!

நாளை முதல் 10 நாட்களுக்கு. அதனால்

பதிவிடவோ, உங்கள் பதிவுகளைக் காணவோ

அதிக வாய்ப்பில்லை......!! வணக்கம்...!!

விரைவில்  மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
மதுரைத்தமிழன்


11 comments:

  1. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பயணம் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. யதேச்சையான நிகழ்வை அங்கத நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆஹா ! பயணம் இனிதாக வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  4. தெளிவில்லா பயணம் சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எல்லாம் நல்லா இருக்கு. ஆனால், ஸ்டாலின், மணமகன் / மணமகள் தேவை விளம்பரத்தை அவர் குடும்ப சொந்தங்களுக்கல்லவா அனுப்ப வேண்டும். மற்றவர்களுக்கு அனுப்பி என்ன பயன். வெறும் மணமகன்/மணமகள் என்று நிறுத்தாமல், 60 வயது பூர்த்தி, 80 வயது பூர்த்தி என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கிவிட்டால் போகிறது. இதுபோன்று உங்கள் பதிவுகள் (இந்தக் கட்டுரையில்) ஒவ்வொன்றும் தமிழக நிகழ்வுகளை எண்ணிச் சிரிக்க வைக்கிறது.

    ReplyDelete
  6. நல்லபடியா போய்ட்டு வாங்க சகா:)

    ReplyDelete
  7. திரட்டு .. அருமை

    ReplyDelete
  8. எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  9. ( எனது முதல் கருத்தில் பாதி விடுப்பட்டுவிட்டது ! மன்னிக்கவும் )

    மிக வித்யாசமான அங்கத முயற்சி !

    மேலை நாட்டு தொலைக்காட்சிகளில் அன்றாட சமூக நிகழ்வுகளை இது போன்று பகடி செய்வது வாடிக்கையான ஒன்று !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  10. எல்லாமே அருமை....உங்களைப் பார்த்ததுக்கப்புறம்....இந்தக் கமென்ட்

    உங்களை நேரில் சந்தித்தற்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.